DSB Cinemas

DSB Cinemas DSB CINEMAS

  | நடிகர்/ இசை அமைப்பாளர் மதன் பாப் காலமானார்  |
02/08/2025

|

நடிகர்/ இசை அமைப்பாளர் மதன் பாப் காலமானார்

|

சிறந்த இசையப்பாளர் விருது வாத்தி திரைப்படம் G.V.பிரகாஷ்குமார்
02/08/2025

சிறந்த இசையப்பாளர் விருது வாத்தி திரைப்படம் G.V.பிரகாஷ்குமார்

சிறந்த துணை நடிகராக எம்.எஸ்.பாஸ்கரன் தேர்வு   |   |   |
02/08/2025

சிறந்த துணை நடிகராக எம்.எஸ்.பாஸ்கரன் தேர்வு

| | |

பார்க்கிங் திரைப்படத்திற்கு  3 தேசிய விருதுகள்  |   |   |   |   |
02/08/2025

பார்க்கிங் திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள்

| | | | |

தேசிய திரைப்பட விருதுகள் 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படமாக பார்க்கிங்  திரைப்படம் தேர்வு  |   |   |   |   |
02/08/2025

தேசிய திரைப்பட விருதுகள் 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படமாக பார்க்கிங் திரைப்படம் தேர்வு

| | | | |

நடிகர் சூர்யா பிறந்த நாளை ஒட்டி வெளியிடப்பட்ட சூர்யா 46 போஸ்டர்
23/07/2025

நடிகர் சூர்யா பிறந்த நாளை ஒட்டி வெளியிடப்பட்ட சூர்யா 46 போஸ்டர்

மகளின் திருமண அழைப்பிதழை திருமதி. லதாரஜினிகாந்த் அவர்களிடம் வழங்கிய நடிகர் கிங்காங்
13/07/2025

மகளின் திருமண அழைப்பிதழை திருமதி. லதாரஜினிகாந்த் அவர்களிடம் வழங்கிய நடிகர் கிங்காங்

12/07/2025

யூ டியூபர் சதீஷ் பதிவு

"ஒரு கனவு நனவாகும் - கதாநாயகனாக எனது முதல் படத்தின் (Tat2) ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!"

என் அன்பான நண்பர்களே, இந்த பெரிய தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன்.
பல வருடங்களுக்குப் பிறகு, இன்று என் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க நாள். நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் எனது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இது. இந்தப் படம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. அதில் பணியாற்றத் தொடங்கி, ஸ்கிரிப்ட்டில் ஈடுபட்டு, பின்னர் நான் அதை எவ்வளவு விரும்பினேன் என்பதை உணர்ந்து, நான் ஆர்வத்துடன் உழைத்தேன். ஒரு சாதாரண மனிதனாக இருந்து இப்போது ஒரு யூடியூபராகவும் செல்வாக்கு செலுத்துபவராகவும், இறுதியாக ஒரு முக்கிய வேடத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பது வரை எனது ஒரு பெரிய கனவாக இருந்தது, அது இறுதியாக நனவாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அந்த சாதனையின் பிரதிபலிப்பாகும். நீங்கள் என்னை எப்போதும் ஆதரித்ததைப் போலவே இந்த படத்தையும் ஆதரிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் இல்லாமல், நான் இன்று இருக்கும் நிலையில் இருக்க மாட்டேன்.
மிக்க நன்றி! என்னை நம்பி இந்த திட்டத்திற்குள் என்னைக் கொண்டு வந்ததற்கு க்கு நன்றி. இன்று, இதை ஒரு திரைப்படமாகப் பார்ப்பது எங்கள் இருவருக்கும் ஒரு கனவு நனவாகும். இதில் நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றினோம், எதிர்காலத்தில் நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். உங்கள் எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துக்கள் மற்றும் வாழ்த்துக்கள். வேணு, ஒரு நண்பராகவும் இயக்குநராகவும் இந்த படத்தில் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி. -க்கு நன்றி.

1. வாலி எழுதுவதைப் போலவே, ஓவியம் வரைவதிலும் வல்லவராவார். பள்ளியில் படிக்கும்போதே ஓவியம் நன்கு வரைவார். அக்காலகட்டத்தில்,...
11/07/2025

1. வாலி எழுதுவதைப் போலவே, ஓவியம் வரைவதிலும் வல்லவராவார். பள்ளியில் படிக்கும்போதே ஓவியம் நன்கு வரைவார். அக்காலகட்டத்தில், ஆனந்த விகடனில், "மாலி" என்பவர் வரைந்த ஓவியங்கள், மிக பிரபலமாக விளங்கின. அவரைப்போலவே இவரும், ஓவியத்துறையில் வளர்ந்து வரவேண்டும் என்றெண்ணி, வாலியின் பள்ளித்தோழர் பாபு, வாலிக்கு அப்பெயரை இட்டார். வாலியின் இயற்பெயர் "ரங்கராஜன்" என்பதாகும்.

2. வாலி, குடிபோதையில் பாட்டெழுதிய ஒரே பாடல், "சர்வர் சுந்தரம்" படத்தில் இடம்பெற்ற " அவளுக்கென்ன அழகிய முகம்" என்ற பாடலாகும்.

