Evo Vlog

Evo Vlog ❤ "நெஞ்சமே புலியாகப் பயின்றிடு; அஞ்சாமை உன் இயல்பாகட்டும்"❤

10/11/2025

ALONE ALWAYS BEST 👌

எந்த பிரச்சனை வந்தாலும் அதுக்கு என்ன பண்றதுனு தெரியாம‌ இருக்கப்போஅவன் கிட்ட‌தான் போய் நிப்பேன்அதுக்கு Solution கிடைக்கித...
10/10/2025

எந்த பிரச்சனை வந்தாலும் அதுக்கு என்ன பண்றதுனு தெரியாம‌ இருக்கப்போ
அவன் கிட்ட‌தான் போய் நிப்பேன்

அதுக்கு Solution கிடைக்கிதோ இல்லையோ
அத அவன் கிட்ட சொல்லிட்டேன் என்றதே
எனக்கு பெரிய நிம்மதியக் கொடுக்கும்.

எப்பவும் ரொம்ப‌ குழப்பமா‌ இருக்கப்போ
அவனோட அந்த‌ வார்த்தைகள்
என்ன‌ ஆறுதல்படுத்தும்.

எனக்காக எதையும் செய்ய துணியிற
அவனோட அந்த அன்பு

என்ன என்னாலையே புரிஞ்சிக்க முடியாம‌ நான் திண்டாடிட்டு இருக்கப்போ
அவன் மட்டும் என்ன புரிஞ்சிக்கிறது என்னவோ புதுசா இருக்கும்

இப்பிடியும் ஒரு பெண்ணிடம் ஒருவனால நட்புடன் இருக்க முடியுமானு நான் வியக்குற அந்த ஒவ்வொரு நொடியும்
அவன், நட்பு ஒரு அதிசயம் தான்.

The right one will treat you perfect and
Never get tired of you.
miss u da 😔

10/08/2025

Don't waste your time ✨️

10/08/2025

Parc Jean-Drapeau - Sculpture Garden.

Moment

It's not a full garden, but this little corner of Parc Jean-Drapeau has one of the most peaceful vibes in the city A single sculpture surrounded by flowers, benches, and soft shade-perfect for a quiet pause, a photo, or just daydreaming by the breeze.

Parc Jean-Drapeau

சுவாரஸ்யமான பெண்கள் உளவியல் இதோ! 👇உலகில் ஏதோ ஒரு மூலையில்…ஒவ்வொரு 90 வினாடிக்கும்… ஒரு பெண் பிரசவத்தினால் அல்லது கர்ப்பம...
10/03/2025

சுவாரஸ்யமான பெண்கள் உளவியல் இதோ! 👇

உலகில் ஏதோ ஒரு மூலையில்…ஒவ்வொரு 90 வினாடிக்கும்… ஒரு பெண் பிரசவத்தினால் அல்லது கர்ப்பம் தொடர்பான பிரச்சனையினால் இறந்து போகிறார்🤰

பெண்கள் ஒரு வருடத்தில் 120 மணி நேரங்கள் தங்களை கண்ணாடியில் பார்த்துக்கொள்ள செலவிடுகிறார்கள்🪞

பெண்களுக்கு தங்களிடம் அறிவுரை கேக்கும் மற்றும் குழந்தைகள் அல்லது பிராணிகளிடம் அன்பாக இருக்கும் ஆண்களை ரொம்ப புடிக்கும் 🐕

பெண்கள் ஒருநாளில் 20 000 க்கும் மேற்பட்ட வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள்🗣️

வெள்ளைக்கார பெண்களை காட்டிலும் கருப்பினத்தை சேர்ந்த பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள அதிகமான சவால்களை எதிர்நோக்குகிறார்களாம். இவர்கள் அதிகப்படியான மனவுளைச்சளுக்கும் ஆளாகிறார்கள்👩🏽

பெண்களால் ஒருவரின் முகத்தை கண்டு, அவரின் மனதை புரிந்துகொள்ள முடியும்💁‍♀️

வாகனம் ஓட்டும் பயிற்சியில் தேர்ச்சி பெற…பெண்களுக்கு ஆண்களை விட கூடுதல் நேரம் தேவைப்படுகிறது🚕

ஒரு சில பெண்களை மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்த முடியாது…. அவர்களை சமாதானப்படுத்திய பிறகுதான் மன்னிப்பு கேக்கவேண்டும்🙏

