கனடா தமிழ்.com

கனடா தமிழ்.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கனடா தமிழ்.com, Toronto, ON.

08/06/2025

கிளிநொச்சியும் உயிர்க்கொல்லி டிப்பர் விபத்துக்களும்.......................

டொராண்டோவின் காற்று தரம் தற்போது உலகளவில் மிக மோசமானவற்றில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. சுவிஸ் காற்று தர கண்காணிப...
08/05/2025

டொராண்டோவின் காற்று தரம் தற்போது உலகளவில் மிக மோசமானவற்றில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. சுவிஸ் காற்று தர கண்காணிப்பு நிறுவனமான IQAir-ன் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. டொராண்டோ உலகின் முக்கிய நகரங்களில் இரண்டாவது மிகவும் மாசுபட்ட நகரமாக தரப்படுத்தப்பட்டது. காற்று தர அறிக்கை அதிகாலையில், இந்நகரம் மூன்றாவது இடத்தில் இருந்தது. காட்டுத் தீயால் ஏற்பட்ட புகை டொராண்டோவின் வானத்தை மறைத்திருப்பதால், ஒரு சிறப்பு காற்று தர அறிக்கை அமலில் உள்ளது. காட்டுத் தீ புகை திங்கட்கிழமை முழுவதும் தெற்கு ஒன்டாரியோவின் பெரும்பகுதியை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கலாம் என கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது....

Advertisementsஉங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப...

கனடாவின் ரெஜினாவின் தமிழ் சமூகம், கேன்டி கேன் பூங்காவில் நடைபெறும் வெளிப்புற நிகழ்வுகள் மூலம் இளைய தலைமுறையினருக்கு தமிழ...
08/05/2025

கனடாவின் ரெஜினாவின் தமிழ் சமூகம், கேன்டி கேன் பூங்காவில் நடைபெறும் வெளிப்புற நிகழ்வுகள் மூலம் இளைய தலைமுறையினருக்கு தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை கற்பிக்க முயற்சிக்கிறது. "எங்கள் எல்லா மாணவர்களும், குழந்தைகளும் நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதன் மதிப்பை அறிந்திருக்க வேண்டும். இது அவர்களின் அடையாளம். இந்த தாக்கத்தை இளைய தலைமுறையினருக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம்," என்று அறிவகம் தமிழ் கலாசார அகாடமியின் ஷனுகா யோகேந்திரநாதன் தெரிவித்தார். இளைஞர்கள் தமிழ் மொழியையும், இலங்கையின் வரலாற்றையும் கற்றுக்கொண்டனர். வேடிக்கையான மற்றும் ஈர்க்கக்கூடிய நடவடிக்கைகள் மூலம் சமூகத்தில் உள்ள குடும்பங்களுக்கு பாரம்பரியங்களை பகிர்ந்து கொள்வது, இளைஞர்களை அவர்களின் கலாசார வேர்களுடன் இணைக்க உதவுகிறது என்று யோகேந்திரநாதன் விளக்கினார்....

Advertisementsஉங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப...

பட்டினியை எதிர்கொண்டுள்ள ல காசாவிற்குள் வான்வழியாக மனிதாபிமான உதவிகளை வீசியுள்ளதாக தெரிவித்துள்ள கனடா இஸ்ரேல் சர்வதேச சட...
08/05/2025

பட்டினியை எதிர்கொண்டுள்ள ல காசாவிற்குள் வான்வழியாக மனிதாபிமான உதவிகளை வீசியுள்ளதாக தெரிவித்துள்ள கனடா இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறுவதாக குற்றம்சாட்டியுள்ளது. சிசி - 130 ஜே ஹேர்குலிஸ் விமானத்தை பயன்படுத்தி கனடாவின் ஆயுதப்படையினர் காசாவுக்குள் மனிதாபிமான உதவி பொருட்களை போட்டதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. மனிதாபிமான உதவிகளை தடுப்பது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் அதன்படி காசாவிற்கு கனடா, 21600 பவுண்ட் மனிதாபிமான உதவிகளை போட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கனடாவின் ஆயுதப்படையினர் தங்கள் விமானங்களை பயன்படுத்தி முதல்தடவையாக காசாவுக்குள் மனிதாபிமான பொருட்களை போட்டுள்ளனர் என கனடா ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....