3. மாருதிராவ் என்பவருடன் இணைந்து, வாலி, ஒரு படத்தையும் இயக்கியுள்ளார். படத்தின் பெயர் "வடைமாலை" என்பதாகும். 1982ல் வெளியான இந்த படம் தோல்வியடைந்தாலும், தரமான படமென்று, விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. தமிழக அரசின் விருதாக ஒருலட்சம் ரூபாய் இப்படத்திற்குக் கிடைத்தது

4."அபூர்வ சகோதரா்கள்" படத்தில், ஒரு பாடலின் சூழலுக்கு, வாலி நான்கு, ஐந்து பாடல்கள் எழுதியும், கமலஹாசனுக்கு எதுவுமே பிடிக்கவில்லை. கமலஹாசன், தன் அதிருப்தியை இளையராஜாவிடம் வெளியிட, இளையராஜா, அவரைச் சமாதானப்படுத்தினார். பிறகு, இளையராஜா வாலியிடம், பக்குவமாக விஷயத்தை எடுத்துரைத்து, கமலின் எதிர்பார்ப்பை விளக்கினார். அதன்பிறகு வாலி எழுதிய பாடல், அனைவரையும் கவர்ந்து, சாகாவரம்பெற்ற பாடலானது. அப்பாடல்தான் "உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்" என்ற பாடலாகும்.

5. ஐந்து தலைமுறைகளுக்கு, ஏறத்தாழ 12000 பாடல்களுக்கும் மேல்எழுதி, உலகிலேயே அதிக திரைப்படப்பாடல்கள் எழுதியவர் என்ற சாதனையைப் படைத்தவர், "வாலி" ஒருவரே.

6. வாலி, 16 படங்களுக்கு, வசனமும் எழுதியுள்ளார் என்ற விஷயம், பலரும் அறியாதது.

7. வாலியின் பாடல்கள் சிலவற்றைக் கேட்கும்போது, கண்ணதாசனுக்கே இப்பாடல் நாமெழுதியதா?என்ற சந்தேகம் எழும். அந்த அளவிற்கு, தத்ரூபமாக, கண்ணதாசனே மயங்கும்வண்ணம், பாடல்களை எழுதியுள்ளார் வாலி.

8. எம்.ஜி.ஆர், வாலியிடம், ஒருமுறை குறும்பாக, "நீங்கள் இந்த படத்தில் பாடல்களெழுதியிருந்தாலும், உங்கள் பெயரைப் படத்தில் போடப்போவதில்லை" என்றார். வாலியோ ஜாலியாக, "எனது பெயரில்லாமல், உங்கள் படத்தையே வெளியிடமுடியாது" என்றார். எம்.ஜி.ஆர் எப்படி என்று வினவ, " இந்த படத்தின் பெயர் "உலகம் சுற்றும் வாலிபன்". இதில் வாலியை எடுத்து விட்டால் "உலகம் சுற்றும் பன்" என்றல்லவா ஆகும்?" என்று கூற, எம்.ஜி.ஆர், நன்கு சிரித்தபடி, வாலியைத் தட்டிக்கொடுத்தாா்.

9. வாலி, சுயசரித நூலும் எழுதியுள்ளார். "இருபதாம் நூற்றாண்டும் நானும்" என்பது, அந்தநூலின் பெயராகும். முழுமையான சுயசரிதை நூலென்று, இதைக் கூறமுடியாவிட்டாலும், வாலி, தன் வாழ்வியல் நிகழ்வுகள் பலவற்றை, விவரித்துள்ளார்.

10. வாலி, எம்.ஜி.ஆருக்கு எழுதிய பாடல்களிலேயே, தனிச்சிறப்பு மிக்க பாடல், "நேற்று இன்று நாளை" படத்தில் இடம்பெற்ற "தம்பி நான் படித்தேன்" என்ற பாடலாகும். படத்தின் சூழலுக்குப் பொருந்திவரும் இப்பாடலில், அக்கால அரசியல்சூழலையும் பொருத்தி, திறம்படப் பாட்டெழுதியிருந்தார் வாலி. எம்.ஜி.ஆர் இப்பாடலைக் கேட்டு, வாலியைக் கட்டித் தழுவிப் பாராட்டினார்.

11.52 எம்.ஜி.ஆர் படங்களிலும், 66 சிவாஜி படங்களிலும், வாலி பாடல்களெழுதியுள்ளார். எம்.ஜி.ஆர் நடித்த மொத்த படங்களே, 136 தான் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர், வாலியை "ஆண்டவரே!" என்று அழைப்பார்; சிவாஜி "வாத்தியாரே!" என்று அழைப்பார்.

12. வாலி எழுதிய பாடல்கள், மிகவும் பிரபலமான முதல்படம் "கற்பகம்" ஆகும். இந்த படப்பாடல்களில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், அனைத்து பாடல்களும் பாடகிகளுக்கானவை; பாடகர்களின் குரலுக்கு வேலையே இல்லை.

