Salaram

Salaram Motivation for all

Toronto  வீட்டுச் சந்தை நிலவரம் குறித்து பல்வேறு விதமான கருத்து வெளிப்பாடுகள் முன்வைக்;கப்படுகின்றன.கடந்த 10 வருடங்களின்...
09/08/2025

Toronto வீட்டுச் சந்தை நிலவரம் குறித்து பல்வேறு விதமான கருத்து வெளிப்பாடுகள் முன்வைக்;கப்படுகின்றன.

கடந்த 10 வருடங்களின் வீட்டுச் சந்தையின் போக்குகளை கவனமாக ஆராயும் போது சில தெளிவான முடிவுகளை நாம் அவதானிக்க முடிகின்றது.

பெருந்தொற்று பரவல் காலத்தில் ஏற்பட்ட அதீதமான விலை அதிகரிப்பும் அதன் தொடர்ச்சியான வீட்டுச் சந்தையின் அதீதமான பாச்சலும் இன்றைய தேக்க நிலைக்கு பிரதான காரணமாக கருதப்பட முடியும்.

2021 ஆம் ஆண்டு வீடுகளின் விலைகள் மிகக் கணிசமான அதிகரிப்பினை பதிவு செய்திருந்த வேளை அதிகளவான கொள்வனவுகளும் இடம்பெற்றுள்ளன
இந்தக் காலப்பகுதியில் புதிய வீடுகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் கொண்ட பலர் முதலீட்டு நோக்கில் அதிக விலைக்கு புதிய கட்டுமானங்களில் கொள்வனவினை மேற்கொண்டனர்.

எனினும் 2023ம் மற்றும் 2024ம் ஆண்டில் வீட்டுச் சந்தை வீழ்ச்சியை சந்திக்கத் தொடங்கிய போது புதிய கட்டுமானங்களை கொள்வனவு செய்தவர்கள் அவற்றை இறுதி செய்ய வேண்டிய காலமா அது அமைந்திருந்தது.

இந்தக் பாலப் பகுதிகளில் அடமானக் கடன் வட்டி வீதங்களும் அதிகரித்து காணப்படமையால் நெருக்கடி நிலை மோசமாக மாறியது.

அதிக விலை கொடுத்து புதிய வீடுகளில் முதலீடுகளை மேற்கொண்டவர்கள் அதிகளவு நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சாதாரணமாக வீட்டுச் சந்தையில் முதலீடுகளை மேற்கொண்டு வந்தவர்கள் பலர் இதனால் பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளபபட்டனர்.

ஏற்கனவே இருந்த வீடுகளில் இருந்து புதிய வீட்டுக் கொள்வனவுக்காக பெறப்பட்ட மேலதிக கடனுக்கும் அதிக புதிதாக கொள்வனவு செய்த வீடுகளுக்கும் அதிகளவு அடமானக் கடன் செலுத்த வேண்டிய நிலை தோன்றியது.

இதனால் வீட்டுச் சந்தை முதலீட்டாளர்கள் பெருமளவில் ஒதுங்கிக் கொள்ளும் ஒரு நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சந்தையில் முதல் தடவையாக வீடுகளை கொள்வனவு செய்கின்றவர்கள் First Time home Buyers ,சிறி வீட்டை விற்று விட்டு பெரிய வீட்டினை கொள்வனவு செய்ய விரும்புகின்றவர்கள் Upsizers மற்றும் பெரிய வீடுகளை விற்று விட்டு சிறிய வீடுகளை கொள்வனவு செய்பவர்கள் Downsizer என மூன்று பிரதான பிரிவனர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

இவர்கள் மிக நிதானமாக தமது பொருளதார நிலமைகளுக்கு ஏற்றவாறான வீடுகளை தெரிவு செய்து வருகின்றனர்.

இப்போதுள்ள அடமானக் கடன் வட்டி வீதங்களின் அடிப்படையில் அவர்கள் தமது தெரிவுகளை மேற்கொள்வதால் அதிர்காலத்தில் வட்டி வீதங்கள் குறைவடையும் போது அவர்களுக்கு அனுகூலங்கள் ஏற்படும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இந்த நிலமை என்பது எதிர்காலத்திற்கான ஓரு ஆரோக்கியமான வீட்டுச் சந்தையினை நோக்கி நகர்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் இருந்து நாம் கற்றுக் கொண்ட பாடங்களை அடிப்படையாக கொண்டு எமது பொருளாதார வல்லமைகளை புரிந்த கொண்டு நாம் சிறப்பான முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுச் சந்தை முதலீடு என்பது குறுகிய காலத்தில் பெரும் இலாபமீட்டும் ஒரு மந்திர முயற்சி அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளார்கள்.
வீடு என்பது மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று இந்த தேவையினை பூர்த்தி செய்வது இன்றியமையாதது.

மாறாக அதனை ஒரு கௌரவ அடையாளமாக மற்றவர்களின் ஒப்பீடுகளில் உயிர் நிலையை அடைவதற்கான ஒரு குறியீடாக நாம் கருதக் கூடாது.

பெரிய பாரச் சிலுவைகளை சுமந்து கொண்டு ஒரு வீட்டை தக்க வைத்திருப்பதால் நாம் எதனை அடையப் போகின்றோம் என்ற கேள்வியினை நாம் எமக்குள் எழுப்ப வேண்டும். வீடு என்பது நல்ல நினைவுகளின் சேமிப்பாக இருக்க வேண்டும் அப்போது தான் அங்கு நிம்மதியாக நாம் வாழ முடியும்.

வீட்டிற்குள் நுழையும் போதே பெரும் துயரத்தினை தேக்கி வைத்துள்ள ஒரு தவாறன முடிவின் அடையளம் என்ற எண்ணம் வாழ்கையின் அத்தனை சந்தோச தருணங்களையும் சிதைத்து விடும்.

எமது பொருளாதார வல்லமைகளுக்கு ஏற்றவாறான தெரிவுகளை மேற்கொள்வதன் மூலம் ஒரு ஆரோக்கியமான எதிர்காலத்தை நாம் உருவாக்க முடியும்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட நிலமைகளை கவனமாக ஆராய்வதன் மூலமாக தெளிவான முடிவுகளை நாம் எடுக்கலாம்.

தற்போதுள்ள வீட்டுச் சந்தையானது ஆரோக்கியமான மாற்றத்தின் தொடக்கமாக அமையும் என்ற நம்பிக்கை பலருக்கும் தோன்றியுள்ளது.

