Venkat create a youtube channel

07/20/2024

இந்த கதையை படித்து பாருங்கள்.
அடையாளம் தெரியவில்லை...

ஆனால் அதே கருப்பு...

கள்ளிப் பாலில்

தப்பித்து வந்த அது,

என் கைகளில் சிக்கிக் கொண்டது..,

வந்த கோபத்திற்கு...

வீசியெறியவே தோன்றியது...

தூக்கிய நொடிமுதல்...

சிரித்துக் கொண்டே இருந்தது,

என்னைப் போலவே...

கண்களில் மச்சம்,

என்னைப் போலவே

சப்பை மூக்கு,

என்னைப் போலவே

ஆணாகப்..,

பிறந்திருந்தால் இந்நேரம் இங்கிருக்க

வேண்டியதில்லை...,

பல்லில்லா வாயில்...

பெருவிரலைத் தின்கிறது,

கண்களை மட்டும்..,

ஏனோ சிமிட்டாமல் பார்க்கிறது,

ஒரு கணம் விரல் எடுத்தால்...

உதைத்துக் கொண்டு அழுகிறது,

எட்டி... விரல் பிடித்துத்..

தொண்டை வரை வைக்கிறது,

தூரத்தில்

அவள் வருவது கண்டு...

தூரமாய் வைத்து விட்டேன்...

கையெழுத்து வாங்கிக்கொண்டு...

கடைசி பஸ்ஸுக்கு திரும்பி வருகிறேன்,

முன் சீட்டில் இருந்த குழந்தை...

மூக்கை எட்டிப் பிடிக்க

நெருங்கியும்...

விலகியும் நெடுநேரம்...

விளையாடிக் கொண்டு இருந்தேன்!

ஏனோ அன்றிரவு...

தூக்கம் நெருங்கவில்லை,

கனவுகூட

கருப்பாய் இருந்தது,

வெளிச்சம் வரும்வரை காத்திருந்தேன்...

போட்ட கையெழுத்துப் பொருந்தவில்லை...

என்ற பொய்த்தனத்தோடு,

இன்னொரு கையெழுத்துக்கு...

மீண்டும் சென்றேன்,

அதே கருப்பு,

அதே சிரிப்பு,

கண்ணில் மச்சம்,

சப்பை மூக்கு...

பல்லில்லா வாயில்

பெருவிரல் தீனி...

ஒன்று மட்டும் புதிதாய்...

எனக்கும் கூட

சிரிக்க வருகிறது...

கடைசி பஸ், ஆனால் பேருந்தில்...

எந்த குழந்தையும் இல்லை.

வீடு நோக்கி நடந்தேன்,

பாதி வழியில் கறிவேப்பிலைகாரி...

கைப் பிடித்தாள்

உதறிவிட்டு நடந்தேன்...

தூக்கம் இல்லை

நெடுநேரம்...

பெருவிரல்

ஈரம் பட்டதால்...

மென்மையாக

இருந்தது...

முகர்ந்து பார்த்தேன்....

விடிந்தும் விடியாததுமாய்...

காய்ச்சல் என்று சொல்லி...

ஊருக்கு

வரச் சொன்னேன்,

பல்கூட விளக்காமல்...

பஸ் ஸ்டேண்டுக்கு சென்று விட்டேன்,

பஸ் வந்ததும் லக்கேஜை

காரணம் காட்டி...

குழந்தையைக் கொடு என்றேன்

!

பல்லில்லா வாயில் பெருவிரல்!

இந்த முறை பெருவிரலைத் தாண்டி...
ஈரம் எங்கோ

சென்று கொண்டு இருந்தது...

தினமும் என் மீது படுத்துக்கொண்டு...

பொக்கை வாயில் கடிப்பாள்,

அழுக்கிலிருந்து

அவளைக் காப்பாற்ற...

நாளுக்கு நாலைந்து முறை குளிப்பேன்,

பான்பராக் வாசனைக்கு...

மூக்கைச் சொரிவாள் ,விட்டு விட்டேன்...

சிகரெட் ஒரு முறை..,

சுட்டு விட்டது

விட்டு விட்டேன்...

சாராய வாசனைக்கு...

வாந்தியெடுத்தாள் ...விட்டு விட்டேன்,

ஒரு வயதானது..

உறவுகளெல்லாம்...

கூடி நின்று,

'அத்தை சொல்லு'

'மாமா சொல்லு'

'பாட்டி சொல்லு'

'அம்மா சொல்லு 'என்று...

சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்...

எனக்கும் ஆசையாக இருந்தது,

'அப்பா 'சொல்லு

என்று சொல்ல,

முடியவில்லை......

