Umma1st

Umma1st Stay tuned with us

⛔➡️மட்டக்களப்பு வழியாக கொழும்பு, யாழ்ப்பாணம், விமான நிலையம், கண்டி, காலி, கதிர்காமம், மன்னார், முல்லைதீவு, புத்தளம் ஹட்ட...
26/04/2025

⛔➡️மட்டக்களப்பு வழியாக கொழும்பு, யாழ்ப்பாணம், விமான நிலையம், கண்டி, காலி, கதிர்காமம், மன்னார், முல்லைதீவு, புத்தளம் ஹட்டன், நுவரெலியா வவுனியா மற்றும் பதுளை போன்ற தூர இடங்களுக்கான சேவையில் ஈடுபடும் பஸ்களின் பயண நேர விபரம்.....

↕️01.கொழும்புக்கான சேவை...... (CTB)

🛑அக்கறைப்பற்று - கொழும்பு CTB
(பயண வழி 48 👉🏻 மட்டக்களப்பு➡️பொலன்னறுவ➡️குருநாகல் ஊடாக)

1.மாலை 6.30
கல்முனை 7.15
மட்டக்களப்பு 8.00

2.இரவு 10.30 (விமான நிலையம் ஊடாக)
கல்முனை 11.00
மட்டக்களப்பு 11.45

🛑கல்முனை - கொழும்பு CTB
(பயண வழி 48👉🏻 மட்டக்களப்பு➡️ பொலன்னறுவ➡️ குருநாகல் ஊடாக)

1.காலை 7.30
மட்டக்களப்பு காலை 8.45

2. மாலை 6.30
மட்டக்களப்பு இரவு 7.30
(விமான நிலையம் ஊடாக)

3.இரவு 9.30
மட்டக்களப்பு இரவு 10.15

4.இரவு 10.00 (விமான நிலையம் ஊடாக)
மட்டக்களப்பு 10.45

🛑சம்மாந்துறை - கொழும்பு CTB
(பயண வழி 48👉🏻 கல்முனை➡️ மட்டக்களப்பு➡️பொலன்னறுவ➡️ குருநாகல் வழியாக)

1.இரவு 8.00
கல்முனை 8.30
மட்டக்களப்பு 9.30

2.இரவு 9.00
கல்முனை 9.30
மட்டக்களப்பு 10.30

🛑காத்தான்குடி - கொழும்பு CTB
(பயண வழி 48 👉🏻 பொலன்னறுவ➡️ குருநாகல் ஊடாக)

1.காலை 06.00

2.மதியம் 01.00

3.இரவு 07.45 ( பாசிக்குடா ஊடாக)

4.இரவு 10.00

🛑மட்டக்களப்பு - கொழும்பு CTB
(பயண வழி 48👉🏻 பொலன்னறுவ➡️ குருநாகல் ஊடாக)

1. மதியம் 12.00

2. இரவு 07.00

3. இரவு 8.30

🛑 ஏறாவூர் - கொழும்பு CTB
(பயண வழி 48👉🏻 பொலன்னறுவ➡️குருநாகல் ஊடாக)

01. காலை 05.15

🛑 கொழும்பில் இருந்து குருநாகல், பொலன்னறுவ பயண வழி 48 ஊடாக காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை மற்றும் அக்கறைப்பற்று வரை செல்லும் பஸ்கள் (CTB).....

1.காலை 05.30 (கல்முனை)

2.காலை 7.00 (கல்முனை)

3.காலை 10.30 (காத்தான்குடி)

4. மதியம் 02.00 (காத்தான்குடி)

5. மாலை 03.00 (சம்மாந்துறை)

6. மாலை 04.30 (அக்கறைப்பற்று)

7. மாலை 05.00 (விமான நிலையம் ஊடாக கல்முனை)

8. மாலை 06.00 (விமான நிலையம் ஊடாக கல்முனை)

9. மாலை 07.00 (காத்தான்குடி)

10. இரவு 07.30 (அக்கறைப்பற்று)

