11/06/2025
வாழ்த்துகள் ஜோஹ்ரான் மம்தானி அவர்களே!
இந்திய வம்சாவளி திரு. ஜோஹ்ரான் மம்தானி (வயது 34) அமெரிக்காவின், உலகின் மிக முக்கிய நகரமான நியூயார்கின் மேயராக (மாநகரத் தந்தை) மக்களால் ஏகோபித்த வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.
தனது பிரச்சாரத்தின் போதே இந்து கோவிலிலேயே இந்தியப் பிரதமர் மோடி அவர்களை கடுமையாக விமர்ச்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதுவுமன்றி அவரது வெற்றியுரையின் போது சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் உயர்திரு ஜவஹர்லால் நேரு அவர்கள் பேசியதில் இருந்து “வரலாற்றில் அரிதாகவே ஒரு தருணம் வரும் - அப்போது நாம் பழையதிலிருந்து புதியதுக்குள் ஒரு அடியை எடுத்து வைக்கிறோம்," எனக் கூறி அவரை அமெரிக்கவாழ் மக்களிடம் நேரு அவர்களின் இலட்சிய உரையை கூறியது இந்திய மக்கள் அனைவருக்கும் பெருமிதமாக இருக்கும் என நம்புகிறோம்.