Jaffna Vadamaradchi Media House

  • Home
  • Jaffna Vadamaradchi Media House

Jaffna Vadamaradchi Media House யாழ் வடமராட்சி ஊடக இல்லம்

பருத்தித்துறை அஞ்சல் அலுவலக காணி விடுவிப்பில் ஏமாற்றும் படைத்தரப்பு!நேரடி களவிஜயத்தின் பின்னர் அம்பலப்படுத்திய கஜேந்திரக...
15/08/2026

பருத்தித்துறை அஞ்சல் அலுவலக காணி விடுவிப்பில் ஏமாற்றும் படைத்தரப்பு!
நேரடி களவிஜயத்தின் பின்னர் அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணியை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில் குறித்த காணி விடுவிப்பு விடயத்தில் படைத்தரப்பு ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தமிழ்த் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அம்பலப்படுத்தி உள்ளார்.

பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போலின் அழைப்பில் நேற்று (14) வெள்ளிக்கிழமை பருத்தித்துறைக்கு விஜயம் மேற்கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பருத்தித்துறை அஞ்சல் அலுவலகம் தற்காலிகமாக இயங்கும் இடத்திற்கு சென்று அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிலமைகளை கேட்டறிந்து கொண்டதுடன் இராணுவ கட்டுப்பாட்டி உள்ள பழைய கட்டிடம் மற்றும் விடுவிக்கப்பட தீர்மானிக்கப்பட்ட இடம் என்பவற்றை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். இதன்போது பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல், நகரசபை உறுப்பினர் சி.பொன்னம்பலம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இக்கள விஜயத்தின் பின்னர் தும்பளை வீதி, பருத்தித்துறையில் உள்ள யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடத்திய ஊடகசந்திப்பின் போது மேற்குறித்த விடயத்தை அம்பலப்படுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி கட்டடத்தினை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அண்மையில் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த வெகுஜன ஊடக பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன யாழ் மாவட்ட அஞ்சல் திணைக்கள தரப்பினரிடம் உறுதியளித்திருந்தார்.

இது தொடர்பில் பிரதி அமைச்சர் பாராளுமன்றத்தில் வைத்து நேரில் சந்தித்து கதைக்கும் போது குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் யாழ் விஜயத்தின் போது முன்வைக்கப்பட்டதாக தெரிவித்திருந்ததுடன் அதனை நிறைவேற்றுவது தொடர்பில் சாதகமான நிலையினையும் வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் பருத்தித்துறை அஞ்சல் அலுவலக வளாகம் மற்றும் கட்டிடத்தை விடுவிக்காது தொடர்ந்தும் ஆக்கிரமித்துக்கொண்டு அதற்கு அருகாமையில் உள்ள சிறிய நிலப்பரப்பினை (40 அடி x 185 அடி) வழங்க படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது. இன்றைய (நேற்று) களவிஜயத்தின் போது படைத்தரப்பின் குறித்த ஏமாற்று அம்பலமாகியுள்ளது.

குறித்த இடத்தில் அஞ்சல் அலுவலகத்தை அமைக்குமாறு தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு அஞ்சல் நிலைய கட்டிடத்தை அமைக்க முடியாது என தொடர்புடைய அஞ்சல் நிலைய கட்டுமாண பொறியியல் துறை தரப்பினரால் கூறப்பட்டிருப்பதாகவும், பெருத்தமற்ற சிறய இடத்தை விடுவிக்கவே இராணுவ தரப்பில் இணக்கம் தெரிவிக்கப் பட்டிருப்பதாகவும் பருத்தித்துறை அஞ்சல் நிலைய தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

படைத்தரப்பின் இருப்பை காரணம் காட்டி பருத்தித்துறை தபால் நிலைய காணி விடுவிக்கப்படாமையை ஒருபோதும் நியாயப்படுத்தி விட முடியாது. அதற்கான அழுத்தங்களை வழங்கி உரிய காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் மக்களின் காணிகள் மக்களுக்கே என தேசிய மக்கள் சக்தி தரப்பில் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் செயற்பாட்டில் அதனை நடைமுறைப்படுத்த இதுவரை எதையும் செய்யவில்லை.
மாறாக மக்களின் காணிகளை மேலும் சுவீகரிக்கப்பட்டு வருகிறது. தனியார் காணிகள் மற்றும் அரச காணிகள் என எதனையும் விடுவிக்க இந்த அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

