09/06/2024
அந்த 16 நாட்கள் !
16 நாட்கள் மட்டுமே இருந்தது அதிலும் கடைசி ஒரு நாள் எந்த பிரச்சாரமும் செய்ய இயலாது . 15 நாட்களிற்குள் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று மாபெரும் வெற்றியை பெற்றுள்ளார் மதிமுகவின் #துரை வைகோ .
வாழ்த்துக்கள் !
இந்த தேர்தலில் ஏமாற்றப்பட்ட கட்சி என்றால் நான் #மதிமுக என்றே நான் சொல்வேன் .
இரண்டு கம்யூனிஸ்டுகளிற்கும் 2 இடங்கள் .
விசிக விற்கு 2 இடங்கள் .
காங்கிரசுக்கு 9 இடங்கள் .
மாநிலம் முழுவதும் மக்கள் பணிகளை செய்துவரும் மதிமுக வை முஸ்லீம் லீக் , கொங்கு வரிசைக்கு தள்ளி ஒரே ஒரு இடம் . ?
இன்னும் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கி இருந்தால் மதிமுக அதன் அங்கீகாரத்தை பெற்று இருக்கும் ? அதனால் என்ன திமுக கூட்டணி கெட்டா போயிருக்கும் ?
இல்லை வேறு ஏதாவது தோல்வி சாத்தியம் என்று கூட்டணிக்கு பாதகம் வந்திருக்குமா ?
நம்மில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அவர்களிற்கு இது போதும்; எப்போதும், அவர்களை அடக்கியே வைப்போம் என்ற மன நிலையில் திமுக இருக்குமானால் , மதிமுக அதன் அங்கீகாரத்தை மட்டும் மனதில் கொண்டு அரசியல் நிலைப்பாடுகளை எடுக்கலாம் .
என்னை கேட்டால் அடுத்து மதிமுக , அதிமுக கூட்டணியில் போட்டியிட அதிக இடங்கள் கிடைக்கிறதென்றால் , 20 சட்டமன்ற இடங்களை போட்டியிட அதிமுக கொடுக்கிறது என்றால் , அதிமுகவும் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கிறது என்றால் , அதிமுக கூட்டணியில் சேர்வது தவறு ஒன்றும் இல்லை . அதற்காக மதிமுக திமுக கூட்டணியை விட்டு கட்டாயம் வரவேண்டும் என்று சொல்லவில்லை ; திமுக மதிமுகவின் தேவையை உண்மையில் உணர வேண்டும் . உரிய அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும் .
மதிமுகவின் இலக்கு அடுத்து குறைந்தது 15 சட்டமன்ற உறுப்பினர்களை சபைக்கு அனுப்புவது என்று இருப்பது மாநிலத்திற்கு நல்லது .
25% கமிஷன் , 20 % என்று உள்ள இந்த கால அரசியலில் , மதிமுகவின் எந்தவொரு சட்ட மன்ற உறுப்பினரையும், இதுவரை இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கமிஷன் வாங்கினார்கள் என்று எதிர்கட்சியினரும் குறை சொல்ல முடியாத படிக்கு அரசியல் பணிகளை செய்து வருகிறார்கள் .
ஏதாவது ஒரு உறுப்பினர் அடாவடி செய்துள்ளார் ; மக்கள் விரோத செயல்களை செய்துள்ளார் .
இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துகிறார் , சாதிய ரீதியாக செயல்படுகிறார் , மத துவேஷங்களை பரப்புகிறார் . மக்களை மரியாதை இல்லாமல் நடத்துகிறார் என்று ஒரே ஒரு நிகழ்வையேனும் மாநிலமெங்கும் யாரும் சுட்டி காட்ட முடியாது .
இதுதான் மதிமுக அரசியலின் அடையாளம் .
வேறு என்ன தகுதி வேண்டும் அரசியல் தரங்களை நிர்ணயிக்க ?
மதிமுகவின் அரசியல் பணிகள் மாநிலத்திற்கு தேவை