11. இரவு 08.30 சம்மாந்துறை)

12. இரவு 09.00 (கல்முனை)

13.இரவு 10.00 (பாசிக்குடா வழியாக காத்தான்குடி)

14.இரவு 11.00 (காத்தான்குடி)

15. நள்ளிரவு 12.00 (கல்முனை)

16.நள்ளிரவு 12.30 (விமான நிலையம் வழியாக அக்கறைப்பற்று, திருக்கோவ

Tomorrow @7:45Pm  Kuba Masjith.
25/04/2025

Tomorrow @7:45Pm Kuba Masjith.

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் தரம் - II ( Open Exam ) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.குறித்த ப...
08/04/2025

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் தரம் - II ( Open Exam ) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த பரீட்சைக்கான பாடங்களாக
1. பொது அறிவு மற்றும் நுண்ணறிவு
2. ஆங்கில மொழி
3. அடிப்படை கணினி விஞ்ஞானம்
ஆகிய பாடங்கள் காணப்படும்.

முடிவுத் திகதி: 05-05-2025

மேலதிக விபரங்களுக்கு
👇
https://chat.whatsapp.com/JBVdA9k0lToLaAXREA38EL

🗳️*விருப்பு வாக்கு வேட்டையில் மட்டரகமான பிரதேசவாத, ஊர்வாத ஊடுறுவலின் பின்விளைவுகளை கிழக்கு மாகாணத்தில் கற்கலாம்!*கொழும்ப...
16/11/2024

🗳️
*விருப்பு வாக்கு வேட்டையில் மட்டரகமான பிரதேசவாத, ஊர்வாத ஊடுறுவலின் பின்விளைவுகளை கிழக்கு மாகாணத்தில் கற்கலாம்!*

கொழும்பு, கண்டி, கேகாலை, புத்தளம், மாத்தறை, கம்பஹா, குருநாகல் என பல பகுதிகளிலும் சமூக மற்றும் தேசிய சகோதரத்துவ வாஞ்சை எவ்வாறான முடிவுகளை தந்திருக்கிறது என்பதில் அறிவுள்ளவர்களுக்கு படிப்பினை இருக்கிறது.

வடக்குத் தமிழ் சமூகம் மாத்திரமல்லாது, சுற்று வட்டாரங்களில் உள்ள சிங்கள சமூகத்திடம் கால்மடித்து நாம் அரசியல் பாடம் கற்க வேண்டி உள்ளது.

நாட்டில் வரலாறு காணாத புரட்சிகரமான அரசியல் பிரளயம் ஏற்பட்டு மூன்றில் இரு பாராளுமன்ற பெரும்பான்மை ஆளுந்தரப்பிற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் எமது ஊர்வாத ஜாஹிலிய்யத்தின் காரணமாக ஒரு மாகாணமே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளமை குறித்து நாம் கூடி ஆராய வேண்டியுள்ளது.

இலங்கை முஸ்லிம் அரசியலின் (ஒடிந்த) முதுகெழும்பு தாயகம், தனித்துவ அடையாள அரசியலின் அதிமுக்கியமான பிராந்தியமாக கருதப்படும் கிழக்கு மாகாணத்தில் இந்நிலை ஏற்பட்மை ஆழமான வடுக்களை ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் அகத்திலும் ஏற்படுத்தியுள்ளது.

தேசிய அரசியல் பிரவாக மைய நீரோட்டத்தில் தம்மை சாணக்கியமாக தகவமைத்துக் கொள்ளத் தெரியாத அரசியல், சிவில், சன்மார்க்கத் தலைமைகளை வன்மையாக கண்டிக்கிறேன்.

தேசிய அளவில் ஏற்பட்டுள்ள வங்குரோத்து அரசியல் கலாசாரத்திற்கு விழிப்புணர்வு கிழக்கிலும் ஏற்பட்ட போதும் அங்கு ஊட்டி வளர்க்கப்பட்டுள்ள கன்ஸர் போல் வேறூன்றியுள்ள ஊர்வாதத்தை உதரித் தள்ள முடியாமை வேதனை தரும் விடயமாகும்.

