One Time News

  • Home
  • One Time News

One Time News ONE TIME NEWS
("Prompt News with True information" )

இஸ்ரேல், ஈரானில் "மிகப்பெரிய வெற்றி" பெற்றதையடுத்து நின்று வைக்கும் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளது.ஈரான...
24/06/2025

இஸ்ரேல், ஈரானில் "மிகப்பெரிய வெற்றி" பெற்றதையடுத்து நின்று வைக்கும் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளது.

ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் போர் நிறுத்த முன்மொழிவை இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்தின் சார்பாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தம் குறித்த இஸ்ரேலின் முதல் அதிகாரப்பூர்வ கருத்துகளான இந்த அறிக்கை, ஈரான் மீதான கிட்டத்தட்ட இரண்டு வார தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேல் அதன் அனைத்து நோக்கங்களையும் "மற்றும் அதற்கு அப்பால்" அடைந்துள்ளதாகக் கூறியது.

"அணுசக்தி களத்திலும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் துறையிலும் உடனடி மற்றும் இரட்டை இருத்தலியல் அச்சுறுத்தலை இஸ்ரேல் நீக்கியுள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"கூடுதலாக, ஐடிஎஃப் தெஹ்ரானின் வான்வெளியில் முழு வான்வழி கட்டுப்பாட்டை அடைந்துள்ளது, ஈரானிய இராணுவத் தலைமைக்கு கடுமையான அடியைக் கொடுத்துள்ளது மற்றும் ஈரானில் டஜன் கணக்கான முக்கிய ஆட்சி இலக்குகளை அழித்துள்ளது."

"ஈரானிய அணுசக்தி அச்சுறுத்தலை நீக்குவதில்" டிரம்ப் மற்றும் அமெரிக்கா அளித்த இராணுவ ஆதரவிற்கு இஸ்ரேல் நன்றி தெரிவித்துள்ளது.

"போர் நிறுத்தத்தை மீறும் எந்தவொரு செயலுக்கும் இஸ்ரேல் கடுமையாக பதிலளிக்கும்" என்று அந்த அறிக்கை எச்சரித்தது.

எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் இல்லை எனவும் ஈரான் அறிவித்துள்ளது!இஸ்ரேல் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற...
24/06/2025

எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் இல்லை எனவும் ஈரான் அறிவித்துள்ளது!

இஸ்ரேல் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதாகவும், தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் இல்லை எனவும் ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே "முழுமையான போர் நிறுத்தம்" ஏற்பட்டதாக அறிவித்தையடுத்த ஈரான் அரசு இந்த அறிவித்தலை தெரிவித்துள்ளது.

ஈரான் வெளியுறவு அமைச்சர் செயத் அப்பாஸ் அராக்சி, தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில்,

"தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமோ அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த ஒப்பந்தமோ இல்லை. இருப்பினும், இஸ்ரேல் அரசு ஈரான் மக்கள் மீதான தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி காலை 4 மணிக்கு முன் நிறுத்தினால், அதற்கு பிறகு எங்கள் பதிலடி நடவடிக்கைகளை தொடர விருப்பமில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.

இறுதித் தீர்மானமின்றி முடிவடைந்த ACMC கூட்டம்.ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்...
06/08/2024

இறுதித் தீர்மானமின்றி முடிவடைந்த ACMC கூட்டம்.

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது இறுதித் தீர்மானத்தை எட்டமுடியாத நிலையில் அதன் உயர்பீடக் கூட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இது தொடர்பான இறுதித் தீர்மானம் 14 ஆம் திகதி மீண்டும் உயர்பீடம் கூடியே எடுக்கவுள்ளதாக கட்சித் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

இன்றைய நாணய மாற்று விகிதம்.இன்று செவ்வாய்க்கிழமை  ( செப்டம்பர் 12 ) கொமஷல் வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அட...
12/09/2023

இன்றைய நாணய மாற்று விகிதம்.

இன்று செவ்வாய்க்கிழமை ( செப்டம்பர் 12 ) கொமஷல் வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 314.73 ஆகவும் விற்பனை விலை ரூபா 326.00 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை கொமஷல் வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள மற்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

🔹 யூரோ

👉கொள்முதல் - Rs : 337. 54
👉விற்பனை - Rs : 351. 79

🔹ஸ்ரேலிங் பவுண்

👉கொள்முதல் - Rs : 393. 33
👉விற்பனை - Rs : 409. 33

🔹ஜப்பான் யென்

👉கொள்முதல் -Rs : 2. 15
👉விற்பனை - Rs : 2. 23

🔹சிங்கப்பூர் டொலர்

👉கொள்முதல் - Rs : 229. 86
👉விற்பனை - Rs : 243. 16

🔹அவுஸ்திரேலிய டொலர்

👉கொள்முதல் - Rs : 199. 53
👉விற்பனை - Rs : 213. 46

🔹சுவிஸ் பிராங்

👉கொள்முதல் - Rs : 347. 75
👉விற்பனை - Rs : 37…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக சாரதி துஷ்மந்த நியமனம்!ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக ப...
12/09/2023

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக சாரதி துஷ்மந்த நியமனம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியமை தொடர்பில் குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டிருந்தார்.

நாடளாவிய ரீதியில் இன்று வைத்தியர்கள் போராட்டம்!நாடளாவிய ரீதியில் இன்று(12) பல்வேறு மாவட்டங்களிலும் அமைந்துள்ள வைத்தியசால...
12/09/2023

நாடளாவிய ரீதியில் இன்று வைத்தியர்கள் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் இன்று(12) பல்வேறு மாவட்டங்களிலும் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வைத்தியசாலைகளின் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று(12) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 02 மணி வரை இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்தார் அமைச்சர் பந்துல குணவர்தன.புகையிரத சேவையை இன்று (12) நள்ளிரவு முதல் அத்தி...
12/09/2023

புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்தார் அமைச்சர் பந்துல குணவர்தன.

புகையிரத சேவையை இன்று (12) நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கவுள்ளதாகவும் அதனை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்தன சற்று முன் தெரிவித்தாா்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டாா்.

இலட்சக்கணக்கான இளைஞர் யுவதிகளின் வாழ்க்கை சீரழியும் நிலை – நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்!பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழ...
12/09/2023

இலட்சக்கணக்கான இளைஞர் யுவதிகளின் வாழ்க்கை சீரழியும் நிலை – நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் தொழில் பயிற்சி அதிகாரசபையை நீக்கிவிட்டு உயர்கல்வி ஆணைக்குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம்.

அத்துடன் தேசிய கல்விக் கொள்கையுடன் முறையான வேலைத்திட்டம் தயாரிக்கவில்லை என்றால் இலட்சக்கணக்கான இளைஞர் யுவதிகளின் வாழ்க்கை சீரழிந்துவிடும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

எஸ்.டி.ரி.ஐ.கெம்பஸ் நிறுவனத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

உயர்தர பரீட்சைக்காக தோற்றிய மாணவர்களில் 45ஆயிரம் பேரே பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏனைய இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு அந்த சந்தர்ப்பம் இல்லாமல் போகிறது. அவ்வாறு பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று தேவையாகும்.

அத்துடன் பாராளுமன்ற விசேட செயற்குழுவொன்றில் எமது நாட்டின் கல்வி முறைமை தொடர்பாக ஆய்வு செய்து நாங்கள் அறிக்கை ஒன்றை முன்வைத்தோம்.

அரசாங்கம் மாறுகின்ற வகையில், அமைச்சர் மாறுகின்ற வகையில் கல்விக் கொள்கையை மாற்ற இடமளிக்க முடியாது. குறித்த விசேட செயற்குழுவின் தலைவராக செயற்பட்டு நாங்கள் அவ்வாறான பிரேரணை ஒன்றை முன்வைத்திருக்கிறோம்.

எங்களுக்கு கல்விக் கொள்கை ஒன்று தேவை. தற்போது இருக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் தொழில் பயிற்சி அதிகாரசபையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக உயர்கல்வி ஆணைக்குழு ஒன்றை அமைக்க நாங்கள் பிரேரித்திருக்கிறோம்.

அந்த ஆணைக்குழுவுக்குள் அரச மற்றும் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்கள் தொடர்பாக தேடிப்பார்க்க இரண்டு விசேட பிரிவுகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குள் இடம்பெறும் தரத்தை சரிபார்க்க தனியான அமைப்பொன்று இருக்க வேண்டும் என்றார்.

2022ல் பொருளாதார நெருக்கடியால் 192 தற்கொலைகள்!கடந்த 3 வருடங்களில் 9700 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு ...
11/09/2023

2022ல் பொருளாதார நெருக்கடியால் 192 தற்கொலைகள்!

கடந்த 3 வருடங்களில் 9700 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தயாரித்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் 3406 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதில் 2832 பேர் ஆண்கள் எனவும் தெரியவந்துள்ளது. இது 83% ஆகும். பொருளாதாரச் சிக்கல்களால், 2022ல் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 192 ஆக உள்ளது. இது 5.06% ஆகக் காட்டப்பட்டுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக 593 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இது 17.04% எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 274 பேர் போதைக்கு அடிமையானவர்கள் பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 8% ஆகும். மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்ட 412 பேர் தற்கொலை செய்து கொண்டனர், இது 12% ஆகும்.

2023ஆம் ஆண்டு தொடர்பான தற்கொலைத் தரவுகளை சேகரிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2023ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்களை சுகாதார அமைச்சினால் பெறமுடியவில்லை என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டிற்கான தரவுகளை சேகரிக்க நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உதவியதாக பேராசிரியர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு மேலும் 02 புதிய வரிகள் அறிமுகம்!இலங்கையில் வரி வருமானம் எதிர்பார்த்த வருவாய் இலக்குகளை விட குறைந்துள்ளதாக த...
11/09/2023

அடுத்த ஆண்டு மேலும் 02 புதிய வரிகள் அறிமுகம்!

இலங்கையில் வரி வருமானம் எதிர்பார்த்த வருவாய் இலக்குகளை விட குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசுக்கு கூடுதல் வருவாயை உயர்த்துவதற்காக, அடுத்த ஆண்டு, மேலும் இரண்டு புதிய வரிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் எண்ணியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

செல்வ வரி மற்றும் பரம்பரை வரி என்பனவே அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதில் செல்வ வரி என்பது ஒருவர் கொண்டிருக்கும் சொத்தின் மீது விதிக்கப்படும் வரியாகும்.

பரம்பரை வரி என்பது ஒருவர், தமது மூதாதையரின் சொத்தில் இருந்து ஈட்டும் வருமானத்தின் மீது விதிக்கப்படும் ஒரு வகை வரியாகும். நாட்டின் நிதியை மேற்பார்வையிடும் புதிய நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி, அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும் இந்த வரிகளுக்குத் தேவையான சட்டத்தை உருவாக்குவதற்கு நிதி அமைச்சு பணிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இந்த மேற்பார்வைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழுவின் அறிக்கையின்படி அரசாங்க செலவினங்கள் வருவாயை விட அதிகமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான பாதீட்டு பற்றாக்குறை 1.24 பில்லியன் ரூபாவாக இருந்ததாக குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில், ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை, மூன்று முக்கிய நிறுவனங்களான இலங்கை சுங்கம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியவற்றின் இலக்குகள் எட்டப்படவில்லை.

இதில் உள்நாட்டு இறைவரி திணைக்களம் இந்த அரையாண்டுக்கான 1.667 டிரில்லியன் ரூபா வருமான மதிப்பீட்டில் 41.81 சதவீதமான 696.94 பில்லியன் ரூபாவை மாத்திரமே வசூலித்துள்ளது.

அதே நேரத்தில் இலங்கை சுங்கம் இதுவரை மதிப்பிடப்பட்ட 1.22 டிரில்லியனில் 32.79 சதவீதமான 400.07 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளது.

மதுவரி திணைக்களம் மதிப்பிடப்பட்ட இலக்கான 217 பில்லியனில் 41 சதவீதமான 88.963 பில்லியன் ரூபாவை மாத்திரமே வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வடகிழக்குக் கடலில் நிலநடுக்கம்.மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியி...
11/09/2023

மட்டக்களப்பு வடகிழக்குக் கடலில் நிலநடுக்கம்.

மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (11) அதிகாலை 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

புகையிரத தொழிற்சங்கம் ஒன்று நாளை வேலை நிறுத்தத்தில்.பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு...
11/09/2023

புகையிரத தொழிற்சங்கம் ஒன்று நாளை வேலை நிறுத்தத்தில்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு புகையிரத இன்ஜின் செயற்பொறியாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

புகையிரத அதிகார சபைக்கு அறிவித்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

தர அடிப்படையில் பதவி உயர்வுகளை விரைவுபடுத்தக் கோரி நீண்ட நாள் கோரிக்கை விடுத்து, 5 ஆண்டுகளாக தாமதமாகி வரும் நிலையில், நல்ல பதில் கிடைக்காததால், இன்ஜின் இயக்க பொறியாளர்கள் சங்கம், இந்த வேலை நிறுத்தத்தை அமுல்படுத்துகிறது.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when One Time News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share