13.வாலி, கதை−திரைக்கதை−வசனம்−பாடல்கள் எழுதிய "ஒரே ஒரு கிராமத்திலே" திரைப்படம், இடஒதுக்கீடு முறைக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்ததால், கடும் எதிர்ப்புகளைப் பெற்றது. சமூகத்தில் கொந்தளிப்பை உண்டாக்கியதால், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட முதல் திரைப்படமாக இது அமைந்தது. திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்படாமலே, தேசியவிருதைப் பெற்றது. தற்போது வலியுறுத்தப்படும், பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டை, இப்படத்தில் வலியுறுத்தியிருப்பார் வாலி. நீதிமன்ற வசனங்கள் ஆணித்தரமாக அமைந்திருந்தன.

14. 1973ல் வெளியான "பாரதவிலாஸ்" படத்தில் இடம்பெற்ற, "இந்திய நாடு என்வீடு" என்ற வாலியின் பாடலுக்கு, தேசியவிருது கிடைத்தது. அரசியல் முரண்பாடு காரணமாக, இவ்விருதை ஏற்க மறுத்துவிட்டார் வாலி.

15. வாலி, இளவயதிலேயே "நேதாஜி" என்ற கையெழுத்துப் பத்திரிக்கையைத் தொடங்கினார். இதைத் தொடங்கிவைத்தவர் கல்கி. இப்பத்திரிக்கையில் எழுதுவதை இளைஞர்கள் விரும்பினர். இப்பத்திரிக்கையில் எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர், எழுத்தாளர் "சுஜாதா" ஆவார்.

16.மரபுக்கவிதை, புதுக்கவிதை ஆகிய இரண்டுவகை கவிதைகளை எழுதுவதிலும் வல்லுநராக விளங்கினார் வாலி. இத்திறமை படைத்த முதல் தமிழ்ப்படப் பாடலாசிரியர் வாலியே ஆவார்.

17.வாலி, பாடல்வாய்ப்பு தேடிய நாட்களில், அவரை, பல சினிமா தயாரிப்பு நிறுவனங்களுக்கு அழைத்துப்போய், பாடல்வாய்ப்பு கேட்டு, வாலியின் உயர்வுக்கு வழிவகுத்தவர், திரைப்படக் குணச்சித்திர நடிகரான "வி.கோபாலகிருஷ்ணன்" ஆவார்.

18. வாலியின் பள்ளித்தோழர்களுள் உயிர்த்தோழராக இருந்தவர் நடராஜ சுந்தரம். பள்ளிப்பருவத்திலேயே, தீவிர பெரியாரியவாதியாக இருந்தவர் நடராஜசுந்தரம்; வேளாள ஜாதியினர். ஆனாலும், வாலியை, எந்த சூழலிலும், விட்டுவிலகாதவர்; விட்டுக்கொடுக்காதவர். ஒருமுறை, வாலியைக் கடிக்கவிருந்த கோதுமைநாகத்தைக் கொன்று, வாலியின் உயிரைக் காத்தவர். அப்போதே, வாலியின் பாடல்கள், நாடகங்களை இரசித்தவர். வாலி, வருங்காலத்தில் பாடலாசிரியராக வர, ஊக்கமும், உற்சாகமும் தந்தவர். வாலியினுடைய ஓரளவு சங்கீத அறிவு, நடராஜசுந்தரத்திடமிருந்து கிடைத்ததே! துரதிர்ஷ்டம் என்னவென்றால், வாலி, பெரிய பாடலசிரியராக உயர்ந்தபோது, அதைப் பார்த்துமகிழ, நடராஜசுந்தரம் உயிரோடு இல்லை.

19. சிறந்த கவியரங்கக் கவிதைகள், ஆன்மீக நூல்கள், படைத்த வாலி, பல இலக்கியத்தரமான பாடல்களை எழுதினாலும், சில சமயங்களில், விரசம் ததும்பும் பாடல்களை எழுதி, சர்ச்சைக்கு ஆளாவது தேவைதானா? என்றொருவர், வாலியிடமே கேட்டார். வாலி அளித்த பதில் " இங்கே நான், வண்ணமொழிப் பிள்ளைக்குத் தாலாட்டும் தாய்; அங்கே நான், விட்டெறியும் எலும்புக்கு வாலாட்டும் நாய்" என்றார். எவ்வளவு உயர்விலும், வாலி, பணிவுடனிருந்தார் என்பதற்கு, இது மிகச்சிறந்த உதாரணமாகும்.

20. வாலி எழுதிய நூல்களுள், சற்றே சர்ச்சைக்குள்ளாகிய நூல், "நினைவு நாடாக்கள்" என்பதாகும். தான் சந்தித்த, பழகிய மனிதர்களின் குணநல இயல்புகளை, ஒளிவுமறைவில்லாமல், வெளிப்படையாக அதில் போட்டுடைத்ததுதான் காரணமாகும்.

21. வாலி, மு.க.முத்து நடித்த, "பிள்ளையோ பிள்ளை" படத்தில் "மூன்றுதமிழ் தோன்றியதும் உன்னிடமோ? என்ற பாடலைச் சிறப்பாக எழுதியிருந்தாா். பாடலைக்கேட்டு, எம்.ஜி.ஆர், தனது படத்தில், தனது புகழ்பாடும் காதல் பாடலாக, வரவேண்டிய இந்த அருமையான பாடலை, வாலி, மு.க. முத்துவிற்கு எழுதிவிட்டாரே! என்று, ஆதங்கமும், கோபமும் அடைந்தார். வாலியிடம் அதை வெளிப்படுத்த, வாலி, அது இயல்பாகவும், தற்செயலாகவும் தன்னுள் வெளிப்பட்ட பாடலென்று கூறி, எம்.ஜி.ஆரை, வாலி சமாதானம் செய்தார்.

