ஆயுபோ சிங்கம் / Aayubo Singam

ஆயுபோ சிங்கம் / Aayubo Singam ஒரு லைக் போடுங்க அப்புறம் பாருங்க.. இது நம்ம சிங்கம் பேஜ் இலங்கை மற்றும் பல நாடுகல் உடய சுவாரஷியம் ஆன நியூஸ் வீடியோ காமெடி பாருங்க லைக் பண்ணுங்க

இலங்கையின் தேசிய அபிவிருத்தியில் சீனாவின் மூலோபாயப் பங்களிப்பு....(எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.)இலங்கையின் ...
26/09/2025

இலங்கையின் தேசிய அபிவிருத்தியில் சீனாவின் மூலோபாயப் பங்களிப்பு....

(எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.)

இலங்கையின் நீண்ட வரலாற்றிலும் அண்மைய தேசிய அபிவிருத்தியிலும் சீனா ஒரு முதன்மையான மூலோபாயப் பங்காளியாகத் திகழ்கிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்திருக்கும் இரு நாடுகளின் வரலாற்று மற்றும் கலாசாரத்தொடர்புகள், நவீன காலத்தில் பொருளாதார முதலீடுகள் மற்றும் பாரிய உட்கட்டமைப்புத்திட்டங்கள் மூலம் ஆழமடைந்துள்ளன.

குறிப்பாக, சீனாவின் 'ஒரு பட்டை ஒரு சாலை முன்னெடுப்பு' (Belt and Road Initiative - BRI) இலங்கையின் புவியியல் அமைப்பைச்சாதகமாகப் பயன்படுத்தி, பல பாரிய அபிவிருத்தித்திட்டங்களை இங்கு முன்னெடுக்க வழிவகுத்துள்ளது.

1. உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுத்திட்டங்கள்

சீனாவின் பங்களிப்பு இலங்கையின் பொருளாதார மற்றும் வர்த்தக முகப்பையே மாற்றியமைக்கும் வகையில் அமைந்துள்ளன. இத்திட்டங்கள் இலங்கையின் அபிவிருத்திக்கு மிக முக்கியமானவை.

அ. கொழும்புத்துறைமுக நகரம் (Colombo Port City)
கொழும்புத் துறைமுக நகரம், இலங்கையின் அபிவிருத்தியில் முன்னெப்போதுமில்லாத வகையில் பாரிய முதலீட்டையும், பொருளாதார மாற்றத்தையும் கொண்டு வரக்கூடிய ஒரு திட்டமாகும்.

*திட்டத்தின் நோக்கம்:
கொழும்பின் மத்திய வணிக மாவட்டத்தையொட்டி 269 ஹெக்டேர் கடற்பரப்பை நிலமாக மீட்கும் (Land Reclamation) இந்த மெகா திட்டம், சர்வதேச நிதிச் சேவைகள், சுற்றுலா மற்றும் தகவல் தொழிநுட்ப மையங்களைக்கொண்ட சிறப்புப்பொருளாதார மண்டலமாக (Special Economic Zone) உருவாக்கப்படுகிறது.

*சீனப் பங்களிப்பு:
இத்திட்டத்தில் ஆரம்ப முதலீடு சுமார் $1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். நிலத்தை மீட்கும் மற்றும் கட்டுமானப்பணிகளில் பிரதானமாகச் சீன அரசு நிறுவனமான சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி (CHEC) ஈடுபட்டுள்ளது.

* ஒப்பந்தச்சாரம்:
முதலீட்டுக்கு ஈடாக, மீட்கப்பட்ட நிலப்பரப்பின் ஒரு பகுதி CHEC நிறுவனத்திற்கு 99 வருட காலக்குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

* எதிர்பார்க்கப்படும் தாக்கம்:
இது பூர்த்தி செய்யப்படும் போது, துபாய் அல்லது சிங்கப்பூர் போன்ற பிராந்திய நிதி மையமாகச் செயற்பட்டு, கணிசமானளவு அந்நிய முதலீட்டையும், சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆ. ஹம்பாந்தோட்டை துறைமுகம் (Hambantota Port)

இலங்கையின் தென்பகுதியில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம், சர்வதேச கடல்வழி வர்த்தகப்பாதையில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டமாகும்.

