Channel Red Sea

Channel Red Sea செய்திகளின் பின் உள்ள அரசியலை அலசும் களம்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது காலணி வீச்சா? ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் தொடர்ந்து அவருக்கு அவமதிப்பு...
07/10/2025

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது காலணி வீச்சா?

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் தொடர்ந்து அவருக்கு அவமதிப்புகள் செய்யப்படுவதா?

நீதித்துறையை அச்சுறுத்தும் சனாதனவாதிகளின் அராஜகம்!
---------------------------------------------------------

இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடந்துகொண்டிருக்கும் போது, மாண்பமை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் மீது காலணி வீச முயற்சிக்கப்பட்டுள்ளது.

காலணி வீச முயன்ற வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் “சனாதன தர்மத்துக்கு இழுக்கு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது” என்று கூச்சலிட்டபடி இச் செய்கையில் ஈடுபட்டுள்ளார்.

சனாதன ஹிந்துத்துவக் கும்பலின் செயல்கள் எவ்வளவு கீழிறக்கத்துக்கும் செல்லும் என்பது நமக்குப் புதிதல்ல. ஆனால், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றது முதல் மாண்பமை பி.ஆர்.கவாய் மீது வன்மத்தைக் கக்கியபடியே இருக்கின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தவராகவும், முற்போக்குச் சிந்தனை படைத்தவராகவும் திகழும் மாண்பமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் பதவியேற்ற பின் முதல்முறையாக மகாராஷ்டிரத்துக்குப் போயிருந்தபோதும், அரசு முறைப்படி அவருக்குத் தரப்பட வேண்டிய மரியாதையைத் தராமல் அவமதித்தனர்.

அவர் முறையாக அரசியலமைப்புச் சட்டப்படி நடக்கிறார் என்றதும் ஹிந்துத்துவ பாசிச சக்திகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அந்தக் காலணி அவர் மீது மட்டும் வீசப்பட்ட காலணி அல்ல; இந்திய நீதித்துறையை அச்சுறுத்துவதற்காக வீசப்பட்ட காலணி ஆகும்.

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் அடுத்த மாதம் ஓய்வு பெறவிருக்கிறார். அவருக்குப் பின்னும் வருவோரை அச்சுறுத்தவே இந்த முயற்சி!

நீதிபதிகளே ஆயினும் தங்கள் ஆதிக்கத்துக்கு எதிராக எதையும் நீதிமன்றங்கள் செய்தால், அவர்களை அவமானப்படுத்துவோம் என்று அச்சுறுத்தும் இந்தச் செயல் தனிப்பட்டது அல்ல; இதன் பின்னணியில் இருக்கும் அமைப்புகள் யார் என்பதைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், மிகுந்த பெருந்தன்மையுடனும், பொறுமையுடனும் “கவனத்தைச் சிதறவிடாதீர்கள்; இது என்னைப் பாதிக்காது” எனக் கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்குரைஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக்கொண்ட பக்குவமும் பெருந்தன்மையும், எத்தனையோ அவமதிப்புகளைச் சந்தித்து, உயர்ந்த நிலைக்கு வந்திருப்பவர் அவர் என்பதற்குச் சான்று ஆகும்.

’சனாதன அவமதிப்பு’ என்ற கூக்குரல் மூலம் இதன் பின்னணியில் எந்தத் தத்துவம் இருக்கிறது என்பது மிக வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மீதான இந்த அவமதிப்பு முயற்சி கடும் கண்டனத்துக்கு உரியதாகும். நீதித் துறையை அச்சுறுத்தும் போக்கு ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாதது.

இந்த அநாகரிக, ஜாதித் திமிர் பிடித்த சனாதனவாதிகளை மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்கித் தள்ள வேண்டும்.

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்

06.10.2025
சென்னை

சம்பம் செய்த தமிழக அரசும்... யூ டர்ன் அடித்த மோடி அரசும்!!!தமிழகத்தின் விழிப்புணர்வே உயிர் காக்கும் வலிமை!ஒரு வாரமாக, கர...
07/10/2025

சம்பம் செய்த தமிழக அரசும்... யூ டர்ன் அடித்த மோடி அரசும்!!!

தமிழகத்தின் விழிப்புணர்வே உயிர் காக்கும் வலிமை!

