Deepam Network

  • Home
  • Deepam Network

Deepam Network www.deepamnetwork.com

Due to its independent editorial stance it became extremely popular in Pondic Today, we are at the dawn of a new millennium.

The Deepam Network was started in 2007 to provide wholesome entertainment for the entire family. With programmes targeted at young and old, male and female alike, the Network has positioned itself as The People's Channel. Through its Two channels – Deepam tv, Neyam New Music (N Tv) the network presents its viewers a smorgasbord of some of the best shows in South Indian entertainment today. Due to its close interaction with the local market, the Network has come to understand not just the South Indian entertainment industry, but also the needs of the South Indian audience, their culture and aesthetic sense. This understanding when combined with a strong commitment to content development has resulted in a combination of programmes appealing not just to South Indian viewers in urban and rural India but also to those outside India. Any television channel is only as popular as its shows and at the Deepam Network, there is every effort being taken to ensure the audience gets just the right mix of music and dance, entertainment and information, film and fantasy. The Network runs a number of popular serials presented by some of the best names in South Indian films today. These in combination with a number of popular chat shows and game shows give the network an edge with the viewers. In addition the Network has built up a library of some of the best in Tamil And Telungu films from the nostalgic old favourites to the box office hits of today. In today's world, information is the catch word and the Deepam Network has capitalised on the increasing demand for news that is unbiased, timely and accurate. Today, the Network is equipped to give you the news the moment it happens and has often been the first to air the news. But speed while important, has never been at the expense of sensitive and accurate reporting. News and entertainment are more important than they have ever been before. But with the growing competition, it is the people who will choose, who will decide what they want and what they do not. The Deepam Network understands this. A lot of effort is being taken to ensure that the programming mix appeals to people of all ages, of all backgrounds making it truly a People's Channel.

07/09/2026
06/09/2026

⛪ அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய 336ஆம் ஆண்டு பெருவிழா – கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 336ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் பக்திபூர்வமாக தொடங்கியது.

பெருவிழாவை முன்னிட்டு காலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. புதுவை–கடலூர் உயர்மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி மற்றும் அரியாங்குப்பம் பங்குத்தந்தை அருள்தாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி, மறையுரை மற்றும் நவநாள் வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து பெருவிழா கொடியேற்றப்பட்டது.

இதில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டு ஆரோக்கிய அன்னையை வழிபட்டு அருளாசி பெற்றனர்.

336ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருள்தாஸ் மற்றும் அரியாங்குப்பம் பங்கு மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

06/09/2026

அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழா – திருபுவனையில் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள், அறுசுவை உணவு!

திருபுவனை தொகுதி பாஜக சார்பில், புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதகடிப்பட்டு அமிர்தேஸ்வரி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மன்னாடிப்பட்டு தொகுதி பொறுப்பாளர் எஸ்.ஆர். பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அவரது துணைவியார் வசந்தி நமச்சிவாயம் கலந்து கொண்டனர். அமைச்சருக்கு ஆளுயர மாலை அணிவித்து, கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து சுமார் ஆயிரம் பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன், அனைவருக்கும் அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.

விழாவில் வில்லியனூர் மாவட்ட இளைஞரணி தலைவர் சபரிபாலன் உள்ளிட்ட திருபுவனை தொகுதி பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

⚠️ காரைக்கால்–திருநள்ளாறு சாலையில் மெயின் வாய்க்காலை அடைத்து கட்டுமானப் பணி? அனுமதி உள்ளதா? – அதிகாரிகள் விளக்கம் அளிக்க...
06/09/2026

⚠️ காரைக்கால்–திருநள்ளாறு சாலையில் மெயின் வாய்க்காலை அடைத்து கட்டுமானப் பணி? அனுமதி உள்ளதா? – அதிகாரிகள் விளக்கம் அளிக்க பொதுமக்கள் கோரிக்கை!

காரைக்கால்–திருநள்ளாறு சாலையில் ரம்யாஸ் எதிரே உள்ள மெயின் வாய்க்கால் பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தப் பணி அரசு சார்பில் மேற்கொள்ளப்படுகிறதா? தனியார் பணியா? சம்பந்தப்பட்ட துறைகளிடம் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய நீர்வழித்தடமான மெயின் வாய்க்காலின் நீரோட்டம் பாதிக்கப்படும் வகையில் பணிகள் நடைபெற்றால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குதல் மற்றும் வெள்ளநீர் வடிந்து செல்வதில் சிக்கல் ஏற்படக்கூடும் எனவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, நடைபெறும் பணியின் தன்மை, அனுமதி விவரம் மற்றும் நீர்வழித்தடத்திற்கு பாதிப்பு உள்ளதா என்பது குறித்து பொதுமக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

🎒 கோட்டுச்சேரியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை – எம்.எல்.ஏ. டாக்டர் விக்னேஸ்வரன் வழங்கினார்!காரைக்கால் கோட்டுச்...
06/09/2026

🎒 கோட்டுச்சேரியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை – எம்.எல்.ஏ. டாக்டர் விக்னேஸ்வரன் வழங்கினார்!