* திட்டச்சவால்:
இத்துறைமுகம் இலங்கையின் சொந்தக் கடனுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், அதன் கட்டுமானத்திற்கான பாரிய சீன வங்கிக் கடனைத் திருப்பிச்செலுத்த முடியாததால் இலங்கை அரசு நெருக்கடிக்குள்ளானது.

* சீனப்பங்களிப்பு:
கடன் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, 2017ம் ஆண்டு, துறைமுகத்தின் 70% பங்கு சீன அரசு நிறுவனமான சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் (China Merchants Port Holdings) நிறுவனத்திற்கு 99 வருட காலக்குத்தகை ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டது.

* பொருளாதார விளைவு:
துறைமுக நிர்வாகத்தை சீன நிறுவனம் ஏற்றதன் மூலம், அது வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதிலும், சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதிலும் முக்கியத்துவம் செலுத்தி வருகிறது.

இ. ஏனைய உள்கட்டமைப்புத்திட்டங்கள்
மேற்கூறிய பிரதான திட்டங்கள் மட்டுமன்றி, சீனா இலங்கையின் பல முக்கிய தேசிய உள்கட்டமைப்புத் திட்டங்களிலும் பங்களித்துள்ளது.

* நெடுஞ்சாலைகள்:
தென் அதிவேக நெடுஞ்சாலை (Southern Expressway - E01) மற்றும் ஏனைய முக்கிய வீதி அபிவிருத்திகள்.

* துறைமுக முனையங்கள்:
கொழும்புத் துறைமுகத்தின் தெற்கு முனையம் (South Container Terminal) கட்டுமானப் பணிகள்.

* கட்டிடங்கள்:
கொழும்பிலுள்ள தாமரைக்கோபுரம் (Lotus Tower) போன்ற முக்கிய அடையாளச்சின்னங்கள்.

2. அரசியல், வர்த்தகம் மற்றும் தூதரகப்பணிகள்
பொருளாதாரத் திட்டங்களுக்கப்பால், சீனா பல ஆண்டுகளாக இலங்கையுடன் நெருக்கமான அரசியல் மற்றும் வர்த்தக உறவைப் பேணி வருகிறது.

அ. அரசியல் உறவுகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு

* வர்த்தகப்பங்காளி:
சீனா, இலங்கையின் பிரதான வர்த்தகக்கூட்டாளிகளில் ஒன்றாகும். இலங்கையின் தேயிலை, ஆடை போன்றவற்றை சீனா இறக்குமதி செய்கிறது.

* கடன் உதவி:
அண்மைக்கால பொருளாதார நெருக்கடியின் போது, இலங்கைக்குக் கடன் மறுசீரமைப்பு வழங்குவதில் சீனா ஒரு முக்கியப் பங்களிப்பாளராகச் செயல்பட்டு வருகிறது.

ஆ. சீனத்தூதரகத்தின் செயற்பாடுகள்
இலங்கையிலுள்ள சீனத்தூதரகம், இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர மற்றும் மக்கள் மட்ட உறவுகளைப் பலப்படுத்துவதில் முக்கியப் பணிகளை ஆற்றுகிறது.

* கொள்கை ஒருங்கிணைப்பு:
இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையேயான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் மற்றும் மூலோபாயக் கூட்டணிகளைத் தொடர்ந்து ஒருங்கிணைத்தல்.

* மனிதாபிமான உதவி:
அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவம் மற்றும் பிற மனிதாபிமான உதவிகளை விரைவாக வழங்குவதில் முக்கியப் பங்காற்றுதல்.

* கலாசாரப்பரிமாற்றம்:
புலமைப்பரிசில்கள் (Scholarships) வழங்குதல் மற்றும் சீனக்கலாசார நிகழ்ச்சிகள், கலை விழாக்களின் மூலம் இரு நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தைப் பேணுதல்.

* குடியினர் பாதுகாப்பு:
இலங்கையில் பணி புரியும், வாழும் சீனக்குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல்.

