16/10/2024
Recent ah FB ல இந்த post அ பார்த்தேன். ஒரு குறிப்பிட்ட பட்டாம்பூச்சிலாம் அழிஞ்சுட்டு வருது. நாம தான் காப்பாற்றி ஆகனும்னு..
இதை பார்த்ததும் எனக்கு "All that Breathes" னு ஒரு Documentary பார்த்தது ஞாபகம் வந்துச்சு. நிறைய award, அது இதுனு hyped ல பார்த்தேன். பார்த்து முடிச்சதும் ஏதோ கடுப்புலயே இருந்தேன். மொக்க தான்.
அதாவது டெல்லில, கரும்பருந்து இனப்பறவை (Black kite) எல்லாம் பறக்க முடியாம, பொத்து பொத்துனு கீழ விழுந்து அடிப்பட்டு கிடக்கும் (அ) செத்து போயிருக்கும். இவனுங்க போய் அந்த பறவையை எல்லாம் காப்பாத்தி , இவனுங்களே அதுக்கு வைத்தியம் பார்த்து, சாப்பாடு போட்டு வளர்த்து மறுபடியும் பறக்க விட்ருவானுங்க. இவனுங்களே மிடில் கிளாஸ் தான் . இருந்தும் இந்த பறவைகளுக்கு நாம எதுனா செய்யனும்னு அவனுகளால முடிஞ்சத பண்ணுவானுங்க. ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்கு மேல அவனுங்களால பொருளாதார ரீதியா சமாளிக்க முடியாத நேரத்துல funding கு Online ல நெறய apply பண்ணுவானுங்க. ஆனா அது எல்லாம் fail ஆகிரும். இருந்தும் இவனுங்க விடாம ட்ரை பண்ணி இதை பத்தி வெளியசொல்லணும் னு இந்த டாக்குமெண்டரிய எடுத்து எல்லாத்துக்கும் காமிச்சு அதுல இருந்து ஏதாச்சு பணம் வந்தா. . அதை வச்சு இந்த பறவைகளுக்கு ஏதாச்சு நல்லது செய்யலாம் னு நினைப்பாங்க.
இப்போ நான் சொன்னதுலாம் வச்சு.. அடடே எவ்ளோ ஒரு Noble cause , நல்லவிஷயம் ஆச்சே கண்டிப்பா அவங்களுக்கு funding கிடைக்கணும். நானும் என்னால முடிஞ்சுத குடுக்கணும்னு நெனைக்க தோணலாம். ஆனா அந்த டாக்குமெண்டரி ஆ பாக்கும் போதெல்லாம் எனக்கு தொடர்ச்சியா தோணுன ஒரே விஷயம்.
"JUST LET THE BIRD DIE" ங்கிறது தான்.
ஏதோ ஒரு பறவைனா பரவால்ல , அங்க அவ்ளோ பறவை இறந்து கெடக்கும். இவனுங்க இந்த மாதிரி இந்த பறவைங்க இறந்து போறதுக்கான காரணம் என்ன? நாம ஏன் அதை காப்பாத்தணும் னு கொச கொச னு பேசுவானுங்க. I don't want to go deep into it. You can just watch the documentary and get the idea of it.
The one thing which they refuse to understand is if a species is meant to survive, it will find a way to survive regardless of what we throw at. அது தான் இயற்கை ஓட விதி.
ஜுராசிக் பார்க் மூவி ல Ian Malcolm னு ஒரு கேரக்டர் வருவான். சின்ன வயசுல பாக்கும் போது யார்ரா இவன் எது சொன்னாலும் அபசகுணமா பேசிட்டு இருக்கான்னு நெனச்சேன். ஆனா வளர்ந்த அப்பறம் மறுபடியும் அந்த படத்தை பார்த்த அப்போ தான் புரிஞ்சுது அந்த மூவில வர கேரக்டர்லேயே most sane and practical ஆன person அவன் தான்னு. அவன் ஒரு டயலாக் சொல்லுவான். இயற்கைக்கு ஒரு காலத்துல டைனோசர் தேவைப்பட்டுச்சு. இயற்கை, டைனோசரை படைச்சது. அப்பறம் இயற்கைக்கு டைனோசர் தேவைப்படலை. இயற்கை, டைனோசரை அழிச்சுருச்சுனு. அதே தான் நான் இந்த டாக்குமெண்டரிய பாக்கும் போதும் feel பண்ணேன் . மாறிட்டு வர சூழலுக்கு அந்த பறவையால தன்னை adapt பண்ணிக்க முடியல. அதனால இறக்குது. ஆனா இந்த மனுஷனுங்க அதெல்லாம் நீ சாகக்கூடாது . உன்னைய காப்பாத்தி நான் நல்லவன்னு ஊருக்கு காட்டியே தீருவேன் னு இவனுங்க அதை rescue பண்றது எல்லாமே exactly like டைனோசரை திருப்பி கொண்டு வர case தான். It will just bring more chaos ன்னு இவனுங்களால புரிஞ்சுக்க முடியல. They are so blinded by their emotions and they can't foresee the future outcomes and the consequences of their actions.. ஏதோ இந்த உலகமே இவனுங்கள சுத்தி தான் இயங்கிக்கிட்டு இருக்குனும் , நாம காப்பாத்தலைனா அந்த உயிரினம் இல்லாம போயிருமேனும்.. ஆ ஊ னு ஏதோ ஏதோ பண்ணிட்டு இருக்காணுங்க. இந்த பறவை இல்லைனா உணவு சங்கிலியே காணாம போயிரும்னு லாம் பயமுறுத்துவானுங்க . 2.0 மூவில அக்ஷய் குமார் புள்ளினங்காள் பாட்டை போட்டு sympathy create பண்ண பாக்கும் போதெல்லாம் "போடா சில்ற அங்குட்டு" ங்கிற range ல தான் பாத்துட்டு இருந்தேன்.
