Yaalaruvi /யாழருவி

Yaalaruvi /யாழருவி News, Media
(1)

Yaalaruvi is a Latest Tamil News Portal which delivers Sri Lanka News, India News, World News, Sports News, Cinema News, Technology News in Yaalaruvi.com

இனிய காலை வணக்கம்
06/07/2025

இனிய காலை வணக்கம்

Hi friends
19/06/2025

Hi friends

உங்களுக்கு போதுமான தூக்கம் இல்லாதபோது , ​​உங்கள் மூளை உண்மையில் "தன்னைத்தானே சாப்பிட" ஆரம்பிக்கும்.பொதுவாக, ஆஸ்ட்ரோசைட்ட...
06/06/2025

உங்களுக்கு போதுமான தூக்கம் இல்லாதபோது , ​​உங்கள் மூளை உண்மையில் "தன்னைத்தானே சாப்பிட" ஆரம்பிக்கும்.

பொதுவாக, ஆஸ்ட்ரோசைட்டுகள் எனப்படும் சிறப்பு மூளை செல்கள் கழிவுகளை சுத்தம் செய்து பலவீனமான அல்லது சேதமடைந்த நரம்பியல் இணைப்புகளை அகற்ற உதவுகின்றன. ஆனால் தொடர்ந்து தூக்கமின்மையால், இந்த செல்கள் அதிகமாக செயல்படத் தொடங்கி ஆரோக்கியமான மூளை ஒத்திசைவுகளை கூட உடைக்கத் தொடங்குகின்றன.

மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், மூளையில் உள்ள மைக்ரோக்லியா எனப்படும் நோயெதிர்ப்பு செல்கள் அவற்றின் செயல்பாட்டை அதிகரிக்கின்றன. இந்த வகையான அதிகப்படியான செயல்பாடு அல்சைமர் போன்ற மூளை நோய்களின் ஆரம்ப கட்டங்களில் நடப்பதை ஒத்திருக்கிறது - இது நீண்டகால தூக்கமின்மை நீண்டகால மூளை சேதத்திற்கு வழிவகுக்கும் என்பதைக் குறிக்கிறது.

* #வாக்கு_தவறாதே* கடுங் குளிர் நிறைந்த ஒரு இரவில் ஒரு மன்னன் தன் அரண்மனைக்கு வந்தான். அரண்மனைவாசலில் மெல்லிய ஆடையுடன்   ...
06/06/2025

* #வாக்கு_தவறாதே*

கடுங் குளிர் நிறைந்த ஒரு இரவில் ஒரு மன்னன் தன் அரண்மனைக்கு வந்தான். அரண்மனைவாசலில் மெல்லிய ஆடையுடன் வயது முதிர்ந்த காவலாளியைப் பார்த்தான்.

"குளிர் கடுமையாக இருக்கிறதே. அதை நீ உணரவில்லையா?" என்று கேட்டான்.

"ஆம். உணர்கிறேன் மன்னா. ஆனால், குளிரை தடுக்கும் ஆடை என்னிடம் இல்லையே!" என்றான் காவலாளி.

அதற்கு மன்னன், "கவலைப்படாதே, நான் அரண்மனை சென்று குளிரை தாங்கும் கம்பளி ஆடையை உனக்கு அனுப்புகிறேன்" என்று கூறி அரண்மனைக்குள் சென்றான்.

மன்னரின் வார்த்தையை கேட்டு அந்த காவலாளி அகமகிழ்ந்தான்.

அரண்மனைக்கு சென்ற மன்னன் தான் வாக்களித்தை மறந்து விட்டான்.

காலையில் அந்த காவலாளி இறந்து கிடந்தான். அவனருகே ஒரு கடிதம் இருந்தது.

அந்த கடிதத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது.

"மன்னா!! இவ்வளவு நாட்களாக கடும் குளிரை மவுனமாக தாங்கி கொண்டிருந்தேன். ஆனால், குளிரை தாங்கும் ஆடை கிடைக்கும் என்ற என் எதிர்பார்ப்பு இதுவரை இருந்த என்னுடைய மன உறுதியை குலைத்து என்னை கொன்று விட்டது".

