Thagadur

Thagadur News and Media
Computer Sales & Services

07/01/2026

Gold Rate: இன்று தங்கம் விலை உயர்வு; வெள்ளி விலை அதிரடி உயர்வு – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 ஆகவும், பவுனுக்கு ரூ.320 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,870 ஆகும். தங்கம், வெள்ளியுடன் இந்த 'இரு' உலோகங்களுக்கு 2026-ல் சூப்பர் வாய்ப்பு - உடனே கவனியுங்க! தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,02,960 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.283 -க்கு விற்பனை ஆகி வருகிறது. 2026-ம் ஆண்டு தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீடு செய்யலாமா?

07/01/2026

‘விஜய் கூட்டத்துக்கு உற்சாகமாக வருகிறார்கள்; எதிர்காலத்திற்காக.!’ – காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி

கோவையில் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ”அதிக சீட், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு ஆகிய 3 முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் எதிர்காலத்திற்காக வைக்கப்படும் கோரிக்கை. காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஊட்டி விடும் கையை யாராவது கிள்ளுவார்களா. காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த இது தேவையா, இல்லையா என்பதை மட்டுமே யோசிக்க வேண்டும். காங்கிரஸ் ஜனநாயக ரீதியான கட்சி. காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் கோரிக்கையை வைக்கலாம்....

07/01/2026

‘வெனிசுலா எண்ணெய் விற்ற பணம் அமெரிக்காவிற்கும்.!’ – நிரூபிக்கும் ட்ரம்ப்?

'எண்ணெய்க்காகத் தான் எல்லாம்' - வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிறைபிடித்த போது, அரசியல் பார்வையாளர்கள் சொன்ன வார்த்தைகள் இவை. ட்ரம்ப் பதிவு இதை உறுதிப்படுத்தும் வகையில், ட்ரம்ப் ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... "30 - 50 மில்லியன் பேரல்கள் உயர்தர எண்ணெய்களை வெனிசுலாவின் இடைக்கால அரசு அமெரிக்காவிடம் ஒப்படைக்கும். அந்த எண்ணெய் சந்தை விலைக்கு விற்கப்படும். அதில் வருகிற பணம் அமெரிக்க அதிபராகிய என்னால் நிர்வாகிக்கப்படும். இந்தப் பணம் வெனிசுலா மக்கள் மற்றும் அமெரிக்காவின் நலனுக்கு பயன்படுத்தப்படுவதை உறுதிச் செய்வேன்....

07/01/2026

வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு கனமழை! சென்னையிலும் கனமழை – எப்போது?

இந்த வாரத்தில் மூன்று நாள்கள் தமிழ்நாட்டில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது... உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று முன்தினம் (ஜனவரி 5) இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக நிலவியது. மழை இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது. அது நேற்று (ஜனவரி 6), காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது....

07/01/2026

ADMK – BJP: `தேர்தலுக்குப் பிறகு அதிமுக தலைமை மாற்றம்?’ – அமித் ஷா விசிட்டும் அதிமுக ஆப்சென்ட்டும்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக ஜனவரி 4-ம் தேதி தமிழ்நாடு வந்தார். புதுக்கோட்டையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் 'பிரசாரப் பயணத்தின் நிறைவு விழா'வில் பங்கேற்றுப் பேசியதும், அதையொட்டி நடந்த சம்பவங்களும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்த விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் சுற்று பயணமாக திருச்சி விமான நிலையம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்க, கூட்டணிக் கட்சித் தலைவரான அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சென்று வரவேற்றனர்....

