2MR TV Tamil News

  • Home
  • 2MR TV Tamil News

2MR TV Tamil News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 2MR TV Tamil News, TV Channel, .

09/07/2023

இலங்கையில் மீண்டும் போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள்.
ஜுலை - 09, ஞாயிறு - 2023
✍️ நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
✍️ அரசாங்க ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பில் எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்படாவிட்டால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
✍️ கடந்த காலங்களில் சம்பள அதிகரிப்பில் மூன்றில் ஒரு பங்கு சம்பளம் மாத்திரமே சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சமகால பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு மீதி மூன்றில் இரண்டு பங்கு சம்பளத்துடன் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான நிதியை இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்க வேண்டும்.
✍️ இல்லை என்றால் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
✍️ அடுத்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

09/07/2023

இலங்கையில் பொருட்களின் விலை உயர்வு - கடும் நெருக்கடியில் மக்கள்
ஜுலை - 09, ஞாயிறு - 2023
✍️ நாடளாவிய ரீதியிலுள்ள சந்தைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்து வருகின்றன.
✍️ இறைச்சி, மீன், மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதால், நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
✍️ எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலைகள் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும், அந்த நிவாரணத்தை மோசடி வியாபாரிகள் நுகர்வோருக்கு வழங்காத நிலை காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
✍️ சில வியாபாரிகள் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நுகர்வுப் பொருட்களுக்குத் தன்னிச்சையான விலையை வசூலிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
✍️ இதனைத் தடுக்க அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
✍️ எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலைகள் எவ்வளவு குறைக்கப்பட்டாலும் நுகர்வோர் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படாவிட்டால் மக்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்காது எனவும் இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டபபட்டுள்ளது.
✍️ சந்தையில் மரக்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளதுடன், சில மரக்கறிகள் 250 கிராம் 80, 120 ரூபா போன்ற விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
✍️ சிறிய மீன்களின் விலை 1000, 1500 ரூபாவை தாண்டியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

Address


Alerts

Be the first to know and let us send you an email when 2MR TV Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share