ஆம்! சகோதரர்களே!
மற்றவர்களிடம் நீங்கள் கொடுக்கும் வாக்குறுதி மற்றவரிடம் நீங்கள் எண்ணி பார்க்காத அளவு நம்பிக்கையை ஏற்படுத்தலாம். எனவே, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.

நீங்கள் அறியமாட்டீர்கள்! உங்களின் நிறைவேற்றாத வாக்குறுதி நீங்கள் வாக்களித்தவருக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று.

Good morning.
12/03/2025

Good morning.

இனிய காலை வணக்கம் நண்பர்களே..
08/09/2024

இனிய காலை வணக்கம் நண்பர்களே..

   #யாழருவி
21/08/2024

#யாழருவி

21/08/2024

யாழருவி செய்திகள்Watch Latest N...

ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்...!அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள்அவன் அருகில் வந்தார்...!கடவுள் :" ...
07/06/2024

ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்...!
அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள்
அவன் அருகில் வந்தார்...!

கடவுள் :
" வா மகனே...!
நாம் கிளம்புவதற்கான
நேரம் வந்து விட்டது...! "

மனிதன் :
" இப்பவேவா ?
இவ்வளவு சீக்கிரமாகவா ?
என்னுடைய திட்டங்கள்
என்ன ஆவது ? "

கடவுள் :
" மன்னித்துவிடு மகனே...!
உன்னை கொண்டு
செல்வதற்கான நேரம் இது...! "

மனிதன் :
" அந்தப் பெட்டியில் என்ன உள்ளது ? "

கடவுள் :
" உன்னுடைய உடைமைகள்...! "

மனிதன் :
" என்னுடைய உடைமைகளா...!
என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்
எல்லாமே இதில்தான்
இருக்கின்றனவா ? "

கடவுள் :
" நீ கூறியவை அனைத்தும்
உன்னுடையது அல்ல..
அவைகள் பூமியில்
நீ வாழ்வதற்கு தேவையானது...! "

மனிதன் :
" அப்படியானால்
என்னுடைய
நினைவுகளா ? "

கடவுள் :
" அவை காலத்தின் கோலம்...! "

மனிதன் :
" என்னுடைய
திறமைகளா ? "

கடவுள் :
" அவை உன் சூழ்நிலைகளுடன்
சம்பந்தப்பட்டது...! "

மனிதன் :
" அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா ? "

கடவுள் :
" மன்னிக்கவும் !
குடும்பமும் நண்பர்களும்
நீ வாழ்வதற்கான வழிகள்...!"

மனிதன் :
" அப்படி என்றால்
என் மனைவி மற்றும் மக்களா ? "

கடவுள் :
" உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல...! அவர்கள்
உன் இதயத்துடன்
சம்பந்தப்பட்டவர்கள்.! "

மனிதன் :
" என் உடலா ? "

கடவுள் :
"அதுவும் உனக்கு
சொந்தமானதல்ல...!
உடலும் குப்பையும் ஒன்று...! "

மனிதன் :
" என் ஆன்மா ? "

கடவுள் :
"அதுவும் உன்னுடையது அல்ல...! அது என்னுடையது...! "

மிகுந்த பயத்துடன்
கடவுளிடமிருந்து
அந்தப் பெட்டியை
வாங்கி திறந்தவன்
காலி பெட்டியை கண்டு
அதிர்ச்சியடைகிறான்...!

கண்ணில் நீர்
வழிய கடவுளிடம்
" என்னுடையது என்று
எதுவும் இல்லையா ? "
என கேட்க...!

கடவுள் சொல்கிறார் :

அதுதான் உண்மை !
நீ வாழும் ஒவ்வொரு
நொடி மட்டுமே
உன்னுடையது...!
வாழ்க்கை என்பது
நீ கடக்கும் ஒரு நொடிதான்...!

ஒவ்வொரு நொடியையும்
சந்தோஷமாக வாழ்...!
எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே...!

ஒவ்வொரு நொடியும் வாழ்...! உன்னுடைய வாழ்க்கையை வாழ்...!

மகிழ்ச்சியாக வாழ்...! அது மட்டுமே நிரந்தரம்...!

உன் இறுதி காலத்தில்
நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது...!

வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்...!

Address

Canberra, ACT
2913

Alerts

Be the first to know and let us send you an email when Yaalaruvi /யாழருவி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yaalaruvi /யாழருவி:

Share