
16/05/2023
அவர்கள் எங்கேயும் போய்விடவில்லை
எங்கும் எதிலுமாய் இன விடுதலை தாகம்
பெருகிடும் மனங்களில் எல்லாம்
இன்னும் உயிர்ப்போடு தானிருக்கிறார்கள்
அவர் முன்னின்று விளக்கெரித்து
விழிகசிந்து மீளத் தலைநிமிர்த்தி
அவர் வரலாற்று வழிதொடர்வோம்
இது சத்தியம் ..சத்தியம்.
முள்ளி வாய்க்கால் முடிவா இல்லை
என்று கூறுவோம்
தனித் தேசம் தானே எங்கள் எல்லை
ஒன்று கூடுவோம்
க.குவேந்திரன்
( க.குவே)