21. எம்.ஜி.ஆர் படங்களுக்கு, வாலி, பாடல்களெழுதிய முதல்படம் "படகோட்டி". இப்படத்திற்கு இரு பாடல்களை மட்டுமே எழுதினார் வாலி. பாடல்களைப் படித்து அசந்துபோன எம்.ஜி.ஆர், அப்படத்தில், அனைத்துப் பாடல்களும் எழுதும் வாய்ப்பை வழங்கியதுடன், தனது படங்களுக்கு, இனி வாலியே, பிரதானமாகப் பாடல்களெழுதுவார் என்றும், அறிவிப்பு வெளியிட்டார்.

22. வாலி, படத்தின் கதை சாராம்சத்தை, சுருங்கிய வடிவில் கூறுவதில் வல்லவர். உதாரணமாக, "காதலர் தினம்" படத்திலிடம்பெற்ற, "நினைச்சபடி நினைச்சபடி" பாடலில் இடம்பெறும்,

"காதலென்ற சொல்லை நானும் சொல்லவில்லை.

சொல்லவந்த நேரம்காதல் எந்தன் கையில் இல்லை.

வாழ்வுதந்த வள்ளல் வாரிக்கொண்டு போக

வாழ்த்துச்சொல்ல நானும்வந்தேன் கண்கள் ஈரமாக"

என்ற வரிகளில், படத்தின் கதையே, கூறப்பட்டிருக்கும் நயத்தைக் கவனியுங்கள்.

23. இளையராஜா இசையில், அதிக பாடல்களை எழுதிய பாடலாசிரியர் வாலிதான்.

24. வாலி அவர்களின் மனைவிபெயர் வித்யாசமானது. "ரமண திலகம்" என்பது, அவர்கள் பெயர்.

25. தீவிர முருக பக்தர் வாலி. திரையுலகில், பிரபலமாவதற்கு முன்பே, "கற்பனை என்றாலும்", "ஓராறு முகமும்" உள்ளிட்ட சில முருகன் பாடல்களை எழுதிப் பிரபலமானவர்; பிற்காலத்தில் "சரவண சதகம்" என்ற முருகன் புகழ்பாடும் வெண்பா நூலையும் இயற்றினார்.

26."மௌனம் சம்மதம்" படத்தில், வாலி எழுதிய "கல்யாணத் தேன்நிலா" என்ற பாடல், அனைத்து வரிகளின் இறுதி எழுத்தும், "லா" என்ற எழுத்திலேயே முடியும் சிறப்புக்களுடையது.

27.தமிழ்ப்படப் பாடலாசிரியர்களிலேயே, டைமிங்சென்ஸ் காமெடி மற்றும் பஞ்ச் வசனங்கள் பேசுவதில் வல்லுநராக விளங்கியவர் வாலிதான்.

#வாலி #கவிஞர்வாலி #வாலிபகவிஞர்வாலி

‘எங்கிருந்தோ வந்த’ எஸ்.வி.ரங்காராவ்!https://cinirocket.com/script-about-actor-s-v-ranga-rao-2/தெலுங்கு பேசும் கிழக்கு கோ...
09/07/2025

‘எங்கிருந்தோ வந்த’ எஸ்.வி.ரங்காராவ்!
https://cinirocket.com/script-about-actor-s-v-ranga-rao-2/

தெலுங்கு பேசும் கிழக்கு கோதாவரி மண்ணில், ராஜமுந்திரி அருகிலுள்ள தவுலேஸ்வரம் எனும் கிராமத்தில் 1918-ம் ஆண்டு, ஜூலை 3-ம் தேதி, சுங்கத்துறை ஆய்வாளர் சாமர்லா கோட்டீஸ்வர ராவ் – சாமர்லா லட்சுமி நரசாயியம்மா தம்பதியின் மகனாகப் பிறந்தார் எஸ்.வி.ரங்காராவ்.

தாயார் இட்ட பெயரும் குடும்பப் பெயருமாக இணைந்து ‘சாமர்லா வெங்கட ரங்காராவ்’ என அழைக்கப்பட்டார். இதன் சுருக்கப் பெயராக ‘எஸ்.வி.ரங்காராவ்’ எனும் பெயர் நிலைத்துவிட்டது. அவரது பள்ளிப் படிப்பு பிறந்த கிராமத்திலும் சென்னையிலும் கழிந்தது.

விசாகப்பட்டணம், காக்கிநாடாவில் கல்லூரி வாழ்க்கை. இளங்கலை அறிவியல் பட்டம் பெற்று தீயணைப்புத் துறையில் பணியில் சேர்ந்தார்.

பள்ளிக் கல்வியில் தொற்றியது நடிப்புக் கிறுக்கு. பள்ளி நாடகத்தில் அவர் போட்ட முதல் வேடம், பில்லி சூனிய மந்திரவாதி பாத்திரம். காக்கிநாடாவில் தொழில்முறையற்ற (அமெச்சூர்) நாடகக்குழு ஒன்றில் இணைந்து தன்னை வளர்த்துக் கொண்டார்.