மனுஷன் உருவாவதற்கு முன்னாடி எத்தனையோ உயிரினம் வாழ்ந்து அழிஞ்சு போயிருக்கும் . அப்போ லாம் பாதிக்க படாத உணவு சங்கிலியா இப்போ பாதிக்க படப்போவுது..? இயற்கை எப்பவும் அதற்கான மாற்று விஷயத்தை வச்சுருக்கும். ஒரு மரத்துல இருந்து உதிர கூடிய நிலைல இருக்க இலையை இல்லை, இல்லை நீ உதிர கூடாது...நீ உதிர்ந்தா உணவு சங்கிலில பஞ்சாயத்து ஆகிரும்... நான் உள்ள வந்து சரி பண்றேன் னு அமெரிக்கா காரன் மாதிரி order ல இருக்க இடத்தில chaos ஆ introduce பண்றதே இந்த மாதிரி கிறுக்கனுங்க தான்.
சரி எல்லா உயிரையும் தன் உயிரா நெனைக்கனும் னு நெனச்சு இந்த அழிஞ்சு போயிட்டு இருக்க உயிரினங்களை காப்பாத்த நீ முடிவு எடுத்துட்ட. உன்னால எவ்ளோ நாள் அந்த உயிரினத்தை காப்பாத்த முடியும். நீ செத்து போன அப்பறோம் நீ காப்பாத்தணும் னு நெனச்ச already செத்து போக வேண்டிய உயிரினத்தோட நெலமை என்ன? எப்போவோ அழிஞ்சு போக வேண்டிய உயிரினத்தை என்னோட goodnessஐ நான் வெளிய காட்டுறேன் னு நீ பண்ண கோமாளித்தனத்துனால அது இன்னும் நெறைய காலம் suffer பண்ண வேண்டியது வரும்.
ஒன்னு புரிஞ்சுக்கனும். The world doesn't revolve around you. நீ இருந்தாலும் இல்லைனாலும் இயற்கை ல நடக்குறது.. நடக்கணும்ங்கறது நடந்திட்டு தான் இருக்கும். இயற்கை ஓட பார்வை ல மரத்துல இருந்து உதிர கூடிய இலையும் ஒன்னு தான்(Plants is also living being தம்பி). ஒரு குறிப்பிட்ட உயிரின அழிவும் ஒண்ணுதான். எப்படி அந்த மரத்துல இருந்து அந்த இலை உதிரனும்ங்கறது முக்கியமோ அதேமாதிரி ஒரு உயிரினம் அழியனும்ங்கிறதும் முக்கியம் தான். வலியவன் உயிர் பிழைப்பான்ங்கிற இயற்கை ஓட ஒரே விதிக்கு உட்பட கூடிய உயிரினம் மட்டும் தான் வாழ தகுதி உடையது மத்தது எல்லாம் அழிவுப்பாதைக்கு தான் போகணும். இதை தடுக்க கூடாது. கொசுவை என்னதான் பண்ணாலும் அழிக்க முடியல. காரணம் அது தன்னை அந்த சூழலுக்கு ஏத்த மாதிரி தகவமைச்சுக்குது அல்லது இயற்கைக்கு ஏதோ ஒரு காரணத்துக்காக அதோட existence தேவைப்படுது. Otherwise அப்புடி ஒரு உயிரினம் அங்க வர வாய்ப்பே இல்ல. எப்புடி இந்த கொசுவை என்ன பண்ணியும் destroy பண்ண முடியலையோ, அதே மாதிரி extinct ஆகுற ஒரு உயிரினத்தை காப்பாத்தவும் முடியாது. அப்படியே பண்ணாலும் அது more chaos தான் நமக்கு கொண்டு வரும் just like in Jurassic park.
So, Bottom line என்னனா, ஏதாவது ஒரு Species அழிய கூடிய தருவாயில இருக்குனா * YOU SHOULD JUST LET IT DIE AND JUST LET THE NATURE DO THE WORK *
இது எல்லாம் just என்னோட own view தான். நான் சொன்ன கருத்துலாம் தப்பா கூட இருக்கலாம் Or I am extremely stupid to think this way. சும்மா.. இதெல்லாம் ஏதோ சொல்லனும்னு தோனுச்சுனு இந்த post ஐ போட்டுருக்கேன். அவ்ளோ தான்.