அது தேசமோ சமூகமோ வரலாறு காணாத அரசியல் சமூக பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள ஒரு கால கட்டத்தில் எமது அதிகப்பிரசங்கித் தனத்தினால், அரைவேக்காட்டுத் தனத்தினால், ஊர்வாத, தொகுதிவாத ஜாஹிலிய்யத்தினால் நாம் இழந்து நிற்கும் பிரதிநிதித்துவங்களுக்கு தேசியத் தலைமையிடம் எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாற்றீடூ கேட்டு மன்றாடுவது என்பது புரியவில்லை!

என்றாலும், அதிக வாக்குகளைப் பெற்று விளிம்பு நிலையில் தோல்விகண்ட ஒரு பிரதிநிதிதியை அல்லது தேசியப்பட்டியலில் ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சகோதரர் இக்ராம் அவர்களையாவது இந்த மூன்று மாவட்டங்களுக்குமான பிரதிநிதியாக தருமாறு தலைகுனிவுடன் தேசிய மக்கள் சக்தியின் தலைமையை கேட்டுக் கொள்கிறோம்!

*மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 16.11.2024 |

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்காக இலவச சட்ட ஆலோசனை மற்றும் இலவச விழிப்புணர்வு...For people who are residents of Batticaloa...
20/10/2024

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்காக இலவச சட்ட ஆலோசனை மற்றும் இலவச விழிப்புணர்வு...

For people who are residents of Batticaloa District,

Free Legal advice and Legal awareness.

0707306121

26/07/2024
Copied from அபூ அப்துல்லாஹ்'s post.நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்கள் (தொழுகை) வரிசைகளை சீர்படுத்துங்கள். வரிசையின் ஒழ...
16/03/2024

Copied from அபூ அப்துல்லாஹ்'s post.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்கள் (தொழுகை) வரிசைகளை சீர்படுத்துங்கள். வரிசையின் ஒழுங்கு தொழுகையை முழுமைப்படுத்துவதில் உள்ளது.
(புகாரி : 723)

அனஸ்(ரலி) கூறினார்: 'உங்கள் வரிசைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளுங்கள்! நிச்சயமாக நான் என்னுடைய முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காண்கிறேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் எங்களில் ஒருவர் தம் தோள் புஜத்தை மற்றவரின் தோள் புஜத்துடனும் தம் பாதத்தை மற்றவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொள்ளலானார்கள்.
(புகாரி : 725)

வரிசையில் சமமாக நில்லுங்கள். தோள்பட்டை அருகே நிற்பவரின் தோள்பட்டையுடனும் உங்கள் பாதங்கள் அருகே நிற்பவரின் பாதத்துடனும் சேர்ந்து நில்லுங்கள் (இல்லையயனில்) உங்கள் முகத்தை அல்லாஹ் வேறுபடுத்திவிடுவான்.
(புகாரி:717)

05/01/2024

🎓📚 *GCE A/L கற்கும்போதே மற்றும் GCE O/L கற்றதன் பின்னர் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு சிறந்த வாய...

🎓📚 *GCE A/L கற்கும்போதே  மற்றும் GCE O/L கற்றதன் பின்னர்  தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கும் பல்கலை க...
05/01/2024

🎓📚 *GCE A/L கற்கும்போதே மற்றும் GCE O/L கற்றதன் பின்னர் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கும் பல்கலை கழக மாணவர்களுக்கும் சிறந்த வாய்ப்பு📖 *

📚GCE O/L Exam எழுதிய📝 மற்றும் பரீட்சை பெறுபேறினை பெற்றுக் கொண்ட மாணவர்கள் அனைவரும் மற்றும்🥇GCE A/L Commerce பிரிவு மாணவர்களும் இவ்வகுப்புக்களில் கலந்து கொள்ள முடியும்.