காணி விடுவிப்பு இடம்பெற்று வரும் மேற்குறித்த நிலைவரங்கள் தொடர்பில் அண்மையில் கனேடிய தூதர் மற்றும் இந்திய தூதருடனான சந்திப்பில் தெளிவுபடுத்தியதுடன், காணி விடுவிப்பு தொடர்பில் வலியுறுத்தி உள்ளோம். என்றார்.

#வடமராட்சி #பருத்தித்துறை #அஞ்சல்நிலையம் #இராணுவம் #காணிவிடுவிப்பு #கஜேந்திரகுமார் #யாழ்_வடமராட்சி_ஊடக_இல்லம்

ரஞ்சன் அண்ணாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்!நெல்லியடி வர்த்தகர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் வடமராட்சி தெற்...
10/08/2026

ரஞ்சன் அண்ணாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்!

நெல்லியடி வர்த்தகர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உறுப்பினரும், அரசியல்-சமூக செயற்பாட்டாளருமான இரத்தினசபாபதி சுரேரஞ்சன் (வயது-50) மாரடைப்பு காரணமாக கடந்த சனிக்கிழமை இரவு காலமானார்.

உயிர்பிரியும் நிலைவரை எமது சமூகத்திற்காக ஓய்வறியாது பாடுபட்ட மக்கள் சேவகன் ரஞ்சன் அண்ணாவின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அன்னாரின் திடீர் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெல்லியடி வர்த்தகர் சமூகத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா அமைதி பெற வேண்டுகின்றோம்.

-யாழ் வடமராட்சி ஊடக இல்லம்

#நெல்லியடி

துயர் பகிர்கின்றோம்அமரர் ஏ.என்.எஸ்.திருச்செல்வம்மூத்த பத்திரிகையாளர்ஆயுத முனை அடக்குமுறைகளைபேனா முனை கொண்டு எதிர்நின்றஐம...
27/06/2026

துயர் பகிர்கின்றோம்

அமரர் ஏ.என்.எஸ்.திருச்செல்வம்
மூத்த பத்திரிகையாளர்

ஆயுத முனை அடக்குமுறைகளை
பேனா முனை கொண்டு எதிர்நின்ற
ஐம்பதாண்டு கால ஊடக பயணம் ஓய்ந்தது!

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
அவரை இழந்து வாடும் குடுமபத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மீளாத்துயருடன்....
யாழ் வடமராட்சி ஊடக இல்லம்

#காலமானார் #ஊடகவியலாளர் #வடமராட்சி

மூத்த பத்திரிகையாளர் திருச்செல்வம் அவர்கள் மறைவு!   மூத்த பத்திரிகையாளரும், பருத்தித்துறைப் பிரதேச சபையின் ஓய்வுநிலை நூல...
25/06/2026

மூத்த பத்திரிகையாளர் திருச்செல்வம் அவர்கள் மறைவு!

மூத்த பத்திரிகையாளரும், பருத்தித்துறைப் பிரதேச சபையின் ஓய்வுநிலை நூலகருமான ஏ.என்.எஸ். திருச்செல்வம் அவர்கள் காலமாமார்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் யாழ். வடமராட்சி புலோலி, புற்றளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை (25.06.2026) மாலை-06 மணியளவில் காலமானார்.

வடமராட்சி மண்ணில் இருந்து யுத்தகால நெருக்கடிகளுக்கு மத்தியில் துணிச்சலுடன் ஊடகப்பணியாற்றிய திருச்செல்வம் அவர்களின் பங்கு அளப்பரியது.

அன்னாரது இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

யாழ் வடமராட்சி ஊடக இல்லம்.