ஏதோ என்னைத் தடுத்தது,

ஆனால் அவளை எதுவும் தடுக்கவில்லை...

அவள் சொன்ன முதல் வார்த்தையே...

'அப்பா'தான்!

அவளுக்காக எல்லாவற்றையும்...

விட்ட எனக்கு,

அப்பா என்ற

அந்த வார்த்தைக்காக...

உயிரைக்கூட விடலாம் என்று தோன்றியது,

அவள் வாயில் இருந்து வந்த..,

அந்த வார்த்தைக்காக மீண்டும் பிறந்தேன்,

இந்த சாக்கடையை...

அன்பாலேயே கழுவினாள்...

அம்மா சொல்லித் திருந்தவில்லை,

அப்பா சொல்லித் திருந்தவில்லை,

ஆசான் சொல்லித் திருந்தவில்லை,

நண்பர்கள் சொல்லித் திருந்தவில்லை

நாடு சொல்லியும் திருந்தவில்லை,

முழுசாய் மூன்று வார்த்தை பேச வராத...

இந்த முகத்தை பார்த்து திருந்தி விட்டேன்..

வளர்ந்தாள்..,

நானும் மனிதனாக வளர்ந்தேன்...

படித்தாள்,

என்னையும் படிப்பித்தாள்...

திருமணம்

செய்து வைத்தேன்,

இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள்,

இரண்டு குழந்தைகளுமே...

பெரியவர்களாய் வளர்ந்து விட்டார்கள்,

நானும்கூட தாத்தாவாகி விட்டேன்,

என்னை மனிதனாக்க...

எனக்கே மகளாய் பிறந்த...

அந்த தாய்க்காகக் காத்திருக்கிறது...

#இந்த_கடைசி_மூச்சு..!

ஊரே ஒன்று கூடி..,

உயிர்த் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்,

எனக்குத் தெரியாதா என்ன?

யாருடைய பார்வைக்கப்புறம்...

பறக்கும் இந்த உயிரென்று?

வானத்தை பார்த்துக் காத்திருக்கிறேன்.........................

வாசலில் ஏதோ சலசலப்பு,

நிச்சயம் என் மகளாகத்தான் இருக்கும்..,

என் பெருவிரலை யாரோ

தொடுகிறார்கள்,

அதோ அது அவள்தான்,

மெல்ல சாய்ந்து..

என் முகத்தை பார்க்கிறாள்...

என்னைப் போலவே...

கண்களில் மச்சம்,

சப்பை மூக்கு,

கருப்பு நிறம்,

நரைத்த தலைமுடி,

தளர்ந்த கண்கள்,

என் கைகளை முகத்தில் புதைத்துக் கொண்டு,

'அப்பா அப்பா' என்று குமுறிக் குமுறி அழுகிறாள்,

அவள் எச்சில்

என் பெருவிரலிட,

உடல் முழுவதும் ஈரம் பரவ...

ஒவ்வொரு புலனும் துடித்து...

#அடங்குகிறது...........................................

"தாயிடம் தப்பி வந்த

மண்ணும்...

கல்லும்கூட,

மகளின்...

கை பட்டால் காந்தச் சிலையாகும்!"
இப்படிக்கு

வெங்கடேஷ். ரா

10/31/2023

நேற்று இரவு ஹோட்டலில் சாப்பிட செல்லும் போது நடந்த சம்பவம் ஹோட்டல் உரிமையாளர் சாதம் பரிமாறுவதற்காக குனிந்த போது அந்த பெரியவர் கேட்டார்.....

மதிய உணவுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள்......

உரிமையாளர் சொன்னார்...
மீன் குழம்புடன் 50,
மீன் இல்லாமல் 20 ரூபாய்....

கிழிந்த சட்டையை பாக்கெட்டில் இருந்து, கசங்கிய 10 ரூபாய் தாளை எடுத்து, உரிமையாளரை நோக்கி நீட்டினான்....

இதுவே என் கையில் உள்ளது.....

இதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடுங்க....

பெறும் அன்னம்மானாலும் பரவாயில்லை...

மிகுந்த பசி.

நேற்று முதல் எதுவும் சாப்பிட வில்லை

என்று சொல்லத் தயங்கும் அவரது வார்த்தைகள்.

தொண்டையோ நடுங்குகிறது.... *

ஹோட்டல் உரிமையாளர் மீன் குழம்போடு... அனைத்தையும் அவருக்கு பரிமாரினார்.

அவர் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டு நின்றேன்....

அவர் கண்களில் இருந்து கண்ணீர் மெலிதாக கசிந்தன...