70% பெண்கள் தங்கள் வேதனையையும் வலியையும்… மௌனத்தால் வெளிப்படுத்துகிறார்கள்😶

பெண்களின் இருதயம் ஆண்களின் இருதயத்தை விட வேகமாக துடிக்கும்🫀

பெண்கள் சமாதானப்படுத்துவதில் கைத்தேர்ந்தவர்கள்🫂

பெண்கள் ஒரு நிமிடத்தில் 19 முறை கண்ணிமைக்கிறார்கள்👁️

பெண்களுக்கு உடம்பு முழுக்க கண் என்று சொல்லுவார்கள். ஒருவர் தன்னை எவ்வளவு தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தாலும் அவர்களால் அதை உணரமுடியும்👀

பெண்களுக்கு ஆண்களை காட்டிலும் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி உண்டு💪

ஒரு சராசரி பெண்ணால் 47 மணி நேரம் 15 நிமிடம் மட்டுமே ஒரு ரகசியத்தை பாதுகாக்க முடியும்🤭

பெண்களால் ஆண்களை காட்டிலும் அதிகமான வலியை பொறுத்துக்கொள்ள முடியும். இதற்கு அறிவியல் ரீதியான சான்றும் உள்ளது. So, மனதளவில் மட்டுமன்றி உடலளவிலும் ஒரு பெண் வலிமையானவளே!👏

பெண்ணானவள் தன்னை ஒரு ஆண் புகழுவதை விட…. ஒரு பெண் புகழுவதை இன்னும் அதிகமாக விரும்புகிறாள். ஒரு ஆண் தனக்கு பிடித்த பெண்ணிடம் செய்யக்கூடாத ஒரு தவறு, அவள் முன்னிலையில் இன்னொரு பெண்ணை புகழுவது🤐

பெண்கள் ஒரு வருடத்தில் 30–64 முறை அழுகிறார்கள். ஒரு நாளில் 62 முறை சிரிக்கிறார்கள்.😪

பெரும்பாலான பெண்கள் தங்களுடைய கணவனை அல்லது காதலனை பிற பெண்கள் பாக்கக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே அவர்களுக்கு ஒருசில உணவுகளை கொடுத்து, அவர்களை பருமனாக்குகிறார்கள் 🥙

நாம் கேக்காமலே நமக்கு சமைத்து தரும் பெண்கள், நம் மீது அதிகமான அன்பை வைத்திருக்கிறார்கள்🍜

பெண்கள் என்ன உடை உடுத்தவேண்டும் என்பதை முடிவுசெய்யவே….. தங்கள் வாழ்நாளில் ஒரு வருடத்தை செலவிடுகின்றனர்👗

பெண்களால் ஒரு விசயத்தை மிக மிக துல்லியமாக கணிக்க முடியும். "பெண் புத்தி பின் புத்தி" என்று முன்னோர்கள் சொல்லி சென்றதை… பலர் பெண்கள் பிற்போக்கு சிந்தனையாளர்கள் என்று தவறாக எடுத்து கொண்டார்கள். உண்மையில், பின்னே வருவதை முன்னே கணிப்பவள் பெண், என்பதே இதன் பொருளாகும்.🌀

பெண்கள் ஆண்களை விட மிக சீக்கிரமாக பேச, எழுத, படிக்க கற்றுக்கொள்கிறார்கள்📖

ஒரு பெண் தன் வாழ்நாளில் சராசரியாக 4 வருடங்கள் மாதவிடாய் அனுபவிக்கிறாள்📝

ஒரு பெண்ணுக்கு பிடித்த பாடல்… அவள் உதடுகளை விட அவளை பற்றி அதிகமாக சொல்லிவிடும்🎶

90% பெண்கள் தங்களுக்கு தெரியாத குழந்தைகளை உரிமையோடு கொஞ்சுகிறார்கள்👶

உதட்டுசாயம் (லிப்ஸ்டிக்) பயன்படுத்தும் பெண்கள், ஏறக்குறைய 2 அல்லது 3 கிலோ லிப்ஸ்டிக்கை சாப்பிட்டு முடிக்கிறார்கள் 💄

ஒருவர் தன்னிடம் பொய் பேசுகிறார் என்று தெரிந்தால்… அவர்களிடம் ஒன்னும் கேக்காமல், வெறிக்க வெறிக்க பார்ப்பார்களாம்🤨