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவின் பங்களிப்பு மிக முக்கியமானதும், அதன் உட்கட்டமைப்பு மற்றும் வர்த்தகத் திறனைப் பலப்படுத்துவதுமான ஒரு அங்கமாகவுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்புத் துறைமுக நகரம் போன்ற பாரிய முதலீடுகள், இலங்கையைப் பிராந்தியத்தின் கடல்சார் மற்றும் நிதி மையமாக மாற்றும் ஆற்றல் கொண்டவை.

இந்த உறவு எதிர்காலத்திலும் நிலைத்தன்மையுடன் தொடர வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா நாட்டின் 76வது founding day நேற்று (25) கெழும்பு City of Dream ஹோட்டலில் இடம்பெற்றது.

(சீன மக்கள் குடியரசின் 76வது ஆண்டு நிறைவு முன்னிட்டு பிரசுரமாகும் கட்டுரை)

இலங்கை - சவூதி உறவின் பொற்காலம்: தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானியின் பங்களிப்பு..!(✍️ எஸ். சினீஸ் கான்)இலங்கை மற்றும் ச...
08/09/2025

இலங்கை - சவூதி உறவின் பொற்காலம்: தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானியின் பங்களிப்பு..!

(✍️ எஸ். சினீஸ் கான்)

இலங்கை மற்றும் சவூதி அரேபியா இடையிலான உறவு, வரலாற்று பின்னணியிலேயே ஆழமாக வேரூன்றி, கலாச்சாரம், மத நம்பிக்கை, வணிகம் மற்றும் மக்கள் நல நடவடிக்கைகளின் மூலம் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. இவ்வுறவை மேலும் உறுதிப்படுத்தும் பணியில் தற்போதைய இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரான காலித் ஹமூத் அல்-கஹ்தானி அவர்கள் முக்கிய மையப்புள்ளியாக விளங்குகிறார்.

தூதுவராக பொறுப்பேற்ற பிறகு, அவர் இலங்கையின் அரசியல், வணிக, கல்வி மற்றும் சமூகத் தலைவர்களுடன் நேரடியாக இணைந்து செயல்பட்டு வருகிறார். அவரது முனைப்பினால் இரு நாடுகளுக்கிடையிலான வணிக உறவுகள் புதிய தளத்திற்கு முன்னேறியுள்ளதோடு, முதலீட்டிற்கான புதிய வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. தொழிலாளர் பரிமாற்றம், வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

முஸ்லிம் உலகின் இதயமாக திகழும் சவூதி அரேபியாவின் பண்பாடு, மதப் பாரம்பரியம் மற்றும் இரு புனித மஸ்ஜித்களின் காவலராகும் அந்த நாட்டின் சிறப்பை இலங்கையில் பரவலாக அறிமுகப்படுத்துவதில் அவர் வகிக்கும் பங்கு மிகப் பெரிது. குறிப்பாக, ஹஜ் மற்றும் உம்ரா பயணங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் வசதிகள் அவரது முயற்சிகளின் சிறந்த உதாரணமாகக் கொள்ளப்படுகின்றன.

இதோடு, கிங் சல்மான் மனிதாபிமான உதவி மையம் (KSRelief) மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்ட பெரும் உதவிகள், இந்த உறவை மனித நேய அடிப்படையில் மேலும் வலுப்படுத்துகின்றன. இயற்கை பேரழிவுகள், அவசர கால உதவிகள், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதில் முக்கியமாக, கண் சத்திரசிகிச்சை முகாம்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்களின் வாழ்வில் நேரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அவர் நேரடியாக பங்குபெறும் கல்வி, சுகாதாரம் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள், இரு நாடுகளுக்கிடையிலான நம்பிக்கையும் அன்பும் வளரச் செய்கின்றன. இலங்கை இளைஞர்களுக்கு கல்வி உதவித்தொகைகள், தொழிற்பயிற்சி வாய்ப்புகள் மற்றும் தொழில் மேம்பாட்டு ஆதரவுகள் வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

காலித் ஹமூத் அல்-கஹ்தானி அவர்களின் பார்வையும் நடவடிக்கைகளும், இலங்கை - சவூதி உறவை புதிய பொற்காலத்திற்கு கொண்டு சென்றுள்ளன. அவரது தலைவர் தன்மை, மக்களுடனான நேரடி தொடர்பு மற்றும் குறிக்கோள் சார்ந்த பணிகள், இரு நாடுகளுக்கிடையிலான நட்பு, ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்துகின்றன. எதிர்கால தலைமுறைகளுக்கும் பயனளிக்கும் இந்நட்பு பந்தம், வரலாற்றில் அழியாத தடத்தை பதிக்கும் உறவாக வளர்ந்து வருகிறது.

