
08/31/2025
ஒரு தந்தையின் ஆதங்கம்
# # # # # # # # # # # # # # # # # # # # # # #
கொலைக்களமாகும் திருமலை வைத்தியசாலை...
ஒரு வைத்திய சாலையின் அவசர விபத்து பிரிவு என்பது மிக மிக அவசரமான முதலுதவி மற்றும் வைத்திய சேவையையினை வழங்க கூடியதாக ஆயத்த நிலையில் இருப்பதாகவே இருக்கும் ஆனால் எம் மண்ணின் வைத்திய சாலையோ மிக மிக அசமந்த போக்கு கொண்ட ஒரு கொலைக்களமாக இருப்பது என்னைப்போன்ற சட்டென கோபம் வரும் தந்தைகளை ஒரு மூர்கத்தனமான கொலையாளியாக மாற்றும் இயந்திரமாக இருக்கிறது.
என் மகன் சிறிய விசில் ஒன்றை விழுங்கிய நிலையில் வியாழன் இரவு 9.30 மணிக்கு வைத்திய சாலை அவரச விபத்து பிரிவில் விடயத்தை சொல்லி சேர்பதற்கு முற்பட்ட போது அங்கே Admission போடப்படும் இடத்தில் மகனின் பெயரை பதிவிடும் போது Double A வருமா அல்லது Single A வருமா என ஆரம்பிக்கும் போது கோபம் உச்சந்தலையில் வந்து விட அங்கிருந்தவர்களுக்கு "தேவையான வசனத்தில்" கூறிவிட்டு வைத்தியரை நோக்கி நகர்ந்து அவசர விபத்து பிரிவில் உள்ளே சென்று விபரம் கூறும் போது சுற்றியிருந்த வெள்ளை உடைதரித்த சில வெங்காயங்கள் இரவு உணவு உண்டபின் Desert இற்காக விசிலை சாப்பிட்டுள்ளார் என சொல்லி சிரித்து விட்டு சாதாரனமாக அவனது சுவசத்தினை பரிசோதித்து விட்டு ஒரு இடத்தினை காண்பித்து இருக்கவைத்தார்கள் நேரம் கடக்க கடக்க எங்கள் பதட்டம் வாய் வழியாக வெளியே வர Xray எடுக்துவர சொல்லி அதன் அறிக்கையில் பொருள் காட்டவில்லை என்பதால் தொண்டையில் விசில் இல்லை வீட்டில் தேடி பாருங்கள் என அசட்டையாக வைத்தியர் சொன்ன பதிலோடு எங்கள் வாக்குவாதம் முற்றிய நிலையில் மீண்டும் அதே இடத்தில் அமர வைத்துவிட்டு அவர்கள் தங்கள் வேலையில்....
மூச்செடுக்கும் போது மகனின் தொண்டையில் விசில் சத்தம் வர மீளவும் வைத்தியரிடம் நாங்கள் முறையிட மீளவும் Xray எடுக்க அதிலும் காட்டவில்லை என பதிலும் வர நேரம் 11.00 மணி இனி கதைத்து வேலை இல்லை என்று எங்களுக்கு தெரிந்த வைத்திய நண்பர்கள் மூலமாக கதைத்து மகனுக்கான ஆரம்ப வைத்திய சேவை வழங்க முற்பட்ட பின் ENT வைத்தியர் ஒருவர் பார்வையிட்டு அவரது பிரிவில் அழைத்து தொண்டைப்பகுதியை லைட் மூலம் பார்வையிட்டு எடுக்க முடியவில்லை பார்போம் என மீளவும் அவசர விபத்து பிரிவிற்கு வந்து அதே கதிரையில் அமர்ந்தோம் இடையிடையே வீடியோ எடுப்பதும் அது தொடர்பாக தொலைபேசில் வேறு வைத்தியரிடம் கதைப்பதும் என நேரம் கடந்து 12.30 ஆகிய பின் எங்கள் பொறுமை இழந்து வாய் மேலோங்க மகன் இரவு உணவு உண்ட படியால் இப்போது ஏதும் செய்ய முடியாது காலையில் பார்போம் இப்போது பால் உட்பட ஏதும் கொடுக்க வேண்டாம் நித்திரை கொள்ள வையுங்கள் என அசட்டையான பதிலோடு அம்மா+ மகன் இருவரும் கட்டிலில் அதிகாலை 1.15 மணிக்கு அனுமதிக்கப்பட தேவையான பொருட்களை தம்பி மூலம் பெற்று கொடுத்துவிட்டு காரிலே தூங்க செல்லும் போது நேரம்2.15.
அடுத்த நாள் காலை 6.45 மணிக்கு வைத்திய நிபுணர் ஒருவர் வர இரவு முழுவதும் அசட்டையாக பதில் சொன்ன வைத்தியர் பூனைக்குட்டியாக அவர் பின்னால் வந்து விளக்கம் சொல்ல உடனே அனுராதபுரம் வைத்தியசாலைக்கு 7.40 மணிக்கு அம்புலன்ஸ் மூலம் மாற்ற கூறிவிட்டு என்னை அழைத்து மகனின் தொண்டைக்குள் கமரா விட்டு பார்த்து எடுக்கவேண்டும் இங்கே அதற்கான வசதி இல்லை அனுராதபுரம் வைத்தியசாலையில் வசதி உள்ளது நீங்கள் தயாராகுங்கள் மகனுக்கு உணவு ஏதும் கொடுத்து வையுங்கள் என ஆற்றுப்படுத்திவிட்டு செல்ல நாங்கள் தயாராகினோம்.
நேரம் 9.30 கடந்தும் இதுவரை அனுப்பவில்லை என சத்தம் இட அங்கு கடமையில் இருந்த தாதி உத்தியோகத்தர் அவர் எழுதுவார் தான் 7.40 என்று எங்களுக்கு Staff இல்லை அனுப்புவதற்கு என அசட்டையான பதில். வந்த ஆத்திரத்தில் மண்டையை உடைக்க தோன்றினாலும் மகனை காப்பாற்ற போராட வேண்டிய நிலையில் எங்கள் வாகனத்தில் கொண்டு செல்கிறோம் என சத்தமிட அம்புலன்ஸ் தயாரானது.அனுராதபுரத்திலும் நீண்ட போராட்டத்தின் பின் மகன் உயிர் காக்கப்பட்டது.நேரம் தாண்டியிருந்தால் சுவாசம் தடைப்பட்டு உயிராபத்துக்கள் ஏற்பட வாய்ப்பிருந்து என வைத்தியர் சொல்லி முடித்து கையில் விசிலை தந்தார்...
திருமலை வைத்தியசாலையின் அசட்டைத்தனமான போக்கினால் அன்றைய தினம் மகனுக்கு ஏதேனும் நடந்திருந்தால் ஒரு தந்தையாக கொலைதான் நடந்திருக்கும்.நிச்சயம் நானும் இதை கடந்துதான் செல்லப்போகிறேன் ஆனால் எப்போது எம் மண்ணில் வைத்தியசாலை உயிர் காக்கும் மனிதர்களால் நிரம்பியிருக்கும் என தெரியவில்லை...