12/28/2025
மலேசியாவில் வரலாறு படைத்த இலங்கை தமிழ் பாடசாலை விவாதிகள்
சர்வதேச வெற்றியுடன் இலங்கை தமிழ் விவாத வரலாற்றில் புதிய மைல்கல்
இலங்கையின் தமிழ் விவாதிகள் கழகம் (Tamil Debaters’ Council of Sri Lanka) அதன் தேசிய மேம்பாட்டு அணியின் மூலம், இலங்கை தமிழ் பாடசாலை விவாத வரலாற்றில் முதல் முறையாக ஒரு சர்வதேச வெற்றியை பதிவு செய்துள்ளது.
மலேசியாவில் நடைபெற்ற “சம்பந்தன் பைந்தமிழ் சுடர் 5.0” சர்வதேச தமிழ் விவாதப் போட்டியில், இலங்கை அணி வெற்றி கேடயத்தைக் கைப்பற்றி, இந்தப் போட்டியின் வரலாற்றில்
மலேசியாவிற்கு வெளியேயான முதல் அணியாகவும்
முதல் சர்வதேச அணியாகவும்
வெற்றி பெற்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம், தமிழ் விவாதிகள் கழகத்தின் தேசிய மேம்பாட்டு அணிக்கான சர்வதேச வெற்றிப் பாதை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
🏆 வெற்றி பெற்ற இலங்கை அணி
மலேசியா உத்தாரா பல்கலைக்கழகம் (UUM) நடத்திய சர்வதேச தமிழ் விவாதப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றவர்கள்:
ஹரீஷ் ஜெயரூபன் – அணித் தலைவர்
றோயல் கல்லூரி, கொழும்பு
மைக்கேல் ஜெனுஷன்
புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம்
சிவாஜினி பிரதீபன்
யா/ மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை
லக்ஷ்மிதா சிவசங்கரன்
ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி
🇱🇰 இலங்கை சார்பில் பங்கேற்ற பிற அணிகள்
மலாயா பல்கலைக்கழகம் (UM) – கோலாலம்பூர்
யுகப்பிரியன் நிறைஞ்சன் – பரிதோமாவின் கல்லூரி
தரணிகா தவரூபரசன் – கிளிநொச்சி மகா வித்யாலயம்
ஸ்ரீ அக்ஷ்யா ரேஜி ஜனகன் – ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி
UUM – விளக்கவுரை (Presentation) அணி
சரவணநிர்த்திகா மீனாட்சி சுந்தரம் – பேராயர் கல்லூரி, கொழும்பு
பிரகதிஸ்ரீ ராமச்சந்திரன் – மகளிர் கல்லூரி, கொழும்பு
தனேந்திரன் கார்த்திகன் – றோயல் கல்லூரி, கொழும்பு
🎖️ இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் சிறப்பு கௌரவிப்பு
இந்த வரலாற்றுச் சாதனையைத் தொடர்ந்து,
மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திரு. ரிஸ்வி அவர்கள்,
கோலாலம்பூரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில்
இலங்கை மாணவர்களுக்கு அதிகாரப்பூர்வ கௌரவிப்பை வழங்கினார்.
இந்தச் சந்திப்பின் போது,
மாணவர்களின் ஒழுக்கம்
கல்வித் திறன்
சர்வதேச மேடையில் நாட்டை மரியாதையுடன் பிரதிநிதித்துவப்படுத்திய விதம்
ஆகியவற்றை உயர்ஸ்தானிகர் பாராட்டினார்.
மேலும், இலங்கை – மலேசியா இடையேயான
வருடாந்த விவாதப் போட்டிகள்
பண்பாட்டு மற்றும் சுற்றுலா சார்ந்த பரிமாற்ற நிகழ்வுகள்
எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
🌏 இலங்கை தமிழ் பாடசாலை விவாத வரலாற்றில் புதிய சாதனை
இந்தச் சர்வதேசப் பயணம்,
ஒரே பிரதிநிதி குழுவாக மலேசியாவின் ஐந்து மாநிலங்களில்
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய
மிகப்பெரிய தமிழ் பாடசாலை மாணவர் குழுவாக பதிவாகியுள்ளது