CTR24

CTR24 Listen to Tamil radio online

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும் மரண தண்டனை!உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்...
07/31/2026

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும் மரண தண்டனை!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகளால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு இன்று (31) பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோரைக் கொண்ட மூவர் கொண்ட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிபதிகள் குழாத்தின் பிரியந்த லியனகே மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய நீதிபதிகள் தமது பெரும்பான்மை தீர்ப்பை அறிவித்து, பிரதிவாதியான ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு எதிராக முறைப்பாட்டாளரால் சுமத்தப்பட்டிருந்த 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை==============================================================உ...
07/31/2026

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை
==============================================================

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தின் பெரும்பான்மை நீதிபதிகள் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீத...
07/31/2026

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் ஊடகவியலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

www.ctr24.com

07/31/2026
திரையுலகில் பலரின் இதயங்களில் இடம் பிடித்த பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி அவர்கள் தனது 88 வயதில் காலமானார் . தமிழ், தெலுங்க...
07/31/2026

திரையுலகில் பலரின் இதயங்களில் இடம் பிடித்த பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி அவர்கள் தனது 88 வயதில் காலமானார் .

தமிழ், தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 6000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார் .

கனடாவை சேர்ந்த 9 வயது ரிஷ்யா சாய்ஸ்ரீ இளங்கீரன் கின்னஸ் உலகச் சாதனை படைத்து பெருமை சேர்த்துள்ளார்.Stouffville இல் அமைந்த...
07/31/2026

கனடாவை சேர்ந்த 9 வயது ரிஷ்யா சாய்ஸ்ரீ இளங்கீரன் கின்னஸ் உலகச் சாதனை படைத்து பெருமை சேர்த்துள்ளார்.

Stouffville இல் அமைந்துள்ள Wendat Public School இல் 4ஆம் வகுப்பில் கல்வி பயிலும் 9 வயதான ரிஷ்யா சாய்ஸ்ரீ இளங்கீரன், கண்கட்டு நிலையில் Rubik's Cube ஐ (ரூபிக் கனசதுரம்) சீர்படுத்தும் பன்னாட்டு சாதனை முயற்சியில் பங்கேற்று கின்னஸ் உலகச் சாதனைப் போட்டியில் தனது பெயரைப் பதித்துள்ளார்.
2026 July 11ஆம் திகதி, கனடாவின் Brampton நகரிலும், Hong Kong நகரிலும் காணொளி இணைப்பின் (Live Video Link) மூலம் ஒரே நேரத்தில் நடைபெற்ற உலகளாவிய நிகழ்வில் ரிஷ்யா பங்கேற்றார்.

இச்சாதனையில் பங்கேற்ற பிராம்ப்டன் அணியில் மிக இளைய பெண் போட்டியாளர் என்ற பெருமை ரிஷ்யாவுக்கே உரியது. வயதில் மூத்த பல போட்டியாளர்களுடன் இணைந்து போட்டியிட்ட அவர், கண்கட்டு நிலையில் ரூபிக் கனசதுரத்தை வெற்றிகரமாகத் சீர்படுத்திய இரண்டாவது நபராக தனது அபாரமான நினைவாற்றல், ஒருமுகப்படுத்தும் திறன் மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இனிய காலை வணக்கம் கனடிய தமிழ் வானொலியின் காலை காற்றலையில்காலை 6 மணி முதல் 12 மணிவரை நிகழ்ச்சிகளுடன் உங்கள் அன்பின் சுஜா ...
07/31/2026

இனிய காலை வணக்கம் கனடிய தமிழ் வானொலியின் காலை காற்றலையில்
காலை 6 மணி முதல் 12 மணிவரை நிகழ்ச்சிகளுடன் உங்கள் அன்பின் சுஜா
www.ctr24.com
Apps:ctr24
Via Telephone : 647 722 2226

இனிய காலை வணக்கம் கனடிய தமிழ் வானொலியின் காலை காற்றலையில்காலை 6 மணி முதல் 12 மணிவரை நிகழ்ச்சிகளுடன் உங்கள் அன்பின் சுஜா ...
07/24/2026

இனிய காலை வணக்கம் கனடிய தமிழ் வானொலியின் காலை காற்றலையில்
காலை 6 மணி முதல் 12 மணிவரை நிகழ்ச்சிகளுடன் உங்கள் அன்பின் சுஜா www.ctr24.com
Apps:ctr24
Via Telephone : 647 722 2226

07/08/2026

னடிய தமிழ் வானொலி நட்சத்திர விழா 2026 Day 2

Address

5200 Finch Avenue E #311
Toronto, ON
M1S4Z5

Alerts

Be the first to know and let us send you an email when CTR24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category