#ஊடகவியலாளர் #வடமராட்சி #காலமானார்

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரனுக்கு நீதி கோரும் போராட்டத்தில்காண்போரை கண் கலங்கவைத்த காட்ச...
21/02/2026

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரனுக்கு நீதி கோரும் போராட்டத்தில்
காண்போரை கண் கலங்கவைத்த காட்சி!

சிறிலங்கா இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, வடமராட்சி - கரவெட்டியை சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் எங்கே? அனுர அரசே பதில் சொல் என வலியுறுத்தி யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறையில் இன்று (21) முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் போது இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் நீதி கோரிய காட்சி காண்போரை கலங்கவைத்திருந்தது.

இதன்போது ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காட்சி ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது. சிரேஷ்ட ஊடகவியலாளர் மு.மதிவாணன் இராமச்சந்திரனின் ஊடகவியலாளர் அடையாள அட்டையினை தாங்கியவாறு கைகளும், கால்களும் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, இரத்தக் கறை படிந்திருப்பது போன்ற ஆடை அமைப்புடன் நீதி கோரிய காட்சி காண்பவர்கள் அனைவரையும் கண் கலங்க வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#பருத்தித்துறை #வடமராட்சி #ஊடகவியலாளர் #கைது #கவனயீர்ப்புபோராட்டம் #யாழ்ப்பாணம்

இராமச்சந்திரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டமைக்கு தசாப்தங்கள் கடந்தும் நீதி வழங்கப்...
21/02/2026

இராமச்சந்திரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டமைக்கு தசாப்தங்கள் கடந்தும் நீதி வழங்கப்படவில்லை;
சர்வதேச விசாரணை மூலமே உரிய நீதி கிடைக்கும்!
-ஜனாதிபதிக்கு யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தல்!

சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கிய ஒட்டுக்குழுவினராலும், இராமச்சந்திரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கைது, கடத்தல் சம்பங்கள் மூலம் காணாமல் ஆக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டமைக்கும் தசாப்தங்கள் கடந்தும் நீதி வழங்கப்படாத நிலையில் சுயாதீன சர்வதேச விசாரணை மூலமே எஞ்சியிருக்கும் சாட்சியங்களும் மௌனிக்கும் முன்னராவது உரிய நீதி கிடைக்க வழிவகுக்கும் என ஜனாதிபதிக்கு யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தியுள்ளது.

துன்னாலை கலிகை சந்தியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் வைத்து ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் கடந்த 15.02.2007 அன்று சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் ஈபிடிபியினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதன் 19 ஆவது ஆண்டை முன்னிட்டு அவர் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் நீதி கேட்டும் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் இன்று சனிக்கிழமை (21) காலை 10.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு மகஜர் வாசிக்கப்பட்டது.

ஜனாதிபதிக்கான குறித்த மகஜர் ஆளுநர் ஊடாக அனுப்பிவைக்கவும் இதன் பிரதிகளை ஐ.நா. பொதுச்செயலாளர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம், சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்பு சபை, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது. குறித்த மகஜிர் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதி கோரல்

யாழ்ப்பாணம் - வடமராட்சி, துன்னாலையை சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் (கடத்தப்படும் போது 37 வயது) சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் இணைந்து கடந்த 15.02.2007 அன்று கலிகை இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்டு பின் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

கலிகை சந்தியில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தின் படை முகாமில் வைத்து சம்பவதினத்தன்று மாலை விசாரணைக்காக அழைத்துச் செல்லபட்டமையும், குறித்த சம்பவத்துடன், அக்காலகட்டத்தில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களுக்கும் நேரடி தொடர்பு இருந்தமை தொடர்பிலும், வடமராட்சி – பல்லப்பை படை முகாமில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பிலும் கண்கட்ட சாட்சியங்களின் அடிப்படையில் முன்னைய ஜனாதிபதி ஆணைக்குழுவான பரணகம ஆணைக்குழுவில் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாது தொடரந்து வந்த சகல விசாரணை நடவடிக்கைகளின் போதும் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் எதுவித பதிலிறுப்புகளும் வழங்கப்படவேயில்லை.