ஒரு வாரமாக, கரூர் நெரிசல் விபத்தும், நடிகர் விஜயின் அரசியல் வருகையும் செய்தி தலைப்புகளில் இடம் பிடித்துக் கொண்டிருந்தபோது—ஒரு அமைதியான, ஆனால் உயிர் காக்கும் நடவடிக்கை தமிழகத்தில் நடந்தது. அது அரசியலோ, பிரபலங்களோ அல்ல — அரசு நிர்வாகத்தின் துல்லியமும் தன்னடக்கமும் பற்றியது.

அக்டோபர் 1 — அரசு விடுமுறை நாள். ஆனால், அந்த நாளே மத்தியப் பிரதேசத்திலிருந்து வந்த ஒரு கடிதம் தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் அலுவலகத்தில் இறங்குகிறது. ஒன்பது சிறு உயிர்கள் மரணமடைந்துள்ளன. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ‘Coldrif Syrup’ குறித்தே சந்தேகம் எழுந்துள்ளது.

அந்தச் செய்தி வருகிறதும், விடுமுறை நாளாக இருந்தாலும் தமிழக அரசு அலுவலர்கள் உடனடியாக எழுந்து நிற்கின்றனர். நண்பகலுக்குள் ஆய்வாளர்கள் காஞ்சிபுரம் தொழிற்சாலையை அடைகின்றனர். ஆய்வகம் திறக்கப்படுகிறது. சோதனை தொடங்குகிறது. மொத்தம் 39 கடுமையான மீறல்கள், 325 முக்கியமான விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்று கண்டறியப்படுகிறது.

மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. அவை Diethylene Glycol மற்றும் Ethylene Glycol கலப்புகள் உள்ளதா எனச் சோதனைக்கு அனுப்பப்படுகின்றன.
அடுத்த 24 மணி நேரத்திலேயே — முடிவு!
அந்த மருந்து “தரமற்றது” என அறிவிக்கப்படுகிறது. 48.6 சதவீதம் Diethylene Glycol கலந்துள்ளது. இது குழந்தைகளின் கல்லீரல், சிறுநீரகங்களை சேதப்படுத்தும் ஒரு Industrial solvent!

அங்கேயே நிற்காமல், தமிழக அரசு அடுத்த கட்டத்திற்குச் செல்கிறது.
மாநிலம் தழுவிய எச்சரிக்கை.
விற்பனை, விநியோகத்துக்கு தடை.
மொத்த, சில்லறை நிலையங்களில் உள்ள stock-ஐ freeze செய்ய உத்தரவு.
ஒடிசா, புதுச்சேரி அரசுகளுக்கும் தகவல் பகிர்வு.

அனைத்தும்—விடுமுறை நாளில், ஒரே இரவில், 24 மணி நேரத்திற்குள்!

அக்டோபர் 3 அன்று, நிறுவனத்துக்கு உற்பத்தி நிறுத்த உத்தரவு. உரிமம் ரத்து செய்ய Show Cause Notice. பொதுமக்களுக்கு எச்சரிக்கை. இதுதான் நிர்வாகம். இது தான் துரிதமும் தீர்மானமும் சேர்ந்த நல்லாட்சி.

மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் இறந்தபோதும், அந்த அரசு அக்டோபர் 4 ஆம் தேதி தான் தடை உத்தரவை பிறப்பித்தது. அதுவும் ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் உறுதிப்படுத்தலுக்குப் பின்.

இதுதான் வித்தியாசம்.
ஒரு அரசு தகவல் பெற்றவுடன் உயிர் காப்பதற்காக ஓடுகிறது;
மற்றொன்று படிவங்கள், அனுமதிகள், மடல்கள் என உயிரை இழக்கச் செய்கிறது.

தமிழகம் 100 மடங்கு முன்னே.
அது வெறும் அரசியல் கோஷம் அல்ல — நிர்வாக நாகரிகத்தின் அடையாளம்.
தமிழகம் எப்போதும் போல, நல்லாட்சியின் நிழலல்ல, அதன் ஒளியாக மீண்டும் திகழ்கிறது.

“மக்களின் நலனுக்காகச் செயல்படும் அரசாங்கம் தான் உண்மையான ஜனநாயகத்தின் முகம்.”

* இதன் சாட்சியாக அக்டோபர் 1, 2025 நினைவில் நிற்கும் நாள்!

- Social justice forum.

