Home Maruthuvam "Sam"

Home Maruthuvam "Sam" படித்தேன் பகிர்ந்தேன்
https://chat.whatsapp.com/LaoJkuTLvFTGCO9ADLr3Mm
(1)

25/09/2025
25/09/2025

படித்ததில் பிடித்தது

*பயனுள்ள சித்த மருத்துவ குறிப்புகள் - 3*

🥝உளுந்தம் பருப்பை மாவாக நன்கு அரைத்து பால் சர்க்கரை தேவையான அளவு சேர்த்து கஞ்சியாக காய்ச்சி காலை வேளைகளில் பருகி வர இதயம் பலம் பெறும். உடல் உறுதியாகும்.

🍌வாழைப்பழத்தோல் மீது சுண்ணாம்பு தடவி இரவு முழுவதும் பனியில் வைத்து காலையில் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

🫛சுண்டைக்காய் வற்றலை பொடி செய்து பவுடராக்கி சமையலில் சேர்த்து வர சளி, கபம் கரையும்.
மாதுளம் பூவை உலர்த்தி பட்டை காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டை ரணம் நீங்கும்.

🫚முட்டையின் வெண் கருவை பஞ்சில் தேய்த்து முகம், கழுத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து ஈரப்பஞ்சினால் மெதுவாக துடைக்க முகச்சுருக்கம் நீங்கும்.

🌿நெய்யில் வெள்ளை வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டு வர நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

🌿முருங்கைப்பூக்களை பசும்பாலில் போட்டு காய்ச்சி 41 நாட்கள் தொடர்ந்து குடித்து வர தேகம் கட்டமைப்பு பெறும். தாது விருத்தியாகும்.

🧄வெள்ளைப்பூண்டு, வெற்றிலைக்காம்பு, வசம்பு, திப்பிலி சம அளவு எடுத்து வெந்நீரில் அரைத்து உள்ளுக்கு கொடுக்க குழந்தைகளின் மாந்தம் குறையும். சளி தொல்லை நீங்கும்.

*_🫁தங்கள் நலங்கருதி.._*

25/09/2025

படித்ததில் பிடித்தது

*பயனுள்ள சித்த மருத்துவ குறிப்புகள் - 2*

🧄10 கிராம் உரித்த பூண்டை பாலில் வேக வைத்துக் கடைந்து சாப்பிட வாயு, செரியாமை, சளி தீரும். குடல் புழுக்கள் மடியும்.

🌿மருதாணி இலையை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வெந்து வரும்போது இறக்கி ஆறியபின் மை போல அரைத்து வைத்துக் கொண்டு துணியில் தடவி புண் மீது வைத்துக்கட்டி வர ஆறாத புண் ஆறும்.

🍯கசகசா, வால்மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு பொடித்து *அசல்தேன்* விட்டு 5 கிராம் பாலுடன் காலை, மாலை சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும்.

🪸பப்பாளிப்பாலை வாய் மற்றும் நாக்கில் உள்ள புண்ணிற்கு தடவி வர வாய்புண் குணமாகும்.

🧄காலையில் பல் துலக்கியதும் வெறும் வயிற்றில் பச்சை வெங்காயத்தை சாறு பிழிந்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடுத்து வர பக்கவாதம் குணமாகும்.

🫚பச்சை இஞ்சி சாறு *அசல்தேன்* கலந்து தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வர தலை சுற்றல் குணமாகும்.

🪸எலுமிச்சை சாற்றால் கைகளை கழுவி காயவிட்டு பின் மருதாணி இட்டுக்கொண்டால் மருதாணி சிவப்பாக பிடிக்கும்.

*_🫁தங்கள் நலங்கருதி.._*

25/09/2025

படித்ததில் பிடித்தது

*பயனுள்ள சித்த மருத்துவ குறிப்புகள் -1*

🌿மருதாணி மஞ்சள் சேர்த்து அரைத்து காலில் ஆணி பாய்ந்த இடத்தில் கட்டி வர காயம் குணமாகும்.

🧄ஓமத்துடன் பூண்டு பொடி செய்து போட்டு கசாயம் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்க குழந்தைகளின் வாந்தி, கொட்டாவி குறையும்.

🍀தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டு வர காது அடைப்பு நீங்கும்.

🍇மாதுளம் பூவை கசாயம் செய்து குடித்து வர வயிற்றுக்கடுப்பு குணமாகும்.