இங்கு இவரது சம பங்காளிகளாக இருந்தவர்கள், பின்னாளில் புகழ்பெற்ற நடிகரும் இயக்குநருமான பி.எஸ்.சுப்பாராவ், அஞ்சலி தேவி, ஆதி நாராயணராவ் போன்றவர்கள். இந்த நாடகக்குழுதான் இவருக்கு நாடகப் பள்ளியாக அமைந்தது.

1951-ல் வெளியான ‘பாதாள பைரவி’ படத்தில், அவர் ஏற்ற நேபாள மாந்திரீகன் வேடம்தான் எஸ்.வி.ரங்காராவ் கற்ற வித்தைகளைக் கொட்டும் பாத்திரமாக அமைந்தது.

மறைந்து வாழும் நேபாள மாந்திரீகவாதியாக எஸ்.வி.ரங்காராவ், அவரிடம் சிக்கிக்கொள்ளும் துடிப்பு மிக்க வீரனாக என்.டி.ராமாராவ். வீரனின் காதலியாக மாலதி.

என்.டி.ஆரின் வீரதீர சாகசங்களே கதை என்றாலும், அவரை மிரட்டும் கொடூர மாந்திரீகவாதியாகவும் இளவரசி மாலதியை அடைய நினைக்கும் தந்திரனாகவும் எஸ்.வி.ரங்காராவ் மிரள வைத்தார்.

தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் வெற்றி. தெலுங்கில் 25 வாரங்கள் ஓடிய முதல் படமும் இதுதான். வெற்றியின் ரகசியம் நேபாள மாந்திரீகவாதி.

எஸ்.வி.ரங்காராவின் உடல்மொழியும் குரல்மொழியும் ஒருங்கிணைந்து மாயாஜாலம் காட்டின. அதேசமயம் மிக இயல்பான நடிப்பு, அலட்டல், மிரட்டல்... இதற்கான தடயங்களை அவர் ஷேக்ஸ்பியரிடமிருந்து எடுத்துள்ளார்.

எஸ்.வி.ரங்காராவ் நடித்த படங்களை வரலாற்றுப் படங்கள், புராணப் படங்கள், சமூகப் படங்கள் என வளமையான சினிமா ஆய்வாளர்கள் பிரிக்கின்றனர்.

‘பார்த்திபன் கனவு’ படத்தில் நரசிம்ம பல்லவன், ‘அனார்கலி’ படத்தில் அக்பர், ‘சாரங்கதாரா’ படத்தில் நரேந்திர மன்னர் உள்ளிட்ட சில வரலாற்றுக் கதைகளில் நடித்துள்ளார். இவற்றில் ‘பார்த்திபன் கனவு’ இவருக்குப் பெயர் சொல்லத்தக்க படம்.

மன்னர் நரசிம்ம பல்லவராகவும் சந்நியாசியாகவும் மறைந்து வாழ்ந்து படம் முழுக்க பார்வையாளர்களுக்கு இருவரும் ஒருவரா அல்லது இருவரா என அறிய முடியாமல் அற்புத நடிப்பை வழங்கினார்.

ஆனால், புராணப் படங்களே அவருக்குப் பெரும்புகழ் ஈட்டித் தந்தவை. புராணப் படங்களில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், சிவாஜி, ஜெமினி, அஞ்சலிதேவி, ஜி.வரலட்சுமி, எஸ்.வரலட்சுமி, சாவித்திரி போன்றவர்கள் நாயக, நாயகிகளாக நடித்தனர்.

ஒவ்வொரு முறை பேசியதும் அல்லது பேச்சினூடே கழுத்தை லேசாக வெட்டிச் சுளுக்குவார், ஒரு கண்ணை மட்டும் ஓரமாகச் சிமிட்டுவார்.

மாயாபஜாரில் ஆஜானுபாகுவாகக் கையில் கதாயுதத்துடன் கௌரவர் கூட்டத்தைக் கலக்கும் கடோத்கஜன் வேடத்தில், ‘கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்… ஹஹ்ஹ்ஹ்ஹஹா… ஹஹா ஹஹா’ என மேற்கத்திய மெட்டு கலந்த பாடலில், மெல்லுணர்வின் மூலமாக நகைச்சுவையையும் வழங்கினார்.

சிறந்த இயக்குநருக்கான பிரிவின் கீழ் ‘சதுரங்கம்’ படத்துக்கு ‘நந்தி விருது’ பெற்றவர். ‘விஸ்வ நட சக்கரவர்த்தி’, ‘நட சிம்ஹா’, ‘நட சர்வபூமா’ ஆகிய பட்டங்களையும் பெற்றவர்.

தொடர்ந்து ‘அன்னை’, ‘சாரதா’, ‘நானும் ஒரு பெண்’, ‘கற்பகம்’, ‘நர்த்தனசாலா’ ஆகிய படங்களுக்குக் குடியரசுத் தலைவர் விருதும், ‘பந்தவயலு’ படத்துக்குச் சிறந்த நடிகர் விருதும் பெற்றவர்.