நீங்களும் குறைந்த வயதில் உதவி கணக்காளர் , உதவி கணக்காய்வாளர் மற்றும் கணக்காளர் ஆகலாம்💲.

தமிழ் மொழி மூலம் 🇱🇰பாராளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட AAT SriLanka நிறுவனத்தினால் பரீட்சைகள் அனைத்து மாவட்டங்களிலும் நடாத்தப்படும்.

📖பரீட்சை முடிவில் Diploma in Accounting and Business மற்றும் NVQ-5 தகைமையினை பெற்றுக்கொள்ள முடியும்.

🎬Digital Graphics , AI image போன்ற பல டிஜிட்டல் நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு Photographic ஞாபக சக்தி (Memory power ) இனை பயிற்றுவிப்பதன் ஊடாக ஓர் சிறந்த 🏆🏆தொழில்சார் தகைமையினை பெற்ற மாணவனாக மாறமுடியும்.

🎁குறிப்பிட்ட எண்ணிக்கையான மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படவுள்ளதால் உடனே பதிவு செய்யுங்கள்.🎁

💯% Zoom Live Classes மற்றும் வருகை தராத மாணவர்களுக்கு Recorded Class Videos வழங்கப்படும்.

*உங்களுடைய தொழில் சார் தகைமையினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பு!*

*AAT 2024 July Batch Online Class Registration Form:* 👇👇
https://forms.gle/ThqtoyiYLo2TTPCW9

*WhatsApp Group Link*: 👇👇
https://chat.whatsapp.com/HQQBWsMa6WhFKG4xlN21de

🎥Sample Class Videos
🎬 *YouTube*:
https://youtube.com/?feature=shared

🎬AAT level 01 sample lecture :- https://youtu.be/32k_nfARLno?si=hLxvL5_7wSYNmbc0&t=191
🎬AAT level 02 sample lecture :- https://youtu.be/_sMBRtmtS6E?si=BjWyi0F6Sav8JD8-
🎬AAT level 03 sample lecture :- https://youtu.be/f2o6oTsXMqU?si=DcBWcDKwU9Et_N4A

CA (Charted Accountancy) கற்கை நெறியில் இணைய விரும்பும் மாணவர்கள் கீழே காணப்படும் Google Form இனை Click செய்யவும்.
📝CA Students Registration Form 👇👇👇

https://forms.gle/t2K2hftFc7hbMD939

CA Students Group
https://chat.whatsapp.com/JefKAKfbnIT9iyDLEoK60j

🎓📚 *GCE A/L கற்கும்போதே மற்றும் GCE O/L கற்றதன் பின்னர் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு சிறந்த வாய...

🆓📗 AAT  Level 2 - AFC Paper Class📘📕🗓️2024 February இல் நடைபெறவுள்ள AAT Level 2 பரீட்சைக்கு இரண்டு மாதங்களே காணப்படுகின்ற...
05/01/2024

🆓📗 AAT Level 2 - AFC Paper Class📘📕
🗓️2024 February இல் நடைபெறவுள்ள AAT Level 2 பரீட்சைக்கு இரண்டு மாதங்களே காணப்படுகின்றன.

🙋 *2022 January Past Paper with Revision*

🎥 *Advance Financial Accounting and Costing*

https://youtu.be/YajTy16DJfM?si=t1mKrg5hiBtHHrS8

நீங்கள் இன்னும் AAT பரீட்சைக்கு தயாராகவில்லையா????
😟கவலை வேண்டாம்

🌐மீட்டல் மற்றும் கடந்த கால வினாத்தாள் வகுப்புக்கள் Online இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

📖உங்கள் Exam சித்தியினை உறுதிசெய்ய உடனே இணைந்து கொள்ளுங்கள் 🏆வாய்ப்பினை தவற விடாதீர்கள்.
📱✅மேலதிக தகவல் மற்றும் AAT Doubt Discussion Group இல் இணைந்து கொள்ள:
WhatsApp group
https://chat.whatsapp.com/IFbfwBadK9qBNUZ9jFe1Cs

