Thamilaaram TV

Thamilaaram TV Support my pages for political News, Promotions, Media Updates, News Updates 📰❤️🙏🏻

01/10/2026
01/10/2026

🚀புடினின் புதிய ஆயுதம்!

🚀உக்ரைன் மீது அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணை தாக்குதல்!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் விளாடிமிர் புடின் அணு ஆயுத திறன் கொண்ட ஓரேஷ்னிக் (Oreshnik) ஏவுகணையை உக்ரைன் மீது ஏவியுள்ளார். மணிக்கு 8,000 மைல் வேகத்தில் செல்லும் இந்த அதிநவீன ஏவுகணை தாக்குதல் உக்ரைன் நகரமான லிவிவ்வை (Lviv) தாக்கியது.

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லைக்கு அருகே நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஐரோப்பாவின் மிகப்பெரிய நிலத்தடி எரிவாயு சேமிப்பு வசதியை குறிவைத்து நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. டிசம்பர் மாத இறுதியில் ரஷ்ய ஜனாதிபதியின் இல்லத்தின் மீது உக்ரைன் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

🚀உக்ரைன் மறுப்பு
ரஷ்யாவின் நோவ்கோரோட் (Novgorod) பிராந்தியத்தில் உள்ள இல்லத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக கிரெம்ளின் கூறுவது பொய் என்று உக்ரைன் மறுத்துள்ளது. கீவ் (Kyiv) மற்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் (Volodymyr Zelensky) சொந்த ஊரான கிரிவி ரிஹ் (Kryvyi Rih) உட்பட உக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்யா பாரிய தாக்குதல்களை நடத்தியது.

🚀லிவிவ் மீதான தாக்குதல்
மேற்கு உக்ரைன் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டபோது அருகிலுள்ள போலந்தில் (Poland) உள்ள நேட்டோ போர் விமானங்கள் உடனடியாக களமிறங்கின. ரஷ்யாவின் அஸ்ட்ரகான் (Astrakhan) பிராந்தியத்தில் இருந்து ஏவப்பட்ட ஓரேஷ்னிக் ஏவுகணை 15 நிமிடங்களில் லிவிவ்வை தாக்கியது. இரவில் வானம் இளஞ்சிவப்பு நிறமாக மாறியது.
இந்த ஏவுகணை தாக்குதலை உக்ரைன் விசாரணை குழு உறுதிப்படுத்தியுள்ளது. மாஸ்கோவிற்கு வடக்கே வால்டாயில் (Valdai) உள்ள தனது அரண்மனை மீது தாக்குதல் நடத்தி புடினை கொல்ல உக்ரைன் முயற்சி செய்ததற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால் உக்ரைனும் மேற்குலக உளவுத்துறையும் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளன.

🚀ரஷ்யாவின் விளக்கம்
டிசம்பர் 29, 2025 அன்று நோவ்கோரோட் பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய ஜனாதிபதியின் இல்லத்தின் மீது கீவ் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஓரேஷ்னிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டது. இந்த தாக்குதலின் மூலம் உக்ரைனின் இராணுவ உற்பத்திக்கு உதவும் எரிசக்தி உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

🚀இரண்டாவது முறை பயன்பாடு
ஓரேஷ்னிக் ஏவுகணை இதற்கு முன்பு 2024 ஆம் ஆண்டில் டினிப்ரோவில் (Dnipro) பயன்படுத்தப்பட்டது. அப்போது வெடிகுண்டு இல்லாமல் மக்களை அச்சுறுத்தும் நோக்கில் பயன்படுத்தப்பட்டது. இந்த ஏவுகணை பெலாரஸில் (Belarus) நேட்டோ எல்லைக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அஸ்ட்ராபான் பிராந்தியத்தில் உள்ள கபுஸ்டின் யார் (Kapustin Yar) ஏவுகணை சோதனை தளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை 900 மைல் தூரம் சென்று இலக்கை தாக்க ஏழு நிமிடங்களுக்கு குறைவாகவே எடுத்திருக்கும்.

🚀லிவிவ் தாக்குதலின் நோக்கம்
குறைக்கப்பட்ட அல்லது செயலற்ற வெடிகுண்டு மூலம் புடின் நடத்தும் தாக்குதல் ஒரு வலிமையான ஆயுதமாக பார்க்கப்படுகிறது. இலக்குகளை அழிப்பதை விட மக்களை அச்சுறுத்துவதற்கும் போர் தீவிரமடையும் என்பதை காட்டுவதற்கும் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று டிரம்ப் எச்சரித்தும் புடின் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

🚀கீவ் மீதான தாக்குதல்
ரஷ்யா கீவ் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தியது. குடியிருப்புப் பகுதிகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் பலர் கொல்லப்பட்டனர். கீவில் ஆறு மணி நேரத்தில் நடந்த தாக்குதலில் ஐந்து மீட்புப் பணியாளர்கள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர். 24 பேர் காயமடைந்தனர்.

01/10/2026
Kim Jong Un Pledges “Permanent Support” to Vladimir Putin in Letter, KCNA Reports!North Korean leader Kim Jong-un has as...
01/10/2026

Kim Jong Un Pledges “Permanent Support” to Vladimir Putin in Letter, KCNA Reports!

North Korean leader Kim Jong-un has assured Russian President Vladimir Putin of his unwavering support, according to state media KCNA. The letter, sent in response to an earlier note from Putin, expresses Kim’s commitment to support Russia’s policies indefinitely.

“I will unconditionally respect and unconditionally support all your policies and decisions and I have a willingness to be always with you for the sake of you and your Russia,” Kim wrote, KCNA reported.

Address

Jack Monkman Crescent
Markham, ON

Alerts

Be the first to know and let us send you an email when Thamilaaram TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thamilaaram TV:

Share