மரணித்தவரின் ஆன்மாக்கள் உங்களை விடாது!நேற்று வரை நம்மோடு பேசித்திரிந்த 40 பேர் கூட்ட நெரிசலில் நசுங்கி, மூச்சுதிணறி, கொட...
29/09/2025

மரணித்தவரின் ஆன்மாக்கள் உங்களை விடாது!

நேற்று வரை நம்மோடு பேசித்திரிந்த 40 பேர் கூட்ட நெரிசலில் நசுங்கி, மூச்சுதிணறி, கொடுமையாக மரணித்திருக்கின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர், மூவர் என பல்வேறு விதமான இழப்புகள்.
கரூர் முழுவதும் மரண ஓலம். குடும்பங்களில் ஒப்பாரி.
இழவு வீடுகளில் வெறுமையைப் பார்த்துக்கொண்டு அம்மா, அப்பா, கணவன், மனைவி, பெற்றோர் என எல்லோரும் விவரிக்கமுடியாத விரக்தியில் அமர்ந்திருக்க -
"WE STAND WITH VIJAY"
என்று கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் சமூக ஊடகங்களில் செய்தி பரப்புகிறீர்களே, வீணாய்ப் போனவர்களே!
உனக்கு என்ன நடந்தால் நீ திருந்துவாய்?
எது நடந்தால் உனக்கு இழப்பின் அருமை புரியும்?
ஒரு விபத்தின் அடிப்படை உண்மைகளை விளங்கிக்கொள்ள முடியாத அளவுக்கா உன் அறிவு மழுங்கியிருக்கிறது?
ஒரு நடிகனை ரசிப்பது உன் மனசாட்சியைக் கொல்லும் அளவிற்கா கொண்டுபோய் விடும்?
அவன் நடித்து புகழும், பணமும் ஈட்டியதைவிட உனக்காக என்ன செய்துவிட்டான்?
எதற்காக 40 உயிர்களின் இழப்பைக் கூட கொச்சைபடுத்தும் அளவிற்கு தரம்தாழ்ந்து போனாய்?
தமிழ்நாட்டை வியந்துபார்க்கும் பிற மாநிலங்களும், பிற நாடுகளும், நம்மை ஏளனமாய் பார்க்கவைத்து விட்டீர்களே!
மரணித்தவரின் ஆன்மாக்கள் உங்களை விடாது!
பேய்கள் உங்களைத் துரத்தும்!
உங்கள் வாழ்வு சிறக்காது!
அவைகளின் சாபம் உங்களை விரட்டிப் பிடிக்கும்!
கொடுமையின் உச்சத்தை நீ அனுபவிக்கும் முன் திருந்திவிடு!

- ஜேம்ஸ் வசந்தன், இசையமைப்பாளர்.

இவர்களை எப்படி தேற்ற?'போக வேணாம்னு சொன்னேன், மகளோட போகறேன்னு சொன்னாங்க.. நடுவுல போன் பண்ணிக் கேட்டேன்.. கூட்டமா இருந்தா ...
29/09/2025

இவர்களை எப்படி தேற்ற?

'போக வேணாம்னு சொன்னேன், மகளோட போகறேன்னு சொன்னாங்க.. நடுவுல போன் பண்ணிக் கேட்டேன்.. கூட்டமா இருந்தா வந்திடுங்கன்னு சொன்னேன்... அனுப்புன மெசேஜ் அவங்க பார்க்கல... அப்புறமா போன் எடுக்கல.. போலீசம்மா ஒருத்தங்க எடுத்தாங்க.. ஆஸ்பத்திரி போக சொன்னாங்க...நண்பர் ஒருத்தர பார்த்தேன்... கவலையா போய் உள்ள பாக்க சொன்னாரு.. பாதி வாழ்க்கைக்கு அப்புறமா சன்னியாசியா வாழமுடியுமா... மகளையும் மனைவியையும் பறிகொடுத்துட்டேன்..' என்றவரிடம் என்ன ஆறுதல் சொல்ல?
மகள், பேத்தி இருவரையும் இழந்த அவரது வயதுபோன பெற்றோரை எப்படி தேற்ற?..

கரூருக்கு வெளியே உள்ள ஏமூர் எனும் சிற்றூரில் மட்டும் 5 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.

