23/08/2019
அழிவை நோக்கி அமேசான் காடுகள்:
வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு பிரேசிலில் உள்ள அமேசான மழைக் காடுகளில்
புவி வெப்பமடைதலை எதிர்கொள்வதில் அமேசான் மழை காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஆண்டு 72 ஆயிரத்து 843 காட்டுத்தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன கடந்த ஆண்டை விட இது 83 சதவீதம் அதிகம் என்றும் பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை தெரிவித்துள்ளது.
கடந்த 15 தேதி முதல் 20 தேதி வரை 9 ஆயிரத்து 507 புதிய காட்டுத்தீ கண்டறியப்பட்டுள்ளது.
காட்டுத்தீயால் பல நாடுகளில் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், வறண்ட வானிலை மற்றும் வெப்பம் அதிகரித்ததால் மட்டுமின்றி, சட்டவிரோதமாக காடுகளை அழிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தீ வைக்கப்பட்டு காடுகள் அழிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரேசில் அதிபர் போல்சோனரோ அமேசான் காடுகள் அழிப்பு, பழங்குடியினருக்கும் எதிராக செயல்படுவது என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை கூறி பல நாட்களாக அங்குள்ள பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.