06/03/2025
கார்பெட் வீதியாக அபிவிருத்தி கானும் பூநொச்சிமுனை சுனாமி விடமைப்பு( பச்சை வீட்டு) வீதி
முன்னாள் சுற்றாடல் அமைச்சரும் வடமேல் மாகாண ஆளுநருமாகிய அல்ஹாபீழ் நசீர் அஹமத் அவர்களினால் கடந்த 2021/2022 காலப்பகுதியில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு லட்சம் கிலோமீட்டர் வீதி அபிவிருத்தி திட்டத்தில் மேற்படி வீதி கொங்கிரிட் வீதியாக அபிவிருத்தி செய்ய உள்வாங்கப்பட்டிருந்தது சுமார் 50 வீதமான வீதி கான்கிரீட் வீதியாக நிருமாணிக்கப்பட்டு இருந்தபோது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலினால் இடையில் தடைப்பட்டு இருந்தது
இதனைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முன்னாள் அமைச்சர் அவர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட உலக வங்கியின் நிதி அளிப்பிலான ICDP வீதி அபிவிருத்தி திட்டத்தில் இவ்விதியும் எம்மால் உள்ளாங்க பட்டிருந்தது அதாவது அல்அக்ஸா (முகைதீன் மஸ்ஜித் வீதி) வீதி என்னும் பெயரில் 2.75 கிலோ மீட்டர் நீளமான வீதி மேற்படி திட்டத்தில் உள்வாங்கப்பட்டது. இதில் முகைதீன் பள்ளி வீதி, பதிரியா வீதி, மஞ்சந்தொடுவாய் புதிய பாலமுனை வீதி அத்துடன் பூநொச்சிமுனை பச்சை வீட்டு திட்ட வீதியும் உள்ளடங்கியதாக இருந்தது.
இதன் அடிப்படையில் இன்றைய தினம் 06.03.2025 மேற்படி வீதிக்கு காப்பற் இடும் பணிகள் ஒப்பந்ததாரரினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் பணிக்காக மேற்கொண்டஎமது முயற்சிக்கு கிடைத்த பெரு வெற்றியாக கருதுகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இப்பிரதேசத்தில் அரசியல் அதிகாரம் பெற்று விளங்கிய அபிவிருத்தி என்று பொய்யாக முழங்கிய அரசியல்வாதிகளினால் செய்ய முடியாமல் போன பெரும் வீதி அபிவிருத்தி பணியினை முன்னாள் அமைச்சர் அல்ஹாபிழ் நசீர் அஹமத் அவர்களின் இப்பிரதேச இனைப்பாளராக இருந்து நிறைவேற்ற முடிந்தமையினையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம்.
தனது குறுகிய பதவிக்காலத்தில் காத்தான்குடி மற்றும் அதன் அயல் கிராம மக்கள் பல தசாப்தங்களாக ஏங்கித் தவித்த இப் பாரிய வீதி (சுமார் 9 Km. காபற் வீதி)அபிவிருத்தி பணியினை நிறைவேற்றித் தந்துள்ள முன்னாள் அமைச்சர் அல்ஹாபிழ் நசீர் அஹமத் அவர்களுக்கு இப் பிரதேச மக்கள் மிகுந்த நன்றியறிதலை தெரிவிக்கின்றனர்
ஆதம் எஹ்யா
அரசியல் சமூக செயற்பாட்டாளர்