மகன் பிறந்த பின், பிரிந்து சென்ற கணவன் பிறிதொரு திருமணம் செய்து கைவிட்டு போய்விட, வைராக்கியத்துடன் வளர்த்த 10 வயது மகனை பறிகொடுத்த பெண்ணிற்கு எப்படி ஆறுதல் சொல்ல?.. 'வேலைக்கு போயிருந்தேன், வர்ரதுக்குள்ள போய் சேர்ந்துட்டாங்க.?' என மனைவியை பறிகொடுத்தவரின் கையை பிடித்து தேற்றுவதற்கு நமக்கு வார்த்தைகள் எப்படி வரும்?

'அவங்க போனதே எனக்கு தெரியாதுங்க, திடீர்னு வாட்ஸப்புல அவங்க போட்டோவை அனுப்பி ஆஸ்பத்திரி வரச் சொல்லி சேதி சொல்லிட்டாங்க, இனி எப்படி இருப்பேன்?' என அதிர்ச்சியில் இருந்து மீளாத 65 வயது கணவர். பலியான, காயம்பட்ட பெரும்பாலோனோர் அன்றாடம் உழைத்து பிழைக்கும் சாமானிய குடியானவர்கள்.

காயம்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்தோம். பழங்குடி சமூகத்தை சேர்ந்த முதியவர் மகளுடன் செய்வதறியாது நின்றிருந்தார். வெண்டிலேட்டரில் போராடும் தாயின் அருகில் கவலையோடு மகன். கழுத்தில் மிதித்த காயத்துடன் தனது 14 வயது குழந்தைக்கு அருகில் கவலையுடன் இசுலாமிய தாய். பாதுகாப்பு பணிக்கு வந்து நெரிசலில் நசுக்கப்பட்ட ஹோம்கார்ட் பெண்மணி என பலரையும் சந்தித்து உண்மைத் தன்மை அறிந்தோம். அசம்பாவிதம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்த்தோம். அதிகாரிகளிடத்தில் உரையாடினோம். அங்கிருந்து இரவு பகல் பாராது உழைத்த மருத்துவர்கள், செவிலியர், ஆம்புலன்ஸ் பணியாளர்கள், காவலர்கள்
ஆகியோருடனும் பேசினோம்.

தமிழ்த்தேசிய கூட்டணியின் தோழமை இயக்க தோழர்களுடன், மே17 இயக்கத்தின் தோழர்களும் சென்றிருந்தோம். தமிழர் ஆட்சிக் கழகம் தலைவர் தோழர் எஸ்.ஆர்.பாண்டியன் அவர்கள் கே.எம். சரீப் அவர்களின் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் பொறுப்பாளர் தோழர் சண்முகராஜா, அன்சர்மில்லத் ஆகியோருடன் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதலும் ஆதரவும் தெரிவித்தோம். கரூர், திருப்பூர், திருச்சி, ஈரோடு, கோவை மாவட்டத்தின் மே17 இயக்க தோழர்கள் உடன் வந்திருந்தனர். தொடர்ந்து மக்களை சந்தித்து இயன்ற அளவில் தகவல்களை சேகரித்து மக்களுக்கு தெரியப்படுத்த முயல்கிறோம்.

எந்த இடர்பாட்டிலும் சாமானிய மக்களுடன் களத்தில் மே17 இயக்க தோழர்கள் நிற்பார்கள். ஊகங்களாக இல்லாமல் களத்தில் கண்டறிந்ததை மக்களுக்கு சொல்வோம்.

துணிவு சிறுதும் இல்லாத விஜய்க்கு எதற்கு அரசியல்?கரூர் தவெக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியா...
29/09/2025

துணிவு சிறுதும் இல்லாத விஜய்க்கு எதற்கு அரசியல்?

கரூர் தவெக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்.

இத்தகைய துயர நிலைக்கு அடிப்படை காரணமே விஜய்யின் பொறுப்பற்ற அரசியலாகும்.

விஜய்க்கு அதிகம் கூட்டம் கூடுகிறது என்பதால் தான் அதை முறைப்படுத்த காவல்துறையும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதை அரசியல் பழிவாங்கலாக சித்தரித்தார் விஜய். அவருக்கு ஆதரவாக பேசும் மூத்த பத்திரிகையாளர்களும் கூட, கட்டுப்பாடுகளை விஜய் மீற வேண்டும் என்று உசுப்பிவிட்டனர். எனவே, விஜய் தொண்டர்களிடம் காவல்துறை கட்டுப்பாடுகள் மீது எதிர்மறை எண்ணம் வலுத்து, அவற்றை அவர்கள் பின்பற்றாத நிலையும் உருவானது.