இது தொடர்பிலான முழுமையான தகவல்கள் கொண்ட ஒரு அறிக்கையினை 𝐅𝐫𝐨𝐦 𝐁𝐨𝐨𝐦 𝐭𝐨 𝐁𝐚𝐥𝐚𝐧𝐜𝐞: 𝐆𝐓𝐀 𝐑𝐞𝐚𝐥 𝐄𝐬𝐭𝐚𝐭𝐞 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐋𝐚𝐬𝐭 𝐃𝐞𝐜𝐚𝐝𝐞 தாயரித்துள்ளோம் அதனை பெற்றுக் கொள்ள விரும்பினால் 𝙍𝙚𝙥𝙤𝙧𝙩 என Comment செய்யுங்கள் அல்லது Message அனுப்புங்கள்.🙏

எதிர் வரும் இலை உதிர் காலத்தில் வீடுகளை கொள்வனவு செய்வதற்குரிய சிறந்த காலப் பகுதியாக இருக்கும் என 54 சதவீதமான கனேடியர்கள...
09/04/2025

எதிர் வரும் இலை உதிர் காலத்தில் வீடுகளை கொள்வனவு செய்வதற்குரிய சிறந்த காலப் பகுதியாக இருக்கும் என 54 சதவீதமான கனேடியர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
👉Leger Survey நிறுவனம் Re/Max Canada உடன் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
⬇️கடந்த வருடத்தை விட 5.2 சதவீதமான விலை வீழச்சியினை Toronto வீட்டுச் சந்தை பதிவு செய்துள்ளதாக வீடு விற்பனைக் கழகம் TREB அறிவித்துள்ளது.
⬇️⬇️எதிர் வரும் இலை உதிர் காலத்தில் 6.5 சதவீதம் வரை விலை வீழ்ச்சி உணர்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
🏃‍♂️வீட்டுச் சந்தையில் தாக்கம் செலுத்தும் முதலீட்டாளர்கள் ( Investors )பெருமளவில் வீட்டுச் சந்தையில் இருந்து விலகியுள்ளனர்.
🙅‍♂️அத்துடன் முதல் தடவையாக வீடுகளை கொள்வனவு செய்பவர்களும் (First Time Home Buyers)தமது வீட்டுக் கொள்வனவு குறித்த முடிவுகளை தாமதப்படுத்தி வருவதால் வீடுகளின் விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
🏠கடந்த மாதம் 5,211 வீடுகள் விற்பனையாகியுள்ள நிலையில் சராசரி விற்பனைப் பெறுமதியாக 1.02 மில்லியன் டொலர்கள் பதிவாகியுள்ளது.
📈கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 2.3 சதவீத அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📈📈கடந்த மாதம் 14,038 வீடுகள் புதிதாக விற்பனைக்கு வந்துள்ளதாகவும் கடந்த வருடத்தை விட இது 22.4 சதவீதம் அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
👉சந்தையில் 27,495 வீடுகள் விற்பனைக்காக காத்திருக்கின்றன.
👆இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
⁉️இதேவேளை எதிர்வரும் 17ம் திகதி கனேடிய மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என பரவலான எதிர்பார்ப்பு தோன்றியுள்ளது.
↗️இந்த பின்னணிகளில் இலையுதிர் காலத்தில் அதிகளவான வீடுகள் விற்பனையாகும் சாத்தியங்கள் உருவாகியுள்ளன.
💲குடும்ப வருமானத்திற்கும் அடமானக் கடன் தொகைக்கும் இடையிலான இடைவெளியானது தொடர்ந்தும் சாவல்மிக்கதாகவே காணப்படுகின்றது.
இதன் காரணமாக பெறுமதி குறைந்த வீடுகளின் கொள்வனவில் அதிகளவானவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
🏣குறிப்பாக 800,000 டொலர் பெறுமதியாக வீடொன்றை 20 வீத முன்பணத்துடன் கொளன்வனவு செய்யும் போது மாதாந்தம் 2,800 டொலர்கள் வரை செலுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது.
🙂தற்போதுள்ள நிலையில் தேவையானளவு முன்பணம் மற்றும் வருமானம் பெறும் குடும்பங்கள் வாடகை வீட்டில் குடியிருப்பதை விட சொந்தமாக வீடொன்றை கொள்வனவு செய்வது அதிக அனுகூலங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது.
😌எனினும் வீடுகள் விலை குறைவடைந்துள்ள சூழலில் வீடொன்றை கொள்வனவு செய்ய வேண்டும் என்ற ஆவலில் போதிய வருமானம் மற்றும் முற்பணம் இல்லாத நிலையில் வீட்டுக் கொள்வனவில் ஈடுபடுவது ஆபத்தான நிலையே தோற்றுவிக்கும்.
👉தமது பொருளாதார நிலைகளுக்கு ஏற்றவகையில் வீட்டுக் கொள்வனவு முடிவுகளை எடுப்தே எப்போதும் பொருத்தமானதாகவும் சிறப்பானதாகவும் அமையும்.
📲வீட்டுச் சந்தை நிலவரங்கள் குறித்து நீங்கள் உரையாட விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள் ஒரு Cup Coffe உடன் Real Estate பேசலாம் !!😊☕

Here’s wishing that our great nation always blooms with glory and prosperity! Warm wishes on Canada Day to every one of ...
07/01/2025

Here’s wishing that our great nation always blooms with glory and prosperity! Warm wishes on Canada Day to every one of you!

புதிய வீடுகளை கொள்வனவு செய்யும் முதல் தடவை வீட்டுக் கொள்வனவாளர்களுக்கு கனேடிய அரசாங்கம் வரிச்சலுகையினை அறிவித்துள்ளது.அத...
06/12/2025

புதிய வீடுகளை கொள்வனவு செய்யும் முதல் தடவை வீட்டுக் கொள்வனவாளர்களுக்கு கனேடிய அரசாங்கம் வரிச்சலுகையினை அறிவித்துள்ளது.

அது தொடர்பான விடயங்களை இந்த காணொளியில் பகிர்ந்துள்ளோம். இது குறித்து உங்கள் கருத்துக்களையும் நீங்கள் தெரிவிக்கலாம் அத்துடன் புதிய வீடுகளை கொள்வனவு செய்ய விரும்புகின்றவர்ளோடும் இதனை பகிர்ந்து கொள்ளலாம்

https://youtu.be/nV5ckxpR2Ds

நன்றி

Ramanan
416-290-6000

"The federal government has introduced a new GST rebate for first-time home buyers in Canada, providing up to $50,000 back on new homes priced under $1.5 mil...