தமிழில் ‘கல்யாணம் பண்ணிப் பார்’ (1951) இவருக்கு முதல் படம். இதில்தான் சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த சாவித்திரி, இரண்டாவது நாயகியாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

இதில் சாவித்திரியின் தந்தை 54 வயது ஜமீன்தார், ஜில்லா போர்டு மெம்பர், பஞ்சாயத்து பிரசிடென்ட் தணிகாசலம் பிள்ளையாக ரங்காராவ் நடித்தார்.

அப்போது, அவரது உண்மையான வயது வெறும் 34 தான். நொடித்துப்போன அதேநேரம் தான தர்மத்தை விட்டுக்கொடுக்காத ஜமீன் வேடம். பெரிதான ஒப்பனை கிடையாது.

ஆறடி உயரத்தில் வெடவெடத்த உடல், பஞ்சகச்ச வேட்டி, தொளதொள ஜிப்பா, தோளில் ஒரு துண்டு. ஊருக்குள் யார் வந்தாலும் முதல் விருந்து ஜமீன் வீட்டில்தான்.

இதற்காகவே ஊர் எல்லையில் காத்திருந்து பிடித்து வர இரண்டு வேலையாட்கள். அதேநேரம் விருந்தளித்தே நொடித்துப்போனதால், தன் ஒரே மகளுக்குத் திருமணம் செய்துவைக்க சல்லிக்காசுகூட ரொக்கமாக இல்லாத நிலைமை.

நகைச்சுவை உணர்வுகொண்ட இப்பாத்திரத்துக்காகவே ஒரு மேனரிசம் பின்பற்றுவார் ரங்காராவ்.

இந்தப் பாத்திரம்தான் தமிழ், தெலுங்குத் திரையுலகினில் நிரந்தர ஜமீனாகவும் அப்பாவாகவும் ரங்காராவை நிலைக்கச் செய்தது.

எத்தனைவித ஜமீன்கள்? எத்தனைவித செல்வந்தர்கள்? எத்தனைவித அப்பாக்கள்?

செல்வச் செருக்குமிக்க செல்வந்தராக ‘இரும்புத்திரை’, நகைச்சுவை மிளிரும் செல்வந்தராக ‘சபாஷ் மீனா’, ‘மிஸ்ஸியம்மா’, பழைமை வாதமும் சாதிப்பெருமிதமும் மிக்க செல்வந்தராக ‘சாரதா’, ஓஹோவென வாழ்ந்தபோது மிடுக்கும் நொடித்துப்போனதும் கவலை ரேகைகளும் கொண்ட ஜமீனாக ‘படிக்காத மேதை’.

தனது மகளின் வெகுளித்தன்மையைப் பயன்படுத்தி எவனோ ஒருவன் புகைப்படம் எடுத்து மிரட்ட, அவள் திருமணம் தடைப்படுகிறது. ஊரே அந்த வெகுளிப்பெண் கெட்டுப்போனவள்(!) என்கிறது.

இதை அவளது சகோதரனும் நம்புகிறான். அவளுக்குத் திருமணம் நடந்தால்தான் இளைய மகளுக்கும் திருமணம் சாத்தியப்படும். இத்தகைய உணர்ச்சிமிக்க பாத்திரத்தில் குமுறும் தந்தையாக ‘கைகொடுத்த தெய்வம்’.

மகள் சம்பாத்தியத்தில் வாழும் சுயநல அப்பாவாக ‘குலவிளக்கு’, சூழ்நிலையால் தடுமாறி மறைந்து வாழும் தந்தையாக ‘குங்குமம்’, வாழ்ந்து கெட்ட சிடுசிடுக்கும் ஜமீன் தந்தையாக ‘பந்தபாசம்’, நேர்மையான ரயில்வே அதிகாரியாக ‘பச்சை விளக்கு’, மிடுக்கு நிறைந்த காவல்துறை அதிகாரியாக ‘சிவந்த மண்’, மனைவியின் சொல்லைத் தட்ட முடியாத சூழ்நிலைக் கைதியாக ‘வசந்த மாளிகை’ ‘வாழையடி வாழை’ எனத் தமிழ் மற்றும் தெலுங்கில் 100-க்கும் அதிகமான படங்களில் விதவிதமான அப்பாக்களாக வாழ்ந்து காட்டினார்.

‘நம்நாடு’ படத்திலும் மாநகராட்சி தலைவரையே ஆட்டிப் படைக்கும் வில்லனாக பயமுறுத்தினார்.

அவரது கடைசிப் படங்களில் ஒன்றான ‘ராஜா’வில் மிகப்பெரிய கள்ளக் கடத்தல் கும்பலின் தலைவனாக மறைந்து வாழும் டானாக மிரட்டினார்.

இறுதியாக தமிழ்ப் படத்தில் கண்டசாலாவின் குரலுக்குப் பாசமுள்ள அண்ணனாக ரங்காராவ் வாயசைத்து நடித்த பாடல்.

“முத்துக்கு முத்தாக சொத்துக்குச் சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்குக் கண்ணாக...”

1974-ல் மாரடைப்பு ஏற்பட்டு 53 வயதில் காலமானார் ரங்காராவ்.