எந்த அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்தினாலும் அங்கு கூடுவோருக்கு அந்தந்த கட்சிகள் தான் பொறுப்பு ஏற்கின்றன. விஜய் கூட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றமும் இதை கூறியுள்ளது. அப்படி இருக்க, குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் பல மணி நேரம் தாமதமாக விஜய் வந்தது, உணவு தண்ணீர் இன்றி அங்கு மக்கள் தவித்தது, அனுமதிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு கூட்டம் கூடியது, கரூர் கூட்டத்திற்கு திண்டுக்கல், சேலம், திருப்பூர், நாமக்கல் என்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் திரண்டது, நீதிமன்ற உத்தரவை மீறி குழந்தைகளுடன் வந்தது, ஜெனரேட்டர் பகுதியை சூறையாடியது, உயரமான கட்டடங்களில் ஏறி அசம்பாவிதம் ஏற்படுத்தியது, காப்பாற்ற வந்த ஆம்புலன்சை தாக்கியது என்று முழுக்க முழுக்க ஒழுங்கீனமும் விதிமீறலும் செய்துள்ளது தவெக.

துயரம் நடந்துவிட்ட பிறகும் கூட, தன் தொண்டர்களை மீட்கவோ காக்கவோ களத்தில் நிற்காமல் விஜய் உட்பட மொத்த கட்சி நிர்வாகமும் ஓடிப்போய் ஒளிந்தது அரசியல் அரங்கில் இதுவரை நாம் காணாத அவலம்.

சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான முதலமைச்சர் உடனே கரூர் விரைகிறார். கூட்டத்தை கூட்டிய விஜய் மறுநொடியே சென்னை வீட்டிற்கு விரைகிறார்.

அரசியல் என்பது ஒரு நாள் கூத்தல்ல; ஒவ்வொரு நாளும் நடத்த வேண்டிய வேள்வி.

நெருக்கடிகளையும் சவால்களையும் துயரங்களையும் எதிர்கொள்வதே அரசியல். அந்தத் துணிவு சிறுதும் இல்லாத விஜய்க்கு எதற்கு அரசியல்?

- Aloor Shanavas MLA.

ஏழை எளிய விளிம்பு நிலை குடும்பங்களில் 40 உயிர்கள் பலியாகி விட்டன.கடந்த பல ஆண்டுகளாக கதாநாயகன் பிம்பத்தில் தங்கள் உள்ளத்த...
29/09/2025

ஏழை எளிய விளிம்பு நிலை குடும்பங்களில் 40 உயிர்கள் பலியாகி விட்டன.

கடந்த பல ஆண்டுகளாக கதாநாயகன் பிம்பத்தில் தங்கள் உள்ளத்தில் பதிந்துள்ள ஒரு உருவத்தை நேரில் பார்க்க வேண்டும் என்ற உளவியலால் உந்தப்பட்டு இளைஞர்கள் பெண்களும் ஆண்களுமாய் கரூரில் திரண்டனர்.

காலை 8:30 மணிக்கு விஜய் நாமக்கல் வருகிறார் என்பதால் விடியற் காலையிலே அவர்கள் வீட்டை விட்டு கிளம்பி திரண்டு வந்து விட்டார்கள். ஆனால் நடிகர் விஜய் தனி விமானத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டதே காலை 8 45 மணிக்குத் தான்; அதனால் அவர் கரூருக்கு வந்து சேர்ந்ததும் 10 மணி நேர தாமதத்திற்குப் பிறகு தான்!

ஒவ்வொரு வினாடியும் உணர்வுகளால் உந்தப்பட்டு விஜய்க்காக காத்திருந்த மக்கள், அந்த உணர்வுகளின் அழுத்தத்தால் விஜய் வருகிறார் என்றவுடன் எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பில் உயிர் பாதுகாப்பைப் பற்றியும் கவலைப்படாமல் மேடை நோக்கி ஓடி இருக்கிறார்கள். தங்களுடைய காலின் கீழ் மிதிபட்டுக் கிடப்பவர்களும் சக மனிதர்கள் தான் என்ற உணர்வையும் மிஞ்சி நிற்கிறது, அந்த பிம்பம் உருவாக்கிய மாயை .