🪸சுரைக்காய் வாரம் 2 தடவை சாப்பிட தொப்பை குறையும்.

🪷தாமரை இலை, பூ உலர்த்தி தூள் செய்து காபி போல் பருகி வர இருதயம் பலம் பெறும். இரத்தம் சுத்தம் அடையும். ஞாபக சக்தி பெருகும்.

🪸குங்குமப்பூவுடன் சம அளவு *அசல்தேன்* கலந்து மூன்று நாட்கள் தினசரி 2 வேளை உட்கொள்ள குடல் புண் குணமாகும்.

*_🫁தங்கள் நலங்கருதி.._*

படித்ததில் பிடித்தது*திருமூலர் கூறும் சுவாச ரகசியம்...... சரம்....மூச்சு...* 🫵மூச்சை வெளிவிடும்போது தானாகவே விருட்டென்று...
23/09/2025

படித்ததில் பிடித்தது

*திருமூலர் கூறும் சுவாச ரகசியம்...... சரம்....மூச்சு...*

🫵மூச்சை வெளிவிடும்போது தானாகவே விருட்டென்று வெளியேற முயலும். அவ்வாறு வெளியேற விடாமல், மெதுவாக ஊர்ந்து செல்லுமாறு வெளிவிட வேண்டும்.

🫵அவ்வாறு வெளிவிட வேண்டுமானால் பெருமூளைப் புறணியின் கட்டளை வேண்டும்.

🫵தானாக நிகழ்கிற செயலைக்கூட மூளையின் கட்டளைக்கு உட்படுத்தும் போது, சோர்ந்திருக்கும் மூளை செயல்பாட்டுக்கு வருவது இந்த முந்நிலை மூச்சுயிர்ப்பின் சிறப்பு.

🫵இங்கு கணக்கிட்டுச் சூத்திரம் தருகிறார் என்குரு திருமூலர்:

🫵ஏறுதல் பூரகம், ஈர்எட்டு வாமத்தால்;
ஆறுதல் கும்பம், அறுபத்து நாலதில்;
ஊறுதல் முப்பத்து இரண்டுஅதி ரேசகம்;
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே.
- திருமந்திரம்:568

🫵மூச்சை ஏற்றும்போது, இடது நாசியின் வழியாகப் பதினாறு மாத்திரை அளவுக்கு ஏற்றலாம்.

🫵புதிய காற்றை உள்விடாமலும் உள்வந்த காற்றை வெளிவிடாமலும் ஆறுதலாக அறுபத்துநாலு மாத்திரை அளவுக்கு நிறுத்திக்கொள்ளலாம்.

🫵முப்பத்திரண்டு மாத்திரை அளவுக்கு வலது நாசியின்வழியாக மெதுவாக ஊரவைத்து வெளியேற்றலாம். அளவு மாறினால் சிக்கல்.

🫵அடுத்ததாக குதிரைகள் செய்யும் கும்பகத்தை பற்றி சொல்கிறார்...

குதிரைகள் தாவி ஓடுவதற்குக் கூடுதல் ஆற்றல் வேண்டுமென்பதால், கூடுதல் மூச்சை உள்ளிழுக்கின்றன.

🫵ஒரு பாய்ச்சலுக்கு ஒரு மூச்சு. பாயும்முன் உள்ளிழுத்த காற்றைப் பாயும்போது உள்நிறுத்துகின்றன; மேலெழுந்த கால்கள் கீழேபடும்வரை தம்மை அறியாமலே கும்பகம் செய்கின்றன.

மேலெழுந்த கால்கள் கீழே படும்போதுதான் மூச்சை வெளிவிடுகின்றன. உள்ளிழுத்த அதே அளவு காற்று வெளிவிடப்படுகிறது.

🫵ஆற்றலின் தேவை மிகும்போது, உள்ளிழுத்தல், உள்நிறுத்தல், வெளியேற்றலின் அளவும் கூடும்.

