
09/04/2025
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பொத்துவிலின் பிரதிநிதித்துவத்தை இழக்க காரணமாக இருந்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க பொத்துவில் மக்கள் தயார்.
வெறும் 88 வாக்குகளால் கட்சிக்கு கிடைக்க இருந்த பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டதன் மூலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தனக்கான வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுகள் முடிந்த கையோடு பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் இடம்பெற்ற கட்சிப்பிரகடன ஒன்று கூடலில் பெருந்திரளான வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்கள் கலந்து கொண்ட உணர்புபூர்வமான அந்த கூட்டம் பொத்துவில் மக்களின் வரலாற்றில் எழுதப்பட வேண்டிய ஒன்று என்பதை யாவரும் அறிவர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் வென்று விடக்கூடாது என்பதற்காக அதிகார மோகம் பிடித்த துரோகிகளின் கூட்டு சதிகளுடைய எச்சங்களை தன் முகத்தில் பூசிக்கொண்டு இப்பொழுது பிரதேச சபை தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
இந்த துரோகிகளுக்கு தகுந்த பாடத்தை வரும் உள்ளூராட்சி தேர்தலில் வழங்கி அவர்களுடைய அரசியல் சுயலாபத்தை சுருட்டி வீச பொத்துவில் மக்கள் அமைதியான முறையில் இந்த தேர்தலை எதிர் கொள்ளத்தயாராக இருப்பதாக அறிய முடிகிறது.
ஒரு கடுமையான தேசிய அரசியல் நீரோட்ட காலத்திலும் தன் திறமையின் மூலம் பொத்துவில் மக்களின் அடிப்படையான பிரச்சினைகளான சுகாதாரம், போக்குவரத்து, நிலம் போன்றவற்றில் தொக்கி நின்ற சவால்களை விலக்கி தீர்வே விடிவு எனும் கோணத்தில் மக்களரசியல் செய்தவர் முஷாரப்.
மாவட்டத்தின் ஏனைய இடங்கள் உட்பட பொத்துவில் பிரதேசத்திலும் சுயேட்சை அணியாக களமிறங்கியுள்ள முஷாரப் அவர்களை தலைமையாககொண்ட அணி வருகிற உள்ளூராட்சி தேர்தலினூட வலுவான ஒரு அடித்தளத்தை இட திட்டமிடப்பட்டு வருகிறது.