16/04/2026
7.இரத்த குடி
காலை 8 மணி.
Government hospital முன் bench ல
முருகன் உட்கார்ந்திருந்தான்.
கையில் பணம் இல்லை.
குடிக்க ஆசை மட்டும் இருந்தது.
Reception ல announcement:
“Rare blood group urgent தேவை…”
முருகன் மெதுவா எழுந்தான்.
Doctor கேட்டார்:
“Why donate?”
முருகன் சிரிச்சான்.
“Humanity காக இல்ல டாக்டர்…
₹500 கிடைக்குமா?”
Blood donation முடிந்தது.
ஒரு பணக்கார வீட்டுக் குழந்தை உயிர் தப்பியது.
அவர்கள் கண்ணீர் மல்க பணம் கொடுத்தார்கள்.
முருகன் hospital gate வெளியே வந்ததும்—
நேரா TASMAC.
காலை குடி.
மதியம் குடி.
மாலை உலகமே slow motion.
அதே மாலை…
Phone call.
“அண்ணா… உங்க பொண்ணு accident…”
கண்ணு தெளிவில்லாம hospital ஓடினான்.
Emergency ward.
Doctor அவசரமாக:
“Immediate blood தேவை…
same rare group!”
அனைவரும் அவனை பார்த்தார்கள்.
முருகன் கையை நீட்டினான்.
Doctor smell பார்த்தார்.
மெதுவா சொன்னார்:
“Impossible… body alcohol full…
இப்போ blood எடுக்க முடியாது.”
முருகன் சிரிக்க முயன்றான்.
“Morning தான் kuduthen doctor…”
Doctor அமைதியா சொன்னார்:
“அதான் பிரச்சனை…”
Monitor sound நீளமான ஒரு கோடா மாறியது.
அவன் மகள்… போயிட்டாள்.
சில நிமிடங்கள் கழித்து.
Hospital corridor.
அதே பணக்கார குடும்பம் ஓடி வந்தது.
அவர்கள் முருகன் காலில் விழுந்தார்கள்.
“நீங்க தெய்வம் சார்…
காலை எங்கள் குழந்தையை காப்பாத்தினீங்க…”
அதே second…
பின்னாலிருந்து அவன் மனைவி வந்தாள்.
கண்ணீர் + கோபம்.
செருப்பை கழற்றி
அவன் முகத்தில் அடித்தாள்.
“உலகத்த பிள்ளை காப்பாத்தற ஹீரோ…
உன் பொண்ணை குடிச்சதாலே கொன்றுட்டேடா!”
ஒரே frame.
ஒரு பக்கம் —
நன்றி சொல்லி காலில் விழும் பணக்காரர்கள்.
மற்றொரு பக்கம் —
செருப்பால் அடிக்கும் மனைவி.
நடுவில் முருகன்.
Hero ஆகவும்…
Villain ஆகவும்…
ஒரே நாளில் முடிந்த வாழ்க்கை.
அந்த நாள் இரவு—
முருகன் குடிக்கவில்லை.
ஆனா…
அவன் காப்பாத்த வேண்டிய உயிர்
திரும்ப வரவில்லை.