தன்னிலை மறந்து நிற்கும் அரசியல் புரிதலற்ற இந்த உணர்வையே, தனது அரசியல் முதலீடாக்கி களத்தில் நுழைந்து இருக்கிறார் விஜய். மக்களுக்கு இழைக்கின்ற மகத்தான துரோகம் இது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரவோடு இரவாக கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆறுதல் கூறியதும், மக்களை பாதுகாக்கும் துரித நடவடிக்கையில் இறங்கியதும் இதை அரசியலாகப்‌‌ பார்க்க கூடாது என்ற நல்ல எண்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

கொடும் துயரமான இந்த மரணங்களை, அரசியல் ஆக்கக் கூடாதுதான்; ஆனால் இந்த மரணங்களுக்குக் காரணமான விஜய் நடத்தும் அரசியலை அரசியலாகவே பார்க்க வேண்டும்.
இந்த மரணத்திற்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும்
ஒவ்வொரு முறையும் காவல் துறையின் கட்டுப்பாடுகளை மீறிக்கொண்டிருக்கும் தனது ரசிகர்களை அவர் கண்டித்தது இல்லை; கட்டுப்பாடுகளை மீறி அவரே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நியாயமாக வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கடும் நெருக்கடியான சூழலில் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய ஒரு தலைவர், அவசரம் அவசரமாக சென்னை வீட்டுக்கு திரும்புகிறார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க
ஸ்டாலின் பதறிப் போய் சென்னையிலிருந்து நள்ளிரவில் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுகிறார்; ஊடக வெளிச்சமின்றி இது நடந்து முடிந்திருக்கிறது

இந்தக் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கி இருக்கக் கூடாது என்பதற்கான நியாயங்களை இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன. ஆனாலும் கருத்துரிமையை மதித்து நிபந்தனைகளோடு காவல்துறை அனுமதி வழங்கியது. இந்த நிபந்தனைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற சமூகப் பொறுப்பு நடிகர் விஜய்க்கும் இல்லை; அவரது கட்சி பொறுப்பாளர்களுக்கும் இல்லை.

கூட்ட நெரிசலில் சாவு என்பது வழக்கமாக "கும்பமேளா"க்களில் தான் நடக்கும். இப்போது தமிழ்நாட்டில் முதன் முதலாக அரசியல் கூட்டம் ஒன்றில் நடந்திருக்கிறது. கரூரில் நடந்தது அரசியல் கூட்டம் அல்ல! அது ஒரு கும்பமேளா!

அடுத்த வாரம் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று இப்போது விஜய் அறிவித்திருக்கிறார்.
கூட்டத்துக்கு அனுமதி கேட்டு அவரது கட்சி இனி காவல்துறைக்கு மனுப்போட முடியுமா? அதற்கான தார்மீக உரிமை உண்டா ?என்ற கேள்வி இப்போது எழுந்து இருக்கிறது.

சொல்லப்போனால்,
முதலமைச்சர் நாற்காலியின் மீதான கனவுலக ஆசைகளின்
கிளைமேக்ஸ் காட்சி கதாநாயகனின் தோல்வியில் முடிந்திருக்கிறது.

சினிமா மட்டுமே அரசியல் என்றால் அது கரூரின் அவலக் காட்சியாகவே இருக்கும்!

விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர் திவிக
28.09.2025

செய்தி: டாலருக்கு நிகரான மதிப்பு இந்திய ரூபாயின் மதிப்பு 88.15 ஆக உயர்ந்தது.
30/08/2025

செய்தி: டாலருக்கு நிகரான மதிப்பு இந்திய ரூபாயின் மதிப்பு 88.15 ஆக உயர்ந்தது.

29/08/2025

கேரளாவில் கனரா வங்கியின் பிராந்திய மேலாளராக பணியாற்றும் ,பீகாரை சேர்ந்த ஒருவர், வங்கி ஊழியர்களிடம் யாரும் அலுவலகத்தில் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்று உத்தரவிட்டார்.

மறுநாள் அலுவலக ஊழியர்கள் மாட்டிறைச்சி விழாவைக் கொண்டாடியுள்ளனர்.

உலகமயமாகிறார் பெரியார் - முதலமைச்சர் பெருமிதம்!"ஆதிக்கம்தான் என் எதிரி" என முழங்கிச் சாதியாலும் பாலினத்தாலும் ஒடுக்கப்பட...
29/08/2025

உலகமயமாகிறார் பெரியார் - முதலமைச்சர் பெருமிதம்!

