Npt Media 2

Npt Media 2 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Npt Media 2, News & Media Website, .

பலகதைகளுக்கு ஒரு செயல் போதுமானது...எங்களுக்கான நேரம் இது! 🎬🎥 மகிழ்ச்சியான  அறிவிப்பு ஐப்பசி 4 ஆம் திகதி காலை 9:00 மணிக்க...
02/10/2024

பலகதைகளுக்கு ஒரு செயல் போதுமானது...

எங்களுக்கான நேரம் இது! 🎬🎥 மகிழ்ச்சியான அறிவிப்பு ஐப்பசி 4 ஆம் திகதி காலை 9:00 மணிக்கு வெளியாகிறது. மேலும் விவரங்களுக்கு எம்மோடு இணைந்து இருங்கள்.

"The countdown is on! 🎬🎥 Get ready for a groundbreaking announcement on October 4th at 9:00 AM. Stay tuned for more details.

புங்கைரூபன் வழங்கும் மூங்கில் காடு பாடல்  இருதயராசா மதுரா இயக்கத்தில்பாடல் வரிகள் புங்கைரூபன் பாடியவர் இர்வின் விக்டோரிய...
19/09/2024

புங்கைரூபன் வழங்கும் மூங்கில் காடு பாடல்
இருதயராசா மதுரா இயக்கத்தில்
பாடல் வரிகள் புங்கைரூபன்
பாடியவர் இர்வின் விக்டோரியா [Vijay tv ] பவதாயினி [zee tamil]
உங்களுடைய ஆதரவை நல்குங்கள். https://youtu.be/3BOy67g9nPA

வாழ்த்துக்கள் ரீம்

இக் குறுந்திரைப்படத்திற்கு தொழில்நுட்ப பகுதிகளை ஒருங்கிணப்பதற்கான சந்தர்ப்பம் ஆரம்பத்தில் கிடைத்திருந்தது.ஒளிப்பதிவு, ஒள...
02/09/2024

இக் குறுந்திரைப்படத்திற்கு தொழில்நுட்ப பகுதிகளை ஒருங்கிணப்பதற்கான சந்தர்ப்பம் ஆரம்பத்தில் கிடைத்திருந்தது.

ஒளிப்பதிவு, ஒளியமைப்பு, ஒலிப்பதிவு, இசையமைப்பு, வர்ணச்சேர்க்கை போன்றவைகளை பரிந்துரை செய்தது அதில் இயக்குனர் தெரிவோடு படப்பிடிப்பு நடைபெற்றது.

அதில் உதவி ஒளிப்பதிவு மற்று ஒளியமைப்பில் என்னையும் இணைத்துக்கொண்டேன். பின்னாளில் ஒரு விபத்துப்போல படத்தொகுப்பிற்கான சந்தர்ப்பம் அமைந்து விட்டது.

இப் படைப்பை இன்று முதல் உங்கள் பார்வைக்கு விடுவதில் மகிழ்வடைகின்றேன்...

Pasuvum Prameshwariyum Tamil Short Film Link https://youtu.be/oKnTeXvjeP8

ACTORS
SUBALUXMY SUJEEVAN
KESAVARAJ KAMALARANI
MARKANDU VALLIPPILAI
PRIYA RAJASINGAM
SELVARUPAN THANSIKA
CHRISTHURAJAH JEYAPRAGASH
PRASANNA PRIYATHARSHAN
JOY JEGARTHAN
VIMALRAJH
NAVAM

