22/06/2025
மமக சார்பில் மதுரையில் ஜூலை.6ல் இரட்டை கோரிக்கை வலியுறுத்தி நடைபெறும் எழுச்சி பேரணி மாநாட்டிற்கு மல்லிப்பட்டினம் ஜமாத்தார்கள், ஊர் முக்கியஸ்தர்கள்,அரசியல் பிரமுகர்களை சந்தித்து அழைப்பு கொடுத்தனர்.
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்த சட்டத்தை ரத்து செய்யவும்,ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் உறுதி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வருகின்ற ஜூலை.6ல் மாபெரும் எழுச்சி பேரணி மாநாடு நடைபெற இருக்கிறது,அதற்கு தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் ஜமாஅத் நிர்வாகிகள்,ஊர் முக்கியஸ்தர்கள்,அரசியல் கட்சி பிரமுகர்கள்,பொதுமக்கள் ஆகியோரை சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு கொடுத்தனர்.
மேலும் மமகவின் மாநாட்டின் அவசியத்ததையும்,தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் அனைவருக்கும் எடுத்திரைத்தனர். சந்திப்பில் தஞ்சை தெற்கு மமக மாவட்ட தலைவர் புரோஸ்கான், மமக மாவட்ட செயலாளர் அப்துல் பகத் மாவட்ட நிர்வாகிகள் அப்துல் மாலிக்,நெய்னா,ராவுத்தர் மற்றும் கிளை நிர்வாகிகள் இருந்தனர்.