04/06/2024
அர்ஷத்தியன்ஸ் பிரிமியர் லீக் - 2024
சீசன் -3 ஜம்பியனாக மகுடம் சூடியது
- ROCKERS 2008-2009 O/L BATCH -
சம்மாந்துறை அல்-அர்ஷத் பாடசாலை மைதானத்தில் கடந்த May 18,19 மற்றும் June 1 ஆம் திகதி நடைபெற்ற அர்ஷத்தியன்ஸ் பிரிமியர் லீக் -2024 மென்பந்து இத் தொடரில் பலமான பல அணிகளை வீழ்த்தி இறுதி போட்டியில் நடப்பு Champions 14 Blades அனியினை வெற்றி கொண்டு Champions ஆக Rockers அணி தெரிவு செய்யப்பட்டது..
இந்த சுற்று தொடருக்கு எமது பாடசாலையில் கல்வி கற்ற 16 O/L Batch அணிகள் பங்குபற்றின. எமது பாடசாலையின் பழைய மாணவர்களை ஒன்றினைக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இச் சுற்றுத் தொடரில் பல சுவாரஸ்சியமான போட்டிகள் நடைபெற்றது. இச் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டத்திற்கு "14 BLADES (2014O/L Batch) அணியினரும் ROCKERS (2008-2009.O/L Batch)" அணியும் தெரிவானது.
இறுதி போட்டி 5 ஓவர்கள், 4 பந்துகள் என நடத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் 14 Blades அணியினர் 34 ஓட்டங்களை பெற்றனர். 4 ஓவர்கள் 2 பந்துகளுடன் வெற்றிவாகை சூடி இறுதியாக ஜம்பியன் பட்டம் வென்றது
ROCKERS அணி..🏆
இரண்டாவது இடத்தினை 14 BLADES அணியினர் பெற்றுக்கொண்டனர்.
♦️ இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ரிஸ்லி முஸ்தபா கல்வி திட்டம் மற்றும் சமூக அமைப்பின் தலைவர் ரிஸ்லி முஸ்தபா அவர்களுக்கும்,
♦️கௌரவ அதிதியாக
இக்ரா நிறுவனத்தின் உரிமையாளர் சத்தார் ஜலால் அவர்களுக்கும்,
♦️முன்னாள் இலங்கை அணியின் கிரிக்கெட் அகடமியின் வேக பந்துவிச்சாளர் சிபாஸ் அஹமட் ஜிப்ரி அவர்களுக்கும்
♦️ ரிஸ்லி முஸ்தபா கல்வி திட்ட மற்றும் சமூக அமைப்பின் சம்மாந்துறை பிராந்திய பொறுப்பாளர் பாரிஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
🗣 மற்றும் சுற்றுத் தொடருக்கான அனுசரனை வழங்கிய ரிஸ்லி முஸ்தபா கல்வி திட்டம் மற்றும் சமூக அமைப்பின் தலைவர் ரிஸ்லி முஸ்தபா அவர்களுக்கும், சுற்றுத் தொடரினை சிறந்த முறையில் நடத்தி முடிக்க பல ஆலோசனைகளை வழங்கிய இக்ரா நிறுவனத்தின் உரிமையாளர் சத்தார் ஜலால் அவர்களுக்கும் எங்களது ஏற்பாட்டுக்குழு சார்பில் இதயபூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
🎗மேலும் எமது பாடசாலை மைதானத்தினை பயன்படுத்துவற்கு அனுமதி வழங்கிய பாடசாலை அதிபர் அவர்களுக்கும், தொடரினை சிறந்த முறையில் நடத்தி முடிக்க மைதான உதவிகளை வழங்கிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கும் ஏற்பாட்டுக்குழு சார்பில் இதயபூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்..
எமது சம்மாந்துறை மண்ணில் பாடசாலை பழைய மாணவர்களுக்கிடையிளான சுற்றுத் தொடர் மூன்றாவது முறை நடாத்தி முடித்த பெருமை எமது பாடசாலைக்கே உரித்தானது...!
AL-Arsath Premier League