STORY
SCREEN PLAY
DIRECTION
J JAYAMOHAN

TITLE & POSTER DESIGNS
JATHU FX

SCRIPT SUPERVISOR
MJ NITHARSAN

STORY ADVISORY BOARD
J JAYAMOHAN
MJ NITHARSAN

ACCOUNTANT
T NANTHIVARMAN

CASTING DIRECTOR
MJ NITHARSAN

ART DIRECTOR & MAKEUP ARTIST
DARIYAN

LIGHTING
ALWISH KLINTON

LIGHTING ASSISTANT
SOBAN VELRAJ
SR THUSIKARAN

DIRECTOR OF PHOTOGRAPHY
REJI SELVARASA

CAMERA ASSISTANT
SR THUSIKARAN

LIVE RECORDIST
SOUND DESIGN & EDITING
VAKEESAN ANANTH

EDITING
SR.THUSIKARAN

DI COLORIST
KATHIR

DUBBING
EMILTAN SHEBANA

SINGERS
THILAKSAN
SHATHURSANA
SIVA PATHMAYAN

BACKGROUND SCORE
SIVA PATHMAYAN

AUDIO ENGINEER
SIVA PATHMAYAN

SUBTITLE
LITAJOTHY DILEEP

TECHNICAL TEAM
POST PRODUCTION COORDINATOR
SR.THUSIKARAN

PROJECT COORDINATOR
PRODUCTION MANAGER
MJ NITHARSAN

25/06/2024

தூர இடங்களில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருபவர்களுக்கு புதிய வசதி!*
தூர இடங்களில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ளுகின்றார்கள். இவ்வாறானவர்கள் நோயாளிகளை யாழ் போதனா வைத்தியசாலை விடுதிகளில் வைத்திருக்கும் நாட்களில் ஓய்வெடுக்க குளித்து உடை மாற்றி கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
சிவசி இல்லம் – நோயாளிகளின் உறவினர்களுக்கான சேவை மையம் என்ற பெயரில் குறித்த இல்லம் இல.76, வைத்தியசாலை வீதியில் (சத்திரச் சந்திக்கு அப்பால்) கடந்த திங்கட்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி சேவைக்காக படுக்கை அறைகள், குளிப்பறைகள் உள்ளடங்கலாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த இலவச சேவையை யாழ் போதனா வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
The Saivite Tamil Foundation, USA அமைப்பு இதற்கான நிதி அனுசரணை வழங்கி செயல்படுத்துகிறது.
நலன்புரிச் சங்க நோயாளர் பராமரிப்பு காரியாலயத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் விடுதிகளுக்கு பொறுப்பான தாதிய சகோதரர்களிடம் சிபார்சினை படிவத்தை கையளிக்க வேண்டும். தகுதியானவர்கள் இந்த இலவச சேவையை பெற்றுக்கொள்ளலாம். ஆகவே பொதுமக்கள் இந்த சேவையை சரியான முறையில் பாவித்து பயன்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
News

https://youtu.be/Gf5c40HQYNQபனையிலிருந்து பெறப்படும் பதநீர்,கள்ளு,ஒடியல்,பனம்பழம்,குருத்து ஆகியவற்றிலிருந்து எக்கச்சக்கம...
04/06/2024

https://youtu.be/Gf5c40HQYNQ
பனையிலிருந்து பெறப்படும் பதநீர்,கள்ளு,ஒடியல்,பனம்பழம்,குருத்து ஆகியவற்றிலிருந்து எக்கச்சக்கமான கைத்தொழில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தக்கைத்தொழில் முயற்சிகள் சிறிய அளவில் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இவற்றை பாரிய அளவில் தொழிற்சாலையாக மேற்கொள்ளுவோரின் எண்ணிக்கை மிகக்குறைவே..

நிலைமை இவ்வாறிருக்க பனை அபிவிருத்திச்சபையில் பணிபுரிந்து அதன்மூலம் கிடைக்கப்பெற்ற அனுபவங்களை வைத்து மன்னார் மண்ணில் சொந்தமாக தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்து கோகுலம் உற்பத்திகள் எனும் பெயரில் பனைசார் உற்பத்திகளை விநியோகித்துவரும் கோகுலபாலன் ஐயா காணொளியே இதுவாகும்

கற்பகதரு என்று அழைக்கப்படும் பனையின் சிறப்பம்சங்கள் எண்ணிலடங்காதவை. வேர் முதல் குருத்துவரை பயன்களை அள்ளித்த....

