14/11/2025
கள்ள ஓட்டு திமுக!
ஊழலில் மட்டுமல்ல, கள்ள ஓட்டு போடுவதிலும் கரை கண்டவர்கள் திமுகவினர் என்பது கடந்த கால வரலாறு. இனியும் அதை தொடர முடியாமல் போய் விடுமோ என்ற பயம் அவர்களுக்கு வர காரணம் SIR என்ற தேர்தல் ஆணையத்தின் அதிரடி வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கை. பீகார் தேர்தலில் இண்டி கூட்டணியின் தோல்வி திமுகவுக்கு பேரதிர்ச்சி.
கருணாநிதி காலத்தில் 2006, 2011 காலம் வரையிலும் சென்னை நகரில் ஓட்டு சாவடிகளில் திமுகவினர் செய்த அராஜகம் வரலாறு படைத்தது. அதற்கு ஆப்பு வைத்தார் செல்வி ஜெயலலிதா அடுத்தடுத்து வந்த தேர்தல்களில். 2021க்கு பின் திமுக மீண்டும் தலை தூக்கி தேர்தல்களில் தங்கள் கள்ள ஓட்டு கள்ளத்தனங்களை அரங்கேற்ற, வலிமையற்ற அதிமுகவினால் எதிர்கொள்ள முடியவில்லை. நல்ல வேலை SIR வந்தது. இனி இதை திமுகவை எதிர்ப்பவர்கள் எப்படி பயன்படுத்துவர் என்று பார்க்க வேண்டும்.
Ithayakkani S Vijayan