Thani

Thani See the new world for wanted for you

ithu padi thanda pathinan kavithai
07/12/2024

ithu padi thanda pathinan kavithai

wish you a HAPPY DIWALI 2024
31/10/2024

wish you a HAPPY DIWALI 2024

do you find this actor? Who is this?
28/10/2024

do you find this actor? Who is this?

படைப்பு இலக்கணத்தில் இது ஒரு புதுக்கவிதை
25/10/2024

படைப்பு இலக்கணத்தில் இது ஒரு புதுக்கவிதை

இன்றைய தினம் முன்பு தொழிலாளியாக இருந்த நிறைய பேர் முதலாளிகளாக மாறி வருகிறார்கள். அதற்குக் காரணம் அவர்கள் தன்னைச் சார்ந்த...
24/10/2024

இன்றைய தினம் முன்பு தொழிலாளியாக இருந்த நிறைய பேர் முதலாளிகளாக மாறி வருகிறார்கள். அதற்குக் காரணம் அவர்கள் தன்னைச் சார்ந்த மற்றும் சாராத அனைவருக்கும் மரியாதையைக் கொடுத்தார்கள். தொழிலைப் பயபக்தியுடன் கற்றுக் கொண்டார்கள். தன்னிடம் பணமே இல்லாத போதும் தன்னை நாடி வருபவர்களுக்கு எந்தவழியிலாவது உதவியை செய்தார்கள்.

ஒரு கட்டத்தில் அவர்கள் முதலாளியாகி விடுகிறார்கள். அவர்களின் கீழ் 100 பேர் வேலை செய்றாங்க. ஆரம்பத்தில் பயபக்தியுடன் தொழிலை வளர்க்கணும்னு என்னென்ன சவுகரியங்கள் தொழிலாளர்களுக்கு செய்து கொடுக்க முடியுமோ அத்தனையும் செய்து கொடுத்தார்கள்.

அப்புறம் நாளாக நாளாக இவன் போனா இன்னொருவன் என்று அலட்சியமாக்கினர். பணம் மட்டும் சேர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனா காசு வந்ததும் அந்தப் பணம் பண்ற வேலையைப் பாருங்க. ஆள் குறைப்புங்கற பேருல மிரட்டல். அடிமையாக்கி அடிமைன்னே அவர்களுக்குத் தெரியாதவாறு வேலையைக் கசக்கிப் பிழிகிறார்கள்.

இருந்தாலும் தொழிலாளியோ இந்த வேலையையும் விட்டா நமக்கு யார் வேலை தருவாங்க. நமக்கோ வயதாகிவிட்டது என்று பயப்பட ஆரம்பித்து விடுறாங்க. இது அந்த முதலாளிகளுக்குப் பிளஸ் ஆகிறது. அப்புறம் என்ன போனஸ் வேண்டிக்கிடக்கு. நாங்களே ரொம்ப நஷ்டத்துல இருக்கோம். அப்படின்னு கூட சொல்வாங்க. போனஸ் கேட்டுறக்கூடாதுன்னு இன்னும் சில கம்பெனிகள் சம்பளத்தைக் கொடுப்பதற்கே இழுத்தடிப்பாங்க.

காசு இருந்தா கழுதை மாதிரி காலைச் சுற்றுவான்னு சொல்வாங்க. இப்படி எங்க பார்த்தாலும் காசு காசு காசுன்னு உலகம் மாறிடுச்சு. பணம் இருந்தால் தான் மதிப்பு. மரியாதை எல்லாமே. போனஸ் கொடுப்பது தொழிலாளிகளை சந்தோஷப்படுத்துவதற்காகத் தான்.

அவர்கள் வருடத்தில் ஒருமுறை இப்படி சந்தோஷமாக இருக்காங்க. உண்மையில் கம்பெனியின் வளர்ச்சிக்காக அவர்கள் போட்ட உழைப்புக்கான பலன் தான் போனஸ். இது முதலாளிகள் பெருமையுடன் வழங்க வேண்டிய விஷயம். ஆனால் சமீபகாலங்களில் தொழிலாளிகள் போனஸ் கேட்டுப் போராட வேண்டியுள்ளது.

சில இடங்களில் கொடுக்குற போனஸ்சும் ஏதோ கடமைக்காக சொற்பமான தொகையாகக் கொடுத்து விடுகிறார்கள். அதாவது பராவயில்லை. போனஸே கொடுக்காமல் இருப்பது என்பது தவறான விஷயம். ஏனென்றால் வருடத்திற்கு ஒருமுறை கொடுக்கும் அதுதான் தொழிலாளர்களின் உற்சாக டானிக். அடுத்த ஒரு வருஷம் அதற்காகவே கடினமாக உழைப்பார்கள்.