பெண்கள் தங்கள் காதலனை விட அவர்களின் தம்பி/அண்ணண்களை அதிகமாக நேசிக்கிறார்களாம்🤗

ஒரு பெண் சிறுவயதில் எப்படி இருந்தாரோ… அதே மனநிலையில் வளர்ந்தபிறகு இருக்க வாய்ப்பில்லை. சிறுவயதில் குழந்தைத்தனமாக இருந்தவர் தற்போது மனமுதிர்ச்சியுடனும் (mature), சிறுவயதில் மனமுதிர்ச்சியுடன் இருந்தவர், பிறகு குழந்தைத்தனமாக மாறிவிடுவார்களாம்🤔

33% பெண்கள் தாங்கள் பருமனாக இருப்பதாக நினைக்கிறார்கள், ஆனால் 52% பெண்கள் தங்கள் உடல் எடையை குறைப்பதில் ஈடுபடுகிறார்கள். அதாவது உலகில் 19% பெண்கள் தேவையில்லாமல் உடல் எடையை குறைக்கிறார்கள்🏃‍♀️

100 பெண்களில் 1 பெண் மட்டுமே தன் காதலனை திருமணம் செய்து கொள்கிறார்😥

ஒருசில பெண்கள் கொஞ்சம் திமிருடன், யாரையும் நம்பாமல், கடு கடுவென இருப்பார்கள். இவர்கள் யாருடனும் பழகாமல் தன்னை சுற்றி ஒரு பெரிய மதில் எழுப்பியிருப்பார்கள். சமுதாயமும் கடந்து சென்றவர்களும் அவர்கள் மீது வீசிய கற்களே அங்கு மதிலாக நின்றிருக்கும்🧱

75% பெண்கள் தனக்கு விடை தெரிந்தபிறகே கேள்வியை கேக்கிறார்கள்🧠 ...

✨️✨️
10/02/2025

✨️✨️

எப்ப பாரு பேஸ்புக்லயே இருக்கியே.. உனக்கு வேற வேலை வெட்டியே இல்லையா என்று கேட்பவர்களுக்கு...ஒரே ஒரு நாள் நீங்க இங்கே வந்த...
11/10/2024

எப்ப பாரு பேஸ்புக்லயே இருக்கியே.. உனக்கு வேற வேலை வெட்டியே இல்லையா என்று கேட்பவர்களுக்கு...

ஒரே ஒரு நாள் நீங்க இங்கே வந்து பாருங்க...

ஒரே ஒரு நாள்...

முகநூலில் நீங்க இருந்து பாத்துட்டு சொல்லனும்..

அப்ப புரியும் எங்க வலி என்னன்னு..

எவ்வளவு post ..
எவ்வளவு டென்ஷன்..
எத்தனை லைக்..
எத்தனை கமெண்ட்,
எத்தனை நக்கலு..
எத்தனை வம்பு தும்பு..
எத்தனை சண்டை..
எத்தனை பஞ்சாயத்து...

எத்தனை பொறந்த நாளு, எத்தனை நினைவு நாளு.

எத்தனை பாட்டு.. எம்பூட்டு தகவலு..
என்னமோ..லேசா சொல்லிட்ட..

இதெல்லாம் அனுபவிச்சு பார்த்தாதான்யா தெரியும்...

பெண்கள் தினம்...
பேய்கள் தினம்...

பெரியம்மா தினம்னு
நண்பர்கள் தினம்
டீ குடிச்ச தினம்...
வரிசையா வரும்..

அதுக்கு எல்லாம் ஞாபகமா வாழ்த்து சொல்லணும்...

இது இல்லாம...

புரஃபைல் பிக்சரை சூழ்நிலைக்கு தகுந்தாப்புல அடிக்கடி மாத்தி வைக்கணும்..

நடுவுல எத்தனை
Good morning...

எத்தனை
Good Afternoon..

எத்தனை
Good Night...

அது மட்டுமா?
சாப்டாச்சா...

எங்க வீட்ல தோசை...

உங்க வீட்ல பூரி...

நைஸ்
லவ்லி
பாட்டு சூப்பர்..

இப்படி எல்லாம் அள்ளி விடணும்...

அவங்க
பையன்/பொண்ணு ஏதாவது perform பண்ணா..

Wow, Nice, Super,
Excellent-ன்னு
தாராளமா சொல்லணும்...

ஆத்திர அவசரத்துக்கு நமக்கு சப்போர்ட் பண்றதுக்குன்னு ரெண்டு பேரையாவது செட் அப் பண்ணணும்...

