Kanyakumari Memes

  • Home
  • Kanyakumari Memes

Kanyakumari Memes Everything About Kanyakumari!

27/07/2026

கேரளாவிற்கு கனிம வளம் கடத்த அனுமதி கோரி - கனிம வள லாரி உரிமையாளர்கள் சாலை மறியல் - டிக்கி ஐ பதம் பார்த்து அனுப்பிய காவல் துறை 🤣🤣

23/06/2026

தக்கலை மணலி அருகே வீடு புகுந்து பைக் திருடி சென்ற வாலிபரை 15 மணி நேரத்தில் பிடித்த தக்கலை காவல்துறை...

அதிக ஒளி வீசி விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் பொருத்தப்பட்ட விளக்குகள் குமரி காவல் துறையால் பறிமுதல். எதிரில் வ...
16/06/2026

அதிக ஒளி வீசி விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் பொருத்தப்பட்ட விளக்குகள் குமரி காவல் துறையால் பறிமுதல். எதிரில் வரும் வாகன ஒட்டிகளை குருடாக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகளை அகற்ற காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி நடவடிக்கை.

25/05/2026

கன்னியாகுமரியில் இரண்டு குவாரிகளை மூட அமைச்சர் பிரபு அதிரடி உத்தரவு.

22/05/2026

கேரளாவுக்கு கனிம வளம் சென்றால் என்ன தவறு.? -திமுக அனிதா ராதாகிருஷ்ணன்

♦️கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு சென்றால் என்ன தவறு..? - முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆஸ்டின் எம்எல்ஏ உடன் இணைந்து பேட்டி..!

♦️கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று ஆட்சியரை நேரில் சந்தித்த நிலையில் "கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கனிம வளம் கொண்டு வர முடியாதே" என்ற கேள்விக்கு "அது அவர்கள் தவறு" "அந்த தவறை நாம் செய்யக்கூடாது" கனிமவளம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற நிலையில் பதில் அளித்ததால் அதிர்ச்சி..!!

♦️கன்னியாகுமரி மாவட்டம் வழியே கேரளாவுக்கு அதிக அளவு கனிமவளம் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அதிக அளவு விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்புகள், உடல் உறுப்புகள், உடைமை இழப்பு என பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்து வந்தனர். மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் தீவிர முயற்சியால் கனிமவள வாகனங்கள் கட்டுப்படுத்தப்பட்டு குமரி மாவட்டம் விபத்தில்லா மாவட்டமாக இருந்து வருகிறது. கனிமவள வாகன விபத்தால் ஏற்படும் உயிர் பலிகளும் பூஜ்ஜியமானது.

♦️ஆனால் கடந்த 5 வருடங்களாக மிகப்பெரிய அளவில் கனிம வளம் கேரளாவுக்கு சென்றதும் அதற்கு கடந்த கால அரசு தான் முக்கிய காரணம் என்பதும் குமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்த பின் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் பேட்டியால் வெளிவந்து உள்ளது.

21/05/2026

கேரளாவிற்கு கனிம வள லாரிகளை அனுப்ப கேட்டு லாரி அதிபர்கள் செக் போஸ்ட் முற்றுகை - அனுமதிக்க முடியாது என்று திருப்பி அனுப்பிய எஸ்பி ஸ்டாலின் தலைமியிலான குமரி காவல் துறை.

24/03/2026

குமரியில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்!

08/03/2026

தேர்வு நேரங்களில் அதிகாலையிலே சினிமா பாட்டு டப்பி எல்லாம் அதிக சத்தத்தில் போட்டு மாணவர்களை தொந்தரவு செய்யும் ஒலி பெருகிகளை புடிங்கி ஏறிய வேண்டும்.

06/03/2026

ஈரானில் சிக்கி தவிக்கும் குமரி மீனாவர்கள்! தங்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுக்கு வீடியோ வெளியிட்டு கோரிக்கை.

காணொளியை அதிகம் பகிருங்கள்!

05/03/2026

குமரியில் - கல்குவாரிகள், கனிம வள லாரிகளுக்கு எதிராக போலீஸ் எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து RTI கோரப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் வந்த உடன் இதில் பதிவிடப்படும்.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanyakumari Memes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share