vinmeen விண்மீன் srilanka

  • Home
  • vinmeen விண்மீன் srilanka

vinmeen விண்மீன் srilanka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from vinmeen விண்மீன் srilanka, TV Channel, .

நேற்று நடைபெற்ற SLC T20 League போட்டியில் ஆடாமல் தனது பள்ளி பருவ கிரிக்கெட் பயிற்சியாளரின் இறுதி சடங்கில் கலந்துக்கொண்ட ...
08/08/2025

நேற்று நடைபெற்ற SLC T20 League போட்டியில் ஆடாமல் தனது பள்ளி பருவ கிரிக்கெட் பயிற்சியாளரின் இறுதி சடங்கில் கலந்துக்கொண்ட Kusal Mendis 🥹

Respect Menda 💯

08/08/2025

ஏளைகளை தாம் வாழ வைத்து அடையும் இன்பம் சொல்லில் அடங்காததே!

பணங்களை மட்டுமே இலக்காக கொண்டுள்ள இக்கால கட்டத்தில் நல்ல மனங்களை உடைய செல்வந்தர்களும் வாழ்கிறார்கள்தான்! 👇

08/08/2025

காத்தான் குடி ரோட்டுக்கடை

இம் முறை புலமைப் பரிசில் பரீட்சையை எதிர் நோக்கும் இக்ரஹ் வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்புகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட...
08/08/2025

இம் முறை புலமைப் பரிசில் பரீட்சையை எதிர் நோக்கும் இக்ரஹ் வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மட்/மம/ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10) ஆம் திகதி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (7) வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில், மாணவர்களை உற்சாகப்படுத்தி, வாழ்த்துக்கள் கூறி மாணவர்களுக்கான காகிதாதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலை அதிபர் எம்.பீ.ஜெமில் (SLPS-III) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள் அல் ஹாஜ் எஸ்.எம்.தாஹிர்(ICST முகாமையாளர்) மற்றும் எம்.ஜே.முனாஸ் JP ஆகியோர் கலந்து கொண்டதுடன் பிரதி அதிபர் டி.எல்.ஏ.ஸக்கி , வகுப்பு ஆசிரியர் எம்.பீ.எம்.ஷர்ஜான் உட்பட மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் பலரும் கலந்து கொண்டதுடன் மற்றும் இந் நிகழ்விற்கான நிதிப்பங்களிப்பு முழுவதும் பிரதேச சபை உறுப்பினர் தாஹிர் அவர்களின் பங்களிப்புடன் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

ஜனாஸா அறிவித்தல்.மட்டக்களப்பு கள்ளியங்காடு மஸ்ஜிதுல் பிர்தௌஸின் முன்னாள் தலைவரும் பள்ளி வாயிலின் காணியை மீட்பதற்காக பல வ...
08/08/2025

ஜனாஸா அறிவித்தல்.

மட்டக்களப்பு கள்ளியங்காடு மஸ்ஜிதுல் பிர்தௌஸின் முன்னாள் தலைவரும் பள்ளி வாயிலின் காணியை மீட்பதற்காக பல வருடங்களாக போராடிய போராளியும், ஆயுர்வேத வைத்தியரும், முன்னாள் ரயில்வே ஊழியருமான,

மட்டக்களப்பு கோட்டமுனையை பிறப்பிடமாகவும் புதிய காத்தான்குடி ரிஸ்வி நகர் முதியோர் இல்ல வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட துவான் ஆரிப் ஸராவுதீன் (92) அவர்கள் நேற்று இரவு 11 மணியளவில் காலமானார்கள்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையை தொடர்ந்து பூநொச்சிமுனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

மூதூர் கோர  விபத்தில் தோப்பூரைச் சேர்ந்த  முகம்மது  #ஜெம்சித் உயிரிழப்புஇன்று அதிகாலை மூதூர் பிரதேசத்தில் ஏற்ப்பட்ட பாரி...
08/08/2025

மூதூர் கோர விபத்தில் தோப்பூரைச் சேர்ந்த
முகம்மது #ஜெம்சித் உயிரிழப்பு

இன்று அதிகாலை மூதூர் பிரதேசத்தில் ஏற்ப்பட்ட பாரிய விபத்தில் படுகாயமடைந்த தோப்பூர் அல்லை நகரைச் சேர்ந்த முகமது ஜெம்சித் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் ஹினாயதுல்லா (மு. தாதி. உத்) - காசறா (ஓ.ஆசிரியை) ஆகியோரின் புதல்வராவார்

விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு இளைஞரான சிஹான் என்பவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்

இவ் விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது திருகோணமலையில் இருந்து தோப்பூர் நோக்கி வந்த டிப்பர் ரக லாரியுடன் தோப்பூரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த காரும் மூதூர் பச்சநூர் சந்தியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

03/08/2025

காத்தான்குடியில் அனுஷ்டிக்கப்பட்ட 35 வது தேசிய ஷுஹதாக்கள் தினம்.

1990 ஆகஸ்ட் மாதம் 03 திகதி காத்தான்குடியில் இரு பள்ளிவாயல்களில் இரவு நேர தொழுகையில் ஈடுபட்டுவந்த முஸ்லிம்கள் மீது விடுதலை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 103 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் தேசிய ஷுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக் கிழமை (03) 35 வது தேசிய ஷுஹதாக்கள் தின நிகழ்வுகள் ஹுஸைனியா மஸ்ஜித் மற்றும் மீரா ஜும் ஆ மஸ்ஜித் ஆகிய இரு பள்ளிவாயல்களில் கத்தமுல் குர் ஆன் ஓதப்பட்டதுடன் து ஆ பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம், பிரதித் தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கள், பிரமுகர்கள், பள்ளிவாயல் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள்,ஷுஹதாக்களின் குடும்பத்தினர் என அதிகமானோர் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை காத்தான்குடி கிளை, வர்த்தக சங்கம், தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் மற்றும் இரு பள்ளிவாயல்களின் நிர்வாகம் ஆகியன இணைந்து பிரகடனமொன்றை வெளியிட்டனர்.

அப்பிரகடனத்தில் 1985ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரையான யுத்த காலப் பகுதியில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் காணி இழப்புகள் தொடர்பில் ஒரு நீதியானதும் நியாயமானதும் சுதந்திரமானதுமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் ஏழு கோரிக்கைகளை முன்வைத்து காத்தான்குடி பிரதேச செயலாளரிடம் மஹஜர் கையளிக்கப்பட்டதுடன் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அது தொடர்பிலான காணொளி

26/01/2025

இன்றைய நாள் ஜனாசா நலன்புரி அமைப்பின் இரத்ததான முகாம் இன்று பதுறியா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது

22/01/2025

நேற்றைய தினம் காத்தான்குடி டெலிகொம் சந்தியில் வடி கான் அடைப்பு நீக்கும் முயற்சி நடை பெற்றது

19/01/2025

இன்றைய நாள் 19/01/2025 மழையுடன் காத்தான்குடி

இன்னும் சற்று நேரத்தில் எமது நேரலையில்
17/01/2025

இன்னும் சற்று நேரத்தில் எமது நேரலையில்

காத்தான்குடி
26/11/2024

காத்தான்குடி

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when vinmeen விண்மீன் srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share