தேர்தல் திருவிழா முடிவடைந்திருக்கின்றது ஆனால் இது விரைவான மற்றுமொரு தேர்தலுக்கான வாய்பினை உருவாக்கிவிட்டுள்ளமை தான் மக்க...
04/30/2025

தேர்தல் திருவிழா முடிவடைந்திருக்கின்றது ஆனால் இது விரைவான மற்றுமொரு தேர்தலுக்கான வாய்பினை உருவாக்கிவிட்டுள்ளமை தான் மக்கள் மத்தியில் கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்புகள் நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாத போதிலும் ஒரு வருடத்தின் பின்னர் நலமைகள் மாற்றமடையக் கூடும்.

அதற்கு முன்னபாக கட்சிகள் தமது அனுபவங்களில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். தமிழர்களாக நாமும் பல பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.

anadian Prime Minister Mark Carney's Liberals retained power in the country's election on Monday, but fell short of the majority government he had wanted to ...

கனேடிய மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை குறைக்காமல் தொடர்ந்தும் 2.75 சதவீதமாக பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. அமெரிக...
04/16/2025

கனேடிய மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை குறைக்காமல் தொடர்ந்தும் 2.75 சதவீதமாக பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. அமெரிக்காவின் வரிவிதிப்பினால் பொருளாதார தளம்பல் நிலை காணப்படுவதாக கனேடிய மத்திய வங்கி குறிப்பிடுகின்றது. வீட்டுச் சந்தையில் இது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த பதிவு

https://youtu.be/nZ95aWDSyNo

he Bank of Canada on Wednesday held its key policy rate at 2.75 per cent, its first pause after seven consecutive cuts, and said the uncertainty around U.S. ...

வட்டி வீதம் குறைவடைகின்றது வீட்டுச் சந்தையில் மாற்றம் வருமா ?
03/13/2025

வட்டி வீதம் குறைவடைகின்றது வீட்டுச் சந்தையில் மாற்றம் வருமா ?

The Bank of Canada announced a 0.25% reduction in its key interest rate, bringing the overnight rate down to 2.75%. This decision comes as Canada’s economy e...

Enjoy each and every moment of this wonderful day and be grateful to God for all the blessings. Happy Thanksgiving to yo...
10/14/2024

Enjoy each and every moment of this wonderful day and be grateful to God for all the blessings.

Happy Thanksgiving to you and your family.

சொல்ல வேண்டிய கதைகளை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் விடுவது தவறு. குறிப்பாக 90களின் பின்னர் பிறந்து தற்போதைய கருத்துர...
10/07/2024

சொல்ல வேண்டிய கதைகளை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் விடுவது தவறு.

குறிப்பாக 90களின் பின்னர் பிறந்து தற்போதைய கருத்துருவாக்க கட்டமைப்புகளை வைத்திருக்கும் 90ஸ் Kids மற்றும் 2K Kids க்கு தெரியாத சில பக்கங்களை நாம் பகிர்ந்து கொள்ளாமல் விடுவது அவர்களின் முடிவுகளை தவறானதாக மாற்றிவிடக் கூடும் என்பதால் தான் இந்த பதிவு.

எனக்கு தெரிந்த ஒருவரைப் பற்றிய எனது அனுபவ பகிர்வு இது. இனி வரும் வாரங்களில் தமிழ் ஊடகப் பரப்பில் பரவலாக "இவரின்" பெயர் உச்சரிக்கப்படும்.

**************

90 களின் இறுதியில் பரியோவான் கல்லூரியில் இணைந்து கொண்ட போது எமது சகோதரப் பாடசாலையின் பிரபலமான பெயராக இருந்த பெயர் அது.

சில வருடங்களில் எமது பாடசாலையில் நடை பெற்ற விவாதம் ஒன்றில் எமது அணிக்கு எதிராக வாதிட வந்த அணியினை வளிநடத்திய போது முதன் முதலாக அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின்னர் இரு கல்லூரி அணிகளும் இணைந்து உருவாக்கிய விவாத அணியில் இடம்பெற்ற போது உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது.

************
1995ம் ஆண்டு இடம்பெற்ற இடப்பெயர்வுகளின் பின்னர் அசாதாரணமான சூழல் ஒன்றில் அவரை மீணடும் சந்தித்தேன்.

எமது பாடசாலை நண்பன் வரபிரகாஷ் பகிடிவதைக்கு பலியான துயர் மிகுந்த நாட்டிகளில் பகிடிவதைகளுக்கு எதிரான ஒரு பெருங்குரலாக அவர் இருந்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணனி விஞ்ஞானத் துறையிவ் தனது பட்டப் படிப்பினை மேற்கொண்டிருந்த காலம் அது.

1998ம் ஆண்டு குடாநாட்டில் இருந்த பெருமளவான ஆசிரியர்கள் தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்த நிலையில் அங்குள்ள மாணவர்களுக்கான பரீட்சை தயார் படுத்தல் கருத்தரங்குகளை நடத்தலாம் என்ற எண்ணக் கருவோடு வந்தவர் மிக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திக்காட்டினார்.

கொழும்பில் இருந்த பிரபலமான உயர்தர ஆசிசரியர்களை அணுகி அவர்களை யாழ்ப்பாணததிற்கு அழைத்துச் செல்லும் அனுமதியைப் பெற்று அவர்களினால் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள்களை அச்சிட்டு யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்று பல கருத்தரங்குகளை அங்கு நடத்தி முடித்தார்.

அந்த திட்டத்தில் அவருடன் பணியாற்றி போது அவரிடம் இருந்த தலைமைத்துவம் அர்ப்பணிப்பு விடா முயற்சி போன்ற குணங்கள் ஆச்சரியப்படுத்தின.

விவாகத மேடைகளில் ஒலித்த குரலின் செயல்வடிவமாக அவர் மாறிப் போயிருந்தார்.

****************
1998ம ஆண்டு மிக மோசமான மனித உரிமை மீறல்களை எமது தயாகம் சந்தித்திக் கொண்டிருந்த காலப்பகுதி.

தனது சமாதானப் புறா வேடத்தை களைந்து போர்க் கோலம் பூண்ட சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரணதுங்க 1995ம் ஆண்டு யாழ் குடநாாட்டு ஆக்கிரமிப்புடன் தனது ஆக்கிரமிப்பு யுத்தத்தையும் உளவியல் யுத்தத்தையும் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருந்த காலப்பகுதி.

வடக்கு கிழக்கில் மிக மோசமாக தமிழர்கள் மீது மனித உரிமை மீறல்கள் இடமபெற்றுக் கொண்டிருந்த போது.

