07/27/2025
இனி ஏறி அடிக்க வேண்டியதுதான்
இனி ஏறி அடிக்க வேண்டியதுதான்
லட்சிய கூட்டத்துக்கும், ரசிகர் கூட்டத்துக்கும் இடையே தான் வரும் சட்டமன்ற தேர்தலில் சண்டை; உயர்ந்த லட்சியத்தை கொண்டுள்ள சித்தாந்தமா? இல்லை சினிமாவா?
இனிமேல் பாவம் பார்க்காமல் ஏறி அடிக்க வேண்டியதுதான் - சீமான்
இத்தனை நாட்கள் திமுகவை தனது எதிரியாக கூறிக்கொண்டிருந்தார். இப்போது விஜய் க்கு எதிராக பாய்கிறார்.
தவெகவின் முதல் மாநாடு முடிந்தபிறகு.. ரோட்டு நடுவுல நின்னா அடிபட்டு சாவ என சாபம் விட்டார்.
எரோடு இடைத்தேர்தல் சமயத்தில் நாதகவின் பல இளைஞர்கள் திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு போய் விட்டனர்.
அந்த பதற்றத்தில் மீண்டும் 'விஜய் என் தம்பி' என பேசி வந்தார்.
தற்போது ஸ்டாலினை சந்தித்த பிறகு.. விஜய்யிடம் மோதப்போவதாக சொல்கிறார். இதுதான் அந்த சந்திப்பில் தரப்பட்ட அசைன்மென்ட் போல.
நித்தம் ஒரு நிறம். நித்தம் ஒரு பேச்சு.
ஆளும் திமுகவைவிட ..தவெகதான் முக்கிய எதிரி எனும் இந்நாடகம் மக்களிடம் எடுபடாது.
#சீமான்