24/09/2025
☘️ *கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்த ஒருவருடைய பணம் திருடப்பட்டிருந்தது. யார் இதைச் செய்திருப்பார்கள் என்ற சந்தேகக் கேள்வி எழும்பியது.அங்கே இருந்த கிறிஸ்தவ பியூன் செய்துதிருக்கலாம் என்ற சந்தேகம் பலப்பட்டது.*
*ஆனால் அதைக் கேள்விப்பட்ட மேனேஜர் அங்கு வந்தார்.அந்த மேனேஜர் ஒரு புறஜாதி மனிதராவார். ஆனால் கிறிஸ்தவ பியூன் சந்தேகிக்கப் படுவதை அறிந்து, அவனை வீணாகச் சந்தேகிக்கா திருங்கள்.அவன் ஒரு கிறிஸ்தவன். கிறிஸ்தவன் திருடியிருக்க முடியாது என்றார்.*
*இந்த வார்த்தை அந்தப் பியூனின் இருதயத்தை உடைத்தது. கிறிஸ்தவரல்லாத ஒருவர் கிறிஸ்தவர்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கைக்கு நான் துரோகம் செய்து விட்டேனே,என்று நொந்து போனான்.குற்ற மனசாட்சியினால் பாதிக்கப்பட்ட பியூன் மேனேஜரிடம் போய் ஐயா மன்னியுங்கள். உண்மையில் திருடியது நான்தான் என்றான்.*
*ஆயினும், அந்த மேனேஜர் கோபமடையாமல் நீ ஒரு கிறிஸ்தவனாக இருந்ததால் தவறை ஒத்துக் கொண்டாய். கிறிஸ்தவன் தவறை மறைக்க மாட்டான் என்றார்.*
*அன்பானவர்களே இன்று நாம் வாழ்கின்ற இவ்வுலகத்தில் அநேக மக்கள் கிறிஸ்தவர்கள் என்றால் பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். கிறிஸ்தவர்கள் எல்லாரையும் போல அல்ல என்றும், கிறிஸ்தவர்கள் நேர்மையானவர்கள், நல்லவர்கள், அன்பானவர்கள் என்று மக்கள் நினைப்பதுண்டு.*
*அங்குதான் நம்முடைய பொறுப்பு அதிகமாகிறது.ஒரு கிறிஸ்தவன் சாட்சியற்று நடக்கும்போது அது ஒரு நம்பிக்கை துரோகமாகிறது. தவறுகளை தவிர்க்க வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை.தவறிவிட்டால் தவறுகளுக்காக மனம் வருந்துவது கிறிஸ்தவர்களின் அடையாளம்.*
*இன்றைக்கும் நம்முடைய கடமையையும், அடையாளத்தையும் மற்றவர்களுக்கு காண்பிப்போம்.அதன்மூலம் தேவ நாமம் மகிமைப்படுவதாக. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக*🙇♂️ 💐 *சத்திய வார்த்தை ஊழியங்கள் Chennai Newperungalathur🙏மத்தேயு 5:1-16*🤝