சர்வதேச சமூகத்திற்கு இதனை எடுத்துச் செல்வதற்காக 1998ம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ம் திகதி தலைநகர் கொழும்பில் ஒரு "பண்பாட்டுப் பவனியினை" ஏற்பாடு செய்வதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

கலாநிதி சிதம்பரநாதன் தலைமையிலான அரங்க செயற்பாட்டுக் குழு வடக்கு கிழக்கில் மிக வீரியத்துடன் செயல்பட்டு வந்த காலப்பகுதியில் அதனுடன் னனை இணைத்து தீவிர செயற்பாட்டாளராக மாறியிருந்தார்

வடக்கு கிழக்கில் இருந்து பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளை கொழும்பிற்கு அழைத்து வந்து வெள்ளவத்தை இராமகிருஸ்ண மிசன் மண்டபத்தில் இருந்து பம்பலபிட்டிய சரஸ்வதி மண்டபம் வரை காலி வீதி ஊடகா நடைபவனி செல்வது தான் பண்பாட்டுப் பவனியின் ஏற்பாடு.

தமிழர் தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் பேரெழுச்சியாக கருதப்படும் "பொங்கு தமிழ்" நிகழ்வுகளுக்கு அச்சாரம் போட்ட நிகழ்வு.

கொழும்பில் நடைபெற்ற "பொங்கு தமிழ்" என்றும் இதனை கூற முடியும். இதில் நாம் முனைப்புடன் ஈடுபட்டிருந்த காலப் பகுதியில் எமது பாடசாலை பழைய மாணவன் ஒருவன் எம்மை அணுகி இதன் பின்னால் உள்ள ஆபத்துகள் குறித்து அன்பாக எச்சரித்து விட்டுப் போனார்.

மிகப் பெரிய புலனாய்வு கண்காணிப்புகளின்மத்தியில் இந்த நிகழ்வை நடத்த வேண்டியிருப்தை நாம் உணரத் தொடங்கினோம்.

வடக்கு கிழக்கில் இருந்து அழைத்து வரப்படும் இளைஙர் யுவதிகளின் பாதுகாப்பு மட்டுமல்ல கொழும்பில் இருந்து ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் எமது பாதுகாப்பும் மிகப் பெரிய கேள்விக் குறியாக மாறிப் போயிருந்தது.

இருந்த போதிலும் அத்தனை தடைகளையும் அச்சுறுத்தல்களையும் தாண்டி கொழும்பின் பிரதான தெருவில் சிவப்பு மஞ்சள் ஆடைகளை அணிந்து எம்மீதான அடக்கு முறைகளை வெளிப்படுத்தம் "பண்பாட்டுப் பவனியை" நடத்தி முடித்தன் பின்னால் இவரின் தன்னம்பிக்கையும் துணிவும் இருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

எம்மீதான அடக்கு முறையின் உருவமாக ஒரு உருவப் பொம்மையை உருவாக்கி அதனால் எமக்கு இழைக்கப்படும் அநீதிகள் அதன் வேதனைகளை வெளிப்படுத்தம் ஆற்றுகைகள் பாடல்கள் நடனங்கள் என காலி வீதி ஊடக ஒரு உணர்ச்சி பிரவாகத்தை ஏற்படுத்தியது பண்பாட்டுப் பவனி.

எமது மக்களின் வலிகளை சொல்வதற்கு இது மிகப் பெரிய பொறிமுறையாக இருக்கும் என்பதை அனைவருக்கு உணர்த்தியது இந்தப் பண்பாட்டு பவனி.

**********

2002ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிழக்வு குறித்து வெளியான செய்திக் குறிப்புகள் காணொழிகளின் மூலமாக அவரின் தொடர்ச்சியான விடுதலைப் பயணத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட சிங்கள பத்திரிகையின் முன் பக்கத்தில் இவரின் புகைப்படம் வெளியாகியாது.

2009 வரை பல்வேறு மனிதநேய பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தவர்.

தான் செய்யும் செயல்பாடுகளில் இருக்கும் ஆபத்துக்களை அறிந்தும் அதனை தாண்டி பவனிக்க வேண்டும் என்ற ஓர்மம் அவருக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

2009 ற்கு பின்னர் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை வெளிக் கொண்டு வரும் செயல்பாடுகளை மிகவும் வினைத்திறனாக முன்னனெடுத்து வந்தார்.

சர்வதேசத் தொடர்புகள் மனித உரிமை அமைப்புகளுடனான நெருக்கம் என பலருக்கும் தெரியாத பக்கங்கள்இவருக்கு உண்டு.

************

2005ம் ஆண்டு தமிழ் தேசிக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது போட்டியிடும் வாய்ப்பு இவரை தேடி வந்த போது அதனை நிரகாரித்தார். பின்னர் நடைபெற்ற தேர்தல்களிலும் போட்டியிடும் வாய்ப்பு அவரை தேடிச் சென்ற போதும் அவற்றை நிராகரித்த அவர் இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்திருக்கின்றார்.

ஆழுமை மிக்க பெண்ணாக, தொழில் முனைவோராக, பலருக்கும் அறிமுகான இவரின் மனித உரிமைச் செயல்பாடுகளில் சில காலங்களில் பயணம் செய்த ஒரு சக பயணியின் குறிப்பாக இதனை பதிவு செய்வது அவசியம் என்றே நான் நம்புகின்றேன்.

எல்லாவற்றையும் எழுதி விட முடியாத போதிலும் அவரின் மறுபக்கத்தை தெரிந்தவன் என்ற வகையில் அதனை இந்த சந்தர்ப்பத்தில் பதிவு செய்யாமல் கடந்த செல்லக் கூடாது என்பதால் தான் இந்த சிறு குறிப்பு. அவரின் மனித நேரய செயலபாடுகளில் எனக்குரிய நேரடி அனுபவங்கள் தான் இவை. இதனை தாண்டி இன்னும் பல விடயங்களை அவர் செய்து முடித்திருக்கின்றார். அவற்றொடு தொடர்பானவர்கள் அவற்றையும் பதிவு செய்வாளர்கள்.

வெற்றி பெறக் கூடிய களங்களில் நின்று இலகுவான வெற்றியை பெற்றுக் கொள்ளாமல் நெருக்கடியான சூழலில் அவர் எடுத்துள்ள இந்த முடிவு எனக்கும் ஆச்சரியமானது தான்.

இன்றைய அவரின் அரசியல் தெரிவு குறித்த பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப் படலாம் ஆனால் அதற்கு பின்னாலும் சில ஆளமான அர்த்தங்கள் இருக்கும் என்றே நான் நம்புகின்றேன்.

இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட பொருத்தமான முடிவா என்பதை காலம் தான் பதிலாக்கும்.

ஆனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு மனித உரிமைப் போராளியாக விளங்கி வரும் எனது நீண்ட நாள் நண்பி எனது நண்பனின் மனைவி கிருஸ்ணவேணி ஸ்ரீதரன் எனப்படும் "கிட்டு " விற்கு வெற்றி "கிட்ட" வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு

சரி, தவறு என்பதெல்லாம், அவரவர் வாழும் சூழ்நிலையும், வளர்ந்தவிதமும், கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் உருவாக்கியவை.  உங்கள் சரி,...
09/23/2024

சரி, தவறு என்பதெல்லாம், அவரவர் வாழும் சூழ்நிலையும், வளர்ந்தவிதமும், கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் உருவாக்கியவை. உங்கள் சரி, எனக்கு தவறு! - ஜெயகாந்தன்

'அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால், அது உங்கள் வாழ்க்கையில் தலையிடும்' என்று சொன்னார் லெனின்.இந்த கூற்று எம் எல்லோர...
09/19/2024

'அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால், அது உங்கள் வாழ்க்கையில் தலையிடும்' என்று சொன்னார் லெனின்.

இந்த கூற்று எம் எல்லோருக்கும் பொதுவானது. தாயகத்தில் நடைபெறும் அரசியல் நகர்வுகளிலும் கனடா உட்பட உலகின் ஏனைய நாடுகளில் இடம்பெறும் அரசியல் நிகழ்வுகளிலும் எமது பங்களிப்பு இருக்க வேண்டும்.

மக்களின் குறைந்த பட்ச அரசியல் பங்களிப்பு என்பது தேர்தல்களில் வாக்களிப்பதாக அமையும்.

இதனை தவிர்ப்பதன் மூலமாக எமது வாழக்கையில் அரசியல் தலையீடுகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்களை நாம் உருவாக்கி விடுகின்றோம்.
இந்த வார இறுதியில் இலங்கையின் புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

பெரும்பான்மையின் மக்கள் மத்தியில் தமது எதிர்காலத்தை சிறப்பாக வழிநடத்தக் கூடிய ஒரு தலைவரை தமது நாட்டிற்கு தெரிவு செய்யும் ஆர்வம் காணப்படுகின்றது.

தமிழர்களுக்கு எதிரான போரை வெற்றி கொண்ட யுத்த நாயகனாக தன்னை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற கோட்டபாய ராஜபக்சவை பெரும்பான்மையின மக்களே எழுச்சிப் போராட்டம் மூலமாக வெளியேற்றினார்கள்.

இலங்கையில் வெற்றிடமாகிப் போன ஜனாதிபதி பதவிக்காக பதிலீட்டு ஜனாதிபதியாக தெரிவான ரணில் விக்கிரமசிங்க பெருளாதார நெருக்கடியில் இருந்த நாட்டை மீட்டெடுத்ததாக கூறி இப்பேபது வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார்.

ரணில் விக்கிரமசிங்க மிகப் பெரிய அரசியல் பின்புலம் கொண்டவர் வெளிநாடுகளோடு நெருக்கமான இராஜதந்திர தொடர்புகளை கொண்டுள்ளவர்.

ஓப்பீட்டளவில் தற்போதுள்ள இலங்கை அரசியல்வாதிகளில் வெளிநாடுகளை கையாளும் அனுபவம் கொண்ட ஒருவர் ரனில் விக்கிரமசிங்க.

மறுபுறம் தனது அரசியல் எதிரிகளை சத்தமின்றி யுத்தமின்றி வெற்றி கொள்ளும் தந்திரம் கைவரப்பெற்றவர் என்பதால் அவர் எப்போதும் மிக ஆபத்தானவராகவே கருதப்படுகின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிளவு அதன் நீட்சியாக விளங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிதைவு இறுதியாக தமிழரசுக் கட்சியின் உடைவு என அத்தனையின் பின்னணியிலும் ரணில் விக்கிரமசிங்கவின் கரங்கள் இருப்பதை எவரும் மறுக்க முடியாது.

தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்கள அரசியல் கட்சிகளுக்கும் ரணில் இதே தந்திரங்களை பயன்படுத்தி அவற்றை உடைப்பதில் வெற்றி பெற்றிருக்கின்றார்.

சுதந்தர இலங்கையின் அரசியலில் பிரதான பாத்திரம் வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய பெரும்பான்மையின கட்சிகள் இப்போது தமது அடையாளங்களை இழந்து போனதற்கு ரனில் விக்கிரமசிங்கவே காரணம்.

இதில் வேடிக்கை அவருடைய சொந்த கட்சி உடைந்து போனதற்கும் அவரே காரணம் என்பது தான்.

2015ம் ஆண்டு நல்லாட்சி அரசின் ஆட்சிக் காலத்தில் புலம் பெயர் தமிழ் அமைப்புகளை நோக்கி ரனில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட இந்த பிரித்தாளும் தந்திரமும் மிகப் பெரிய வெற்றியினை பெற்றிருக்கின்றது.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையினை சிதைப்பது மற்றும் அந்த அமைப்புகளை ஒன்றுடன் ஒன்று மோத வைத்து அதன் மூலம் புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்பான தவறான தோற்றப்பாட்டை சர்வதேச அரசுகள் மட்டத்தில் ஏற்படுத்துவது.

இந்த இரண்டையும் அவர் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி முடித்திருக்கின்றார்.

புத்திஜீவிகளின் கூடாரமாக தங்களை வெளிப்படுத்தும் அமைப்பும் இந்த சூழ்ச்சியினை புரிந்து கொள்ள முடியாமல் அதில் வீழந்தழிந்து போயிருக்கின்றது.

புலம்பெயர் தமிழ் அமைப்புகளை சிதைக்கும் நோக்கில் 2015ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டு கிடப்பில் போடப்பட்ட திட்டத்தை தான் ஜனாதிபதியானவுடன் நடைமுறைப்படுத்தினார் ரனில் விக்கிரமசிங்க.

சர்வதேச தலையீட்டுடன் தீர்வு பௌத்த பீடங்களுடன் பேசி இணக்கம் காண்பதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்றெல்லாம் விளக்கமளிக்கப்பட்டு தொடங்கிய பிரகடனம் மகிந்த ராஜபக்சவை சந்தித்து படம் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு வியாபித்தது தற்செயலானது அல்ல அது மிக நுட்பமாக திட்டமிடப்பட்ட இராஜதந்திரம்.