நெட் பூராவும் நாயா பேயா நடந்து ஷேர் பண்றதுக்கு மீம்ஸ்களை தேடி பிடிக்கனும்...

மச்சி, அக்கா, அண்ணன், தம்பி, தங்கச்சி, தோழா, தோழின்னு மச்சான் , மச்சி உறவுமுறை வைத்து கமெண்ட் போடணும். இல்லைன்னா வம்பிழுக்கணும்...

பாராட்டவே தெரியாதவங்களை கடந்து போகணும்...

எதையும் வந்து பார்த்தா தான்யா தெரியும் எங்க கஷ்டம் என்னன்னு!
தீக்குள்ள விரலை விட்டால் சுடும்னு சொல்றேன்..

உங்களுக்குப் புரியல...

முகநூலில் பல இதயங்கள் மகிழ்கின்றன.

எனவே முகநூலில் இருப்பவரை தப்பா எடை போடாதீர்கள்..

நாங்க எவ்வளவு தியாகம் செய்றோம்..

இன்னும் சொல்ல போனா சுதந்திரதினம், குடியரசு தினம் மறக்காம இருக்க காரணமே இந்த முகநூல் தான்யா....

ஓவரா பதிவு போடுறதால கெட்டவங்க, வேலை வெட்டி இல்லாம இருக்காங்கன்னு தப்பு கணக்கு போடாதீங்க...

உலகில் நடந்து பயணம் செல்லும்நடை பயணத்திற்கான நீளமான சாலை‌ : #கேப்டவுன் (தென்னாப்பிரிக்காவிலிருந்து) #மகடன் (ரஷ்யா வரை) ச...
11/06/2024

உலகில் நடந்து பயணம் செல்லும்
நடை பயணத்திற்கான நீளமான சாலை‌
:
#கேப்டவுன் (தென்னாப்பிரிக்காவிலிருந்து)
#மகடன் (ரஷ்யா வரை) சாலை மற்றும் தரைப்பாதை உள்ளது.

விமானங்கள், படகுகள் தேவையில்லை. வழிநெடுகிலும் மேம்பாலம் தரைப் பாலங்கள் உள்ளன.

இதன் நீளம் மட்டும் 22,387 கிலோமீட்டர் ஆகும், இதில் பயணம் செய்ய 4,492 மணி நேரம் ஆகும்.

187 நாட்கள் இடைவிடாமல் நடந்தால் அல்லது 561 நாட்கள் ஒரு நாளைக்கு
8 மணி நேரம் நடந்தால்தான் இலக்கை அடைய முடியும்.

பாதையில், நீங்கள் 17 நாடுகள், ஆறு நேர மண்டலங்கள் மற்றும் வருடத்தின் அனைத்து பருவங்களையும் கடந்து செல்ல முடியும்..!

யாராவது இதில் பயணித்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

10/16/2024

ஒரு சிறுவனின்
செருப்பை
கடல் அலை
அடித்துச் சென்றது...!
அவன் கடற் கரை
மணலில்
"இக்கடல்
ஒரு திருடன்"
என எழுதிவைத்தான்...!

ஒரு மீனவனுக்கு
அபரிமிதமான
மீன்களை
கடல் அள்ளிக்
கொடுத்தது...!
அவன்
கடற் கரையில்
"வாரிவழங்கும்
கடல் " என பதிந்து
வைத்தான்...!

கடலில்
முத்துக்குளிக்கும்
ஒருவனுக்கு
முத்துக்கள்
கிடைத்தன...!
அவன்
கடற் கரையில்
"வளம் மிக்க கடல் "
என்று எழுதி
வைத்தான்...!

இளைஞன்
ஒருவன்
கடலில் மூழ்கி
மரணித்தான்...!
அவனது தாய்
" இது ஒரு
கொலைகாரக் கடல் "
என எழுதிவைத்தாள்...!

பின்னர்
ஒரு பேரலை வந்து
அவர்கள்
கரையில் பதிந்து
வைத்த
யாவற்றையும்
அழித்துவிட்டு,
கடல்
அன்றாடப் பணியை
தொடர்ந்தது...!

மனிதர்களின்
சில புரிதல்களை..
மனதுக்குள்
கொண்டு செல்ல
வேண்டியதில்லை...!

அவரவர்
தங்களின்
அனுபவத்தை
மாத்திரமே
தெரிவிப்பார்கள்...!