Advertisementsஉங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப...

ரஷ்யாவின், கம்சட்கா பகுதியில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 6 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக, வெள...
08/05/2025

ரஷ்யாவின், கம்சட்கா பகுதியில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 6 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த நில அதிர்வினால் ஏதேனும் பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றிய எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. அத்துடன், ஆழிப்பேரலை அறிவிப்பு குறித்த விவரங்களும் வெளியாகவில்லை எனது தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. தொடரும் இந்த சக்தி வாய்ந்த நில அதிர்வுகளின் எதிரொலியாக, ஆழிப்பேரலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisementsஉங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப...

இங்கிலாந்தில் நீழ்வீழ்ச்சிக்குள் விழுந்த சகோதரியின் மகள்களைக் காப்பாற்ற முயன்ற இலங்கை தமிழ இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவ...
08/05/2025

இங்கிலாந்தில் நீழ்வீழ்ச்சிக்குள் விழுந்த சகோதரியின் மகள்களைக் காப்பாற்ற முயன்ற இலங்கை தமிழ இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் இங்கிலாந்தின் வேல்ஸ் Swanseaயில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வேல்ஸ் Swanseaயில் வசித்து வந்த 27 வயதான மோகனநீதன் முருகானந்தராஜா என்பவரே உயிரிழந்துள்ளார். உறவினர்களுடன் நீர்வீழ்ச்சிக்கு சென்ற இளைஞன் இளைஞர் தன் உறவினர்களுடன் Swanseaயில் உள்ள Brecon Beacons என்னுமிடத்துக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவரது குடும்பத்தினர் பலர் அங்குள்ள நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாடிய சிறிது நேரத்தில் இளைஞரின் சகோதரியின் மகள்கள் இருவர் தண்ணீரில் தத்தளித்துள்ளனர்....

Advertisementsஉங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப...

தமிழர்களை இழிவுபடுத்தும் திரைப்படத்தை எடுக்கும் பிற மொழி கூட்டத்தை எச்சரிக்கிறோம்... தமிழ்நாட்டில் உங்கள் படம் ஓடாது. அத...
08/04/2025

தமிழர்களை இழிவுபடுத்தும் திரைப்படத்தை எடுக்கும் பிற மொழி கூட்டத்தை எச்சரிக்கிறோம்... தமிழ்நாட்டில் உங்கள் படம் ஓடாது.

அதில் நடிக்கும் நடிகர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிர்காலம் இருக்காது.

ஏமன் கடற்பரப்பில் படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 68 ஆப்பிரிக்க அகதிகளும் புலம்பெயர்ந்தோரும் உயிரிழந்தாகவும், 74 பேர் ...
08/04/2025

ஏமன் கடற்பரப்பில் படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 68 ஆப்பிரிக்க அகதிகளும் புலம்பெயர்ந்தோரும் உயிரிழந்தாகவும், 74 பேர் மாயமாகியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது. ஏமனின் அப்யான் மாகாணத்தில் 154 எத்தியோப்பியர்களுடன் பயணித்த படகு கவிழ்ந்ததாக IOM-ன் ஏமன் பிரிவு தலைவர் அப்துசத்தோர் எசோவ் கூறினார். இந்த விபத்தில் 12 பேர் உயிர் தப்பியதாகவும், 54 அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் உடல்கள் கான்ஃபர் மாவட்டத்தில் கரை ஒதுங்கியதாகவும், மற்ற 14 பேரின் உடல்கள் வேறொரு இடத்தில் கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்....

Advertisementsஉங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப...

