09/03/2024
இந்த ஒரு படத்த எத்தனை பேர் பாத்தீங்கனு தெரியல..உண்மையாவே நல்ல தரமான படம்...❤️😊
அப்துல்கலாம் சாலையோர விளக்கு வெளிச்சத்துல படிச்சாரு ஆனா எனக்கு சொந்தமா ஒரு பல்பே இருக்குங்ற அந்த நம்பிக்கை அதுதான் இப்ப எல்லாருக்கும் வேணும்..💪💪
நாம ஒரு விஷயத்தை கையில எடுத்து அதநோக்கி போய்ட்டு இருக்கப்ப அதுல எத்தனை முறை தோல்வி வந்தாலும் மறுபடியும் "0"லேருந்து தொடங்கலாம்.. முயற்சி பண்றத மட்டும் விட்டுடகூடாது அப்டிங்கிறத தெளிவா சொல்லிருக்காங்க..
எத்தனை முறை தோத்தாலும் திரும்ப முதல்லேருந்து ஆரம்பிக்கனும் அதவிட்டு தப்பான எந்த ஒரு முடிவபத்தியும் யோசிக்காம ,ஒருவேலை நம்ம இலக்கே தவறுனாலும் அடுத்ததா என்ன பண்ணணும்கிற யோசனை தான் வரனும்ங்கிறத அவ்வளவு அழகா சொல்லிருக்காங்க..
இந்த படத்த கண்டிப்பா எல்லாரும் பாக்கனும்,குறிப்பா #நீட் தேர்வு எழுதுற மாணவர்களும், #அரசு வேலைக்கோ இல்ல எதாச்சும் பெருசா சாதிக்க துடிக்குற எல்லாரும் ஒரு முறையாவது பாக்கனும்.....
ல படம் இருக்கு பாக்காதவங்க பாருங்க😊❤️
ஜெயிக்கிற வரைக்கும் தோக்கலாம்...
#துரை