
21/06/2025
- பெரிய கோடிஸ்வரன், ஓர் அரசாங்கம், பிச்சைக்காரன் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பு இறுதியில் என்னவானது?? நல்லதொரு கதைக்கருவை எடுத்த இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கவனம் எடுத்திருக்க வேண்டும் சும்மா 3 மணிநேரம் இந்தகதையை போட்டு ஐவ்வா இழுக்குறாங்க🙄
முதல் பாதியில் இருந்த லாஜீக், வித்தியாமான கதைக்களம் என்பன இரண்டாம் பாதியில் காணமல் போய் ஓர் கமர்சியல் படமாக மாற்ற முயன்று சொதப்பல் அதைவிட கிளைமாக்ஸ் எல்லாம் நம்புறமாதிரியே இல்ல… தனுஷ், நாகர்ஜீனா் அவர்கள் கதாபாத்திரத்திற்கு போதுமான பங்களிப்பை வழங்கியிருக்காங்க…
DSP பின்னணி இசை நல்லா இருந்தது…
மற்றும்படி சொல்றதுக்கு ஓன்னுமில்லை🙄
இந்த படத்திற்கு நேற்று இவங்கள் கொடுத்த பில்டப் என்டா… நல்லா காசு வாங்கிட்டு கூவுகீறிங்கடா… இனி எல்லாம் உங்கட ரிவ்யூகளை எல்லாம் நம்புறதா இல்லடா🙏 ஆனா படம் படு மொக்கை என்டு இல்ல ஒருக்கா பார்க்கலாம் ஆனா 3 மணிநேரம் தியேட்டர்ல இருக்கணும் என்பதை கவனத்தில் கொள்ளவும்… முதற்பாதி ஓப்பிட்டளவில் ஓகேவாகவும் இரண்டாம் பாதி பொறுமையை ரொம்ப சோதிக்கும்…