Link 1st Comment சூழலை பசுமைப்படுத்தும் நோக்குடன் செயற்பட்டுவரும் Green Layer அமைப்பானது வடக்கு கிழக்கு பகுதிகளில் கிட்ட...
17/05/2024

Link 1st Comment

சூழலை பசுமைப்படுத்தும் நோக்குடன் செயற்பட்டுவரும் Green Layer அமைப்பானது வடக்கு கிழக்கு பகுதிகளில் கிட்டத்தட்ட 75000 மரங்களை நடுகை செய்ததோடு 3 லட்சத்துக்கும் அதிகமான பனம்விதைகளையும் நாட்டியுள்ளது. அத்துடன் சூழலை சுத்தப்படுத்துதல் மரங்களை பராமரித்தல் போன்ற சூழல் நேய செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்லூரி, வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச சபை மற்றும் கோப்பாய் போலீஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் இணைந்து மரநடுகை மற்றும் ஏற்கனவே நடப்பட்ட மரங்களுக்கான பராமரிப்பு செயற்திட்டத்தை மேற்கொண்டது.

அண்மைக்கலாக கோடைகால வெப்பத்தின் கோர தாண்டவத்தை தாங்க முடியாமல் சமூக வலைத்தளங்களில் புலம்பித்தள்ளிக்கொண்டிருக்கிறோம். ஒருகணம் சிந்தியுங்கள்.... இப்படி நாம் புலம்புவதால் எந்த மாற்றமும் நிகழப்போவது கிடையாது.. மாறாக நாம் ஒவ்வொருவரும் மரங்களின் தேவையை உணர்ந்து அவற்றை நடுகை செய்வதோடு எஞ்சியிருக்கின்ற மரங்களை பாதுகாப்போமேயானால் எதிர்காலத்தில் கோடைகாலப் பகுதியில் உருவாகும் சூழல் வெப்பநிலை அதிகரிப்பை கட்டுப்படுத்த இயலுமாயிருக்கும்.

இயற்கை ஆச்சரியம் நிறைந்தது.. கோடைகால வெப்பத்தால் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்க சற்றும் எதிர்பாராத காலநிலை மாற்றத்தால் ஒருவார காலமாக மழை தொடர்ச்சியாக பெய்துகொண்டிருக்கிறது. காலநிலை மாற்றம் எமக்கு பாதகமானது எனச் சொன்னாலும் வாடிப்போயிருந்த பயிர்களுக்கும் மரம்செடி கொடிகளுக்கும் மனிதர்களாகிய எமக்கும் இந்த மழை புத்துணர்ச்சியை அளித்திருக்கிறது. இந்தக்காலநிலையை சரியாக பயன்படுத்திக்கொண்ட இந்தக்குழு மரநடுகை மற்றும் ஏற்கனவே நடப்பட்ட மரங்களுக்கான பராமரிப்பு செயர்த்திடத்தை மேற்கொண்டது மிகவும் பாராட்டப்படக்கூடிய விடயமாகும்.

பிரசாந்தின் இயக்கத்தில் உருவான ‘PALSY’ குறும்படம் CEYLON PICTURE YOUTUBE தளத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது.இது ஒரு சி...
15/04/2024

பிரசாந்தின் இயக்கத்தில் உருவான ‘PALSY’ குறும்படம் CEYLON PICTURE YOUTUBE தளத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது.
இது ஒரு சின்ன படம், சின்ன எதிர்ப்பார்ப்பு போதும். காத்திருங்கள்.

சித்திரை புதுவருடத்தை எங்கள் கலைஞர்களின் திரைப்படத்துடன் கொண்டாடுங்கள்.
09/04/2024

சித்திரை புதுவருடத்தை எங்கள் கலைஞர்களின் திரைப்படத்துடன் கொண்டாடுங்கள்.

யாழ்ப்பாணம் பாடலை கேட்ட அதிகம் பேர் சிலாகித்து சொன்ன விடயங்களில் ஒன்று Chorus உம் மாசறு பொன்னே வருக என்ற இந்த cover vers...
31/03/2024

யாழ்ப்பாணம் பாடலை கேட்ட அதிகம் பேர் சிலாகித்து சொன்ன விடயங்களில் ஒன்று Chorus உம் மாசறு பொன்னே வருக என்ற இந்த cover version உம்.
With great pleasure, we are introducing our chorus team
Deepika Thuwaragan
Priyanka Piranavan
Shahithiya Puvanendran
Sree Ramya Ranganaathen.
வழமை போல லிங்க் முதலாவது கமெண்டில்.