📝பதிவுகளுக்கு:
கீழ் உள்ள WhatsApp இலக்கத்திற்கு உங்கள் பெயர் மற்றும் இணைய விரும்பும் பாடங்களை 📲 0713155095 எனும் இலக்கத்திற்கு Massage செய்யவும்.👇👇
📞📲 https://wa.me/94713155095
Online Registration Form
https://forms.gle/pLHtA3Z6i6neiJYx5

🆓📗 Past Paper Class📘📕 நடைபெறவுள்ள AAT பரீட்சைக்கு இரண்டு மாதங்களே காணப்படுகின்றன.நீங்கள் இன்னும் AAT பரீட்சைக்கு தயாராகவி....

முதலில் இந்த "கண் வருத்தம்" எனும் Conjunctivitis/ Pink Eye / Madras Eye எனப்படுவது ஆபத்தான நோய் நிலைமை அல்ல.இது பொதுவாக ...
11/11/2023

முதலில் இந்த "கண் வருத்தம்" எனும் Conjunctivitis/ Pink Eye / Madras Eye எனப்படுவது ஆபத்தான நோய் நிலைமை அல்ல.

இது பொதுவாக வைரஸ் தொற்றினால் (Adeno Virus) ஏற்பட்டு பெரும்பாலும் 3/4 தினங்களில் தானாக குணமாகக் கூடியது.

சில நேரங்களில் பக்றீரியா தொற்று (Secondary Bacterial infection) ஏற்படும்போது Anti Bacterial eye drops / Ointment அவசியப்படலாம்.

⁉️ நோய் #அறிகுறிகள்:

✅ இதன் பிரதான அறிகுறியாக கண்ணின் Conjunctiva எனும் வெண்ணிறப்பகுதி சிவப்பு நிறமடையும். (இது ஒரு கண் / இரு கண்களிலும் ஏற்படலாம்)

✅ கண்ணிலிருந்து நீர் வடிதல்

✅ கண் அரிப்பு / எரிவு

✅ வெளிச்சத்தை பார்க்க முடியாமை

✅ தலைவலி

போன்றவை ஏற்படும்.

மேலதிக பக்றீரியா தொற்று ஏற்படும் போது

❌கண்ணிலிருந்து மஞ்சள்/பச்சை நிற பூளை வெளியாதல்

❌ கண் மடல்கள் வீங்கி தூங்கி எழும்போது கண்களை திறக்க முடியாமல் ஒட்டியிருத்தல்

போன்ற அறிகுறிகள் தென்படும்.

⁉️ #சிகிச்சை:
ஏற்கனவே சொன்னது போல் இது Virus தொற்றினால் உண்டாவதால் 3/4 நாட்களில் தானாக குணமாகக் கூடியது.

மஞ்சள்/பச்சை நிற Discharge, கண்மடல்கள் வீக்கம், தூங்கி எழுந்து கண்களை திறக்க கடினமாதல் போன்றவை பக்றீரியா தொற்றின் அறிகுறிகளாதலால் வைத்திய ஆலோசனைப்படி Antibacterial Eye Drops பாவிக்க வேண்டி ஏற்படலாம்.

🛑 5 நாட்களுக்கு மேல் நோய் அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் வைத்திய ஆலோசனையை பெற வேண்டும்.
(அரிதாக 5 நாட்களுக்கு மேற்பட்ட தொற்று கண்மணியை (pupils) பாதித்து சிறுவர்களின் பார்வையை பாதிக்கலாம். அவ்வாறான அறிகுறிகள் தோன்றும்போது உடனடியாக கண் வைத்திய நிபுணரை நாட வேண்டும்.)

⁉️ பரவலை #தடுத்தல்:

பொதுவாக இந்நோய் தொடுகை மூலமே பரவுகிறது.