புலம்பெயர் தமிழர்களின் எண்ண ஓட்டங்களை சரியாக கணித்து கச்சிதமாக முன்னெடுக்கப்பட்டது தான் இமாலயப் பிரகடனம்.

எரியும் தீயில் எண்ணை வார்ப்பது போல துணைத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கனேடியத் தமிழர் பேரவையுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் செயல்படுவதான தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் வரிகள் வலிந்து திணிக்கப்பட்டவை ஆனால் அவை கனகச்சிதமாக அவரின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டுள்ளன.

2009ற்கு பின்னர் ஜெனிவாவிற்கு பல பயணங்கள் போய் யுத்தக் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கு பாடுபபட்டவராக தன்னை வெளிப்படுத்தியவரே மகிந்த ராஜபக்சவுடன் சிரித்துக் கொண்டு புகைப்படத்திற்கு "போஸ்" கொடுக்கும் நிலையை உருவாக்கியது தான் ரனில் விக்கிரமசிங்கவின் இராஜதந்திரம்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுவதற்கு முன்னரே ஒற்றை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவரை நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக்கி அழகுபார்த்த ராஜபக்ச தரப்பையும் அவர் விட்டு வைக்கவில்லை.

பலம்வாய்ந்த பொதுஜன பெரமுனவின் மிக முக்கிய அமைச்சர்களை தனக்கு ஆதரவானவர்களாக மாற்றினால் அதனால் பொதுஜன பெர முன பலமிளந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை நான்காக உடைத்தார் தனக்கு அதில் ஒரு பங்ககை எடுத்துக் கொண்டார்.
தன்னுடன் முரண்பட்டு வெளியேறி சஜித் பிரேமதாசவிற்கு பக்கத்துiணாக இருந்த ராஜித சேனாரட்டனவை தனது விசுவாசியாக மாற்றி சஜித்துக்கும் பங்கம் செய்தார்.

மனோ கணேசன் தலைமையிலான கூட்டணியில் இருந்தும் உறுப்பினர்களை தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

இன மத பேதம் பாராமல் எல்லா இடங்களிலும் பார பட்சமின்றி பிளவுகளை ஏற்படுத்தி பெருமையினை ரனில் பெற்றிருக்கின்றார்.

இத்தனை பலமான ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்த முக்கிய பிரமுகர்களையே உடைத்தடுக்க முடிந்த ரனில் விக்கிரமசிங்கவிற்கு ஏற்கனவே சேடமிளுத்துக் கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியை கையாள்வது அப்படி ஒன்றும் சிரமமானதாக இருக்காது.

தமிழரசுக் கட்சியின் ரனில் விசுவாசிகள் பலர் அவர்களின் முக்கியமானவர் சுமந்திரன்.

சுமந்திரன் ரனிலோடு முட்டுப்பட்டுவது போல தோன்றினாலும் அதனை தாண்டிய ஒரு பெரும் உறவு இருவருக்கும் இடையில் இருப்பதாக பலரும் கூறி வருகின்றார்கள்.

தமிழரசுக் கட்சியின் சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவும் அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள வசனங்கள் தன்னுடையவை என்கின்ற சுமந்திரனின் கூற்றும் மறைமுகமாக ரனில் விக்கிரமசிங்கவிற்கான ஆதரவை சிங்கள மக்கள் மத்தியில் தோற்றுவிக்கும் ஒரு உத்தியாகவே கருதப்படுகின்றது.

பல மாதகால மருத்து ஓய்வின் பின்னர் நாடு திரும்பிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இந்த கருத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

சிங்கள மக்களைப் பொறுத்தரவரை தமிழரசுக் கட்சி தான் தமிழர்களின் மகப் பெரும் அரசியல் கட்சி என்ற நிலைப்பாடு காணப்படுகின்றது.

அவ்வாறான கட்சி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் நாட்டை பிரிப்பதற்கு சதிவலை பின்னப்படும் என்கின் அச்ச உணர்வு சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும்.

தமிழரசின் சஜித் ஆதரவு நிலைப்பாட்டை தமிழ் ஊடகங்களை விட சிங்கள ஊடகங்களே அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்திருந்தமை இங்கே கவனிக்கப்பட வேண்டியது.

***********************************************************
இப்போதுள்ள நிலையில் பெரும்பான்மையின சிங்கள மக்கள் தமது எதிர்கால இருப்பு குறித்து சிந்திக்கின்றார்கள்.

தமது கடந்த கால தவறுகளில் இருந்து பாடங்களை கற்று அதன் மூலம் ஒரு தெளிவான முடிவினை எடுப்பதற்கு அவர்கள் விரும்புகின்றார்கள்.

அதேபோன்று தமிழ் மக்கள் கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தல்களில் குறிப்பிட் ஒரு வாக்களாருக்கு அதரவளிப்பதன் மூலம் அல்லது தேர்தல் புறக்கணிப்பின் மூலம் தமது அரசியல் எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தி வந்தார்கள்.

இம்முறை பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இணைந்து உருவாக்கி பொதுக்கட்டமைப்பின் மூலம் ஒரு பொது வேட்பாளர்களை தமிழர் தரப்பு முன்னிறுத்தியுள்ளது.

பொதுவேட்பாளரின் பின்னால் அணி திரண்டுள்ள அரசியல் கட்சிகள் மற்றம் அதன் தலைவர்கள் தொடர்பில் மிகப் பெரும் விமர்சனங்கள் இருக்கின்றன.

ஆனாலும் பொது பேட்பாளர் என்ற எண்ணக் கருவும் அதன் பின்னால் உள்ள அரசியலையும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

கோட்பாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது தமிழ் மக்கள் அவருக்கு பெருமளவில் வாங்களிக்கவில்லை அதனை அவர் தனது வெற்றியின் பின்னர் சுட்டிகாட்டி தான் சிங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைவன் என மார் தட்டினார்இ ஆனால் அதே சிங்கள மக்கள் அவரை விரட்டி அடித்தது வரலாறு.

சிங்கள மக்கள் தமக்கான தலைவரை தெரிவு செய்யும் போது தமிழ் மக்கள் குறைந்த பட்சம் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்காகவாவது இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

அந்த எதிர்பார்பின் வெளிப்பாடே தமிழ் பொதுக் கட்டமைப்பும் அதன் சார்பிலான பொது வேட்பாளரும்.

பொதுக்கட்டமைப்பு ஒரு அரசியல் திரட்சியாக மாறுமா என்ற கேள்விக்கு உடனாடியான பதிலை கண்டடைய முடியாவிட்டாலும் அது ஒரு தமிழ் தேசிய அரசியலுக்கான மற்றுமொரு முதலடியாக அமைந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்துக்களிருக்க முடியாது.

