
28/08/2025
பானுக்க ராஜபக்ச!!! 💔🥹🏏
2022 ஆசிய கிண்ண கோப்பை வெற்றியை நினைத்தால் இப்போதும் மெய் சிலிர்க்கும் ..
கதை முடிந்து விட்டது என்ற வார்த்தைக்கு கயிற்றைக் கட்டி
நான் கரை சேர்க்கின்றேன் கவலைப்படாதீர்கள் என்றவாறு
முடியாதவற்றை முடியும் என செய்து காட்டிய ராஜன் பானுக்க ராஜபக்ஷ...
ஒரு ராஜபக்சவினால் நாடு படும் மோசமான நிலையில் இருந்த போது கிரிக்கெட் ராஜபக்ஷ மறுபக்கம் நாட்டை வென்று நம் அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினான்..
அன்றையஅவனது அடிகளையும் சிக்சர்களையும் நினைத்துப் பார்த்தால் இப்போதும் உடம்பெல்லாம் பூஸ்ட் ஏறுகிறது...❤️🔥
ஏதோ உள் சதிகளை அறிந்து தான் அன்று ஓய்வை அறிவித்தானோ தெரியவில்லை...
கிரிக்கெட் ரசிகர்களோடு கிரிக்கெட் ரசிக்காதவர்கள் கூட Bring back banuke என்று கோஷமிட்டனர்...
மீண்டும் வந்தான் வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டது சில போட்டிகளில் அடித்தாடினால்..அவ்வப்போது ஓட்டங்கள் இன்றி அவுட் ஆகினான்
அதற்காக ஒரு பெரும் ராஜனை மறந்து விடுதல் என்பது எவ்வளவு பெரிய மடமை...
SLC கிரிக்கெட்டால் அண்மையில் நடத்தப்பட்ட Green, Gray, blue போட்டிகளின் போது பானுக ராஜபக்ஷ மிகத் திறமையாக விளையாடி இருந்தமை நம் எல்லோருக்கும் தெரியும்
T20 ஸ்பெஷலிஸ்ட் Banuke Rajapakshe 2025 ஆசியக் கிண்ண இலங்கை அணி குழாமில் சேர்க்கப்படாமை என்னைப் பொறுத்த வரைக்கும் இல்லை இலங்கை கிரிக்கெட் ரசிகர்களைப் பொருத்தவரைக்கும் தேர்வகம் செய்யும் மிகப்பெரும் துரோகமே அன்றி வேறில்லை ...💔
Shame on you Sri Lanka Cricket 💔