நீ ஏன் அழுகிறாய்...?

அந்த வார்த்தையைக் கேட்டவரைப் பார்த்து கண்களை மூடிக் கொண்டு சொன்னார்...

எனது கடந்த கால வாழ்க்கையை நினைத்து கண்ணீர் வடிக்கிறேன்....

எனக்கு மூன்று குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண்.....

மூவருமே நல்ல வேலையில் இருக்கிறார்கள்....

நான் குவித்த ஒவ்வொரு பைசாவையும் அவர்களின் உயர்வுக்காக செலவழித்தேன். அதற்காக என் இளமையையும் 28 ஆண்டுகால பௌதிக வாழ்க்கையையும் இழந்து புலம்பெயர்ந்தேன்...

புலம்பெயர்ந்தே எல்லாவற்றுக்கும் மேலாக என் மனைவி என்னைத் முதுமையில் தனியே விட்டுவிட்டுப் போய்விட்டாள்....

சொத்து பிரிவினை செய்ய ஆரம்பித்ததில் இருந்து என் மகன்கள், மகள்கள் என்னைத் தள்ளி ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள்.

நான் அவர்களுக்குச் சுமையானதை மெல்ல மெல்ல உணர ஆரம்பித்தேன்.

மெல்ல மெல்ல என்னைத் ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள்....

எனக்கு வயதாகிவிட்டதா....?

குறைந்தபட்சம் என் வயதிற்காகவாவது மதிக்க கூடாதா ?

அவர்கள் அனைவரும் சாப்பிட்ட பிறகுதான் இரவு உணவிற்கு செல்வேன், அப்படியும், அப்போதும் திட்டுவதும், கூச்சலிடுவதும் தவற வில்லை, சாப்பாடு கண்ணீரும் உப்பும் கலந்திருந்தது.

பேரக்குழந்தைகள் என்னிடம் பேசுவதே இல்லை. பார்த்தால் அம்மா அப்பா அடித்து விடுவார்களோ என்ற பயத்தில்...

அதே வேதனை அடுப்பில் எங்கும் வாழ முடியும் போது, அந்த...

இரவும் பகலும் வியர்வை சிந்தி தொடர்ந்து தூங்காமல் உழைத்து, வயிற்றுக்கு சாப்பிடாமல், அவளும் நானும் சேர்த்த பணத்தில் வாங்கிய செங்கல்லால் கட்டப்பட்ட இந்த வீடு....

ஆனால் நான் என்ன செய்வது? மருமகளின் தங்கத்தை திருடிவிட்ட தாக - சாக்குப்போக்கில்- திருடனாக முத்திரை குத்தப்பட்டேன்... மகன் கோபமடைந்தான், நல்லவேலை கை நீட்ட வில்லை. அந்த பாவத்தை அவன் செய்யவில்லை.

அது என் அதிர்ஷ்டம். அங்கேயே நான் இருந்து இருந்தால் நிகழ்ந்து இருந்தாலும் இருக்கலாம்.

சாப்பாட்டின் நடுவில் எழுந்தார்.
உரிமையாளர் முன் 10 ரூபாயை நீட்டினார்..

ஓனர் வேண்டாம், பையில் வையுங்கள், இருக்கட்டும்....

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம்...

நீங்கள் எப்போதும் மதிய உணவு சாப்பிடலாம்..

அப்படியே அந்த மனிதர் 10 ரூபாயை அங்கேயே வைத்துவிட்டு....

உங்கள் உதவிக்கு மிக்க மகிழ்ச்சி....
என்ன நினைக்கிறாய்...

சுயமரியாதை என்னை விட்டு விலகாதே. வருகிறேன் என்று சொன்னதும் ஒரு சிறு மூட்டையை எடுத்துக்கொண்டு தெரியாத இடம் நோக்கி மெல்ல கிளம்பினானர்...

அந்த மனிதர் என் மனதில் ஏற்படுத்திய காயம் இன்று வரை ஆறவில்லை.

அதனால்தான் ஒவ்வொரு துளிருமே கட்டாயம் ஒரு நாள் பழுத்து சருகாகும் என்று கூறப்படுகிறது.

பழுத்த சருகுபோன்ற பெரியவர்களை பூவில் வைத்து கண் போல் காக்க வேண்டும்.

நமக்கு இப்படி ஒரு நாள்..???

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அனைத்தையும் பகிர விரும்புபவர்களும் பகிருங்கள்..

யாரேனும் மனம் மாறினால்..... "போதும்"

மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கட்டும். இன்றே.....

Address

Virginia Beach, VA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Venkat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category