இதை அறிந்து கொள்ளும் முதலாளிகள் திறமையான தொழிலாளர்களை இழந்து விடாமல் கம்பெனியை முன்னேற்றுகிறார்கள். அறியாதவர்கள் பாவம்... யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போடுவது போன்ற நிலைக்கு ஆளாகிறார்கள். வருடத்திற்கு ஒரு முறை சந்தோஷமாக போனஸ் வாங்கும்போது தான் முதலாளிகள் நல்லாருக்கணும்னு மனசார நினைப்பாங்க.

பணம் இருந்தும் மனசு இல்லாதவங்க நிறைய பேரு இருக்காங்க. அவர்கள் தொழிலாளிகளைப் பிச்சைக்காரர்களாக நினைப்பவர்கள். போனஸ் எல்லாம் இவர்களுக்குத் தண்டச்செலவுன்னு நினைப்பாங்க. இதை மிச்சப்படுத்தி அவர்கள் எங்கு கொண்டு போகிறார்கள் என்பது தான் வேடிக்கை.

எல்லாமே பெரிய பெரிய ஆஸ்பத்திரிகளில் பில்களாகிப் போகும். இது நிஜவாழ்க்கையில் நாம் காணக்கூடிய விஷயம் தான். இப்போ கேட்க ஆரம்பிச்சிருப்பாங்க. உங்க கம்பெனியில போனஸ் போட்டாச்சான்னு..?

This is beauty kavithai in tamil
24/10/2024

This is beauty kavithai in tamil

Kalangarai vilakkame...!
21/10/2024

Kalangarai vilakkame...!

Bigg boss 8 Tamil
21/10/2024

Bigg boss 8 Tamil

எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சிறப்பு தமிழுக்கு உண்டு. அது தான் ழகரம். இதுபோல பல்வேறு விதமான வார்த்தைகள் தமிழுக்கு மேலும் அ...
17/10/2024

எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சிறப்பு தமிழுக்கு உண்டு. அது தான் ழகரம். இதுபோல பல்வேறு விதமான வார்த்தைகள் தமிழுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. ஓரெழுத்து ஒரு மொழி அதிகளவில் தமிழில் தான் உள்ளது.

அதுவும் நம்மால் அழகுபட ரசிக்க வைக்கும் வல்லமை படைத்தது. உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தானே..!

‘வேல்’ என்றால் கூர்மையான முனை கொண்டது. அது அறிவுக்கூர்மையைக் குறிக்கிறது. அறிவு காண இயலாது. உணரத்தான் முடியும். அதனால் அது மறைக்கப்பட்டுள்ளது.

‘வேவு பார்த்தல்’ என்றால் உளவு பார்ப்பது. எதிரியின் நாட்டைப் பற்றி அறிய ஒற்றர் படை வீரன் உளவு பார்க்க அங்கு ரகசியமாக செல்கிறான். அங்கு மறைந்து இருந்து தனது வேலையைப் பார்க்கிறான்.

‘வேகம்’ என்றால் மின்னல் போல ‘பளிச்’ சென்று மறைந்துவிடும் வேகம். விரைந்து செல்லுதல் என்று பொருள். அந்த அளவு விருட்டென்று மறைந்து விடுவதால் தான் வேகம் என்று பெயர் வந்தது. அதே போல ‘வேதம்’ என்றால் மறைபொருள்.

அது நேரடியாக சொல்லப்படாது. ஆழ்ந்து கவனித்தால் மட்டுமே புலனாகும். அதற்குரிய உண்மைப்பொருள் விளங்கும். அதே போல ‘வேர்’ என்றால் தரைக்குக் கீழ் சென்று தனது வேலையை மறைந்து இருந்து கவனித்து செடிக்குத் தேவையான நீரையும், தாது உப்புகளையும் தவறாமல் கொடுக்கும் பணியை செவ்வனே செய்கிறது.

‘வேதனை’யும் அப்படித்தான். அது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம். மறைந்து இருந்து நம் மனதைத் தாக்குகிறது.
அதே போல ‘வேடம்’ என்றால் தனது உண்மை உருவத்தை மறைத்துப் பொய்யான தோற்றத்தைக் கொண்டு வருவது என்று பொருள்படும்.

அது சரி இந்த சொற்கள் எல்லாமே வே என்று தொடங்கும் எழுத்தில் ஆரம்பிக்கிறதே. அது ஏன்னு தானே கேட்குறீங்க. இங்கு தான் தமிழ் தனித்து நிற்கிறது. ‘வே‘ என்றால் மறைத்தல் என்று ஒரு பொருள். தமிழ்னா சும்மாவா... எல்லாரும் நம்ம தாய்மொழிக்கு ஒரு ‘ஜே’ போடுங்க..!

This is nature of beauty kavithai kavaithai padi...!
17/10/2024

This is nature of beauty kavithai kavaithai padi...!

mukkandi dasara 2024
14/10/2024

mukkandi dasara 2024

14/10/2024

mukkani dasara 2024

Address

MA

Telephone

+19787742602

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share