இந்த பொதுக் கட்டமைப்பினை நம்பிக்கையளிக்கும் ஒரு அரசியல் திரட்சியாக கருத முடியாமல் இருப்பதற்கு அதில் இணைந்துள்ள முன்னாள் இந்நாள் அரசியல்வாதிகள் மீது பலருக்கும் இருக்கின்ற விமர்சனங்கள் தான் காரணமாக அமைகின்றது.

தம்மை தமிழ் அரசியல் தலைவர்களாக அடையாளப்படுத்தும் பலர் தமிழ் மக்களுக்கான அரசியலை விட தமக்கான அரசியலை அதிகளவில் மேற்கொள்வதால் தோன்றிய நம்பிக்கையீனமே இதற்கு காரணம்.

போர் கண்ட தமிழினம் "பார்" ( Bra Licence ) கண்டு கவிழ்ந்து கிடப்பது துரதிஸ்டவசமானது.

இவர்களிடம் இருப்பது ஒருவிதமான சுயநல அரசியல் இதனை மக்கள் இலகுவில் புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிய தீர்ப்பினை எதிர்காலத் தேர்தல்களின் வழங்குவார்கள் என்பதால் இவர்கள் குறித்து அதிகமாக கவலையடைய வேண்டியதில்லை.

ஒரு பருவம் தாண்டி இந்த சுயநல அரசியல்வாதிகள் மக்களால் தெரிவு செய்யப்பட மாட்டார்கள் என்பதற்கு காலம் பல உதாரணங்களை எழுதி வைத்திருக்கின்றது.
இந்த பொதுக்கட்டமைப்பு ஒரு ஆரோக்கியமான அரசியல் எழுச்சியாக மாறுவதற்கு அதில் புதிய தலைமுறையினரின் பங்குபற்றுதல் மிக அவசியமானது.

தமிழ் மக்களுக்கான தூய அரசியிலை முன்னnடுக்கும் துடிப்பான ஒரு இளம் தலைமுறையினை பொதுக்கட்டமைப்பு உருவாக்குமாக இருந்தால் அது தான் எமக்கான வெற்றியாக அமையும்.

அவ்வாறு உருவாகும் புதிய தலைமுறையில் இருந்து நாளைய தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும்.

எல்லாவற்றிலும் எதிர்மறைகளை பற்றி மட்டும் பேசிக் கடக்காமல் நம்பிக்கையான எதிர்காலத்திற்கு நாம் என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திப்பதே சிறப்பானது.

இப்போதுள்ளவர்கள் எல்லோரும் தவறறானவர்கள் என்பதற்காக எத்ர்காலத்தில் நல்ல அரசியல் வாதிகம் தலைவர்களும் உருவாக மாட்டார்கள் என்ற முடிவிற்கு நாம் செல்ல முடியாது.

அதேபோன்று கடந்த காலங்களில் தவாறன பாதையில் பயணித்தவர்கள் தமது தவறுகளை உணர்ந்து திருந்தி நல்ல அரசியலை ஏற்படுத்தும் நிலையினையும் நாம் நிராகரிக்க முடியாது.

*************************************
தமிழினத்தின் மீட்டபராகவும் யதாரத்த அரசியலைப் பேசும் நேர்மையான ஒரே ஒரு அரசியல்வாதியாகவும் தன்னை முன்னிறுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் அரசியல் குறித்தே நாம் அதிகம் அக்கறை கொள்ள வேண்டியுள்ளது.

2009ற்கு பின்னர் தமிழ் தேசிய அரசியலுக்குள் கொண்டு வரப்பட்ட சுமந்திரன் 15 வருட கால அரசியலில் தனக்கான ஒரு இரசிகர் மன்றத்தை உருவாக்கி வைத்திருக்கின்றார்.

சுமந்திரன் எது செய்தாலும் சரி என கூவித் திரிவதற்கும் அவரை எப்போதும் காவிச் செல்வதற்குமான ஒரு விசுவாசமிக்க குழவை அவர் உருவாக்கியிருக்கின்றார்.

ஆதன் மூலமாக தனது நகர்வுகளுக்கு அவர் வெள்ளையடிப்பதான விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன.

சுமந்திரன் ஆபத்தானவரா இல்லை ஆபத்பாண்டவரா என்ற கேள்வி இன்றும் பலராலும் எழுப்படுகின்ற ஒரு முக்கியமான கேள்வி.

வாக்குரிமை கொண்ட மக்கள் அதனை மிகக் கவனமாக பயன்படுத்தி வருகின்றார்கள் என்பதற்கு சுமந்திரனும் ஒரு சிறந்த உதாரணம்.

2010ம் ஆண்டில் தேசிய பட்டியல் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர் அடுத்து வந்த ஐந்து வருடங்களில் மிக்ப பெரும் அரசியல் வளர்ச்சியினை பெற்றார்.

ஆதனால் 2015ம் ஆண்டு 58043 வாக்குகள் பெற்று நாடாளுமன்றதிற்கு தெரிவானார்.

ஆனார் 202ம் ஆண்டு அவருக்கு வெற்றி கிடைக்குமா கிடைக்காதா என்பதே பெரும் கேள்வியாக மாறியதை நாம் மறந்து விட முடியாது, 2015ம் ஆண்டில் பெற்றதை விட அரைவாசி வாக்குகளை மட்டுமே சுமந்திரன் பெற்றுக் கொண்டார். அவருடைய வெற்றி தொடர்பில் சர்சைகளும் எழுந்திருந்தன.

இதன் மூலம் மக்கள் மத்தியில் அவர் தனது செல்வாக்கை இழந்தமை தெரிவந்திருந்து.
இனி நடைபெறப் போகும் தேர்தலில் அவருக்கான வெற்றி வாய்ப்பு என்பது கேள்விக்குறியானாகவே இருக்கும்.

தன்னை யதார்தவாதியாக வெளிப்படுத்தும் ஒருவர் மக்களின் மனங்களை அறிந்து கொள்ளாமல் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செயல்பட முடியாது.

தமிழரசுக் கட்சித் தலைமைத்துவ போட்டியும் அதன் பின்னரான குழறுபடிகளும் சுமந்திரனின் யதார்த்த அரசியல் தொடர்பான கருத்தியலுக்கும் அவரின் நடவடிக்கைகளுக்கும் இடையிலான பாரிய இடைவெளியை எடுத்துக்காட்டியுள்ளன.