மணா

#பாதாளபைரவி #பார்த்திபன்கனவு #அனார்கலி #சாரங்கதாரா #நாகேஸ்வரராவ் #சாவித்திரி #மாயாபஜார் #கல்யாணசமையல்சாதம் #அன்னைசாரதா #நானும்ஒருபெண் #கற்பகம் #நர்த்தனசாலா #கல்யாணம்பண்ணிபார் #படிக்காதமேதை #முத்துக்குமுத்தாக #எஸ்விரங்காராவ் #ரங்காராவ்

ஏ.எம்.ராஜா – இதமான குரலில் இசையின் ஊர்வலம்!https://thaaii.com/2025/07/01/article-about-singer-a-m-raja/ஒரு ஆணுக்குள், பெ...
08/07/2025

ஏ.எம்.ராஜா – இதமான குரலில் இசையின் ஊர்வலம்!
https://thaaii.com/2025/07/01/article-about-singer-a-m-raja/

ஒரு ஆணுக்குள், பெண்ணின் நளினம் ஒளிந்திருக்கும். ஒரு பெண்ணுக்குள், ஆணின் கம்பீரம் பொதிந்திருக்கும். இயற்கையின் விதிமீறல் இது. விதிமீறல்கள், சில சமயம் விதிகளைவிட அழகாக இருக்கும்.

தன்னை மறந்து தூங்கும் குழந்தையை, அதன் அனுமதி பெறாமல் முத்தமிடுவது மாதிரி, ஆணின் கம்பீரத்தையும், பெண்ணின் நளினத்தையும் தன் குரலில் ஒளித்து வைத்து ஒப்பற்ற பாடல்களை வழங்கியது ஒரு குரல். அந்தக் குரல், ஏ.எம். ராஜாவினுடையது.

Aemala Manmadharaju Rajah. இந்த நீண்ட பெயரின் சுருக்கெழுத்து தான் ஏ.எம். ராஜா. 1929-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ராமச்சந்திரபுரம் தான் ஏ.எம். ராஜாவின் பிறப்பிடம். தெலுங்கு தான் இவரது தாய்மொழி.

ஆனால், இவர் தமிழில் பாடிய அத்தனைப் பாடல்களும் தேன்மொழி. அதற்கு ஒரு உதாரணம், அமரதீபம் படத்தில் வரும் 'தேன் உண்ணும் வண்டு'.

தொடக்கக் கல்வி, உயர் கல்வியை ஆந்திராவில் அரங்கேற்றிவிட்டு, சென்னை வந்த ஏ.எம். ராஜா, பச்சையப்பன் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.

இளமை முதல் உணவோடு, இசையும் உணர்வாகவே ஊட்டப்பட்டதால், மேற்கத்திய இசை, சாஸ்திரிய சங்கீதத்தில் கற்றுத் தேர்ந்தார் ஏ.எம். ராஜா.

பல தெலுங்குப் பாடல்களை அவரே எழுதி இசையமைத்து HMV நிறுவனம் மூலம் வெளியிடச் செய்தார்.

இந்தப் பாடல்கள் தான் பின்னாளில், திரைப்படத்துறையில், ஏ.எம். ராஜா வர்ண மெட்டுகள் இடவும், வசந்த கீதம் பாடவும் வழிகாட்டின.

மேட்டுக்குடிகளிடம் வசித்து வந்த கர்நாடக இசையை ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன் போன்ற மேதைகள் கைபிடித்து பாமரர்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

கர்நாடக இசையைக் கேட்டு வந்த தமிழ் ரசிகர்களுக்கு, வட இந்திய பாடல்கள், குறிப்பாக, கஜல் பாடல்களின் பாணியைக் கையாண்டு, தமிழ் ரசிகர்களுக்கு புது சுவையை அறிமுகப்படுத்தினார் ஏ.எம். ராஜா.

ஹிந்தி திரைப்படப் பாடல் உலகின் இணையற்ற சக்கரவர்த்தி முஹமது ரஃபீயின் பாடும் முறைகளை ஒற்றியெடுத்துக் கொண்டார் ராஜா. அதை, இன்பத் தீயாய் பற்ற வைத்தார் ரசிகர்களின் மனதில்.

முறையான இசைப்பயிற்சி. முழு ஈடுபாட்டுடன் தொழிற் பயிற்சி. கம்பீரமான குரலில் ஒரு மென்மை கலந்த பெண்மை. படிக்கட்டில் உருட்டிவிட்ட நாணயத்தைப்போல் நளினமான சத்தம். குழந்தையைத் தூங்க வைக்கும் தாயின் தாலாட்டில் உள்ள ஸ்பரிசம். இதுதான் ஏ.எம். ராஜா.

திரையுலகில் காதல் மன்னனாகக் கோலோச்சிய ஜெமினி கணேசனின் ‘வாய்மொழி’யாக வலம் வந்தார் ஏ.எம். ராஜா.

முக்கோணக் காதல் கதையின் முதல்தர கதாநாயகனாக இருந்த இயக்குநர் ஸ்ரீதர்தான், பின்னணிப் பாடகரான ஏ.எம். ராஜாவை இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்தார். படம் - கல்யாணப் பரிசு.