காரைக்கால் கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட வ.உ.சி. சிதம்பரனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நெடுங்காடு–கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் V. விக்னேஸ்வரன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

06/09/2026

🎓 காரைக்கால் டார்கெட் எஜுகேஷன் இன்ஸ்டிடியூட்டில் ஆசிரியர் தின விழா – சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

காரைக்கால் மாவட்டத்தில் இயங்கி வரும் டார்கெட் எஜுகேஷன் இன்ஸ்டிடியூட்டில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மாணவர் கிரண் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வி. அருள்முருகன் கலந்து கொண்டு ஆசிரியர்களின் பெருமை மற்றும் கல்விச் சேவையின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். நிறுவனத்தின் நிறுவனர் வேல்குமார் ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பாடவாரியாக 100 சதவீத தேர்ச்சிக்கு பங்களித்த ஆசிரியர்கள் வெங்கடேஷ், அன்னலட்சுமி மற்றும் கீர்த்தனா ஆகியோருக்கு ‘சிறந்த ஆசிரியர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியை மாணவர் பிரணவ் தொகுத்து வழங்கினார். மாணவர் திவான் நன்றியுரையாற்றினார். விழாவில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

06/09/2026

🏟️ வில்லியனூர் தொகுதியில் இண்டோர் ஸ்டேடியம் அமைக்க இடம் ஆய்வு – அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்ட ரவிக்குமார் எம்.எல்.ஏ.!

வில்லியனூர் தொகுதியில் இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் இண்டோர் ஸ்டேடியம் அமைப்பதற்கான இடம் ஆய்வு நடைபெற்றது.

தில்லைநகர் பகுதியில் உள்ள அரசு இடத்தை சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், விளையாட்டுத்துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வில்லியனூரில் இண்டோர் ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் ரவிக்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கூட்டத்தொடர் முடிந்த ஓரிரு நாட்களிலேயே இந்த இட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இளைஞர்களை விளையாட்டின் மூலம் நல்வழிப்படுத்தவும், அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரவும் இண்டோர் ஸ்டேடியம் அவசியம் என தெரிவித்த ரவிக்குமார் எம்.எல்.ஏ., பணிகளை தாமதமின்றி மேற்கொள்ள அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

ஆய்வில் விளையாட்டுத்துறை துணை இயக்குநர் வைத்தியநாதன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

06/09/2026

💧 17 ஆண்டுகால குடிநீர் தவிப்புக்கு தீர்வு… கிருமாம்பாக்கம் அருகே ரூ.5 லட்சத்தில் புதிய குடிநீர் குழாய்!

ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம், ஈச்சங்காடு அடுத்த அம்பேத்கர் நகர் அரசு குடியிருப்பில் சுமார் 50 குடும்பங்கள் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் வசதியின்றி தவித்து வந்த நிலையில், தற்போது குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குடிநீருக்காக வெளியிடங்களில் இருந்து பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து வந்தும், கடைகளில் விலைக்கு வாங்கியும் பயன்படுத்தி வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாஸிடம் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை மூலம் சுமார் ரூ.5 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.

புதிய குடிநீர் விநியோகத்தை எம்.எல்.ஏ. மோகன்தாஸ் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். 17 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து, எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் திருவேங்கடம், இளநிலை பொறியாளர் ஞானசேகர், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

06/09/2026

திருபுவனை தொகுதியில் பாலூட்டும் தாய்மார்களுக்கு ரூ.4.01 லட்சம் நிதியுதவி – எம்.எல்.ஏ. சாய் ஜெ. சரவணன்குமார் வழங்கினார்!

புதுச்சேரி திருபுவனை சட்டமன்றத் தொகுதியில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருபுவனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சாய் ஜெ. சரவணன்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தகுதியான பயனாளிகளுக்கு நிதியுதவி பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

முதல் குழந்தையைப் பெற்றெடுத்த 17 தாய்மார்களுக்கு தலா ரூ.13,000, இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு தலா ரூ.18,000 என மொத்தம் ரூ.4 லட்சத்து 1,000 நிதியுதவி வழங்குவதற்கான ஆணைகளை எம்.எல்.ஏ. சாய் ஜெ. சரவணன்குமார் நேரில் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள், பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

06/09/2026

ஆசிரியர்களுக்கு கௌரவம்… மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு – காட்டுக்குப்பம் அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா!

புதுச்சேரி பாகூர் கொம்யூன் காட்டுக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் முன்னாள் மாணவரும் சமூக ஆர்வலருமான சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில், தலைமை ஆசிரியை வானதி முன்னிலை வகித்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்க நிர்வாகிகள் டாக்டர் சரவணன், அசோக் ராஜ், பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து ஆசிரியர்களின் கல்விச் சேவையை பாராட்டி பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். மாணவர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து ஸ்கூல் பேக், அடையாள அட்டை உள்ளிட்ட உதவிகளை வழங்கி வரும் முன்னாள் மாணவர் சரவணன், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

விழாவில் ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியை தேவி நன்றி தெரிவித்தார்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Deepam Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share