The Gobal South  🇷🇺 🇨🇳 🇰🇵 🇵🇰While Modi wasn't invited for the Military Parade.
03/09/2025

The Gobal South 🇷🇺 🇨🇳 🇰🇵 🇵🇰
While Modi wasn't invited for the Military Parade.

26/06/2025

🔴BREAKING NEWS ரஸ்யாவின் “மாஸ்கோ” விமான நிலையத்தில் பெலாரஷ்ய “யூத” பயணி ஒருவன், இஸ்ரேலியப் போரிலிருந்து தப்பி ஓடிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஈரானிய குழந்தையை தூக்கி தரையில் அடித்து கொடூரமாக தாக்கியபின், கண் பார்வையற்ற குருடன் போல் நடிக்கும் காட்சியே இதுவாகும்.அந்தக் குழந்தை இப்போது கடுமையான காயங்களுடன் கோமாவில் உள்ளது

23/06/2025

🔴BREAKING NEWS IRAN ATTACKS QUTAR USA BASED PLACES 🔴

🔴NETANYAHU ஈரானிடம் இன்னும்  #இருபத்தெட்டாயிரம் (28000) பல்லுஸ்டிக் இருக்கிறது!இன்று மாலை, ஈரானின் தாக்குதலுக்கு இலக்கான...
20/06/2025

🔴NETANYAHU
ஈரானிடம் இன்னும் #இருபத்தெட்டாயிரம் (28000) பல்லுஸ்டிக் இருக்கிறது!

இன்று மாலை, ஈரானின் தாக்குதலுக்கு இலக்கான பகுதியை #திடீரென வந்து பார்வையிட்டு சென்றபோதே இஸ்ரேலிய பிரதமர் #நெதன்யாஹு மேற்படி தெரிவித்தார்.

ஈரான் சுமார் 500 பல்லிஸ்டிக் ஏவியிருக்கிறது, அதில் 25 மட்டுமே சேதம் ஏற்படுத்தியது, இன்னும் 28000 பல்லிஸ்டிக் ஈரானிடம் உள்ளது என கவலை தோய்ந்த முகத்துடன் அவர் தெரிவித்தார்.

20.06.2025

19/06/2025

Powerful Attack 🔥🔥 #டிரம்ப்

🔴பிரேக்கிங்!ஈரான் மீதான போரில் இணைவதா? இல்லையா? என்பது குறித்து  #டிரம்ப் அடுத்த 24-48 மணி நேரத்திற்குள் தனது முடிவை எடு...
19/06/2025

🔴பிரேக்கிங்!

ஈரான் மீதான போரில் இணைவதா? இல்லையா? என்பது குறித்து #டிரம்ப் அடுத்த 24-48 மணி நேரத்திற்குள் தனது முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்

19/06/2025

Another Drone Attack Tel -aviv 🔥

19/06/2025

🔴Iran Drone Attack looks like 🔥

19/06/2025

🔴Blastic Missile Attack in Israel 🔴

18/06/2025

ஒவ்வொரு காசா மக்களின் கண்ணீரும் இஸ்ரேலுக்கு பெரிய நெருப்புடன் வரும்🔥🔥

Adresse

Democratic Republic Of The

Heures d'ouverture

Lundi 09:00 - 17:00
Mardi 09:00 - 17:00
Mercredi 09:00 - 17:00
Jeudi 09:00 - 17:00
Vendredi 09:00 - 17:00
Samedi 09:00 - 17:00
Dimanche 09:00 - 17:00

Téléphone

0777678678

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque ஆயுபோ சிங்கம் / Aayubo Singam publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager