Times Tamil News

  • Home
  • Times Tamil News

Times Tamil News Times Tamil News brings you the latest and hottest news from Tamil Nadu to your fingertips within se

தீபாவளி சமணர் பண்டிகை என்கிறார்களே… அதனை கொண்டாடலாமா..?வாழ்க்கையில் கொண்டாட்டங்களே முக்கியம், காரணங்கள் அவசியமில்லை. சின...
30/10/2024

தீபாவளி சமணர் பண்டிகை என்கிறார்களே… அதனை கொண்டாடலாமா..?

வாழ்க்கையில் கொண்டாட்டங்களே முக்கியம், காரணங்கள் அவசியமில்லை. சின்னச்சின்ன விஷயங்களையும் கொண்டாடலாம். என்ன காரணத்துக்காக லட்டு சாப்பிட்டாலும் இனிக்கவே செய்யும். உண்மையை தெரிந்துகொள்வதால் தவறில்லை.



தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்குஉண்மையான காரணம் என்ன? | why celebrate diwali?

பூங்காவில் தவழ்ந்த மெல்லிசைஎன்ன செய்தார் சைதை துரைசாமி ?பூங்காவில் இசை ஒலிக்க வேண்டும் அதோடு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முற...
25/10/2024

பூங்காவில் தவழ்ந்த மெல்லிசை

என்ன செய்தார் சைதை துரைசாமி ?

பூங்காவில் இசை ஒலிக்க வேண்டும் அதோடு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை திருக்குறள் ஒலிபரப்பு செய்து, அடுத்து அதன் அர்த்தத்தை விளக்க வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி தன்னுடைய திட்டத்தை விவரித்ததும். நடைமுறையில் அது சாத்தியமில்லை என்று அதிகாரிகள் தயங்கினார்கள். அதோடு, அங்கு வருபவர்கள் பேசுவதற்கும், சிந்தனை செய்வதற்கும் தடையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்கள்.

To read more

https://gyaanaguru.com/index.php/2024/10/25/melody-in-the-park/


என்ன செய்தார் சைதை துரைசாமி – 176 பூங்காவில் இசை ஒலிக்க வேண்டும் அதோடு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை திருக்குறள் ஒ....

வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்ச...
24/10/2024

வார்த்தைகளே வரம்.

நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி.
தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.
நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள்
நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு
நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு.

To read more

https://gyaanaguru.com/index.php/2024/10/24/words-are-powerful-use-them-wisely-3/

நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தர.....

பசுமைப் பூங்காவில் திருக்குறள் ஒலிபரப்புஎன்ன செய்தார் சைதை துரைசாமி ?உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் மீது ச...
24/10/2024

பசுமைப் பூங்காவில் திருக்குறள் ஒலிபரப்பு

என்ன செய்தார் சைதை துரைசாமி ?

உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் மீது சைதை துரைசாமிக்கு அளப்பரிய மதிப்பும், மரியாதையும் உண்டு. முக்காலத்துக்கும் பொருத்தமான வாழ்வியல் அற நெறிகளை சுருக்கான வார்த்தைகளில் கூறும் திருக்குறள் தமிழர்களுக்கு மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்கும் பயன் தரக்கூடியது. உலகின் எந்த ஒரு மொழியிலும் இத்தனை சுருக்கமான அறநெறி நூல் கிடையாது. எனவே, பொதுமேடையில் மட்டுமின்றி சாதாரணமாக உரையாடும் நேரத்திலும் திருக்குறளின் மேன்மைகளை வலியுறுத்துவார்.

https://gyaanaguru.com/index.php/2024/10/24/thirukkural-broadcast-in-green-park/

,

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

என்ன செய்தார் சைதை துரைசாமி – 175 உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் மீது சைதை துரைசாமிக்கு அளப்பரிய ம...

மண்டியிடாத மாவீரர்கள் மருது பாண்டியர்கள்ஒரு குட்டி ஸ்டோரிஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரத்துடனும், தீரத்துடனும் போர்புரிந்த...
24/10/2024

மண்டியிடாத மாவீரர்கள் மருது பாண்டியர்கள்

ஒரு குட்டி ஸ்டோரி

ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரத்துடனும், தீரத்துடனும் போர்புரிந்த மருதுபாண்டியர்களின் 223ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. மண்டியிடாத மானத்திற்கும், வீழ்ந்து விடாத வீரத்திற்கும் சொந்தக்காரர்களான மருதுபாண்டியர்களின் வாழ்க்கையை சுருக்கமாகப் பார்க்கலாம்.
இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 15.12.1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார்.

To read more

https://gyaanaguru.com/index.php/2024/10/24/marudhu-pandyas-are-the-heroes-who-did-not-kneel/

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

ஒரு சுருக்கமான வரலாறு ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரத்துடனும், தீரத்துடனும் போர்புரிந்த  மருதுபாண்டியர்களின் ...

விஜய் கட் அவுட் கொள்கையால் யார் வாக்குக்கு ஆபத்து..?தெளிவான ஆய்வுமாநாட்டு அரங்கில் தமிழினத்தந்தை பெரியார், பெருந்தலைவர் ...
24/10/2024

விஜய் கட் அவுட் கொள்கையால் யார் வாக்குக்கு ஆபத்து..?

தெளிவான ஆய்வு

மாநாட்டு அரங்கில் தமிழினத்தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், சமூகநீதிப் போராளி அம்பேத்கர் ஆகியோர் கட் அவுட் வைத்திருப்பதிலிருந்தே நடிகர் விஜய் என்ன கொள்கையை சொல்லப்போகிறார் என்பது தெளிவாகிவிட்டது. இன்னமும் தமிழன்னை, வீரமங்கை வேலுநாச்சியார், கடலூர் அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு கட்அவுட் இருக்கும் என்கிறார்கள். இந்த வகையில் விஜய்யின் கொள்கை அமையும் என்றால் எந்தக் கட்சியின் வாக்குகளுக்கு ஆபத்து என்பதைப் பார்க்கலாம்..

To readd more

https://gyaanaguru.com/index.php/2024/10/24/who-is-in-danger-of-vijays-cut-out-policy/

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

தெளிவான அலசல் மாநாட்டு அரங்கில் தமிழினத்தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், சமூகநீதிப் போராளி அம்பேத்கர் .....

விஜய் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சகாயம் ஐ.ஏ.எஸ்..?முதல்வர் நாற்காலியில் நடிகர் விஜய்யை உட்கார வைத்து அழகு பார்க்க அவரத...
20/10/2024

விஜய் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சகாயம் ஐ.ஏ.எஸ்..?

முதல்வர் நாற்காலியில் நடிகர் விஜய்யை உட்கார வைத்து அழகு பார்க்க அவரது ரசிகர்கள் துடிக்கிறார்கள். ஆனால், விஜய் தொடர்ந்து சகாயத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். ஆகவே, சகாயத்தை முதல்வர் வேட்பாளராக மாநாட்டு மேடையில் அறிவிக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.

விஜய்யும் சகாயமும் இணைந்தால் தமிழகத் தேர்தலில் வெற்றி கிடைக்குமா..? ஞானகுருவின் பதிலை ஞானகுரு மகிழ்ச்சி ஐப்பசி இதழில் படியுங்கள்.

இன்னமும் ரத்தன் டாட்டா, இறையன்பு ஐ.ஏ.எஸ்., கண்ணதாசன், புத்தர், பணம், வெற்றி, கவுன்சிலிங் என எக்கச்சக்க மகிழ்ச்சி தரும் கட்டுரைகள்.

லிங்க் தொட்டு இணையம் செல்லுங்கள்.

அட்டையைத் தொட்டதும் புத்தகம் விரியும். படியுங்கள், மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.

முதல்வர் நாற்காலியில் நடிகர் விஜய்யை உட்கார வைத்து அழகு பார்க்க அவரது ரசிகர்கள் துடிக்கிறார்கள். ஆனால், விஜய் ...

புன்னகையின் விலைஏர் ஹோஸ்டஸ் பெண்களின் போலிப் புன்னகை ரொம்பவே ஓவர் என்பதால் பெரிதாக ஈர்ப்பு ஏற்படுவதில்லை. லண்டனிலிருந்து...
16/10/2024

புன்னகையின் விலை

ஏர் ஹோஸ்டஸ் பெண்களின் போலிப் புன்னகை ரொம்பவே ஓவர் என்பதால் பெரிதாக ஈர்ப்பு ஏற்படுவதில்லை. லண்டனிலிருந்து திரும்பிய விமானப்பயணத்தில் புதிய அனுபவம் கிடைத்தது.

விமானத்தில் டிரிங்க்ஸ், டின்னர் முடித்து பெரும்பாலோர் நன்றாகக் கண்ணயர்ந்த நேரத்தில், எங்களுக்கு நாலைந்து ரோ தாண்டியிருந்த ஒரு வெள்ளைக்காரப் பயணி சத்தம்போட்டு பணிப்பெண்ணை அழைத்தார். வேகமாக வந்த பணிப்பெண் நிலைமையைப் பார்த்தவுடன் சக பணியாளரை வரவழைத்தார்.

சத்தம் போட்ட நபரை அமைதிப்படுத்தி.. அவரை மெதுவாக பாத்ரூம் பக்கம் ஒருவர் அழைத்துச்சென்றார். அவர் எழுந்த நேரத்தில் தான், பக்கத்து சீட் பயணி மது குடித்துவிட்டு அவர் மீது வாந்தி எடுத்திருப்பது தெரிய வந்தது.

வாந்தியெடுத்தவரும் ஒரு வெள்ளைக்காரப் பயணி. அரை மயக்கத்திலிருந்தவரை தட்டி எழுப்பி, கைத்தாங்கலாக வேறு பாத்ரூமுக்கு இன்னொருவர் அழைத்துச் சென்றார். என்னவோ, ஏதோவென்று நினைத்து எட்டிப் பார்த்த பயணிகளிடம், ‘டிரிங்ஸ் கொட்டிவிட்டது’ என்று மட்டும் அதே புன்னகையுடன் மென்மையாகச் சொன்னார்கள்.

அதற்குள் தள்ளுவண்டியுடன் வந்த ஒரு பெண் மாஸ்க், கையுறை அணிந்து, சீட்டுகளுக்கு இடையில் நுழைந்து அமர்ந்து, வாந்தி எடுத்த இடத்தை ஒரு தேர்ச்சி பெற்ற சுகாதாரப் பணியாளர் போன்று சரசரவென சுத்தம் செய்தார். டிஷ்யூக்கள், பவுடர், ஸ்ப்ரே என சில நிமிடங்களில் அந்த வேலையை முடித்துவிட்டார். அவர் எழுந்ததும் இன்னொரு பணிப்பெண் அதை மேற்பார்வையிட்டு திருப்தி தெரிவித்தார்.

வேறு சீட் வேண்டும் என்றபடி வந்த பயணி, அவரது இருக்கையை ஒரு கணம் உற்றுப் பார்த்தார். அதற்குள் வாந்தி எடுத்த பயணி வந்து, தலை வணங்கி மன்னிப்பு கேட்டார். இருவரும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அதே சீட்டில் அமர்ந்துகொண்டனர். விழித்திருந்த ஒரு சிலர் தவிர மற்றவர்களுக்கு அப்படியொரு சம்பவம் நடைபெற்றதே தெரியாத அளவுக்கு சத்தமில்லாமல் காரியம் நடந்துமுடிந்தது.

ஏர் ஹோஸ்டஸ் தான் இந்த வேலையையும் செய்கிறார்கள் என்பதை ஜீரணிக்கவே நேரமானது. பயணம் முடிந்து வழியனுப்புகையில் அந்த ஏர் ஹோஸ்டஸ் வழக்கமான அதே புன்னகையுடன் வழியனுப்பி வைத்தார். பாராட்ட முயன்றதை கண்டுகொள்ளாமல் புன்னகைத்தார்.
அந்த புன்னகைக்குள் நிறைய அர்த்தம் தெரிந்தது.

பாலியல் கல்வி முக்கியமுங்கோ…பெற்றோர், ஆசிரியர், மருத்துவர் என யாரிடமிருந்தும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அடிப்ப...
06/10/2024

பாலியல் கல்வி முக்கியமுங்கோ…

பெற்றோர், ஆசிரியர், மருத்துவர் என யாரிடமிருந்தும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அடிப்படையாகத் தெரியவேண்டிய பாலியல் கல்வி கிடைப்பதே இல்லை. அதனாலே ஆண், பெண் என அத்தனை பேரும் தங்களுடைய அந்தரங்கம் குறித்து எக்கச்சக்க சந்தேகங்களுடன் இருக்கிறார்கள். தங்கள் உறுப்பை அவலட்சணமாகக் கருதுகிறார்கள். குற்றவுணர்வுடன் வாழ்கிறார்கள்.
இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி ஆணுக்குப் பெரிதாக்குதல் பெண்ணுக்குச் சிறிதாக்குதல் என பணம் கொள்ளையடிக்கும் மருத்துவக் கும்பல் அதிகரித்துவருகிறது. எந்த அவசியமும் இல்லாமல் லேபியோபிளாஸ்டி சிகிச்சை நிறைய இளம் பெண்களுக்குச் செய்யப்படுகிறது. தீயாகப் பரவும் சிகிச்சை குறித்து விழிப்புணர்வூட்டுகிறார் டாக்டர் பதூர் மொய்தீன்.
மேலும்,
* சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு நடந்த சிகிச்சையின் கம்ப்ளீட் ரிப்போர்ட்
* நடிகை தீபிகா படுகோன் தாய்மைக் கொண்டாட்டம்
* இயக்குனர் பேரரசுக்கு நடிகர் விஜய் சொல்லிக்கொடுத்த ஆரோக்கிய ரகசியம்
* தூக்கத்தைக் கடன் வாங்கினல் என்னவாகும் தெரியுமா?
* உடலுக்குள் ஒரு வெற்றிடம் இருப்பதாக நம்பிய பெண்ணுக்குக் கவுன்சிலிங்
* தசைப்பிடிப்புக்கு உடனடியாக என்ன செய்யக்கூடாது..?
இன்னும் நிறைய நிறைய சுவாரஸ்யங்களுடன் ஞானகுரு யாக்கை அக்டோபர் இதழ்
லிங்க் மூலம் அட்டையைத் தொடுங்கள். இதழ் விரியும்… படியுங்கள்… பரப்புங்கள்.

ஆலங்கட்டி மழை… பக்கிங்ஹாம் அரண்மனைலண்டன் பள்ளியின் கோடை விடுமுறையைக் கணக்கிட்டே பயணத்தைத் திட்டமிட்டோம். ஜூலை மாதம் இரவு...
26/09/2024

ஆலங்கட்டி மழை…
பக்கிங்ஹாம் அரண்மனை

லண்டன் பள்ளியின் கோடை விடுமுறையைக் கணக்கிட்டே பயணத்தைத் திட்டமிட்டோம். ஜூலை மாதம் இரவு 10 மணி வரை வெயில் அடித்து, காலை 5 மணிக்கே விடிந்தது. இந்த செப்டம்பரில் மழைக் காலம் தொடங்கிவிட்டது. இரவு 7 மணிக்கு இருட்டி காலை 7 மணிக்கு விடிகிறது. இது இன்னும் குறைந்து மாலை 3 மணிக்கே இருட்டிவிடும் என்கிறார்கள்.

ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்கள் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தோம். கிளம்பிய நேரத்தில் சடச்சடவென ஆலங்கட்டி மழை. பள்ளி வயதில் ஆலங்கட்டி மழையை நேரில் பார்த்தது. இப்போது கண் முன்னே பால்கனியில் பிரமிப்பான மழை அனுபவம். குட்டிக்குட்டி கற்கண்டாகத் தெறிந்த ஐஸ் துளிகளை எடுத்து வாயில் போடுவதற்குள் கரைந்து கரைந்து விளையாட்டு காட்டியது. லண்டனிலும் ஆலங்கட்டி மழை அபூர்வமாகவே பெய்கிறதாம்.

இந்த மழையில் அரண்மனைக்குச் செல்ல முடியாது, போட்ட டிக்கெட் பணம் வீண் என்றே நினைத்தேன். ஆனால், இன்னும் 10 நிமிடத்தில் வெயில் வந்துவிடும், கிளம்புங்கள் என்று மகன் சொன்னதை முதலில் நம்பவில்லை. ஆனால், அதுவே நடந்தது. மழை நின்றதும் சுள்ளென்று வெயில் அடித்தது. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வானிலை மாறுகிறது என்றாலும், அத்தனை துல்லியமாகக் கணித்துத் தருகிறார்கள்.

இங்கிலாந்து அரசரின் அதிகாரபூர்வ இல்லமே பக்கிங்ஹாம் அரண்மனை. 1703ம் ஆண்டு பக்கிங்ஹாம் பிரபு கட்டத் தொடங்கிய அரண்மனையை அடுத்த 200 வருடங்கள் அடுத்தடுத்து வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரமாண்டமாக மாற்றியிருக்கிறார்கள். 1837ம் ஆண்டு விக்டோரியா மகாராணி இங்கிருந்து ராணியாக ஆட்சி புரிந்திருக்கிறார்.

ராணியைச் சந்திக்க வரும் நபர்களின் அந்தஸ்துக்கு ஏற்ப தங்க வைப்பதற்கு ஏழெட்டு வகையில் வரவேற்பு அறைகள், தர்பார் ஹால், நடனமாடும் அறை, கேளிக்கை அறை, இசைக் கருவிகள் அறை, மார்பிள் சிலைகள் அறை என 19 பிரமாண்ட அறைகளும் 52 படுக்கையறைகளும் உள்ளன. இது தவிர பணியாளர்கள், அலுவலர்களுக்கு 250 அறைகள். நமது திருமலை நாயக்கர் மஹாலை விட 100 மடங்கு பெரிது என்று வேண்டுமானால் சுருக்கமாக சொல்லிக்கொள்ளலாம்.

இந்த அரண்மனை முழுக்கவே தங்கமுலாம் பூசப்பட்டுள்ள காரணத்தால் ஐந்து அடிக்கு ஒரு பாதுகாவலர் நிற்கிறார். சிலை மட்டுமின்றி சுவர், தூண்களையும் தொட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு கண்ணாடியால் அடைத்திருக்கிறார்கள். போட்டோ, வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. எங்கெங்கும் பாதுகாவலர்கள் முறைத்துக்கொண்டு நிற்பதால் பளிங்குச் சிலைகள், உலகப் புகழ் ஓவியங்கள், வித்தியாசமான கூரைகளை ரசிப்பதற்குத் தயக்கமாகவே இருக்கிறது. இங்கிருக்கும் சில படங்கள் இணையத்தில் எடுத்தவையே.

பொதுமக்களை உப்பரிகையில் இருந்து பார்க்கும் வகையில் மிகப்பெரிய மைதானம், மிகப்பெரிய புல்வெளி என்று எல்லாமே பிரமாண்டம். இந்த அரண்மனைக்கு முன்பாக ஆண்டு தோறும், ‘தி சேஞ்சிங் ஆஃப் கார்ட்ஸ்’ நிகழ்ச்சிக்காக 50 ஆயிரம் பேர் ஒன்று கூடுவது முக்கியமான நிகழ்வு என்கிறார்கள்.
அரண்மனையின் ஒவ்வொரு அங்குலத்தையும் சித்திரங்கள், கலைப்பொருட்கள், சிற்பங்கள் அலங்கரிக்கின்றன என்றாலும் ஏதோ ஜெயிலுக்குள் நுழைந்து திரும்பிய அனுபவமே கிடைக்கிறது.

பிறர் சொல்வதால் என்ன ஆகிவிடும்..?ஐஸ்வர்யா ராய்க்கு அழகிப் போட்டியில் நுழைவதற்கே தகுதி இல்லை என்று புறக்கணித்த உலகம் இது....
19/09/2024

பிறர் சொல்வதால் என்ன ஆகிவிடும்..?

ஐஸ்வர்யா ராய்க்கு அழகிப் போட்டியில் நுழைவதற்கே தகுதி இல்லை என்று புறக்கணித்த உலகம் இது. நடிகர் விஜய் முகத்தை நசுங்கிப் போன தகர டப்பா என்று கேலி செய்தார்கள். ஸ்டாலின் ஜாதகப்படியும் தகுதிப்படியும் முதல்வராகவே முடியாது என்று ஆருடம் சொன்னார்கள். இது போன்ற விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல் தான் இவர்கள் முன்னேறினார்கள்.

விமர்சனம் செய்ய நினைப்பவர்களை மாற்ற நினைப்பதில் அர்த்தமே இல்லை. நீங்கள் கருப்பு நிறம் என்றால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். மாற்ற முடியாத விஷயங்களில் நீங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை. ரஜினி, பி.டி.உஷா என்று கருப்பு நிறத்துடன் எத்தனை சாதனையாளர்கள் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு உங்கள் வழியில் முன்னேறிச் செல்லுங்கள்.

இன்னும்…
• நம்முடன் வாழும் அவெஞ்சர்ஸ்
• ஆத்திகம் நாத்திகம் பிளஸ், மைனஸ்
• ஆசிரியர்களுக்கு பாத பூஜை..?
• சபலத்தின் சம்பளம் – கவுன்சிலிங்
• மோடியின் முதலாளி இவரா..?

இன்னும் நிறைய சுவாரஸ்யங்களுடன் புரட்டாசி ஞானகுரு மகிழ்ச்சி இதழ் வந்துவிட்டது.
லிங்க் மூலம் அட்டையைத் தொட்டதும் இதழ் விரியும். படியுங்கள், மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.

ஆப்பிள் தோட்டத்தில் ஒரு மேய்ச்சல்சீசன் காலத்தில் தக்காளி அடிமட்ட விலையில் கிடைப்பது போன்று, லண்டனில் ஒரு பவுண்டுக்கு தரம...
14/09/2024

ஆப்பிள் தோட்டத்தில் ஒரு மேய்ச்சல்

சீசன் காலத்தில் தக்காளி அடிமட்ட விலையில் கிடைப்பது போன்று, லண்டனில் ஒரு பவுண்டுக்கு தரமான 6 ஆப்பிள் வாங்கமுடிகிறது. சுவையும் அள்ளுகிறது. அதனாலே ஆப்பிள் தோட்டம் பார்க்கும் ஆசை வந்தது.

லண்டனுக்கு வெளியே ஒரு தோட்டத்துக்குப் போனோம். ஃபார்ம் சுற்றிப் பார்க்க டிக்கெட் என்றாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். வீட்டுக்கு எடுத்துச்செல்வதற்கு மட்டும் விலை கொடுத்து வாங்க வேண்டும்.

நாங்கள் போன ஃபார்மில் ஆப்பிள், பேரிக்காய், பிளம்ஸ், ரோஸ்ஃபெரி, பிளாக்ஃபெரி இருந்தன. உள்ளே அனுப்பும்போதே, ’மரத்தை மட்டும் உலுக்க வேண்டாம், ஒன்றிரண்டு மட்டும் சாப்பிடுங்கள்’ என்று கண்டிப்புடன் சொல்லி அனுப்பினார்கள்.

இப்போதே சாப்பிடலாம், நாளை சாப்பிடலாம், அடுத்த வாரம் சாப்பிடலாம் என்று தெளிவாக ஒவ்வொரு வரிசை மரங்களுக்கும் போர்டு வைத்திருக்கிறார்கள். எல்லாமே கைக்கெட்டும் தூரத்தில் குட்டியூண்டு குண்டு மரங்கள். ஒவ்வொரு மரத்திலும் நூற்றுக்கணக்கில் ஆப்பிள் நிரம்பி வழிவதை பார்ப்பதே பேரானந்தம். ரகம் ரகமாக சாப்பிட்டோம்.

மரத்தை உலுக்கக்கூடாது என்று கண்டிப்பு காட்டியது ஞாபகம் வரவே, ஒரு மரத்தை மட்டும் லேசாக உலுக்கிப் பார்த்தேன். மளமளவென அத்தனை பழங்களும் கொட்டிவிட்டன. சிசிடிவி பார்த்து காசு வசூல் செய்தாலும் ஆச்சர்யமில்லை என்று பயந்து, அப்படியே பேரிக்காய் பக்கம் ஜம்ப் அடித்தோம்.

இங்கேயும் குட்டிக் குட்டி மரங்களில் நூற்றுக்கணக்கில் பேரிக்காய் தொங்குகின்றன. பறித்துப் பறித்து சாபிட்டுக்கொண்டே பிளம்ஸ் மரங்களை நோக்கிப் போனோம். கருப்பு, சிவப்பு, இரண்டு நிறமும் கலந்த பிளம்ஸ் என்று விதவிதமான நிறத்தில் குண்டு தக்காளி போல் நம்மை சாப்பிட அழைக்கின்றன.

இதையும் சாப்பிட்டு விட்டு ரோஸ்ஃபெரி, பிளாக்ஃபெரி பக்கம் போனோம். எங்களுக்கு முன்னே போனவர்கள் பெரும்பாலும் மேய்ந்துவிட்டதால் நாங்கள் சாப்பிடுவதற்கு நிறையக் கிடைக்கவில்லை. இது சீசன் இல்லையாம். அதனால் பிளம்ஸ், ஆப்பிள், பேரிக்காய் மட்டும் வீட்டுக்கும் வாங்கிக்கொண்டு வந்தோம்.

மரங்கள் வளர்ப்பு முறை அத்தனை நேர்த்தி. ஒவ்வொரு மரத்தின் கீழும் ஒரு குழாய் பதித்து தண்ணீர் விரயமில்லாமல் பாய்ச்சுகிறார்கள். பிளம்ஸ் தோட்டத்துக்கு மட்டும் இரும்பு ஷெட் போட்டு பெரிய பிளாஸ்டிக் ஷீட் வைத்திருக்கிறார்கள். பெரிய காற்றடித்தால் மட்டும் மூடிவிடுவார்களாம். பழங்கள் பறிக்க, கிளைகள் வெட்ட, தேவையில்லாத பழங்களைப் பிரிக்க என எல்லாமே இயந்திரங்கள். மூன்று பேர் மட்டுமே கிட்டத்தட்ட 20 ஏக்கர் தோட்டத்தை பராமரிக்கிறார்கள்.
ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டிருந்தால் கூட இப்படி வயிறு நிரம்பியிருக்க வாய்ப்பில்லை என்ற திருப்தியுடன் கிளம்பினோம்.

வரும் வழியில் டோவர் கடற்கரையை மேலே நின்று எட்டிப் பார்த்தோம். மலையை வெட்டி எடுத்தது போன்ற துறைமுகம். இங்கிருந்து ஃப்ரான்ஸ் நாட்டுக்கு கால் மணி நேரத்துக்கு ஒரு குட்டிக் கப்பல் போய் வருகிறது. காரில் துறைமுகத்துக்கு வருபவர்கள், காருடனே கப்பலுக்குள் ஏறுகிறார்கள். ஒன்றரை மணி நேரத்தில் பிரெஞ்சு நாட்டுக்குப் போய் விடலாம். இரவும் பகலுமாய் படு பிஸி போக்குவரத்து.

மூன்று பக்கம் கடல் இருந்தாலும் இன்னமும் இந்தியப் பெரு நகரங்களை இணைப்பதற்குக் கூட கடல் வழிப் பயணம் உருவாகவில்லை என்பது நம் இந்திய நாட்டின் வல்லரசு பரிதாபம்.

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Times Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share

TIMES தமிழ்

உண்மை செய்திகள் சுடச்சுட இங்கு கிடைக்கும்…