Conjunctivitis/ pink eye கண் நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அரிப்பு காரணமாக கண்களை சொறிந்து அதே கையை பாடசாலை மேசை,கதிரை, பொதுப் போக்குவரத்து Bus போன்றவற்றில் பிடிக்கும்போது
அதனை இன்னொருவர் தொடுவதன் மூலம் பரவுகிறது.

(அல்லது உடல்கள் நெருக்கமாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பரவலாம்.)

எனவே:
✅ கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவுதல்

✅Hand Sanitizer பாவித்தல்

✅ கண்களை கைகளால் தொடுவதை தவிர்த்தல்
போன்றவற்றை கையாளலாம்.

✅ அதேபோல் கண் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் அத்தகையவர்கள் பாடசாலை/ வேலைத்தளங்களுக்கு விடுமுறை பெறுவதன் மூலம் ஏனையவர்களுக்கு இத்தொற்று பரவுவதை தவிர்க்கலாம்.

சுகாதார அமைச்சும் நோய் அறிகுறிகளை காண்பிக்கும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவேண்டாம் என்று அறிவுறுத்துகிறது.

✅ வீடுகளில் நோய் அறிகுறிகள் காண்பிப்பவர்களின் தலையணை , Bedsheets என்பவற்றை பகிராதிருப்பதோடு சுடுநீரில் கழுவுவதன் மூலம் ஏனைய குடும்ப அங்கத்தவர்களுக்கும் பரவுவதை தவிர்க்கலாம்.

🛑⁉️ பி.கு:
இந்த Conjunctivitis/ Pink eye எனும் தொற்றுக்கு ஏன் Madras eye என பெயர் வந்தது?

1918ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவின் Madras (இன்றைய சென்னை)யில் இந்த நோய் பரவல் முதன்முதலாக அவதானிக்கப்பட்டது.

கோடைக்கால விடுமுறையில் Madras சென்ற பலருக்கு இத்தொற்று ஏற்பட்டதால் இப்பெயர் பயன்படுத்தப்படுகிறது.

இருப்பினும் Madras Eye என்பது ஒரு பிராந்திய சொல் வழக்கே. மருத்துவ பெயர் Conjunctivitis. இருப்பினும் இந்திய Mediaக்களில் Madras Eye ( மெட்ராஸ் ஐ ) என்பது இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

By: Dr. A I A Ziyad
Clinical Informatics & Research Fellow,
University of Southampton




#மெட்ராஸ்_ஐ

❤கொழும்பில் இருப்பவர்களுக்கான அரிய வாய்ப்பு. ❤ #அல்_குர்ஆனை  #மனனமிடுவதில்  #தடுமாற்றமா?உங்களால் ஜுஸ்உ அம்மவை இன்ஷா அல்ல...
11/11/2023

❤கொழும்பில் இருப்பவர்களுக்கான அரிய வாய்ப்பு. ❤

#அல்_குர்ஆனை #மனனமிடுவதில் #தடுமாற்றமா?

உங்களால் ஜுஸ்உ அம்மவை இன்ஷா அல்லாஹ் நான்கு மாதங்களுக்குள் மனனமிட முடியும்.

Level - 1
👉 குர்ஆனை மனனமிடுவது எப்படி என்று புரிந்துகொள்ளலும் அதற்கான வழிகாட்டலைப்பெற்றுக்கொள்ளலும்....

👉அடிப்படையான தஜ்வீத் விதிகளைக் கற்றலும் அவற்றை பயிற்சி செய்தலும்...

👉ஜுஸ்உ அம்மவை மனனமிடல்.

வகுப்புகள் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் #நவம்பர்_22 ஆரம்பமாகும்.
வகுப்புகள் அஷ்-ஷெய்க் காரி பிர்தவ்ஸ் அவர்களால் நடத்தப்படும்.

வகுப்புகள் திங்கள் - வெள்ளிக்கிழமைகளில் பின்னேரம் 5:30 மணி முதல் 8 மணி வரை நடைபெறும்.

You can join using whatsapp +94777846974 and get more details via that whats number.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Umma1st posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share