கைது செய்யப்பட்டது முதல் ஒரு வாரம் கைத்தொலைபேசி மூலம் அவரது சகோதரிகளுடன் இராமச்சந்திரன் தொடர்பில் இருந்துள்ளார். இதன்போது கலிகை படைமுகாமில் வைத்து தான் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பிலும், இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவரே நேரடியாக தெரிவித்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் இடம்பெற்று இன்று 19 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அரசு தரப்பில் இது தொடர்பில் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை கண்டறியவோ, உரிய நீதி விசாரணை முன்னெடுக்கப்படவோ, சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவோ எதுவித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இடைப்பட்ட காலத்தில் 2018 ஆம் ஆண்டின் இறுதி காலகட்டத்தில் மூன்று மாத இடைவெளியில் தந்தையும், தாயும் தமது மகனை காணமலேயே அடுத்தடுத்து உயிரிழந்திருந்தனர். ஏனைய கண்கண்ட சாட்சியங்களும் கால நீட்சியில் மரணித்துவிட்டன. இந்நிலையில் இராமச்சந்திரனின் சகோதரி மட்டுமே தற்போது உயிர்வாழும் சாட்சியமாக நம்மிடையே வாழ்ந்து வருகின்றார். அதுமாத்திரமல்லாது, காலநீட்சியும் ஏமாற்றமும் ஏற்படுத்திய உளச்சோர்விற்கு ஆட்பட்டுள்ள நிலையிலும் இன்றும் தனது சகோதரனை காணும் பேராவலுடன் அவரது சகோதரி ஏக்கத்துடன் காத்திருக்கின்றார்.

காணாமல் ஆக்கப்பட்ட பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்பதனை நிரூபிக்கும் வகையிலான வலுவான சாட்சியங்களும், நேரில் கண்ட சாட்சிகளும் உள்ளதான வெகு அரிதான சம்பவங்களில் ஒன்றாக இராமச்சந்திரனின் விடயம் இருந்த போதிலும் இதுவரை அதற்கான நீதிப்பொறிமுறை ஆரம்பிக்கப்படாமலே வலிந்து மௌனிக்கச் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் 2004 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் என 44 பேர் கொல்லப்பட்டும், கடத்தப்பட்டும் உள்ளனர் என இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு அறிக்கையிட்டுள்ளது. இதுதவிர இறுதிப் போர் காலகட்டத்திலும் இவ்வாறு பலர் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ் ஊடக நிறுவனங்கள் மீதும் காலத்திற்கு காலம் பாரதூரமான தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை எதற்குமே இதுவரை எவ்வித நீதி விசாரணைகளும் மேற்கொள்ளப்படாதுள்ளது.

ஆகவே, சிறிலங்கா அரசபடைகள் மற்றும் அதனோடு இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழுக்களினாலும், இராமச்சந்திரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கைது மற்றும் கடத்தல் சம்பவங்கள் மூலம் காணமல் ஆக்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டமைக்கும், சுயாதீன சர்வதேச விசாரணை மூலமே எஞ்சியிருக்கும் சாட்சியங்களும் மௌனிக்கும் முன்னராவது உரிய நீதி கிடைக்க வழிவகுக்கும் என நாம் திடமாக நம்புகின்றோம்.

குறித்த சம்பவத்தோடு மட்டுப்படுத்தப்பட்டதாக விசாரணை நடவடிக்கைகள் முற்றுப்பெறாது பின்னிருந்து செயற்படுத்திய உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து நீதி நிலைநாட்டப்படுவதனை உறுதிசெய்யும் வகையிலானதாக முன்னெடுக்கப்பட வழிவகை செய்ய வேண்டும். தமிழ் ஊடகத்துறை மீது காலத்திற்;கு காலம் வெவ்வேறு வடிவங்களில் தொடரும் அச்சுறுத்தல் நிலையினை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கும் அதற்கு காரணமானவர்களை பாரபட்சமின்றி சட்டத்தின் முன்நிறுத்தி உரிய நீதியினை வழங்குவதற்கும் சுயாதீன சர்வதேச விசாரணைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இத்தருணத்தில் யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தி நிற்கின்றது.