தன்னுடன் உடன் பட மறுக்கும் ஏனைய அரசியல்வாதிகளை மிக மோசமாக விமர்சிக்கும் சுமந்திரன் அவர்கள் அவர்களை விட ஆபத்தானதும் மோசமானதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் என்பதே அவர் மீதா பலரின் குற்றச்சாட்டாக இருக்கின்றது.

தனது மொழியாழுமை மற்றும் பேச்சாற்றல் சட்ட நுணுக்கங்கள் மூலமாக தன்னையும் தனது நிலைப்பாட்டையும் அவர் கவனமான நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

வெளிப்படையாக அவருடைய உரைகளை கேட்கின்ற போது ஒரு தெளிவும் மதிப்பும் ஏற்படும் அது தான் அவரின் வெற்றி மந்திரம்.

ஆனால் அந்த மந்திரங்களும் வார்தை ஜாலங்களும் இனி வெல்லாது என்பதை காலம் அவருக்கு விரைவில் எடுத்துக் காட்டும்.

2015 முதல் சுமந்திரன் அவர்களின் நடவடிக்கைகள் மிக பெரும் நெருக்கடியினை தமிழ் தேசிய அரசியலில் ஏற்படுத்தியதை பலரும் பதிவு செய்திருக்கின்றார்கள்.

மிக முக்கியமாக இலங்கையின் பழம் பெரும் தேசியக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியயும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து உருவாக்கிய 'நல்லாட்சி' என்ற பெயரளவிலான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமற்ற வெளிவிவகார அமைச்சராக அவர் செயல்பட்டார் என்ற விமர்சனமும் அவர் மீது முன்வைக்கப்படுகின்றது.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடனும் ரனில் விக்கிரமசிங்கவுடனும் அவருக்கு இருந்த நெருக்கமான உறவு ஐக்கிய நாடுகள் மனித உரமைப் பேரவை தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளுக்கு சுமந்திரனை துணைபோகச் செய்ததான குற்றச்சாட்டு அவர் மீது இப்போதும் இருக்கின்றது.

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்கள் மற்றும் நகர்வுகள் மூலமாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான மிகக் கடுமையான தீர்மானங்கள் கொணடு வரப்பட்டன.

அந்த தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அழுத்தத்தை இலங்கை அரசாங்கம் எதிர் கொண்டிருந்த வேளை இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ரனில் விக்கிரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்பட்ட பின்னர்.

சர்வதேச தலையீடுகளை குறைப்பதற்கு உதவும் நடவடிக்கைகளுக்கு சுமந்திரன் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

2015ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற மனித உரிமைப் பேரவை அமர்வில் இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது.

இலங்கை பெற்ற மகத்தான வெற்றி இது என மங்கள சமரவீசர அறிவித்தார்

இலங்கையில் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் சிறப்பாக நடைபெறுகின்றன எனவே இரண்டு வருடங்களுக்கு அதனை தொடர்வதற்கு அரசாங்கத்திற்கு வாய்ப்பு வழங்குமாறு புதிய பரிந்துரை வெளியிடப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரமைப் பேரவை அமர்வுகளில் அன்று தொடங்கிய சரிவினை இதுவரை தமிழ் தரப்பால் ஈடு செய்ய முடியவில்லை.

இம்முறை மிகவும் மலினமான அறிக்கை ஒன்றே இலங்கை தொடர்பாக வெளியிடப்படுகின்றது.

இதன் மூலம் இலங்கை அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துள்ளது.

இதற்கான ஆரம்பத்தை ஏற்படுத்திய ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தனது ஆட்சிக்காலத்தில் அதனை சிறப்பாக நடத்தி முடித்திருக்கின்றார்.

***************************************

இந்த பின்னணிகளில் தமிழ் மக்கள் முன் தற்போதுள்ள தெரிவு தமது அரசியல் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தும் ஒருவருக்கு வாக்களித்து தமது கோரிக்கைகளுக்கு வலுச் சேர்பதாகவே அமையும்.

பொது வேட்பாளர் பெறக் கூடிய வாக்குகள் தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வாக எதனை கருதுகின்றார்கள் என்பதை உணர்த்தும்.

பொதுமக்கள் எப்போதும் மிகத் தெளிவாகவே தமது வாக்குகளை பயன்படுத்தி வந்துள்ளர்கள் அதனையே இம்முறையும் அவர்கள் செய்வார்கள் எது சரி என அவர்கள் கருதுகின்றார்களோ அதனை அவர்கள் செய்வார்கள்.

நீங்கள் நலமா? Are You OK ?நாம் ஒருவரைக் காணும்போது சம்பிரதாயமாக உபயோகிப்பதுதான்  நீங்கள் நலமா? Are You OK ? என்ற வார்த்த...
09/12/2024

நீங்கள் நலமா? Are You OK ?

நாம் ஒருவரைக் காணும்போது சம்பிரதாயமாக உபயோகிப்பதுதான் நீங்கள் நலமா? Are You OK ? என்ற வார்த்தை.

உண்மையில் வாழ்வினை மாற்றும் அற்புதங்களை இந்த கேள்வி ஏற்படுத்தும்.

மன இறுக்கத்தோடு மன அழுத்தத்தோடு பயணப்படும் ஒருவரின் மனதுக்கு மிகப் பெரும் ஆறுதலை இந்த கேள்வி தரும் என்று சொல்கின்றார்கள் உளவியலாளர்கள்.

எங்கள் மீது அக்கறை செலுத்துவற்கும் மனிதர்கள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையினை இந்த கேள்வி ஏற்படுத்துகின்றது.

மனிதர்கள் இன்று தமது கதைகளை கேட்பதற்கு சக மனிதர்கள் இல்லாத நிலையில் தமக்கு தாமே பேசிய படி அலைகின்றார்கள். உண்மை அக்கறையுள்ள மனிதர்களாக அவர்களை அணுகுவதன் மூலம் அவர்கள் வாழ்வில் மாற்றங்களை நாம் ஏற்படுத்தலாம்.

மற்றவர்கள் மீது வன்மங்களை கொட்டுவதற்கும் வசை பாடுவதற்கும் பதிலாக உங்களுக்காக நாம் இருக்கின்றோம் என்ற நம்பிக்கையினை ஏற்படுத்த முடிந்தால் எம்மை சுற்றியுள்ள மனிதர்களில் மிகப் பெரிய மாற்றங்களை நாம் ஏற்படுத்த முடியும்.

Address

203-1265 MORNINGSIDE Avenue
Toronto, ON
M1B3V9

Alerts

Be the first to know and let us send you an email when Salaram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salaram:

Featured

Share