
22/06/2024
- அருள் நீதிதேவன்
1980களில் மத்திய ஆண்டுகளில் தான் தெருவுக்கு ஒன்றிரண்டு வீடுகளில் தொலைகாட்சி (இப்போதைய தொல்லைக்காட்சி) அறிமுகமான சமயம்.
மற்றநாட்களை விட ஞாயிற்றுக்கிழமை சற்றே விசேசமானது.. வித்தியாசமானது.
காலைல ஆறுமணிக்கு எல்லாம் எந்திருச்சா.. கட்டம்கட்டமாக வண்ணக்கோடுகளுக்கு நடுவில் தலைகீழாக ஒரு ஆரோ குத்தி வச்ச மாதிரி ஒரு ஸ்கிரீன் சேவர் இருக்கும்.
அடுத்து தூர்தர்சனின் லோகோ சுத்தி சுத்தி வரும் தீம் மியூசிக்கோட.. அப்ப டீவிக்கு முன்னால உட்கார ஆரம்பிக்கிறது தான்.
7 மணிக்கு சித்ரமாலா ன்னு இந்தி பாடல்கள் போடுவாங்க. அரைமணிநேரத்துக்கு.
அடுத்து ஹீமேன்.
8 மணி ஆனதும்.. “சென்னை தொலைக்காட்சி நிலையம் அன்புடன் உங்களை வரவேற்கிறது” கார்டூன் மனிதர் சிரித்தபடி நிற்கும் சிலைடு போடுவாங்க.
வணக்கம் ன்னு ஆரம்பிச்சு பேசிட்டு .. இன்றைய திரைவானத்தில் ன்னு ஒரு பழைய திரைப்படத்தோட முக்கிய காட்சிகளை தொகுத்து குறும்படமாக போடுவார்கள்.
8:30 மணிக்கு சோ.ராமசாமி நாடகம். “ஜனதா காலனி” .. (பிற்பாடு “சங்கர்லால் துப்பறிகிறார்” ன்னு ஒரு நாடகம். துப்பி எறிகிறார்ன்னு வச்சிருந்தா பொருத்தமா இருக்கும் 😬😬).
அடுத்து 9 மணிக்கு டெல்லி தூர்தர்ஷன் க்கு மாறும்.
இராமாயணம். / இதுமுடிஞ்சாபிறகு மகாபாரதம் வந்தது./ சந்ரகாந்தா வந்தது. எல்லாம் சூப்பர் ஹிட்.
10 மணிக்கு ஒரு கார்டூன். 10:30 க்கு ஸபேஸ் - இட் ஈஸ் ஷிக்மா ன்னு ஒரு SciFiதாடகம்.
11 மணிக்கு சூப்பர் சிக்ஸ் ன்னு சின்ன பசங்களா நடிச்ச துப்பறியும் நாடகம்.
11:30 க்கு ஸ்டோன் பாய் ன்னு ஒரு நாடகம்.
12.00க்கு இந்தியா ல உள்ள கோட்டைகளை பற்றிய மராட்டிய டாக்குமண்டரி. பேரு மறந்து போச்சு.
1:15 காதுகேளாதோர் செய்திகள்.
அது முடிந்ததும் மாநில, பிராந்திய மொழி திரைப்படம். தேர்ந்தெடுத்து அறுவை படமா போடுவாங்க. அதிர்ஷ்டம் இருந்தா.. அதுல சிலநேரம் தமிழ்படம் போடுவாங்க.
“ஏ இன்னக்கி ரெண்டு படம்” ன்னு .. ஒரு சந்தோசம் மனசுல.
அதுலயிம் சக்கரதாரி., அவ்வையார் ன்னு போட்டு புல்லரிக்க விடுவார்கள்.
3 மணிக்கு ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட்
4:30 க்கு ஸ்ட்ரைப் ட்ராயிங்ல இல்லஸ்ட்ரேட் பண்ணிய ஆங்கில நாவல் கதை.
5:00 மணிக்கு “ஸ்பைடர் மேன்”
1:15 ல இருந்து4:30 வரை தான் பொடியர்களை வீட்டுக்கு வெளிய பார்க்க முடியும்.
ஸ்பைடர் மேன் முடிந்ததும். ., தமிழ் திரைப்படம் சென்னை தொலைக்காட்சியில் இருந்து.
முதல் 20 நிமிடங்கள் விளம்பரங்கள் தான் வரும்.
ரஸ்ணா., நிர்மா., கோல்ட் ஸ்பாட்., தம்ஸ்அப்.. ப்ரூட்டி.. செவனப் .. கார்டூன் குச்சி மனிதன். நிஜாம்பாக்கு.
ஸ்கூல் ல படிச்சுட்டு வரச்சொன்ன செய்யுள விட மனதில் பதிந்தவை இந்த விளம்பரங்கள் தான்.
சினிமா வ முழுசாவும் போட மாட்டாங்க.
இடையில “தடங்கலுக்கு வருந்துகிறோம்” ன்னு ஸ்லைடு போட்டு.. படத்த கட் பண்ணி போடுவாங்க. கடுப்பா இருக்கும்.
படம் முடிஞ்சதும் நியூஸ். அத நாங்க பாக்க மாட்டோம். அப்ப தான் வெளியில ஒழிஞ்சு விளையாடும் திருடன் போலீஸ்.
அதுல ஜகா வாங்கி 9 மணிக்குலாம் படுத்துடுவோம்.
“இந்த ஞாயிற்றுகெழம மட்டும் ஏன் இம்புட்டு வேகமா போயிடுது”?!!… 😀😀.
அடுத்த நாள் ஸ்கூல் ல ரெஸ்ட் பீரியட் இருந்தா.. முதல்நாள் பாத்த ஹீமேன் ல இருந்து மாலைநேர சினிமா வரை அலசல் நடக்கும்.
😬😬😬😬😬😬.
ஏதோ தோன்றியது.
எதையோ தொலைத்தது …
கண்டிப்பாக மனதால் இல்லை.