"ஆதிக்கம்தான் என் எதிரி" என முழங்கிச் சாதியாலும் பாலினத்தாலும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகச் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்த தந்தை பெரியார் அவர்கள் உலகம் முழுமைக்குமானவர்!

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டினையொட்டி உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 4 அன்று நடைபெறும் கருத்தரங்கினில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் உருவப்படத்தினைத் திறந்து வைத்து, தென்னக மயக்கம் தீர்த்த சுயமரியாதை இயக்கம் குறித்த இரு நூல்களையும் பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; பெரியாரியம் உலகத்தவர் அனைவருக்கும்!

செய்தி : சுதேசி பொருட்களை மட்டுமே வாங்குங்கள் - பிரதமர் நரேந்திர மோடி
29/08/2025

செய்தி : சுதேசி பொருட்களை மட்டுமே வாங்குங்கள் - பிரதமர் நரேந்திர மோடி

ஆம்புலன்ஸ் வண்டிபற்றி எடப்பாடி பழனிசாமியின் அறியாமை!🔹மேனாள் முதலமைச்சரின் வன்முறைத் தூண்டுதலால் ஆம்புலன்சையும், ஓட்டுநரை...
26/08/2025

ஆம்புலன்ஸ் வண்டிபற்றி எடப்பாடி பழனிசாமியின் அறியாமை!

🔹மேனாள் முதலமைச்சரின் வன்முறைத் தூண்டுதலால் ஆம்புலன்சையும், ஓட்டுநரையும் தாக்கிய அ.தி.மு.க.வினர்!

🔹அய்யாவும், அண்ணாவும் நடந்துகாட்டிய நன்முறைகளைக் காலந்தாழ்ந்தாவது தெரிந்துகொள்ளட்டும்!

இன்றைய தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், மீண்டும் முதலமைச்சர் ஆவதற்கு, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தயவு நாடி கூட்டணி அமைத்து, தேர்தல் பிரச்சாரத்தினை நடத்தி வருகிறார்!

அவரது பரப்புரைப் பயணத்தில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது, அப் பாதையில் ‘அவசர மருத்துவத் தேவைக்காக’ கூட்டத்திற்குள் சென்ற 108 சேவை ஆம்புலன்ஸ் வண்டியை இயக்கிய ஓட்டுநர்மீது எடப்பாடி பழனிசாமி அவர்கள் நிதானம் இழந்து, ‘‘அடுத்தமுறை, இதுமாதிரி நடந்தால், ஓட்டுபவரே ‘நோயாளி’யாக ஆம்புலன்சில் செல்லவேண்டிய நிலை ஏற்படும்’ என்று ஆவேசப்பட்டுப் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்க, தரம் தாழ்ந்த பேச்சு.

🔸மேனாள் முதலமைச்சர் அறியாமையின் உச்சம்!

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி வகித்து, இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் தகுதியில் உள்ள ஒருவர் – அடுத்தும் மீண்டும் தான் முதலமைச்சர் பதவியைப் பெற, மோடி – அமித்ஷா– பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்.சுடன் கூட்டுச் சேர்ந்து, அண்ணா பெயரில், எம்.ஜி.ஆர். தொடங்கிப் பல ஆண்டு காலம் ஆட்சியிலும் இருந்த ஒரு கட்சியை, கொள்கை பலி பீடத்தில் நிறுத்திவிட்டுள்ள நிலையில், பிரச்சாரப் பரப்புரையில் இப்படிப் பேசுவது அப்பட்டமான ஆணவம் மட்டுல்ல, அறியாமையின், அநாகரிகத்தின் உச்சமும் ஆகும்.

