Karan TV

Karan TV Latest Updates & Breaking News about Tamil Politics, Cinema, Art, Culture & Heritage!

மனம் முழுதும் வலி நிறைந்துள்ளது!"மனது முழுவதும் வலி நிறைந்துள்ளது.  வாழ்நாளில் இதுபோன்று ஒரு கடினமான சூழ்நிலையை நான் சந்...
30/09/2025

மனம் முழுதும் வலி நிறைந்துள்ளது!

"மனது முழுவதும் வலி நிறைந்துள்ளது. வாழ்நாளில் இதுபோன்று ஒரு கடினமான சூழ்நிலையை நான் சந்தித்தது இல்லை. என் மீது வைத்துள்ள பாசத்தால் மக்கள் அதிகளவில் வந்துவிட்டார்கள். மக்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கும் பாசத்துக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். மீண்டும் பிரச்சனை ஏற்படும் என்பதால் மக்களை சந்திக்க கரூருக்கு நேரில் செல்லவில்லை. கூடிய விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்."
-விஜய் வீடியோ பதிவு!

30/09/2025

"உண்மைகள் சீக்கிரமே வெளிச்சத்திற்கு வரும்" மனம் திறந்தார் விஜய்! | Tvk Vijay | Karur | Karandigital

அமெரிக்க முடிவுக்கு இந்தியா வரவேற்பு!"காசாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரிவான திட்டத்தை அமெரிக்க அதிபர் டிர...
30/09/2025

அமெரிக்க முடிவுக்கு இந்தியா வரவேற்பு!

"காசாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரிவான திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம். இது பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய மக்களுக்கும், ஒட்டுமொத்த மேற்கு ஆசியப் பகுதிக்கும் நீண்டகால, நிலையான அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்"

பிரதமர் மோடி x தள பதிவு!

30/09/2025

முதல்வர் திறந்து வைத்த தி. நகர் மேம்பாலம்! | CM MK Stalin | TNagar | Bridge | Karandigital

விஜய் கூட்டத்துக்கு அனுமதி இல்லை!வரும் வாரங்களில் விஜயின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி கேட்க வேண்டாம் என த.வெ.க. நிர...
30/09/2025

விஜய் கூட்டத்துக்கு அனுமதி இல்லை!
வரும் வாரங்களில் விஜயின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி கேட்க வேண்டாம் என த.வெ.க. நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை அடுத்து எந்தவொரு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யக்கூடாது எனவும் கட்சி தலைமை அறிவுறுதியுள்ளது.

முதல்வர் திறந்து வைத்த தி. நகர் மேம்பாலம்!1.2 கிலோ மீட்டருக்கு கட்டப்பட்டுள்ள தியாகராய நகர் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க...
30/09/2025

முதல்வர் திறந்து வைத்த தி. நகர் மேம்பாலம்!

1.2 கிலோ மீட்டருக்கு கட்டப்பட்டுள்ள தியாகராய நகர் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்! இந்த மேம்பாலத்தால் தி.நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி!

கோவையில் பாஜக எம்.பி.க்கள்!கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க ஹேமமாலினி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் குழு கோவ...
30/09/2025

கோவையில் பாஜக எம்.பி.க்கள்!
கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க ஹேமமாலினி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் குழு கோவை வந்துள்ளது. கரூரில் ஆய்வு செய்தபின் பாஜக தேசிய தலைவர் நட்டாவிடம் அறிக்கை அளிப்போம் என ஹேமமாலினி எம்.பி. பேட்டி!

தொடங்கியது மெட்ரோ சேவை!தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டததை அடுத்து நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை சீரானது. சென்ன...
30/09/2025

தொடங்கியது மெட்ரோ சேவை!
தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டததை அடுத்து நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை சீரானது. சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் இடையே வழக்கமான நேரத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

இந்திய வீரர் தங்கம் வென்றார்!உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் ரிங்கு தங்கப் பதக்கம் வென்றார்....
30/09/2025

இந்திய வீரர் தங்கம் வென்றார்!
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் ரிங்கு தங்கப் பதக்கம் வென்றார். எஃப்-46 பிரிவில் 66.37 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜர் 64.76 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளி பதக்கம் வென்றார்.

நுழைவு தேர்வுக்கு கால அவகாசம்!கேட் எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. க...
30/09/2025

நுழைவு தேர்வுக்கு கால அவகாசம்!
கேட் எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்.28ஆம் தேதியுடன் அவகாசம் முடிந்த நிலையில், அக். 6 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சினிமாவுக்கும் டிரம்ப் வைத்த 'ஆப்பு'!அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% சுங்கவரி வி...
30/09/2025

சினிமாவுக்கும் டிரம்ப் வைத்த 'ஆப்பு'!
அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% சுங்கவரி விதிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு.வெளிநாட்டு படங்களால் உள்நாட்டு படங்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Karan TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Karan TV:

  • Want your business to be the top-listed Media Company?

Share