Tamil Cinema Spot

  • Home
  • Tamil Cinema Spot

Tamil Cinema Spot Cinema Updates
(3)

"ரெட் பிளவர்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடுஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் விக்னேஷ் கதாநாயகனாக நடித்துள்ள "ரெட் பிளவர்...
17/07/2025

"ரெட் பிளவர்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு
ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் விக்னேஷ் கதாநாயகனாக நடித்துள்ள "ரெட் பிளவர்" திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சயின்ஸ் பிக்‌ஷன் ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் மனிஷா ஜஷ்னானி கதாநாயகியாக நடிக்க, நாசர், தலைவாசல் விஜய், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ காளிகாம்பாள் பிச்சர்ஸ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி, தனது பிரம்மாண்ட படைப்பான 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து, 'பாகுபலி - The Epic...
17/07/2025

இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி, தனது பிரம்மாண்ட படைப்பான 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து, 'பாகுபலி - The Epic' என்ற பெயரில் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்துள்ளார். உலகளவில் பெரும் வெற்றி பெற்று இந்திய சினிமாவின் மைல்கல்லாக அமைந்த 'பாகுபலி' வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த சிறப்பு ரீ-ரிலீஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, 1995-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற 'பாட்ஷா' திரைப்படம், தனது 30 ஆண்டுகளை கொண்...
17/07/2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, 1995-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற 'பாட்ஷா' திரைப்படம், தனது 30 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் நாளை (ஜூலை 18) மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்தப் படத்தில் ரகுவரனின் மார்க் ஆண்டனி கதாபாத்திரம் இன்றும் பேசப்படும் நிலையில், பாடல்கள் மற்றும் வசனங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. 2017-ல் டிஜிட்டலாக ரீஸ்டோர் செய்யப்பட்டும் வெளியான 'பாட்ஷா', தற்போது மீண்டும் திரைக்கு வருவதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி மற்றும் நிமிஷா சஜயன் நடித்த 'டி.என்.ஏ' திரைப்படம், விமர்சன ரீதியாக...
17/07/2025

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி மற்றும் நிமிஷா சஜயன் நடித்த 'டி.என்.ஏ' திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், வரும் ஜூலை 19 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

நடிகரும் நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், சினிமா துறையைக் காப்பாற்றும் நோக்கில் ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளா...
17/07/2025

நடிகரும் நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், சினிமா துறையைக் காப்பாற்றும் நோக்கில் ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளார். நேற்று 'ரெட் பிளவர்' பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ஒரு படம் வெளியானதும் முதல் 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் 'பப்ளிக் ரிவியூ' என்ற பெயரில் பேட்டி எடுக்க யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தேவைப்பட்டால் தியேட்டருக்கு வெளியேவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ விமர்சனம் செய்யலாம் என அவர் வலியுறுத்தினார்.

நடிகர் அதர்வா நடித்துள்ள 'தணல்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குனர் ரவீந்த...
17/07/2025

நடிகர் அதர்வா நடித்துள்ள 'தணல்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கியுள்ள இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். அன்னை ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறைவடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

வெற்றி நடித்துள்ள 'சென்னை பைல்ஸ் முதல் பக்கம்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சின்னதம்பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்...
17/07/2025

வெற்றி நடித்துள்ள 'சென்னை பைல்ஸ் முதல் பக்கம்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சின்னதம்பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனீஷ் அஷ்ரப் இயக்கியுள்ள இப்படத்தில் ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக நடிக்க, தம்பி ராமய்யா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெற்றி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ராஜபுத்திரன்' நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், 'சென்னை பைல்ஸ் முதல் பக்கம்' திரைப்படம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

வடிவேலு மற்றும் பகத் பாசில் மீண்டும் இணைந்து நடித்துள்ள 'மாரீசன்' திரைப்படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ் கிடைத்துள்ளது. சூப்ப...
17/07/2025

வடிவேலு மற்றும் பகத் பாசில் மீண்டும் இணைந்து நடித்துள்ள 'மாரீசன்' திரைப்படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ் கிடைத்துள்ளது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சுதீஷ் சங்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், ஜூலை 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'தி கேர்ள் பிரண்ட்' திரைப்படத்தின் முதல் பாடலான "நதிவே" நேற்று (ஜூலை 16) வெளியிடப்பட்டது. ராக...
17/07/2025

ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'தி கேர்ள் பிரண்ட்' திரைப்படத்தின் முதல் பாடலான "நதிவே" நேற்று (ஜூலை 16) வெளியிடப்பட்டது. ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இந்தப் பாடல் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடித்துள்ள 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ...
17/07/2025

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடித்துள்ள 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இயக்குனர் நிரஞ்சன் இயக்கும் இப்படத்தில் சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

2019-ல் வெளியான 'காளிதாஸ்' படத்தின் தொடர்ச்சியாக, இயக்குனர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் நடித்துள்ள 'காளிதாஸ் 2' படத்த...
16/07/2025

2019-ல் வெளியான 'காளிதாஸ்' படத்தின் தொடர்ச்சியாக, இயக்குனர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் நடித்துள்ள 'காளிதாஸ் 2' படத்தின் டீசர் இன்று வெளியானது. பரத்துடன் அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், நடிகை சங்கீதா முக்கிய வேடத்தில் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்த கிரைம் திரில்லர் படத்தை ஸ்கை பிக்சர்ஸ் சார்பில் பைவ் ஸ்டார் செந்தில் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசரை நடிகர் ரவி மோகன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் வெளியிட்டனர்.

நடிகர் விஷால், தனது புதிய படமான சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 99வது பட பூஜை நிகழ்வில், தனது திருமணம் மற்றும் நடிகர் சங்க கட்ட...
16/07/2025

நடிகர் விஷால், தனது புதிய படமான சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 99வது பட பூஜை நிகழ்வில், தனது திருமணம் மற்றும் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். "இன்னும் இரண்டு மாதங்கள்தான், ஆகஸ்ட் 29-ஆம் தேதி என் பிறந்தநாள் அன்று கண்டிப்பாக ஒரு நல்ல செய்தி உள்ளது. கட்டிடம் தயாரானதும் முதல் திருமணம் என்னுடையதுதான்" என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம், விஷாலின் திருமணம் ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Cinema Spot posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share