12/07/2025
அழகுமுத்து சேர்வைக்காரரை "அழகுமுத்துக்கோன்" என்றார்கள். இப்போது "அழகுமுத்துக்கோன் சேர்வை" என்கிறார்கள்.
ஆவணங்களில் உள்ளபடி அவர் அழகுமுத்து சேர்வைக்காரர்தான். அவரைக் " கோன்" ஆக்கி, பிறகு கோனார் ஆக்கி, இடையர் என்ற சாதிக்குள் திணித்ததை அறியாமை என்பதை விட, ஆகப்பெரிய சதி என்பதுதான் உண்மை.
சென்னை எழும்பூரில், அழகுமுத்து சேர்வைக்காரர் சிலையை திறந்து வைத்து, அழகுமுத்துக்கோன் என்று அறிவிலிகள் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவரின் அசல் வாரிசுகள் "மறவர் குல மாவீரர்" அழகுமுத்து சேர்வைக்காரருக்கு சிலை வைத்த தமிழக அரசுக்கு நன்றி!.. நன்றி!!,.. நன்றி !!!. - என்று நோட்டீஸை அடித்து விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்த அவர்களை, உருட்டுக் கட்டைகளுடன் தேடியது சாதிய வன்முறைக் கும்பல். விநியோகித்திருந்த நோட்டீஸ்களைத் தேடித்தேடி வாங்கி அங்கே கிழித்தெறிந்து கொண்டிருந்ததை வரலாறு மறக்காது.
அவரை இடையர் சமூகம் என்று வாதிடும் நபர்கள் " எந்த இடத்தில் அப்படி அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்" என்பதற்கு ஒற்றைத் தரவைக் கூடக் காட்டவே முடியவில்லை!. ஏனென்றால்.. அப்படி உண்மையில் ஒரு தரவும் இல்லை.
தேவர் சமூகத்தின் மாபெரும் வீரர்களை, சாதிய ஓட்டுகளுக்காக அடுத்தவர்களுக்குத் தாரை வார்த்த அரச பயங்கரவாதம் அடியோடு சாய்க்கப் பட வேண்டும். அடிப்படை ஆதாரம் கூட இல்லாமல் பணத்திற்கு விலை போன நீதியும், அசல் வரலாறு அறியாமல், அக்கிரமக்காரர்கள் வகுத்த பாதையில் நடைபோடும் சாதிய சிந்தனையாளர்களும் அழித்து ஒழிக்கப் பட வேண்டும்.
இன்னும் நீதியின் வாசலில் நின்று, உரிமையுள்ள வாரிசுகள் அதன் கதவைத் தட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். விரைவில் நீதி வெல்லும்.
" சத்யமேவ ஜயதே"