#வடமராட்சி #பருத்தித்துறை #கைது #கவனயீர்ப்புபோராட்டம் #யாழ்ப்பாணம் #ஊடகவியலாளர்

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் எங்கே?அனுர அரசே பதில் சொல்!- பருத்தித...
21/02/2026

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் எங்கே?
அனுர அரசே பதில் சொல்!
- பருத்தித்துறையில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்!

சிறிலங்கா இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, வடமராட்சி - கரவெட்டியை சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் எங்கே? அனுர அரசே பதில் சொல் என வலியுறுத்தி யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறையில் இன்று (21) பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் வீடு திரும்பிய போது துன்னாலை கலிகை சந்தியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் வைத்து கடந்த 15.02.2007 அன்று சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் ஈபிடிபியினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதன் 19 ஆவது ஆண்டை முன்னிட்டு அவர் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் நீதி கேட்டும் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் இன்று சனிக்கிழமை (21) காலை 10.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் முக்கிய செயற்பாட்டாளரும் மூத்த ஊடகவியலாளருமான மு.மதிவாணன் தலைமையில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் இராமச்சந்திரன் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது. இதன்போது ஊடகவியலாளர்கள், வலிந்து காணானல் ஆக்கப்பட்டோரது உறவுகள், பி2பி மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைத் தலைவரும், சிவகுரு ஆதீன குரு முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள், பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல், வல்வெட்டித்துறை நகரபிதா எம்.கே.சிவாஜிலிங்கம், கரவெட்டி பிரதேச சபை உப தவிசாளர் தயாபரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் குரலற்றவர்களின் குரல், வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு, பருத்தித்துறை வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புகள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகத்துறை மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக பருத்தித்துறையில் நாளை அணி திரள்வோம் வாரீர்!போர் காலத்தில் உயிர் அச்சுறுத்தலுடன...
20/02/2026

ஊடகத்துறை மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக பருத்தித்துறையில் நாளை அணி திரள்வோம் வாரீர்!

போர் காலத்தில் உயிர் அச்சுறுத்தலுடன் ஊடகப் பணியாற்றி உயிரை இழந்தவர்களும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் நாம் எந்த மாற்றீட்டையும் செய்து விட முடியாது.

இவர்களுக்காக இவர்களின் அளப்பரிய பணியை வெளிக்கொணர்வதும் இவர்களுக்கான நீதியை பெற்றுக் கொள்ள எம்மால் முடிந்ததை மேற்கொள்வோம்.

இவர்களைப் போன்றோரின் அர்பணிப்புகளினாலேயே நாம் இன்று ஓரளவேனும் நின்மதியோடு ஊடகப் பணியாற்றிவருகிறோம்.

நாளைய போராட்டத்திற்கு அனைவரும் தவறாது கலந்து கொண்டு உங்கள் ஆதரவினை வழங்குங்கள்!

#பருத்தித்துறை #வடமராட்சி #கைது #யாழ்ப்பாணம் #கவனயீர்ப்புபோராட்டம் #ஊடகவியலாளர்

20/02/2026
கவனயீர்ப்பு போராட்டம்!ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் கலிகை சந்தியில் வைத்து 15/02/2007 அன்று சிறிலங்கா இராணுவத்தினரால் கை...
19/02/2026

கவனயீர்ப்பு போராட்டம்!

ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் கலிகை சந்தியில் வைத்து 15/02/2007 அன்று சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு ஈபிடிபியினருடன் இணைந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்.

காலம் :- 21/02/2025 சனிக்கிழமை
நேரம் :- காலை 9.00 மணி
இடம்:- பருத்தித்துறை பேருந்து நிலையம்

-யாழ் வடமராட்சி ஊடக இல்லம்

#யாழ்ப்பாணம் #வடமராட்சி #பருத்தித்துறை #ஊடகவியலாளர் #கவனயீர்ப்புபோராட்டம் #கைது #கடத்தல்

Address


40000

Telephone

+94707545550

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Vadamaradchi Media House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jaffna Vadamaradchi Media House:

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share