07/01/2026

`வெனிசுலா அதிபர் கடத்தப்பட்டதுபோல் மோடியும் கடத்தப்படலாம்’- காங்கிரஸ் தலைவர் பேச்சு; பாஜக கண்டனம்

அமெரிக்க படைகள் இரவோடு இரவாக வெனிசுலாவில் ரெய்டு நடத்தி அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்துச்சென்றன. தற்போது இருவரும் அமெரிக்க சிறையில் இருக்கின்றனர். அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கியூபா, கிரீன்லாந்து உட்பட மேலும் சில நாடுகளை பிடிக்கப்போவதாக எச்சரிக்கை செய்துள்ளார். அதேசமயம் இந்தியா மீது அடுக்கடுக்காக வரிகளை விதித்து வருகிறார். இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள்து. இந்த வரி விதிப்பு மற்றும் வெனிசுலா அதிபர் கடத்தப்பட்டது குறித்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிருத்விராஜ்சவான் பேட்டியளிக்கையில், வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்த அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையைக் குறிப்பிட்டு, அதுபோன்ற நெருக்கடி இந்தியா மீதும் வருமா என்று பிருத்விராஜ் சவான் கேள்வி எழுப்பினார்....

07/01/2026

DMK – 17% TVK – 14%; கொளுத்திபோட்ட Congress MP | Thiruparakundram | EPS | Imperfect Show | Vikatan

07/01/2026

Hugo Chavez – Americaவை மிரட்டிய Venezuela அதிபரின் புரட்சிக் கதை | Decode

06/01/2026

e-B-4 Visa: ஆன்லைன் விசா கொடுத்து சீன வணிகர்களை அழைக்கும் மத்திய அரசு; இந்தியாவின் திட்டம் என்ன?

சீன பிசினஸ்மேன்களுக்கு e-b-4 விசா (e-Production Investment Business Visa) திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது இந்தியா. இந்தத் திட்டம் கடந்த 1-ம் தேதியில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எப்படி விண்ணப்பிப்பது? இது முழுக்க முழுக்க ஆன்லைன் விசா திட்டம் ஆகும். ஏஜென்டுகள் இல்லாமல், தூதரகத்திற்குச் செல்லாமல் இந்த விசாவிற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இந்த விசா 45 - 50 நாள்களில் கிடைத்துவிடும். e-b-4 விசா பெற்றவர்கள் 6 மாதங்கள் வரையில் இந்தியாவில் தங்கலாம். - இதுதான் விண்ணப்பிப்பதற்கான லிங்க்....

06/01/2026

“ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு: சுயமரியாதைத் தலைவர்கள் உருவாகி விட்டார்கள்” – ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளின் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. ஒருபக்கம் கூட்டணி யாருடன் என்ற விவாதம் சூடுபறக்க... இன்னொருபக்கம் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்ற குரலும் வலுவாக எழுந்திருக்கிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலிருந்து திமுக-வுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பல்வேறு கருத்துகள் உலா வந்தன. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூரின் ``அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வையும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது." என்ற கருத்து பரபரப்பைக் கிளப்பியது. மாணிக்கம் தாக்கூர் எம்.பி இந்த நிலையில் தவெக-வின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் இன்றைய நிலையில் ஆண்ட கட்சியும் சரி, ஆளும் கட்சியும் சரி, தனித்து 40 சதவீத வாக்குகளை பெறும் நிலையில் இல்லை....

திருப்பரங்குன்றம் : “இரண்டு காரணங்களால் இந்த தீர்ப்பு செல்லாது” – வழக்கறிஞர் வாஞ்சிநாதன்திருப்பரங்குன்றம் மலைத் தூணில் க...
06/01/2026

திருப்பரங்குன்றம் : “இரண்டு காரணங்களால் இந்த தீர்ப்பு செல்லாது” – வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு திருப்பரங்குன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அந்த வழக்கு இன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள், ``திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவு செல்லும்....

திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நீதிபதி ....

ஈரோடு: வள்ளி கும்மி ஆடிய விவசாயத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் மற்றும் குஷ்பு! | Photo Albumஉற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்ப...
06/01/2026

ஈரோடு: வள்ளி கும்மி ஆடிய விவசாயத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் மற்றும் குஷ்பு! | Photo Album

உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு கோவை: வள்ளி கும்மி நடனத்தில் கின்னஸ் சாதனை படைத்த 16,000 பெண்களுக்கு பாராட்டு விழா! | Photo Album

உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற.....

Address

Dharmapuri

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thagadur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share