காலமெல்லாம் மறக்க முடியாத இந்தக் கல்யாணப் பரிசுக்காக, ஏ.எம். ராஜா தந்த பாடல் பரிசு, இசை ரசிகர்களின் மனம் என்னும் அலமாரிகளில், இன்றும் அலங்காரமாக வீற்றிருக்கின்றன.

ஆண் குயில், பெண் குயில் மீது இயல்பாகக் கொள்ளும் ஈர்ப்பைப்போல, அழகியலைப் பாடலோடு குழைத்துத் தரும் ஏ.எம். ராஜாவும், பின்னணிப் பாடகி ஜிக்கியும் வாழ்க்கையிலும் இணைந்தனர். இந்த இசைக் குயில்கள், பாட்டு வானில் சிறகடித்தன.

வாழ்க்கை ஒருசிலருக்குத்தான் வசப்படுகிறது. பலரை தன் வலையில் வீழ்த்தி, தன்வசப்படுத்திக் கொள்கிறது. வாழ்க்கை ஒரு புரியாத புதிர். ஞானிகளும், அறிஞர்களும் இந்த புதிரை விடுவிக்கத்தான் படாதபாடு படுகிறார்கள்.

வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சியில் சிலர் வென்று விடுகிறார்கள். பலரைக் கொன்றுவிடுகிறது வாழ்க்கை.

பாரதியின் பாட்டுக் கனவான காணி நிலம். அங்கு, பத்து பதினைந்து தென்னை மரம். இருளை அணைக்கத் துடிக்கும் இளமையான நிலா வெளிச்சம். தலைகோதிவிட தளிர்போல் வளைகரம்.

இந்த நிழலில் மரணம் நேர்ந்தால்கூட மகிழ்ச்சிதான் என குதூகலிக்கும் மனநிலை. தேன் நிலவு படத்தில் வரும் 'நிலவும் மலரும் பாடுது' என்ற பாடல் தரும் அந்தத் தனிச்சுவை.

கலையே என்வாழ்க்கையில், சிற்பி செதுக்காத பொற்சிலையே, கண்மூடும் வேளையிலும், மாசில்லா உண்மைக் காதலே, உன்னைக் கண்டு நான் வாட, ராசி நல்ல ராசி, புரியாது புரியாது வாழ்க்‍கையின் ரகசியம் புரியாது, தனிமையிலே இனிமை காண முடியுமா?

- இப்படி எண்ணிலடங்கா பாடல்கள். ரசிகர்களின் மனதில் ஏ.எம். ராஜா நிறைவேற்றிய தித்திக்‍கும் திரை இசை தீர்மானங்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு தன் குழுவினருடன் ரயிலில் சென்னை திரும்பிக்‍ கொண்டிருந்தார் ஏ.எம். ராஜா. வள்ளியூர் என்ற இடத்தில் ரயிலை விட்டு கீழே இறங்கி மீண்டும் ரயில் ஏறியபோது ரயில் புறப்படவே, தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார்.

புகழ் மணம் வீசிய புதையல் குரலை, புகைவண்டியின் சக்‍கரங்கள் அள்ளி அணைத்துக்‍ கொண்டு பூமிக்‍குள் அடக்‍கம் செய்தது. எவ்வழி வந்தாலும் வலி நிறைந்ததுதான் மரணம். ஏ.எம்.ராஜா போன்ற திரை இசை தீபத்தை அணைத்துவிட்ட மரணத்தை என்றுமே மன்னிக்‍க முடியாது.

உணர்வுகளை ஓங்கி உரக்கச் சொல்வது ஒருவகை. பூக்கூடை, தரையில் விழும்போது ஒலி எழுப்பாவிட்டாலும், பதற வைக்குமே ஒருவித உணர்வு. அதுபோல, தனது மென்மையான குரலில், ஆழமான உணர்வுகளை அழகான பாதையில் ஊர்வலமாக அழைத்துச் சென்றவர் ஏ.எம். ராஜா.

(பழம்பெரும் பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான ஏ.எம்.ராஜா, பிறந்த நாள் (ஜூலை 1, 1929) இன்று)

- லாரன்ஸ் விஜயன், மூத்த பத்திரிகையாளர்
[email protected]

நன்றி: இந்து தமிழ் திசை நாளிதழ்

#பாடகர்ஏஎம்ராஜா #ஏஎம்ராஜா #இசையமைப்பாளர்ஏஎம்ராஜா #ஜிராமநாதன் #கேவிமகாதேவன் #மாசில்லாஉண்மைக்காதலே #உன்னைக்கண்டுநான்வாட #ராசிநல்லராசி #புரியாதுபுரியாதுவாழ்க்கையின்ரகசியம்புரியாது #தனிமையிலேஇனிமைகாணமுடியுமா?

வளர்ந்து வரும் ஒரு திரைப்படம் பாம்  !A  Praise god!Directed by Vishal VenkatProduced by Gembrio Pictures, Sudha Sukumar,...
31/01/2025

வளர்ந்து வரும் ஒரு திரைப்படம் பாம்

!

A
Praise god!

Directed by Vishal Venkat

Produced by Gembrio Pictures, Sudha Sukumar, Kaizen Sukumar

Arjun Das Shivathmika Rajashekar

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when DSB Cinemas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share