01/05/2025
2022 இல் நண்பர் ஒருவருக்கு ஒரு குறும்படம் எடிட் பண்ணி தந்தேன், அதற்கு அப்புறம் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒரு படாதொகுப்பு வேலைக்காக, என்னை cell phone இல் அழைத்தார், வழக்கமான விசாரிப்புகளை முடித்துவிட்டு, படாதொகுபுக்கான உரையாடலையும் பேசிவிட்டு, இறுதியில் ஒன்றை என்னிடத்தில் பகிர்ந்து கொண்டார், நான் என் அம்மா கிட்ட ஆறு மாதமா பேசுறது இல்ல, என் அம்மா மேல சின்ன மனம் வருத்தம், அப்பதான் நீங்க ஒரு 10 நாளைக்கு முன்னாடி ஒரு Whatsapp status வச்சிருந்தீங்க, அந்த status என் மனதை மாற்றி விட்டதாக, சொல்லப்போனால், நான் திருந்தி விட்டேன், என் அம்மா கிட்ட நான் பேசாம வேற யாரு பேசுவானு, இப்ப பழையபடி, நான் பேசிக்கிட்டு இருக்கேன் Thanks Brother என்றார். அது எனக்கு சற்று ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது, அவர் சொன்னதை கேட்டு, அது என்னவென்றால், என் அம்மாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் ஒரு whatsapp status வைதேன்,
அம்மா உன்னை பார்த்து ஒரு வருடம் ஆகிவிட்டது.
உன்னிடம் பேசி ஒரு வருடம் ஆகிவிட்டது.
உன் மடியில் தலை சாய்த்து ஒரு வருடம் ஆகிவிட்டது.
நீ செய்து தரும் சுவையான உணவை உண்டு ஒரு வருடம் ஆகிவிட்டது.
என் சோகத்தையும் சந்தோஷத்தையும் உன்னிடம் பகிர்ந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.
இப்படி ஒரு நீளமான statusஐ வைதேன், இந்த வரிகள் தான் அவர் மனதை மாற்றி இருக்கிறது, ஆம் என்றாவது ஒரு நாள் நம்மை பெற்றவர்கள் இடதில் சில சூழ்நிலைகள் காரணமாக மனவருத்தங்கள் ஏற்படலாம், அதை அன்றே கடந்து விடுவது நல்லது, அவர்கள் நம்முடன் வாழும்போதே, அவர்களை அன்போடு பாத்து கொள்வது நல்லது, அவர்கள் இருக்கும் பொழுது பேசாமல் இருந்து விட்டு, நம்மை விட்டு போன பிறகு அவர்களை எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்.
உங்கள் தாய் தந்தைக்கு செய்ய வேண்டுமென்பதை அவர்களுக்கு செய்யுங்கள், அவர்களது கல்லறைக்கு அல்ல – Jackie Chan
இன்று என் அம்மாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள், என் அம்மாவை தொலைத்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஓடி விட்டது, இன்றும் தேடி கொண்டு இருக்கிறேன் என் அம்மாவை, மீண்டும் என்னிடதில் கிடைக்க மாட்டாள் என்று தெரிந்தும்.
உன் அருகில் இருக்கும் போதே, அள்ளிக்கொள் தொலைந்து போன பின், எங்கு தேடினாலும் கிடைக்காத, அன்பின் பொக்கிஷம்.. “அம்மா” 🙏