கனடாவில் ஆன்லைனில் விற்கப்படும் அங்கீகரிக்கப்படாத உடற்பயிற்சி மருந்துகளால் ஏற்படும் கடுமையான உடல்நல அபாயங்கள் குறித்து அ...
08/04/2025

கனடாவில் ஆன்லைனில் விற்கப்படும் அங்கீகரிக்கப்படாத உடற்பயிற்சி மருந்துகளால் ஏற்படும் கடுமையான உடல்நல அபாயங்கள் குறித்து அந்நாட்டு சுகாதார நிறுவனம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உடற்கட்டமைப்பு, வயதான எதிர்ப்பு அல்லது விளையாட்டு செயல்திறனை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் அங்கீகரிக்கப்படாத ஊசி மூலம் செலுத்தப்படும் பெப்டைட் மருந்துகளை பறிமுதல் செய்ததாக துறை அறிவித்தது. இந்த பொருட்கள் “கனடா பெப்டைட்” என்ற இணையதளத்தில் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஞாயிறு மதியம் வரை, அந்த இணையதளம் பராமரிப்பு காரணமாக முடக்கப்பட்டிருந்தது. ஊசி மூலம் செலுத்தப்படும் பெப்டைட் மருந்துகள் மருந்துச் சீட்டு மருந்துகளாக ஒழுங்குபடுத்தப்பட்டாலும், பறிமுதல் செய்யப்பட்டவை உட்பட நிறுவனத்தின் இணையதளத்தில் விற்கப்பட்ட எந்தவொரு பொருளையும் துறை அங்கீகரிக்கவில்லை என கனடிய சுகாதார நிறவனம் அறிவித்துள்ளது....

Advertisementsஉங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப...

கனடாவின், லண்டன் நகர மையத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக லண்டன் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர...
08/04/2025

கனடாவின், லண்டன் நகர மையத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக லண்டன் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கோல்போர்ன் தெரு மற்றும் பிரின்ஸஸ் அவென்யூ சந்திப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில், இரு ஆண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து அவசர சேவைகளுக்கு அழைப்பு வந்ததாக லண்டன் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெஃப் ஓர்ட்ரோனோ தெரிவித்துள்ளார். ஒரு ஆண் கடுமையான உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இருப்பதைக் கண்டதாக தெரிவித்துள்ளார். அந்த ஆண் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனவும் தெரிவித்துள்ளார்....

Advertisementsஉங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப...

வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளராக பணியாற்றும் 27 வயதுடைய கேரோலின் லெவிட்டைப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், புகழ்ந்...
08/04/2025

வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளராக பணியாற்றும் 27 வயதுடைய கேரோலின் லெவிட்டைப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், புகழ்ந்த விதம் உலகளவில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது டிரம்ப், அவள் ஒரு நட்சத்திரம். அவளது முகம், புத்திசாலித்தனம், உதடுகள் அவை அசைவது ஒரு இயந்திர துப்பாக்கி போல இருக்கிறது” என புகழ்ந்தார். கேரோலின் லெவிட்ட், டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் முதன்மை செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர், டிரம்ப் செய்துள்ள சர்வதேச அமைதி முயற்சிகளை மேற்கோளாகக் காட்டி, அவருக்கு நோபல் அமைதி பரிசு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். டிரம்ப் செய்தியாளரை வர்ணித்தது சமூக வலைதளங்களில் வன்மையான விமர்சனங்களை சந்திக்கிறது. இது தொழில்முறை ஒழுங்குகளை மீறுவதாகவும், ஒரு பெண் ஊழியரின் மீதான தவறான பார்வையை வெளிப்படுத்துவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisementsஉங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப...

அமெரிக்காவின் வர்த்தக் கூட்டாளர் நாடுகள் மீது அந்நாட்டின் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் சகட்டுமேனிக்கு வரிகள் விதித்துவரு...
08/04/2025

அமெரிக்காவின் வர்த்தக் கூட்டாளர் நாடுகள் மீது அந்நாட்டின் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் சகட்டுமேனிக்கு வரிகள் விதித்துவருகிறார். சமீபத்தில், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை 25 சதவிகிதத்திலிருந்து 35 சதவிகிதமாக உயர்த்தியுள்ளார் ட்ரம்ப். ட்ரம்பின் வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து கனடா இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது கனடா வரிகள் விதித்துள்ளது. இந்த வரிவிதிப்பால், என்னென்ன பொருட்கள் விலை உயர்ந்துள்ளன என்று பார்க்கலாம். 1. ஃப்ரிட்ஜ் மற்றும் வாஷின் மெஷின்கள் ஃப்ரிட்ஜ், ஃப்ரீஸர் ஆகிய உபகரணங்கள் 2 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளன....

Advertisementsஉங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப...

Address

Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when கனடா தமிழ்.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share