24/05/2023
நவீன அறிவியலின் படி ஹோமியோபதி கூட Pseudoscience தான். ஆனா ஹோமியோபதியில் மருத்துவம் பார்த்து பலன் பெறுபவர்கள் உலகம் முழுக்க பல கோடி பேர்கள் இருக்காங்க. கொரானா காலத்தில் அலோபதி ஹாஸ்ப்பிட்டலில் ட்ரிப் போட்டுக்கொண்டிருந்த கையோடு ஹோமியோபதி ஹாஸ்ப்பிட்டலுக்கு நகர்ந்து குணமானவர்கள் ஒரு சிலரை எனக்கு தெரியும். பேசுவதற்கு ஒரு மொழியில் தான் பேச முடியும் என்று இல்லை, ஒரு மொழி தான் மொழி மதத்ததெல்லாம் வார்த்தைகள் என்றும் சொல்ல முடியாது. அது போல தான் அறிவியல்ன்னா அமெரிக்காக்காரன் சொல்றது தான் மத்தவங்க எல்லாம் Pseudoscience பேசி கொண்டிருக்கிறார்கள் என சொல்ல முடியாது, சயின்ஸ் என்றாலே அமெரிக்க, ஐரோப்பியகாரன் தான் சொல்லுவான்னும் கிடையாது.
ஒரு மனுஷனுக்கு நோய் வந்தா அலோபதின்னு ஒரு ஆப்சன் மட்டும் கிடையாது. ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதிக் என இந்தியாவில் மட்டும் ஏகப்பட்ட ஆப்சன்கள் இருக்கு. அதில் ஹோமியோபதி என்பது நவீன காலத்தின் நோய் தீர்க்கும் காவலனாக இருக்கிறது. தீர்வில்லாத நோய்களை குணப்படுத்திருக்கு, பல அறுவை சிகிச்சையை தவிர்த்திருக்கு, அதிலும் மனநோய்களை தட்டி தூங்குவதில் ஹோமியோபதி தான் உலகின் கிங்! ஒரு மருத்துவத்தை யாருக்கும் பரிந்துரைப்பது சரியாக இருக்காது. ஆனா இப்படி ஒன்னு இருக்குண்ணாவது தெரிஞ்சிக்கிறது நல்லது தானே.
Link: https://www.youtube.com/watch?v=d-oksivaxEM
ஹோமியோபதியின் அனுபவத்தின் மூலம், Collective தகவல்களின் மூலமும், ஹோமியோபதி டாக்டர்களுடன் கலந்துரையாடல்கள் மூலம் நிச்சயமா பலருக்கு உதவும் என்ற எண்ணத்தில் ஹோமியோபதி விளக்க வீடியோ ஒன்றை தயார் செய்திருக்கேன். பார்த்து, சரியானதை எடுத்து கொண்டு, பலரிடத்தில் பகிரவும் செய்யுங்கள்.
நன்றி!