Malaikuruvi

Malaikuruvi Latest News From Sri Lanka/India/World
news in Tamil

மஸ்கெலியாவில் 20ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் ஆடைத்தொழிற்சாலை குறித்து சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
24/08/2025

மஸ்கெலியாவில் 20ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் ஆடைத்தொழிற்சாலை குறித்து சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் கனவைச் சிதைத்த ஆடைத்தொழிற்சாலை மஸ்கெலியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூடிய நிலையில் உள்ளது.

கிராமத்திற்கு ஓர் ஆடைத் தொழிற்சாலை என்ற வகையில் காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானின் வேண்டுகோளுக்கு இணங்க மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நோட்டன் பிரதான வீதியில் கிலன்டிள்ட் தோட்ட எல். ஆர். சி யின் சுமார் ஐந்து ஏக்கர் காணியில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டது.

மேலதிக விபரம் கமண்ட் பகுதியில்....

நுவரெலியாவில் குழந்தைகளின் உரிமைக்கான பேரணி இன்று (23) நடைபெற்றது.நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள அனைத்துப்...
23/08/2025

நுவரெலியாவில் குழந்தைகளின் உரிமைக்கான பேரணி இன்று (23) நடைபெற்றது.

நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள அனைத்துப் பள்ளிகளின் குழந்தைகளும் பெற்றோர்களும் இணைந்து இன்று (23) நுவரெலியா நகரில் குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தினர்.

நுவரெலியாவில் குழந்தைகளின் உரிமைக்கான பேரணி | MALAIKURUVI நுவரெலியாவில் குழந்தைகளின் உரிமைக்கான பேரணி இன்று (23) நடைபெ.....

கற்களைப்போட்டுப் பாதையை மூடிய கல்நெஞ்சு கணக்கப்பிள்ளை!தோட்டத்தில் வாழும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாதையில் பயணிக்கக...
17/08/2025

கற்களைப்போட்டுப் பாதையை மூடிய கல்நெஞ்சு கணக்கப்பிள்ளை!
தோட்டத்தில் வாழும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாதையில் பயணிக்கக் கூடாது என்று கற்களைப்போட்டுப் பாதையை மூடிய கல்நெஞ்சு கணக்கப்பிள்ளை! பற்றிய தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மறே தோட்ட ராஜமலை பிரிவில் உள்ள கணக்கப்பிள்ளையே இவ்வாறு அக்கிரமம் புரிந்துள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பாதை மூடப்பட்டதால், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், பயணிகள், முதியோர்கள், நோயாளிகள் பாரிய அசெகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

கற்களைப்போட்டுப் பாதையை மூடிய கல்நெஞ்சு கணக்கப்பிள்ளை! | MALAIKURUVI தோட்டத்தில் வாழும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும...

பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுக்கும் இபோச பஸ்கள் குறித்து கினிகஸ்தேனை பகுதி மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றார்கள்.முன் கூட்டி...
09/08/2025

பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுக்கும் இபோச பஸ்கள் குறித்து கினிகஸ்தேனை பகுதி மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றார்கள்.

முன் கூட்டியே பணம் செலுத்தி ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் பெறப்பட்ட பருவகால சீட்டினை வைத்திருக்கும் கினிகத்தேன பகுதியில் உள்ள பிரபல சிங்கள கினிகத்தேன சென்றல் கொலேஜ் , விக்னேவரா தமிழ் வித்தியாலயம் அப் பகுதியில் உள்ள ஏனைய பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு அநீதி இடம் பெற்றுள்ளது.

இது குறித்து பாடசாலை மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில் காலை வேளையில் அரசு பேருந்துகளில் ஏற்றாமல் செல்வதால், தனியார் பேருந்துகளில் அதிகளவு பணம் கொடுத்துச் செல்ல வேண்டி உள்ளது.

மாலை வேளையில் பாடசாலை நிறைவு பெற்று 2 மணிக்கு மேல் அவ்வீதியூடாக வரும் அரச பேருந்துகளில் ஏற்றாமல் செல்வதால் நடை பயணமாக இல்லங்களுக்குச் செல்ல வேண்டி உள்ளது.

இதனால் முன்கூட்டியே பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்ட பருவகால சீட்டால் பயன் இல்லை எனக் கூறுகின்றனர்.

மாணவர்களை ஏற்ற மறுக்கும் இபோச பஸ்கள் குறித்துச் சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரிகள், போக்குவரத்து அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை முன் வைக்கின்றனர்

தொடர்ந்து பலத்த மழை காரணமாக சாமிமலை கவரவலை சந்தி பகுதியில் வெள்ளம்.மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா ப...
03/08/2025

தொடர்ந்து பலத்த மழை காரணமாக சாமிமலை கவரவலை சந்தி பகுதியில் வெள்ளம்.

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் கனத்த மழை பெய்தது வருகிறது.

சாமிமலையில் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு | MALAIKURUVI தொடர்ந்து பலத்த மழை காரணமாக சாமிமலை கவரவலை சந்தி பகுதியி.....

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து ரஷ்யாவிலும் ஜப்பானிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம்...
30/07/2025

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து ரஷ்யாவிலும் ஜப்பானிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ரஷ்யாவிலும் ஜப்பானிலும் சுனாமி எச்சரிக்கை | MALAIKURUVI

கம்பளை குடைத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (28) இரவு இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.கண்டி- நாவலப்பிட...
29/07/2025

கம்பளை குடைத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (28) இரவு இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கண்டி- நாவலப்பிட்டி வீதியில் கம்பளை நகரில் அமைந்துள்ள குடைத் தொழிற்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தீவிபத்தினால் தொழிற்சாலைக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

ஊவா மாகாண பிரதம செயலாளராகத் திருமதி பி. ஏ. ஜி. பெர்னாண்டோ ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.திருமதி பெர்னாண்டோவிற்கான ந...
28/07/2025

ஊவா மாகாண பிரதம செயலாளராகத் திருமதி பி. ஏ. ஜி. பெர்னாண்டோ ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமதி பெர்னாண்டோவிற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க இன்று காலை வழங்கினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் நடைபெற்றது.

ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (28) காலை மாலைதீவுக்கு ...
28/07/2025

ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (28) காலை மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அங்குப் பயணமானார்.

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.

ஜனாதிபதி அனுர மாலைதீவு சென்றார் | MALAIKURUVI ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.ஜனாதிபதி அ...

சேரவேண்டிய இடமான ஹற்றன் செல்லாமல் கால்வாயில் கவிழ்ந்த ஓட்டோ ஒன்று கொட்டகலை கமர்ஷல பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.திம்புள்ள ...
28/07/2025

சேரவேண்டிய இடமான ஹற்றன் செல்லாமல் கால்வாயில் கவிழ்ந்த ஓட்டோ ஒன்று கொட்டகலை கமர்ஷல பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலிருந்து ஹட்டன் நகர் நோக்கிச் சென்ற முச்சக்கவண்டி, கொட்டகலை பகுதியில் வீதியை விட்டு விலகிக் கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேல், சப்பிரகமுவை, மத்திய, வடமேல் ஆகிய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27) மழை பெய்யக்கூடும் என்று ...
27/07/2025

மேல், சப்பிரகமுவை, மத்திய, வடமேல் ஆகிய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27) மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மாகாணங்கள், புத்தளம், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

புத்தளம் முதல் கொழும்பு, காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Malaikuruvi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share