
20/02/2024
இஸ்லாமியர் பிணத்தை அடக்க செய்யவிடாமல் அட்டூழியம் செய்த சிறுத்தைகள்; பாட்ஷாவாக மாறிய பிரச்சனையை தீர்த்த பாமகவினர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுக்கா கொளத்தூர் அருகே காவேரிபுரம் என்ற கிராமத்தில் 150 குடும்பங்கள் வசித்து வந்தனர் தற்போது 60 இஸ்லாமிய குடும்பம் வசித்து வருகிறார்கள். கடந்த 70 ஆண்டுகளாக மேற்கு காவேரிபுரம் முஸ்லீம் மயானத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்து வந்தனர்.
கடந்த ஒரு வருடமாக அருகில் உள்ள சிறுத்தைகள் மயானத்தை ஆக்ரமிக்க முற்பட்டு வருகிறார்கள். அடிக்கடி பிரச்னை ஏற்படும் இரு சாரர்களின் ஒற்றுமையை குலைக்க சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களால் திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஜமாத்தார்கள் சிறுத்தை கட்சியை சார்ந்த முஸ்லீம் நாகை சட்டமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு உதவி கோரியும் அவர் காதில் கூட வாங்கி கொள்ளாமல் இதில் தலையிட முடியாது என கூறப்பட்டதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் விழிப்பிதுங்கி நிற்க, அப்பகுதியில் உள்ள பாமக சிறுபான்மை பிரிவு செயலாளர் பாஷா மூலம் ஜமாத்தார்கள் இப்பிரச்னை குறித்து உதவிட பாமக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் முனைவர் ஷேக் முகைதீன் அவர்களிடம் கோரிக்கை வைக்க உடனடியாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக ஒருவரை அனுப்பி தீர விசாரித்து விட்டு சேலம் மாவட்டச் செயலாளர் திரு ராஜசேகர் அவர்களிடம் சட்ட பூர்வ நடவடிக்கை மூலம் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவரும் கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது சொந்த செலவில் வழக்கு தாக்கல் செய்து நெம்பர் ஆகிவிட்ட நிலையில்.
நேற்று வயதான முஸ்லீம் ஒருவர் இறந்து விட்டார் அவரை அடக்கம் செய்ய விட மாட்டோம் என குறிப்பிட்ட சிறுத்தை கட்சியினர் தகாத வார்த்தைகள் பேசி பிரச்சனை செய்ய, முனைவர் ஷேக்முகைதீன் நேரில் செல்ல இயலாத காரணத்தால் உடனடியாக பாமக மாவட்டச் செயலாளர் ராஜசேகர் தகவல் தர உடனே அவரும் கொளத்தூர் யூனியன் வைஸ் சேர்மேன் மாரப்பன் மற்றும் 200-க்கு மேற்பட்ட பாமகவினர் இஸ்லாமியர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஒன்று திரண்டு இஸ்லாமிய ஆண்கள் பெண்களுடன் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டு காவல் துறை, வருவாய்துறை மூலமாக சட்டபூர்வமாக இஸ்லாமியர் உடல் நேற்றிரவு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி அண்ணன் அறிவுரைப்படி இரு பிரிவினருக்கும் விருப்பு வெறுப்பின்றி நீதிமன்றம் மூலம் பிரச்சனையை தீர்த்து கொள்ள இருக்கும் போது, தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் தூக்கி பிடிக்கும் சிறுத்தை கட்சி நிர்வாகிகள் கொளத்தூரில் இப்படி செய்வது நியாயமா..? என இஸ்லாமியர் வேதனையடைந்துள்ளனர்.
உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என மேடையில் முழங்கும் மரியாதைக்குரிய சிறுத்தை கட்சி தலைவர் அவர்களின் கீழ் உள்ள கட்சி நிர்வாகிகளின் இத்தகைய போக்கு கண்டிக்கதக்கது என இஸ்லாமியர்ளும், ஜமாத்தார்களும் வேதனை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று கூறும் திராவிட ஆட்சியில் தான் சமூகநீதியை பாமக நிலைநாட்ட வேண்டிய சூழலில் தமிழ்நாடு உள்ளது என்பது தான் வேதனையிலும் வேதனை.