
07/09/2025
https://thedipaar.com/
அமெரிக்கா பயணங்களை தவிர்க்கும் கனடியர்கள் – உள்நாட்டு சுற்றுலாவில் புதிய உயர்வு!
டொராண்டோ:
கனடியர்கள் அமெரிக்காவிற்கான பயணங்களை தொடர்ந்தும் தவிர்த்து வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு சுற்றுலாவிற்குப் பதிலாக, உள்ளூர் சுற்றுலாவில் நாட்டுமக்களின் ஈடுபாடு அதிகரித்து வருகிறது.
பரபரப்பான கோடை விடுமுறை பருவம் ஆரம்பித்துள்ள நிலையில், பயணத் துறையில் செயல்படும் நிறுவனங்கள், உள்ளூர் இடங்களுக்கு முன்பதிவுகள் கூடியுள்ளதாகவும், மக்கள் கனடாவில் உள்ள தனித்துவமான சுற்றுலா தலங்களை ஆராய்வதில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளன.
இந்த ஆண்டில், கனடியர்கள் பெரிதும் உள்நாட்டு பயணங்களைத் தேர்வு செய்து வருகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற ஆய்வொன்றின் படி, உள்நாட்டு சுற்றுலாவில் இடம்பெயர்வோர் எண்ணிக்கையில் முக்கியமான அதிகரிப்பு காணப்படுகிறது.
இந்த பயண பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றம், அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்களின் விளைவாக இருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில், இது குறித்த தெளிவான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த மாற்றம் கனடிய உள்ளூர் சுற்றுலா துறைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னேற்றமாக அமையும் என பயணத் துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
https://thedipaar.com/