‘ஆம்புலன்சின் உள்ளே யாரும் இல்லை’ என்று கூறுவது, அதுபற்றி அடிப்படைத் தகவல் கூடவா தெரியாமல் உள்ளது?’’ என்று கேட்கவே எவருக்கும் தோன்றும்.
‘மருத்துவப் பயனாளிகள்’ அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் உதவி தேவைப்பட்டு, அதனை மருத்துவமனைக்குச் செல்வதற்கு அழைப்பு விடுத்தால், அப்படிப்பட்ட மருத்துவப் பயனாளிகளை அழைத்து வர, ஆம்புலன்ஸ் காலியாகத்தானே செல்லும். மகப்பேறுக்காகவோ, உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் உள்ளவர்களோ மருத்துவமனைக்குச் செல்ல அழைப்பு வந்தால், உள்ளே ஆள் இல்லாமல் குறிப்பிட்ட முகவரியைத் தேடித்தானே செல்வார்கள்.
சாலைகளில் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் செல்லும் போது வழிவிடாமல் செல்பவர்களுக்கு, தடுப்பவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் வழங்குவதற்கு இந்திய மோட்டார் வாகன (2019 திருத்த)ச் சட்டம் பிரிவு 194–E வகை செய்கிறது. பன்னாட்டளவில் இதுகுறித்து பல்வேறு சட்டங்களும் உள்ளன.

இது எப்படி ஒரு மேனாள் முதலமைச்சருக்குத் தெரியாமல் போனது?

🔸எடப்பாடி பழனிசாமி பேச்சின் எதிரொலி

இப்படி அவர் பேசியதன் விளைவு, அடுத்த சில நாள்களில் துறையூர் பிரச்சாரத்திற்குச் செல்லும்முன், கூட்டப்படிருந்த அவரது கட்சியினரின் தாக்குதல் – வன்முறைக்குக் காரணியாகவும் மாறிவிட்டதே!

கட்சிகளையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு, மனிதநேயத்துடன் இதுபோன்ற பிரச்சினைகளைச் சரியான முறையில் அணுகவேண்டும்!
தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள்!

அவர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் சில:

1. தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் பேசும்போது, பக்கத்தில் மசூதிகளில் தொழுகை நடந்தால், அதன் ஒலி முடியும்வரை, பேச்சை நிறுத்திவிடுவர்; பிறகு தொடர்வது வாடிக்கை.

2. பெரியார், கழகப் பேச்சாளர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, ‘‘சாமி ஊர்வலம்’’ வந்தால், அந்த ஊர்வலம் பொதுக்கூட்டத்தைக் கடந்து செல்லும்வரை, அமைதியாக வழிவிடும்படி பொதுமக்களையும், கூட்டத்தில் அமர்ந்துள்ளவர்களையும் கேட்டுக்கொள்வார்கள். அவர்களைப்பற்றி பேச்சாளர்கள் எவரும் தரம் தாழ்ந்துப் பேசும் பழக்கம் கிடையாது.

🔸அண்ணா பெயரில் கட்சி நடத்துவோர் தெரிந்துகொள்ளவேண்டும்!

முதுபெரும் திராவிட இயக்க முன்னோடி தோழர் என்.வி.நடராசன் அவர்கள், சென்னை கடற்கரையில் ஒருமுறை ஆத்திரத்தில் பேசியபோது, அறிஞர் அண்ணா, அவரை உடனடியாக மன்னிப்புத் தெரிவித்துப் பேசுமாறு, மேடையிலேயே தெரிவித்தார். உடன் அது நடந்தது.

அந்த அண்ணா பெயரில் கட்சி நடத்தும் அதன் பொதுச்செயலாளர், இப்படி திடீர் ஆவேசத்தில் வன்முறையைத் தூண்டும் பேச்சைப் பேசுவது ஏற்கத்தக்கதல்ல!
கூடா நட்பின் தேடா விளைவு போலும்!

மற்றொன்றும் நம் நினைவுக்கு வருகிறது.

🔸ஆம்புலன்ஸ் வண்டியில் பணம் – நினைவிருக்கிறதா?

சென்ற தேர்தல் காலத்தில், ஆம்புலன்ஸ் வண்டியில் பணம் அடுக்கிக் (கரூர் அருகில்) கொண்டு செல்கின்றபோது பிடிபட்டதும், அப்போதும் பா.ஜ.க. – அன்றைய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தயவுடன்தான், நடவடிக்கையே இன்றித் தப்பித்தனர்.

ஆம்புலன்ஸ்கள் ஆளில்லாமல் செல்லும் நிலை இப்போது உண்டு என்பதும், எடப்பாடி பழனிசாமிக்கு நினைவூட்ட வேண்டிய முக்கியச் செய்தியாகும்.
நா காக்க! மக்கள் நலம் காக்க!!

- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

26/08/2025

காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன!

Address

No: 15/5
Nehru Nagar
600049

Alerts

Be the first to know and let us send you an email when Channel Red Sea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel Red Sea:

Share