18/05/2025
📅 மே 18 - தமிழின அழிப்பு நினைவு நாள்
🕯️ இன்று, முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 16வது ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கிறோம். இலங்கை அரசின் சிங்கள-பௌத்த பேரினவாத பயங்கரவாதம் தமிழர்களிடம் கட்டவிழ்த்த கொடூரமான இனவழிப்பு, மனித வரலாற்றின் கரும்பக்கமாகவே விளங்குகிறது. இந்த வலியையும் வரலாற்றையும் தலைமுறையாய் தமிழர்கள் சுமந்து செல்ல வேண்டும்.
🔺 2009ல் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இனப்படுகொலையில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் உயிர்கள் கொல்லப்பட்டன. ஐ.நா. அறிக்கையின்படி, குறைந்தபட்சம் 40,000 உயிர்கள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், தமிழர்ப் பிணங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று போரில் இருந்த ஈழத்தமிழர்களுக்கே தெரியும்!
💔 குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என யாரையும் விட்டுவைக்காத அந்தக் கொடூரமான படுகொலைகள் இன்றும் நம் நெஞ்சங்களில் ஆறாத வடுக்களாகத் தொடர்கின்றன..
🌍 16 ஆண்டுகள் கடந்தும், இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதியோ ஆறுதலோ கிடைக்கவில்லை. உலகம் நம்மைப் பார்த்து வாய்ப்பொத்தி அமைதியாக நிற்கிறது. நாம் நிரந்தர வடுக்களை ஏந்தி நிற்கிறோம். எஞ்சியிருப்பது நினைவுகள் மட்டுமே. அந்த நினைவுகளை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும்.
😶 இத்தகைய வலியைச் சொற்களால் விவரிக்க முடியாதது. நம் அவலத்திற்கு மொழியில்லை. அதனால்தான் என்னமோ, அது இன்னமும் மௌனித்தே கிடக்கின்றது. இந்த வலி சொற்களில் அடங்காது. அதனால்தான் என்னமோ அது இன்னும் மௌனித்தே கிடக்கிறது.
🙏🏽 இத்தகைய நாள்களில், நம்மிடம் இருக்கும் துயர் தன்னம்பிக்கையாக மாற வேண்டும். முள்ளிவாய்க்கால் உட்பட ஈழ மண்ணில் நடந்த கொடுமைகளை நாம் நினைவுகூர வேண்டும்.
📌 அடையாளத்தை அழிக்க நினைத்த நாளினையே, இனி அடையாளமாய் ஏந்துவோம்!
💪🏽 துயர நாளிலே தமிழராய் உறுதி கொள்வோம்! மீள்வோம்!
🚫 எதையும் மறவோம்!
🚫 மன்னியோம்!
#மே18 #முள்ளிவாய்க்கால் #எதையும்_மறவோம்_மன்னியோம்
#தமிழர்_இனவழிப்பு #தமிழினப்படுகொலை #இனஎழுச்சிநாள்2025