வாழ்க்கையை
கடக்க
வேண்டுமெனில்,
பக்குவபடுத்திக்
கொண்டு
போய்க் கொண்டே
இருக்கவேண்டியது
தான்...!

ஆனால்,
தெளிவான
புத்தியோடும்,
நேர்மையான
பார்வையுடனும் ..
அவதானமாக பயணிப்பது,
மிக முக்கியமாகும்...!

😍

10/04/2024

பெண்களைப் பற்றி ஒரு ஆண் எழுதியமனதை தொடும் வரிகள்

நான் பிறந்த போது என்னைத் தூக்கி அரவணைத்தது ஒரு பெண்- என் அம்மா

மனதை தொடும் வரிகள்.
என் குழந்தைப் பருவத்தில் எனக்காகப் பரிந்து என்னுடன் விளையாடினாள் ஒரு பெண் - என் சகோதரி.

நான் பள்ளிக்கு சென்ற போது அன்புடன் கல்வி கற்பித்தவள் ஒரு பெண் - என் ஆசிரியை

நான் கவலையுடன் இருந்த போது தோள் கொடுத்து ஆறுதல் சொன்னாள் ஒரு பெண் - என் தோழி

எனக்கு உறவாகவும் உயிராகவும் துணையாகவும் இருந்தாள் ஒரு பெண் - என் மனைவி

நான் கோபமாக இருந்தபோது தனது மழலைச் சொற்களால் என்னை மயங்க வைத்தாள் ஒரு பெண் - என் மகள்

நான் இறக்கும் போது என்னைத் தன்னுள் உறங்கச் செய்வாள் ஒரு பெண் - என் தாய்நாடு

ஒரு பெண் வாழ்க்கையில் தனக்கு ஏற்படும் கவலைகளையும் துன்பங்களையும் தனது பிராத்தனைகளாலும் அசையாத நம்பிக்கையாலும் எதிர்கொள்கிறாள்.

நீ ஒரு ஆணாக இருந்தால் ஒவ்வொரு பெண்ணையும் போற்றி வணங்கு!

நீ பெண்ணாக இருந்தால் அதற்காகப் பெருமைப்படு

10/01/2024

மெளனமாக இரு 🤫🤫

09/29/2024

#திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்தான்இருக்கும்...

*காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பி ஒரு கப் காஃபி கொடுத்தால் போதும்,
இரவு நான் உறங்கும் வரை எனக்குத் தேவையானதைச் செய்ய பம்பரமாய் சுழல்வாள்.

* பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கிறேன்,
என் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.!!

*பசிக்கிறது என்று நான் சொன்னதும் என்னை அவள் முத்தமிடுகிறாள் என்றால் ,இன்னும் சமையல் தயாராகவில்லை என்று அர்த்தம்..!!

* சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன்,
ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது ..?

* தோட்டத்தில் நீ நின்றிருந்த போது
உன்னை உரசிச் சென்ற வண்டு , மற்றொரு வண்டிடம் கேட்டது.... வாசனை புதிதாய் இருக்கிறதே இது என்ன பூ என்று !!!

* மழைக்காக அவளும் இடிக்காக நானும் காத்திருக்கிறோம்,
இதோ மின்னல் தென்படுகிறது,..
அவள் என்னைத் தழுவிக்கொள்ள இன்னும் சில விநாடிகளே உள்ளது.!!

* என் போர்வையைத் துவைக்கும்போது மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை என்றேன்
என் இடத்தை நிரப்பும் அனைத்தின் மீதும் அப்படித்தான் என்கிறாள் !!!.

* உன் குரல் கேட்காத நாட்களில்,
நான் கேட்ட எதுவும் என் நினைவில் இருப்பதில்லை ..!!

* என்னை வீழ்த்த அம்பு செலுத்த தேவையில்லை
அன்பு செலுத்தினால் போதும் அன்பே...

* நீ என் வாழ்க்கையில் வந்தபின்பு எனக்கு தினமும் வசந்த காலம் தான்.....
கனவில்கூட நீ காதலுடன் தெரிகின்றாய்!

மனம் நிறைய பாசம்,மாற்றமில்லா நேசம்
உனக்கு என்ன விலை தர முடியும்...
மரணம்வரை என்னைத் தவிர........

Address

Montreal, QC

Website

Alerts

Be the first to know and let us send you an email when Evo Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Evo Vlog:

Share