என்னை Blog வழியாக அறிந்தவர்கள் அனைவருக்கும் இக்காணொளி எதனால் எனக்குப் பிடித்தது என்று தெரிந்து இருக்கும் 🙂 .ஜீவதர்ஷன் இய...
26/03/2024

என்னை Blog வழியாக அறிந்தவர்கள் அனைவருக்கும் இக்காணொளி எதனால் எனக்குப் பிடித்தது என்று தெரிந்து இருக்கும் 🙂 .

ஜீவதர்ஷன் இயக்கிய இரு காணொளிகளிலும் ஒரு ஒற்றுமையைக் காண முடிகிறது.

ஈழம் என்றாலே, அழுகை, பரிதாபம், போர் காயங்கள், சோகம் என்று எதிர்மறையான செய்திகள், காணொளிகளையே பார்க்கும் நமக்கு இக்காணொளிகள் நேர்மறை எண்ணங்களைக் கொடுக்கிறது.
இலங்கையின் மீதுள்ள பொதுப் பார்வையை மாற்றுகிறது.

இக்காணொளிக்காக உழைத்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

யாழ்ப்பாணம் மற்றும் Jaffna இரண்டுமே ஒரே இடம் என்று தற்போது தெரியும். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் தற்போதைய வாழ்.....

இண்டைக்கு சரியா ஒரு வருஷம் எண்டு பேஸ்புக் ஞாபகப்படுத்தியிருக்கு.link https://youtu.be/DDogI_QN1CUஒம் நாங்கள் சாம் சூசைட்...
23/02/2024

இண்டைக்கு சரியா ஒரு வருஷம் எண்டு பேஸ்புக் ஞாபகப்படுத்தியிருக்கு.

link https://youtu.be/DDogI_QN1CU

ஒம் நாங்கள் சாம் சூசைட் பண்ணப்பபோறான் என்ற 20 நிமிட குறும்படத்த எடுத்து யூரியுப்ல போட்டு ஒரு வருசம் ஆகுது.

கொஞ்சம் கொஞ்சமா ஓடி 50930 என்ற பார்வையாளர் எண்ணிக்கைய தொட்டிருக்கு இருந்தாலும் ஒரு லட்சத்தையாவது கடந்திருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றம் தான்.

இந்த குறும்படம் வெளியிடப்பட்ட நாளில இருந்து கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை சமூகவலைத்தளங்களில ஊடகத்துறை ஜாம்பவான்கள் தொடக்கம் சமூகவலைத்தல ஜாம்பவான்கள் பத்திரைக்கைகள் எனப் பெரும் பேசுபொருளாகவே இருந்தது.

எந்தளவுக்கு சாதகமான விமர்சனங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டாலும் எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றுக்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்த பலர் திரையரங்கில் திரையிடப்படவேண்டிய படைப்பு திரையில் பார்க்க ஆர்வமாக இருக்கிறோம் திரையிடச் சொல்லி கேட்டார்கள்.

அதற்கான முயற்சியை கடந்தவருடம் எடுத்திருந்தோம் ஆனால் முடியவில்லை. இந்த வருடம் முயற்சிக்கிறோம் வாய்ப்பிருந்தால் உங்களோடு சேர்ந்து பார்க்க நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம் என்பதை தவிர வேற எதையும் சொல்ல இயலாது..

என்னதான் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தாலும் எங்கட அதாவது இந்த குறும்படத்தை இயக்கிய இயக்குனர் ஜீவதர்சன் அண்ணா அடிக்கடி சொல்லுவார் அட்ட புளப் (படு பயங்கரமான தோல்வி) என்று.
அதை மறுக்க இயலாது தானே…

எமது படைப்பபை பார்த்து அங்கிகரித்து எம் முயற்சிக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கிய அத்தனை அன்பர்களுக்கும் நன்றிகள் பல…

Address


Opening Hours

Monday 08:00 - 06:00
Tuesday 08:00 - 18:00
Wednesday 08:00 - 18:00
Thursday 08:00 - 18:00
Friday 08:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when Npt Media 2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Opening Hours
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share