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்உண்ண வேண்டாம்; தானே களிதரும்;
துள்ளி நடப்பிக்கும்; சோம்பு தவிர்ப்பிக்கும்;
உள்ளது சொன்னோம் உணர்வு உடையோருக்கே.
- 🫵திருமந்திரம்:566

பறவையைக் காட்டிலும் சிறப்பாகப் பறக்கும் குதிரை. அதை வசப்படுத்தி ஏறிக்கொண்டால், அதைவிடக் களிப்புத் தருவது கள்ளும்கூட இல்லை; சோம்பல் நீங்கி உங்களில் ஒரு துள்ளல் வரும்; உள்ளதைச் சொன்னோம்; உணர்வுடையோர் கேளுங்கள் என்று சொன்னதோடு விடாமல்,

🫵ஈர்ஆறு கால்கொண்டு எழுந்த புரவியைப்
பேராமல் கட்டிப் பெரிதுஉண்ண வல்லீரேல்,
நீர் ஆயிரமும் நிலம்ஆயிரத்து ஆண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே
- திருமந்திரம்:722

🫵என்று ஆணையிட்டும் சொல்கிறார். நான்கு கால் குதிரையே மூச்சைப் பிடித்து விண்ணில் எழுகிறது. உங்களுக்குக் கிடைத்திருப்பது பன்னிரண்டு கால் குதிரை அல்லவோ? அந்தக் குதிரையைக் கட்டியாள உங்களால் முடியுமென்றால், ஏது இறப்பு? நீராலும், நிலத்தாலும் பிற பூதங்களாலும் யாக்கப்பட்ட உங்கள் உடம்பு அழியாது.

🫵பன்னிரண்டு கால் புரவி என்பது பன்னிரண்டு விரற்கடை அளவுக்குப் பாயும் மூச்சுக் குதிரை...

*_🫁தங்கள் நலங்கருதி.._*

படித்ததில் பிடித்தது*மனித உடலில்  உள்ள இரத்தப் பிரிவுகளும்,அவர்கள் உண்ண வேண்டிய உணவுகளும்"!!* *A Group  வகையைச் சேர்ந்தவ...
23/09/2025

படித்ததில் பிடித்தது

*மனித உடலில் உள்ள இரத்தப் பிரிவுகளும்,அவர்கள் உண்ண வேண்டிய உணவுகளும்"!!*

*A Group வகையைச் சேர்ந்தவர்களுக்கு*

🍇பச்சைக்காய்கறிகள், உளுந்தம்பருப்பு, பீன்ஸ், பட்டாணி, கொண்டைக் கடலை அதிகம் தேவைப்படும்.

இவைகளை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து உணவில் சேர்ப்பது அவசியம்;

*B Group வகையைச் சேர்ந்தவர்களுக்கு*

🍇மென்மையான சீரண மண்டலம் என்று நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இவர்கள் பால், காபி, டீ ஒருபோதும் சேர்க்கக் கூடாது. பாலுக்குப் பதிலாக மோர் அருந்தலாம். பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும்.

மிதமான உணவுகள் (அசைவம் அனைத்தும், புரோட்டா, சப்பாத்தி கடின உணவுகளே) சாப்பிட்டுப் பழகுவது நன்று.

*AB Group வகையில் பிறந்தவர்கள்*

🍇மெதுவாகச் சீரணிக்கும் சீரண மண்டலத்துடன் பிறந்தவர்கள். இவர்களுக்கு வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் கொஞ்சமே சுரக்கும். எனவே இவர்கள் சாப்பிடும் எந்த உணவையும் மொக்கக் கூடாது. கொஞ்சமாகவே சாப்பிட வேண்டும்.

இவர்களுக்கு சளித் தொல்லை உறவினரைப் போலவே தொற்றிக் கொள்ளும்.

இவர்கள் தினமும் அதிகாலையில் மிதமான வென்னீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்தி வருவது அவசியம் நன்று.

*O Group இல் பிறந்தவர்களுக்கு*

🍇ஹைட்ரோகுளோரிக் அமிலம் அதிகம் சுரக்கும். புரோட்டீன் உடலில் இராது.

🍇இதனால் இவர்கள் மாமிச உணவுகள் சாப்பிடுவதிலும்,திட உணவுகள் சாப்பிடுவதிலும் விருப்பமுள்ளவராக இருப்பார். மாமிச உணவு உண்பதற்குப் பதிலாக, முளை கட்டிய தானியங்களை (முளை கட்டிய உளுந்து, முளை கட்டிய கொள்ளு) அதிகம் சாப்பிடுவது நன்று.

*_🫁தங்கள் நலங்கருதி.._*

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Home Maruthuvam "Sam" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category